Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர்

Featured Replies

  • தொடங்கியவர்

[size=5]54 பெருமிழலைக் குறும்ப நாயனார் .[/size]

perumizha.jpg

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/54.html

“பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை .

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர்.

இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.

இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். “திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்று எண்ணி ‘இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்’ என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • Replies 117
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]55 [/size][size=5]மங்கையர்க்கரசியார் நாயனார் .[/size]

57rtydfyr.jpg

“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.

மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார்.

இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அணித்தாகத் திருமறைக்காட்டில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர் தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார்.

அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பிவைத்தார். பரிசனத்தார் சென்று பரசமயக்கோளரியாரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தப்பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார். சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்தவள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.

ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார்.

வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியார்ப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.

பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.

அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான்.

அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.

சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன.

சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கல நீறணந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.

சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார்.

மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/55.html

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக பதியப்பட்டுவிட்டது மன்னிக்கவும்

Edited by putthan

  • தொடங்கியவர்

[size=5]56 [/size][size=5]மானக்கஞ்சாற நாயனார் .[/size]

78446456.jpg

"மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்" – திருத்தொண்டத் திருத்தொகை .

மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.

மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.

கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார்.

கஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.

திருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன் கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் ‘இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?’ என்று கேட்டார். ‘அடியேன் பெற்ற மகளது திருமணம்’ எனக் கஞ்சாறர் கூறினார். உடனே ‘மங்கலம் உண்டாகுக’ என மாவிரதையார் வாழ்த்தினார்.

கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதையார் ‘இது நமது பஞ்சவடிக்கு [1]ஆகும்’ எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அதுகண்டு மெய்மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு “உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்” என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாறநாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

[size=5]57 முருக நாயனார் .[/size]

muruga.jpg

“முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார்.

ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார்.

சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/57.html

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடை பெற்ற சேக்கிழார் விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த இணையத்தளத்தில் பார்வையிடலாம்

http://www.tamilmurasuaustralia.com/2012/06/2012_25.html#more

சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் விழா 2012 - க சபாநாதன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-06-2012 அன்று சிட்னி முருகன் கோயில் கல்வி கலாசார மண்டபத்தில் சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்திரேலியாக் கிளையும் இணைந்து சேக்கிழார் விழாவைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இவ்விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்காக அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவப்படங்களும், நான்கு சந்தானகுரவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகளின் உருவப்படமும் சேக்கிழார் பெருமானது உருவப்படமும் ஆலயத்து வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்து மாலை 5.00 மணிப்பூசையுடன் விஷேட பூசை நடைபெற்றது. இப்பூசையைத் தொடர்ந்து இளஞ்சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து பல்லக்கில் சேக்கிழார் பெருமானையும்; ஏனைய திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்களையும் கும்பம், விளக்கு, குடை, நந்திக்கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் மணியோசை முழங்க பெரியோர்கள் ஓம் நமசிவாய எனும் தமிழ்மந்திரம் ஓத ஆலய வீதி வலம் வந்தார்கள்.

கலாசார மண்டப வாசலில் சிவாசாரியார்கள் கும்பம் வைத்து தீபம் காட்டி வரவேற்று திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்கள் கலாசார மண்டப மேடையில் அலங்காரமாக வைத்து சிறுவர்களின் ப10சையுடன் விழா ஆரம்பமானது.

பூசையைத் தொடர்ந்து சைவ மன்ற உபதலைவரும் பாரியாரும் “இல்லக விளக்கது இருள் கெடுப்பது” எனும் தேவாரத்துடன் மங்களவிளக்கேற்றிய பின்னர் ஹோம்புஷ் சைவப்பாடசாலை மாணவர்கள் தேவார புராணம் பாடினார்கள். தொடர்ந்து சைவமன்ற உபதலைவரின் வரவேற்புரையும், ஹோம்புஷ் சைவப்பாடசாலை பாலர் வகுப்பு மாணவர்களது பண்ணிசையும் மழலைத் தமிழில் இசைக்கப்பட்டது. ஹெலன்ஸ்பேர்க் சிவன் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ சிவசண்முகம் சிவாசாரியார் அவர்கள் “எப்போது வருவாரோ” எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து சிட்னி முருகன் ஆலய சைவப்பாடசாலை மாணவர்களது பண்ணிசை சிறப்பாக வழமைபோல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய மாலைப்ப10சையைத் தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு திருமதி மாலதி சிவசீலனின் மாணவர்கள் திருமுறைகளை பண்ணோடு இசைத்து பாராட்டைப் பெற்றார்கள். தஞ்சாவ10ர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைத்துறைப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் “கானத்தின் எழுபிறப்பு” எனும் தலைப்பில் இசையோடு சொற்பொழிவாற்றி திருமுறைகளைப் பண்ணோடு பாடுதலின் தேவையை வலியுறுத்தனார். தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை மேல்வகுப்பு மாணவர்களது பண்ணிசையும், நாயன்மார்கள் காட்டிய தொண்டு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு திரு திருநந்தகுமார் அவர்கள் தலைமைதாங்க மாணவர்கள் தமக்குத் தெரிந்த நாயன்மார்களது திருத்தொண்டுகளை மிகவும் சுருக்கமாகவும் தங்களது வசனஅமைப்பிலும் எடுத்துரைத்தார்கள்.

இறுதி நிகழ்வாக சிட்னி முருகன் ஆலய மேல்வகுப்பு மாணவர்களது “பெரிய புராண பாத்திரங்கள் பேசுகின்றன” எனும் ஓரங்க நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூன்று மாணவர்கள் கதைசொல்பவர்களாகவும் மூன்று மாணவர்கள் கதாபாத்திரங்களாகவும் தோன்றி அழகிய ஒப்பனைகளுடன் சிறப்பாகச் செய்திருந்தார்கள். உலக சைவப் பேரவை செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து சிட்னி முருகன் கோயில் மாணவர்களது தேவார புராணத்துடன் விழா இனிதே நிறைவேறியது.

நன்றி டமிழ்முரசு அவுஸ்ரேலியா

  • தொடங்கியவர்

சிட்னியில் நடை பெற்ற சேக்கிழார் விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த இணையத்தளத்தில் பார்வையிடலாம்

http://www.tamilmura...12_25.html#more

சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் விழா 2012 - க சபாநாதன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-06-2012 அன்று சிட்னி முருகன் கோயில் கல்வி கலாசார மண்டபத்தில் சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்திரேலியாக் கிளையும் இணைந்து சேக்கிழார் விழாவைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இவ்விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்காக அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவப்படங்களும், நான்கு சந்தானகுரவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகளின் உருவப்படமும் சேக்கிழார் பெருமானது உருவப்படமும் ஆலயத்து வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்து மாலை 5.00 மணிப்பூசையுடன் விஷேட பூசை நடைபெற்றது. இப்பூசையைத் தொடர்ந்து இளஞ்சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து பல்லக்கில் சேக்கிழார் பெருமானையும்; ஏனைய திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்களையும் கும்பம், விளக்கு, குடை, நந்திக்கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் மணியோசை முழங்க பெரியோர்கள் ஓம் நமசிவாய எனும் தமிழ்மந்திரம் ஓத ஆலய வீதி வலம் வந்தார்கள்.

கலாசார மண்டப வாசலில் சிவாசாரியார்கள் கும்பம் வைத்து தீபம் காட்டி வரவேற்று திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்கள் கலாசார மண்டப மேடையில் அலங்காரமாக வைத்து சிறுவர்களின் ப10சையுடன் விழா ஆரம்பமானது.

பூசையைத் தொடர்ந்து சைவ மன்ற உபதலைவரும் பாரியாரும் “இல்லக விளக்கது இருள் கெடுப்பது” எனும் தேவாரத்துடன் மங்களவிளக்கேற்றிய பின்னர் ஹோம்புஷ் சைவப்பாடசாலை மாணவர்கள் தேவார புராணம் பாடினார்கள். தொடர்ந்து சைவமன்ற உபதலைவரின் வரவேற்புரையும், ஹோம்புஷ் சைவப்பாடசாலை பாலர் வகுப்பு மாணவர்களது பண்ணிசையும் மழலைத் தமிழில் இசைக்கப்பட்டது. ஹெலன்ஸ்பேர்க் சிவன் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ சிவசண்முகம் சிவாசாரியார் அவர்கள் “எப்போது வருவாரோ” எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து சிட்னி முருகன் ஆலய சைவப்பாடசாலை மாணவர்களது பண்ணிசை சிறப்பாக வழமைபோல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய மாலைப்ப10சையைத் தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு திருமதி மாலதி சிவசீலனின் மாணவர்கள் திருமுறைகளை பண்ணோடு இசைத்து பாராட்டைப் பெற்றார்கள். தஞ்சாவ10ர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைத்துறைப் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் “கானத்தின் எழுபிறப்பு” எனும் தலைப்பில் இசையோடு சொற்பொழிவாற்றி திருமுறைகளைப் பண்ணோடு பாடுதலின் தேவையை வலியுறுத்தனார். தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை மேல்வகுப்பு மாணவர்களது பண்ணிசையும், நாயன்மார்கள் காட்டிய தொண்டு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு திரு திருநந்தகுமார் அவர்கள் தலைமைதாங்க மாணவர்கள் தமக்குத் தெரிந்த நாயன்மார்களது திருத்தொண்டுகளை மிகவும் சுருக்கமாகவும் தங்களது வசனஅமைப்பிலும் எடுத்துரைத்தார்கள்.

இறுதி நிகழ்வாக சிட்னி முருகன் ஆலய மேல்வகுப்பு மாணவர்களது “பெரிய புராண பாத்திரங்கள் பேசுகின்றன” எனும் ஓரங்க நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூன்று மாணவர்கள் கதைசொல்பவர்களாகவும் மூன்று மாணவர்கள் கதாபாத்திரங்களாகவும் தோன்றி அழகிய ஒப்பனைகளுடன் சிறப்பாகச் செய்திருந்தார்கள். உலக சைவப் பேரவை செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து சிட்னி முருகன் கோயில் மாணவர்களது தேவார புராணத்துடன் விழா இனிதே நிறைவேறியது.

நன்றி டமிழ்முரசு அவுஸ்ரேலியா

மிக்க நன்றிகள் புத்தன் உங்கள் இணைப்பிற்கும் , புலம்பெயர் மண்ணில் நடைபெற்ற நாயன்மார்களது விழா எடுப்பிற்கும் . மற்றது புத்தா இந்தப் பள்ளிக்கூட ஆக்களுக்கு ஒரு நல்ல தூயதமிழ் பெயர் கிடைக்கேலையோ ?????? நீங்கள் போட்ட படங்களையும் போய் பாத்தன் , நம்ம புங்கையர் எங்காவது தட்டுப்படுறாரோ எண்டு . ஆளைக் காணேல .

  • தொடங்கியவர்

[size=5]58 . முனையடுவார் நாயனார் .[/size]

munaiyatuvar.jpg

“அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை .

முனையடுவார் நாயனார் சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்; போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித் கொண்டிருந்தார்.

முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

எனக்கு உந்த நாயன்மாரைப் பிடிக்காது. முந்திச் சமய வகுப்பில் (8,9,10 வகுப்புகளில்) படித்து அலுத்துப் போய்ச்சுது.

:lol::D

நான் test க்கு முதல் இரு நாட்களில் தான் படிப்பதற்கு copy ஐ திறப்பன். :lol:

இப்பொழுது பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இப்பதிவு மிகவும் உதவும்.

தொடருங்கள் கோமகன் அண்ணா. :)

  • தொடங்கியவர்

:lol::D

நான் test க்கு முதல் இரு நாட்களில் தான் படிப்பதற்கு copy ஐ திறப்பன். :lol:

இப்பொழுது பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இப்பதிவு மிகவும் உதவும்.

தொடருங்கள் கோமகன் அண்ணா. :)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் புத்தன் உங்கள் இணைப்பிற்கும் , புலம்பெயர் மண்ணில் நடைபெற்ற நாயன்மார்களது விழா எடுப்பிற்கும் . மற்றது புத்தா இந்தப் பள்ளிக்கூட ஆக்களுக்கு ஒரு நல்ல தூயதமிழ் பெயர் கிடைக்கேலையோ ?????? நீங்கள் போட்ட படங்களையும் போய் பாத்தன் , நம்ம புங்கையர் எங்காவது தட்டுப்படுறாரோ எண்டு . ஆளைக் காணேல .

அந்த ஊரில் தான் அந்த பாடசால உண்டு ஆகவே ஊரின் பெயரை வைத்திருக்கிறார்கள்....புங்கையூரானை நானும் தேடுகிறேன் ....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஊரில் தான் அந்த பாடசால உண்டு ஆகவே ஊரின் பெயரை வைத்திருக்கிறார்கள்....புங்கையூரானை நானும் தேடுகிறேன் ....

காலமையில, புட்டும்,சம்பலும் சாப்பிடுற, வில்லியம்சன் என்ட, வெள்ளை அதிபராயிருந்த பள்ளிக்கூடம் தானே, புத்தன்!

வேட்டி மட்டும் அந்த மனுசன் கட்டுறதில்லையே தவிர, மற்றும் படி அவரையும், ஒரு சோத்து அங்கிள், ஆக்கிப் போட்டுதும் நம்ம சனம்! :D

படத்தில, கந்தப்புவுக்குப் பின்னால நிக்கிறது நான் தான்! :icon_idea:

  • தொடங்கியவர்

அந்த ஊரில் தான் அந்த பாடசால உண்டு ஆகவே ஊரின் பெயரை வைத்திருக்கிறார்கள்....புங்கையூரானை நானும் தேடுகிறேன் ....

எல்லாரும் ஒரே உடுப்புகளோடை நிண்டால் எப்பிடி அடையளம் காணுறது ? கந்தப்புவுக்கு பின்னாலை நிக்கிறாராம் புத்தா .

  • தொடங்கியவர்

காலமையில, புட்டும்,சம்பலும் சாப்பிடுற, வில்லியம்சன் என்ட, வெள்ளை அதிபராயிருந்த பள்ளிக்கூடம் தானே, புத்தன்!

வேட்டி மட்டும் அந்த மனுசன் கட்டுறதில்லையே தவிர, மற்றும் படி அவரையும், ஒரு சோத்து அங்கிள், ஆக்கிப் போட்டுதும் நம்ம சனம்! :D

படத்தில, கந்தப்புவுக்குப் பின்னால நிக்கிறது நான் தான்! :icon_idea:

புங்கையூரான் , யாழ்பாணத்தில் இருந்த அனேகமான பிரபலமான கல்லூரிகளிலும் ஒருகாலத்தில் வெள்ளைகளே பிறின்ஸ்சியாக இருந்திருக்கின்றார்கள் . அவர்களையெல்லாம் சோத்து அங்கிளாக்கினார்களா எமது மக்கள் ? வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

[size=5]59 மூர்க்க நாயனார் .[/size]

moorga.jpg

“மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை .

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

[size=5]60 . மூர்த்தி நாயனார் .[/size]

moorthi.jpg

"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை.

மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான்.

அவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவாராயினார். தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்றொழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்கவல்லர்? அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ? என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது.

“ஐயனே! அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக!” என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. அதனை வண்ணமும் நிரம்பின சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.

அன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசரனது காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர் கவலையுற்றனர். யானையைக் கண்கட்டிவிட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.

அன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட மூர்த்தியார் “எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத்தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன்வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேற் தரித்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டுவதற்குரிய சடங்குகள் செய்யலாயினார்.

“சமண் போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை ஏற்றுப் புவி ஆள்வேன்; முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என மூர்த்தியார் அருளினார். அதுகேட்ட அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் மறை முழக்கம் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடி சூடினார்.

முடிசூட்டு மண்டபத்தினின்றும் மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர். பின் அங்கு நின்றும் யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அரச கொலு வீற்றிருந்தனர்.

அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார். பொன்னாசை சிறிதும் படாது முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்த பின்னர் திருவடி நீழலில் உறையும் பெருவாழ்வு பெற்றார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

[size=5]61 மெய்ப்பொருள் நாயனார் .[/size]

mei+porul.jpg

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத்தொகை.

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.

அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள்.

துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான்.

இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான்.

அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

http://kala-tamilforu.blogspot.fr/2011/06/61.html

  • தொடங்கியவர்

[size=5]62 [/size][size=5]வாயிலார் நாயனார் .[/size]

vaayilar.jpg

வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் “தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும்.

இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,

"மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல

நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;

தன்மை வாயிலார் என்னும் தபோதனர் "

கூறுகின்றார். இதில் “தன்மை வாயிலார் என்னும் தபோதனர்” என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் “நான்” என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை “தன்மை வாயிலார்” என்பது குறிக்கும். தன்மை என்பது “நான்” என்பதைக் குறிப்பது.

வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.

மார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வருகின்றது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.