Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ அறப்போர் தொடருவோம்! - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karunanithi-280412-150.JPG

இலங்கை தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ அறப்போர் தொடருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2008,2009ம் ஆண்டுகளில் இலங்கையில் இறுதிப் போர் நடை பெற்று ஈழத் தமிழ் இனம் உதிரமும் உயிரும் சிந்திய அந்தக் கோர நிலைமைகளை இலங்கையிலே ஏற் படாமல் தடுத்திட அங்கே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான என்னென்ன முயற்சிகளிலே ஈடுபட்டோம் என்பதை ஞாபகப்படுத்துவது என்னுடைய கடமை.

திமுக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14,10,2008ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்சவுயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 27,12,2008ல் நடைபெற்ற திமுக பொதுக் குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். 7,4,2009ல் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் போர் நிறுத்தத்தை உறுதி செய்து அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளும் முயற்சித்தன. 9,4,2009ல் சென்னையில் என் தலைமையில் இலங்கை அரசே போரை நிறுத்து என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்ச இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

21,4,2009ல் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், இலங்கையிலுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டேன்.

நான் அனுப்பிய தந்தி அடிப்படையில் 22,4,2009ல் இரவு டெல்லியில் பிரதமர் மத்திய அமைச்சர் கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரினை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதற்குப் பிறகு தான் மறுநாள் காலை 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்துவிட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இலங்கை கூறியது. சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில். எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும் பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தை தெரிவித்து இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன் அண்ணல் காந்தி காட்டிய வழியில் அண்ணா வகுத்த நெறி யில் பெரியார் போதித்த பாதையில் ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில் அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

சகுனங்கள் சரியில்லை.

என்னமோ நடக்கப் போகுது....

வடிவேலு இல்லாத குறையை இவர் ஈடு செய்கிறார் இப்போதெல்லாம்.. ^_^

எப்ப, எங்கே, யார் தொடக்கி, தொடரப் போவது?

இப்ப ஏமாறுவதற்கு ஆக்கள் குறைவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.