Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு ஜீப்பில் வந்து பொரல்லை மயானத்தில் நடு இரவில் தகனம்! எரிக்கப்பட்டவர்கள் யார்?

Featured Replies

கொழும்பு பொரல்லை மயானத்தில் இன்று அதிகாலை (22) 1.00 மணி முதல் 2.00 மணி வரை எரிவாயு மூலம் இரண்டு உடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொதுவாக இரவு 7 மணியின் பின்னர் தகனம் செய்யப்படாத நிலையில், இன்று அதிகாலையில் உடலங்கள் தகனம் செய்யப்பட்டமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மயானத்தில் இரண்டு ஜீப் வண்டிகளும், இரண்டு வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். அத்துடன் இதுகுறித்து பொரல்லை பொலிஸாருக்கும் தகவலளித்துள்ளனர்.

தான் இதுகுறித்து அதிகாலை 1.40 அளவில் பொரல்லை பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த போதிலும், குறித்த வாகனங்கள் அங்கிருந்து செல்லும் வரை பொலிஸார் அந்த இடத்திற்கு வரவில்லையென பிரதேசவாசியொருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மயானத்தில் நடமாடியவர்கள் சிவில் உடையில் இருந்ததாகவும், அவர்களது அசைவுகளும், செயற்பாடுகளும் அவர்கள் பாதுகாப்புத் தரப்பினர் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அந்த நபர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து நாம் பொரல்லை பொலிஸ் நிலையத்தில் அதிகாரியொருவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறான சம்பவமொன்று குறித்து இன்று காலை தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றதாகக் கூறினார்.

அத்துடன், இதுகுறித்து கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது, தமது நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பொரல்லை மயானத்தில் எரிவாயு தகனச்சாலையின் பணிகள் மாலை 7 மணியுடன் நிறைவுபெறுவதாகக் கூறினார். பணிகள் முடிந்த பின்னர் தகனச்சாலையின் திறப்பு பிரதான காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படுவது வழமை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இன்று காலை எரிவாயுத் தகனம் செய்யப்பட்டதாக எதுவிதத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கேட்டறிவதற்கு கொழும்பு மாநகர சபை முதல்வரைத் தொடர்புகொள்ள பல முறை நாம் முயன்ற போதிலும் அவர் தற்போது வெளிநாடு பயணமாகியுள்ளதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

பொரல்லை மயானத்தில் இரவு வேலைகளில் உத்தியோகபூர்வமாக தகனம் செய்யப்படுவதில்லை என்ற போதிலும், 88 – 89 காலப் பகுதியில் ஜே.வி.பி இளைஞர், யுவதிகள், விசேடமாக அந்தக் கட்சியின் தலைவர் ரோஹன விஜேவீர உள்ளிட்டவர்கள் இந்த எரிவாயு சாலையில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்ததை அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த நிலையில், இன்று காலை பொரல்லை மயானத்தில் எரிக்கப்பட்டார்கள் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. இந்தச் செய்தியை ஒரு தனி நபரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் வெளியிடுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களிடமும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் நாம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

http://thaaitamil.com/?p=16673

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101472

ஏற்கனவே இணைக்க பட்டிருக்குதா என்று பார்க்கவே மாட்டீங்களா சின்னவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.