Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியத் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்கான ஒன்றுகூடல்: பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sen-btf280412-150-seithy.jpg

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் இளையோர் என அனைவரையும் வந்து கலந்துகொண்டு ஆரோக்கியமான கருத்துக்களளைப் பகிர்ந்து எதிர்கால வேலைத்திட்டங்கள்ஐ அனைவருமாக ஒன்றிணைந்த சமூகமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://youtu.be/4jYyKGiWrj4

http://www.seithy.co...&language=tamil

தமிழர்பேரவையை உடைக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே இது. மாவீரர் நாளைப் பயன் படுத்தி அதனை உடைத்த அதே சங்கீதன் தலமையிலான குழுவின் பின் புலத்திலே தமிழர் பேரவையின் உடைப்பும் நடக்க இருக்கிறது.

வியாபரிகள் , களத்தில் இறங்கி உள்ளார்கள். ரோவின் செயற்பாட்டளர்களின் பின் புலத்தில்.

மக்களே கவனம்.

தமிழர் பேரவையின் அண்மைய எந்த செயற்பாடுகளிலும் பங்கேற்காதவர்கள், தத் தமது சொந்த வியாபாரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் வந்து பிரித்தானிய தமிழர் பேரவையை உரிமை கொண்டாடுகிறார்கள்.யார் யார் வேலை செய்தார்கள் என்பது வேலை செய்த எல்லோருக்கும் தெரியும்.

பேருக்கு இருந்தவர்களும், தமிழர் போராட்டத்தை வைத்து , இந்திய அரசியல் தொடர்புகளைக் கொண்டு இந்தியாவில் தமது வர்த்தக நலங்களை விரித்தி செய்தவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து உள்ளனர்.

இருக்கின்ற முரண்பாடுகளையும், முரண்பாடான நபர்களையும் ஒன்று சேர்த்து, சங்கீதன் ரோ அணி களத்தில்.ஈற்றில் மனித உரிமச் சபையில் தமிழர் பேரவையின் செயற்பாடுகளை முடக்குவதிலும், நிரந்திரமான பிளவுகளை உருவாக்குவதிலும், தமிழர் பேரவை சிதைவதிலுமே இது முடியும்.இதனால் நிீங்கள் எவரும் நன்மை அடையப் போவதில்லை.

சங்கீதன் எவ்வாறு இந்தியா சென்றார்? அமைப்பில் இருந்து விலகிய 2002 ஆம் வருடத்தில் இருந்து அவர் தமிழ் நாடில் என்ன செய்தார்?அவரின் குடும்பம் எவ்வாறு தமிழ்னாட்டில் பாதுகாப்பாக இருக்கிறது? அவரை ரோ உளவுத் துறை எவ்வாறு பயணிக்க அனுமதிக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு யாராவது பகிரங்கமாக விடை தந்தால் அவரை ஒரு உண்மையான போராளியாக எல்லோரும் ஏற்கலாம்.

பல கேள்விகள் இருக்கின்றன பதில்கள் இல்லை.இவ்வாறானவர்களின் பின்னால் இருக்கும் திட்டம் என்ன? ஏன் இவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் இருக்கும் முரண்பாடுகளைப் பயன் படுத்தி இயங்கும் அமைப்புக்களைச் சிதைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு தெளிவிருந்தால்

எவருடனும் பேசலாம்

எவருடனும் பேசலாம்,ஆனால் இது தமிழர் பேரவையை ஒரு குழு கைப்பற்றுவதற்கான நடவடிக்கை போல் இருக்கிறது.

உண்மைகள் சில நாட்களில் வெளிவரும், பொறுத்திருப்போம்.

இவ்வளவு நாளும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உருவாக்க உறுப்பினர்கள் என்று சொல்லிக் கூட்டம் கூடுவது அய்யத்தைத் தருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.