Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!!

Featured Replies

கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1)

கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.

அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.

இந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.

ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.

ஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.

ஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது "செய் அல்லது செத்துமடி 1 " என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.

உண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.

விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.

ஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன?

தொடரும்

-வி.சபேசன்

(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)

  • தொடங்கியவர்

கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 2)

ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் என்பது நீண்ட கால தயாரிப்புக்களை கொண்ட ஒன்று. குறிப்பிட்ட படைத்தளம் நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடைப்படையில் தாக்குதல் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பின்பு தாக்குதல் நடைபெறும். ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றிக்கு அடிப்படையாக வேவுப் படையணிகளின் செயற்பாடுகளும், தாக்குதலுக்கான திட்டமிடலும் அமைகின்றன.

ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான வேவு பார்த்தலை கேணல் ஜெயத்தின் தலைமையிலான விசேட வேவுப் படையணி மேற்கொண்டிருந்தது. வேவு மூலமாக பெறப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தேசியத் தலைவர் ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான திட்டத்தை வரைந்தார். பொதுவாகவே ஒரு பெரும் தளத்தின் தாக்குதல் திட்டம் வரையப்படும் பொழுது அது மிகவும் இரகசியமாகவே வைக்கப்படும். அதுவும் மணலாற்றில் நடந்த இதயபூமி 2 நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இரகசியங்கள் காக்கப்படுவது என்பது மிக மிக இறுக்கமான ஒன்றாக மாறியிருந்தது. ஒரு தளத்தின் மீதான தாக்குதல் திட்டமும், தாக்குதல் நடப்பதற்கான நேரமும் தேசியத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். அனைத்து தயார்படுத்தலும் முழுமை பெற்ற பின்னர் தளபதிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.

கிளிநொச்சி தளத்தை தாக்கி அழிப்பதற்கு தேசியத் தலைவர் முடிவெடுத்த பின்பு, ஜெயசிக்குறு படைகளை தடுத்து நிறுத்தியபடி மாங்குளத்தில் சண்டை புரிந்து கொண்டிருந்த அணிகளுக்கு பொறுப்பாக இருந்த கேணல் தீபனை கிளிநொச்சி தளத்தின் மீதான முற்றுகையை இறுக்கும்படி உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்தார்.

கிளிநொச்சி தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கு ஜெயசிக்குறுவை எதிர்த்து போரிட்ட பெரும்பாலான அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. உள் நுளைந்து தளத்தை தாக்கி அழிப்பதற்கு கேணல் தீபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முன்பு ஒரு முறை கிளிநொச்சி தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையான வெற்றியை பெறவில்லை. அப்பொழுது ஆனையிறவுத் தளத்தில் இருந்து கிளநொச்சி இராணுவத் தளத்திற்கு உதவிகள் கிடைத்ததே அதற்கு காரணம். அதைக் கருத்தில் கொண்டு இம் முறை ஆனையிறவில் இருந்து உதவிக்கு வரும் படைகளை தடுக்கும் பொறுப்பு கேணல் பால்ராஜுக்கு வழங்கப்பட்டது. கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஆனையிறவில் இருந்து உதவிக்கு வந்த இராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்து பலத்த இழப்பை எதிரிக்கு ஏற்படுத்தி விரட்டி அடித்தன. ஆனால் உள் நுளைந்த படையணிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. ஒரு நாள் முழுவதும் போரிட்டும் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கிளிநொச்சி தளத்தின் மீது ஆட்லறித் தாக்குதல் கடுமையாக்கப்பட்டது. கிட்டு பீரங்கிப் படையணியின் முழு வலுவும் ஒரு சேரப் பிரயோகிக்கப்பட்டது. சண்டையும் முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் பெரும் பாங்காற்றி இருந்தன. கிளிநொச்சி தளம் வெற்றி கொள்ளப்பட்டதன் அடையாளமாக கேணல் விதுசா புலிக் கொடியை ஏற்றினார். இந்தச் சமரில் கருணாவின் பங்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை என்பதே உண்மை.

இந்த ஓயாத அலைகள் 2 மூலமே தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்த ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் வெற்றிக்கு விசேட வேவுப் படையணிகள் ஒரு காரணம். ஆனையிறவில் இருந்த வந்த படைகளை விரட்டியடித்த கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். உள் நுளைந்து மிகக் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்து கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்திருந்த கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். சண்டையில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மகளிர் படையணிகள் ஒரு காரணம். சண்டைய முடிவுக்கு கொண்டு வந்த கிட்டு பீரங்கிப் படையணி ஒரு காரணம்.

இதில் யாரவது ஒரு பகுதி சரியாக செயற்படவில்லையென்றாலும் சண்டையின் போக்கு மாறியிருக்கும். ஆகவே ஒரு சமரின் வெற்றி;க்கு யாரும் உரிமை கோர முடியாது. கரந்தடித் தாக்குதல்களாக ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் பெரும்தளங்களை தாக்கி அழிக்கின்ற பெரும் சமர்களாக பரிமாண வளர்ச்சி பெற்ற பின்னர், எந்த ஒரு சமரின் வெற்றிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு தான்தான் காரணம் என்று ஒரு தளபதி சொன்னால், அவருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றுதான் அர்த்தம்.

ஆனால் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு கருணாவே காரணம் என்று உளறுகிறார்கள். தென்தமிழீழத்தை சேர்ந்த போராளிகளின் வீரத்திலும் தியாகத்திலும் இவர்கள் குளிர் காய முனைகின்றார்கள்.

கருணாவின் இராணுவ வல்லமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. காட்டுச் சண்டைகளில் நீண்ட கால தற்காப்புச் சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் கொண்ட கருணா ஒரு பெரும் இராணுவத் தளத்தின் மீதான வலிந்து தாக்குதலின் யுக்திகளை சரியாக அறிந்தவர் அல்ல. கிழக்கில் வவுணதீவு போன்ற இராணுவ முகாம்கள் மீதான கருணாவின் திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தின. சரியான திட்டமிடல் இன்றி கிழக்கின் போராளிகளை பல முறை அநியாயமாக பலி கொடுத்தவர்தான் கருணா. பெரும் தளங்கள் மீதான வலிந்த சமர்களில் விடுதலைப்புலிகளின் பல தளபதிகளை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்டவர் கருணா. கருணாவிற்கு அடத்த இடத்தில் இருந்த கேணல் ரமேஸ் கருணாவை விரட்டியடித்த தாக்குதலை வழி நடத்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்கு நன்கு பரிச்சயாமான பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில் போரிட முடியாமல் தப்பி ஓடியவர் கருணா. முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கருணாவின் தலைமையில் நடந்த சண்டைகளை கவனித்தால் ஒன்று விளங்கும். நகர்புறங்களில் படை நடத்திய அனுபவம் கருணாவிற்கு கிடையாது. அதற்கான திறனும் கருணாவிடம் இல்லை.

ஆனால் வரவிருக்கும் ஈழப் போர் 4 நகர்ப்புறங்களிலேயே நடைபெறும். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி பெரும்பாலான காட்டுப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை நகரமும் மட்டக்களப்பு நகரமும் விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும். இவைகளை கருத்தில் கொண்டே நகர்ப்புற சண்டைகளில் மிகவும் அனுபவம் கொண்ட கேணல் பானு கிழக்கின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என நம்பலாம். அதாவது இனி வரப் போகும் சண்டைகளில் கருணாவின் விலகல் சிறிய அளவு கூட தாக்கத்தினைக் ஏற்படுத்தாது என துணிந்து கூறலாம்.

இனி விடுதலைப்புலிகள் மரபு வழிச் சண்டையில் உச்ச திறனை வெளிப்படுத்திய ஓயாத அலைகள் 3 பற்றி பார்ப்போம். சிறிலங்கா அரசு 18 மாதங்கள் சண்டை செய்து பிடித்த இடங்களை 3 நாட்களில் விடுவித்த அற்புதம் அது. அப்படியே தமிழர் தாயகத்தின் தொண்டையில் முள்ளாக இருந்த ஆனையிறவையும் கைப்பற்றிய பெரும் சமர் அது.

ஓயாத அலைகள் 3 நடவடிக்கையானது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி மட்டுமே தளபதிகளுக்கு தெரிந்திருந்தது. ஒட்டிசுட்டானில் தொடங்கிய சண்டைகள் ஆனையிறவில் தான் முடியும் என்று எந்த தளபதியும் அறிந்திருக்கவில்லை.

இவ்வளவையும் விடுங்கள். விடுதலைப்புலிகளுக்கு மரபுவழிச் சண்டைகளை கற்றுக் கொடுத்த கர்த்தாவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாவுக்கு ஓயாத அலைகள் 3 ஆரம்பித்த விடயமே தெரியாது.

(தொடரும்)

-வி.சபேசன்

(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)

நன்றி

-வி.சபேசன்

  • தொடங்கியவர்

கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 3)

ஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியது. கேணல் ஜெயத்தின் தலைமையில் விடுதலைப்புலிகளின் படையணிகள் சில மணி நேர சண்டையின் பின்னர் ஒட்டுசுட்டானை கைப்பற்றின. இதே வேளை கேணல் சொர்ணத்தின் தலைமையிலான பிறிதொரு படையணிகள் நெடுங்கேணியை கைப்பற்றின.

இந்தக் களோபரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எதுவும் அறியாமல் கருணா மன்னார் பகுதியில் சில படையணிகளுடன் தேசியத் தலைவரின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.

கேணல் தீபனின் தலைமையில் சென்ற புலிகளின் படையணிகள் கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன் குளம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய படி புளியங்குளம் நோக்கி முன்னேறின. கேணல் தீபனின் தலைமையிலான படையணிகளும், நெடுங்கேணியில் இருந்து ஒலுமடுவை கைப்பற்றிய படி முன்னேறி வந்த படையணிகளும் இணைந்து புளியங்குளத்தை கைப்பற்றின. இதற்கு முன்னர் கேணல் சொர்ணத்தின் வழிநடத்தலில் மணலாற்றில் இருந்த ஒதிய மலைப் பகுதியும் அதை அண்டிய பல பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

ஓயாத அலைகள் மூன்றின் இரண்டாம் கட்டமாக கேணல் ஜெயத்தின் தலைமையிலான படையணிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

t15py.gif

ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டமாக ஆனையிறவுப் பெருந் தளத்தின் மீதான முற்றுகைச் சமர் அமைந்தது. இந்த முற்றுகைச் சமரின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவின் தலைமையிலான படையணிகள் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றின. ஆனையிறவுத் தளத்திற்கு வன்னியிலிருந்த வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட தளங்களாகிய பரந்தன், உமையாள்புரம் போன்ற பகுதிகளை கேணல் தீபன் தலைமையிலான படையணிகள் கைப்பற்றின.

ஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டமாக குடாரப்பு தரையிறக்கமும், ஆனையிறவு கைப்பற்றலும் அமைந்தது . இதில் குடாரப்பு தரையிறக்கமும் பின்பு கேணல் பால்ராஜின் தலைமையில் நடந்த இத்தாவில் சமரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

குடாரப்பு தரையிறக்கத்தை நோர்மண்டி தரையிறக்கத்துடன் இராணுவ ஆய்வாளர்கள் ஒப்பிடுவர். விடுதலைப்புலிகளால் ஈழத்தின் எந்த மூலையிலும் தங்கள் படைகளை இறக்க முடியும் என்பது அன்று நிரூபிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தரையிறக்கம் கருணாவின் கலகத்தினை அடக்குவதற்கு வெருகல் ஆற்றிற்கு அப்பால் உள்ள பகுதியிலும் பின்பும் நிகழ்ந்தது.

குடாரப்பில் தரையிறங்கிய படையணிகள் இத்தாவில் பகுதியில் நிலையெடுத்தன. அங்கு நடந்த சமர் விடுதலைப்புலிகளின் சண்டையிடும் உச்ச திறனை வெளிப்படுத்திய சமர். உலக வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத நிகழ்வு அது. சரியான வினியோகப் பாதைகள் இன்றி நாற்பதினாயிரம் படைகளுக்கு நடுவில் நின்று பல வாரங்கள் 1500 விடுதலைப் புலிகள் சண்டை செய்தனர். கேணல் பால்ராஜை உயிருடன் பிடிப்பதா, அல்லது பிணமாக பிடிப்பதா என ஆராய்ச்சி செய்தபடி வந்த சிறிலங்கா படையினர் பெருத்த அவமானத்தோடு அடி வாங்கி ஓடினர். பல முறை முயன்றும் இத்தாவிலில் நிலைகொண்டிருந்த புலிகளை அவர்களால் அசைக்க முடியவில்லை. இந்தச் சமரைப் பற்றி பரணி பாடுதல் தகும்.

பின்பு கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் முன்னேறி வந்து இத்தாவிலில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டனர். அதன் பிறகு ஆனையிறவை கைப்பற்றும் பெரும் சமர் தொடங்கியது. ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கி உளவியல்ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவம் உயிர் தப்பி ஓடியது. ஆனையிறவு சமருக்கு ஒருங்கிணைப்பு தளபதியாக விளங்கிய கேணல் பானு ஆனையிறவில் புலிக் கொடியை ஏற்றினார்.

ஆனையிறவுச் சமருக்கான முற்றுகைச் சமரிலும், குடாரப்புத் தரையிறக்கத்திலும் கேணல் சூசை தலைமையிலான கடற்புலிகள் பெரும் பணி ஆற்றினார்கள். கடற்புலிகள் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்கள். ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் கேணல் பானு தலைமையிலான கிட்டு பீரங்கிப் படையணி ஒரு பெரும் காரணமாக இருந்தது. கிட்டு பீரங்கி படையணியின் துல்லியமான எறிகணை தாக்குதல்கள் சிங்கள இராணுவத்தை கிலி கொண்டு ஓட வைத்திருந்தன.

விடுதலைப்புலிகளால் பெரும் தளங்களையும் நகரங்களையும் கைப்பற்றி தக்க வைக்க முடியும் என்பதை நிருபத்த ஓயாத அலைகள் மூன்றில் கருணாவின் பங்கு என்பது மிக மிகச் சிறியதே. இந்தச் சமர் ஏறக்குறைய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும் பங்கு கொண்ட சமர். அனைவரும் தேசியத் தலைவரால் தமக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை சரியாக செய்து தமிழினத்திற்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர்.

ஓயாத அலைகள் மூன்றிலாவது கருணாவின் பங்கு சிறியளவில் இருந்தது. சிறிலங்கா படைகளை போரே செய்ய முடியாதபடி மொத்தமாக முடக்கிப் போட்ட "தீச்சுவாலை" சமரில் கருணாவின் பங்கு எள்ளளவும் இருக்கவில்லை. "தீச்சுவாலை நடந்த பொழுது கருணா மீண்டும் கிழக்கு திரும்பியிருந்தார்.

ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா அரசு "தீச்சுவாலை" என்னும் பெயரில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய இராணுவத் தளங்களில் இருந்து இந்த படையெடுப்பு நடந்தது. பெரும் எடுப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஓரே நாளில் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு குறுகிய நேரத்தில் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதை உலகம் கண்ட சமர்களாமாக "தீச்சுவாலை" அமைந்தது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் இறந்தும் மூவாயிரம் படையினர் காயமடைந்தும் போனார்கள். சிறிலங்கா இராணுவம் பெயர் சூட்டி ஆரம்பித்த நடவடிக்கைகளில் தீச்சுவாலை மட்டும்தான் ஒரு சிறு நிலபரப்பைக் கூட கைப்பற்றாது முடிந்து போனது. அது மட்டுமன்றி முதல் முறையாக தங்களின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக எவ்வித சப்பைக்கட்டும் கட்டாமல் சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்ததும் அதுவே முதற் தடவையாக இருந்தது. இனியும் சண்டைகள் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தால் இழப்புக்களை சமாளிக்க முடியாது போகும் என்று சிறலங்கா அரசு கூறியது. இந்தச் சமரில் விடுதலைப்புலிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டார்கள். எறிகணைத் தாக்குதல் மூலம் சிங்கள படையினரை கண்ணிவெடி வயல்களுக்குள் ஓட வைத்து பெரும் இழப்பை ஏற்படுத்தினர்கள். உலக சரித்திரத்தில் முதற் தடவையாக தற்காப்புத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக மாமனிதர் தாரகி எழுதியிருந்தார். இவ்வாறு இந்த சமர் பல "முதற் தடவைகளை" கொண்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க "தீச்சுவாலை" எதிர்ச் சமரை தீபன் தலைமை தாங்கியிருந்தர். சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, மாலதி படையணி ஆகிய படையணிகள் இதில் பங்கு கொண்டன.

ஆகவே ஊன்றிக் கவனிக்கையில் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் சொல்வது போல் விடுதலைப்புலிகளின் சண்டைகள் எதுவும் கருணாவில் தங்கியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பெற்ற பெரு வெற்றிகள் கருணா இல்லாமலேயே பெறப்பட்டன. கருணாவை விட பல மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட தளபதிகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றிருக்கிறது.

உலகத்தில் எந்த இனமும் பெற்றிராத ஈடு இணையற்ற பெரும் இராணுவ வல்லுனராகிய தேசியத் தலைவர் பிரபாகரனையும் நூற்றுக் கணக்கான வீரத் தளபதிகளையும் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு, கருணாவால் எவ்விதத்திலும் சவால் விட முடியாது.

கேணல் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் பானு, கேணல் சொர்ணம் போன்றவர்களின் வரிசையில் இருந்த கருணா, தற்பொழுது ராசிக், புளொட் மோகன் போன்றவர்களின் வரிசையில் இருக்கின்றார். ஆனால் ராசிக், புளொட் மோகன் போன்றவர்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கருணா அங்கும் ஒரு கற்றுக்குட்டியே!

(பாகம் 4 இல் முடிவுறும்)

- வி.சபேசன்

(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)

நன்றி:

- வி.சபேசன்

  • தொடங்கியவர்

கருணா என்னும் மாயை! (பாகம் 4)

தமிழினம் காலத்திற்கு காலம் பல துரோகிகளை சந்தித்து வந்திருக்கிறது. அதில் சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள். இதில் கருணா இரண்டாவது ரகம்.

சில வருடங்களுக்கு முன்பு அரசியல்ரீதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும், இராணுவரீதியாக மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்களும் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டது. மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சிங்கள அரசு டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா போன்றவர்களை பயன்படுத்திவருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அரசியல்ரீதியான செயற்பாடுகளுக்கு ஆனந்தசங்கரியை தலைமை ஏற்க செய்வதற்கு இந்திய அரசும், சிங்கள அரசும் முயன்றன. ஆனால் ஆனந்தசங்கரியோ அவரது உற்ற துணையாக இருந்த கதிர்காமர் கொல்லப்பட்ட பின்பு, செய்வது அறியாது தடுமாறி வருகிறார். தற்பொழுது ஆனந்தசங்கரி உல்லாசப் பயணங்கள் செய்தும் கடிதங்களை எழுதியும் பொழுதை போக்கி வருகிறார்.

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் ஆதரவு என்பது துளி கூட இல்லாத ஒருவர் என்பது பல முறை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. டக்ளஸ் தேவானந்தா எத்தனை அமைச்சர் பதவிகள் வகித்தாலும், அவரை மரபு கருதி சந்திக்கின்ற ராஜதந்திரிகள் கூட அவரது கருத்துக்களை கேட்பதோடு விட்டுவிடுகிறார்கள். அரசியல்ரீதியாக எதையும் சாதிக்க முடியாத டக்ளஸின் ஈபிடிபி யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இராணுவத்தின் துணைப்படையாக மட்டும் செயற்பட்டு வருகின்றது.

இவர்களில் தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே. கருணா துரோகம் இழைத்த பொழுது மிகப் பெரிய ஒரு சக்தியாக சிங்கள அரசின் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சரியான சவாலாக கருணா இருப்பார் என்று சிறிலங்கா அரசு அக மகிழ்ந்திருந்தது. ஆனால் இன்று ராசிக்கின் இடத்தைக் கூட நிரப்ப முடியாத ஒரு நிலையிலேயே கருணா உள்ளார்.

ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து பின் தனித்து இயங்கிய ராசிக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஓரளவு சவாலாக விளங்கியவர் என்பது உண்மை. ராசிக் குழு சட்டப்படி சிறிலங்கா அரசின் துணைப்படையாக இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ராசிக் குழுவுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. தமிழ் மக்களை துன்புறுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலும் ராசிக் குழு சிறிலங்கா இராணுவத்திற்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தது. யுத்த காலத்தில் கூட ராசிக்குழுவால் சில புலனாய்வு வேலைகளில் ஈடுபட முடிந்தது. அது மட்டுமன்றி ராசிக் கிழக்கிலேயே வசித்து வந்தார். பலத்த பாதுகாப்போடு கிழக்கில் நடமாடிய ராசிக்கை நெருங்குவது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. கடைசியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ராசிக் கொல்லப்பட்டார். ஒரு தமிழினத் துரோகியை அழிப்பதற்கு விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது ராசிக் விடயத்தில் மட்டுமே.

ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களோடு ஒப்பிடும் பொழுது விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு பொருட்டே அல்ல. தற்பொழுது ஈழத்தில் செயற்படும் துரோகக் குழுக்களில் மிகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருப்பது கருணா குழுவே. மற்றைய குழுக்களின் தலைமைகள் ஈழத்தில் இருந்து செயற்பட, கருணா மட்டும் இந்தியா, சிங்கப்பூர் என்று நாடு நாடுகளாக ஓடித் திரிகின்றார்.

இதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கேணல் கருணா ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களை விட திறமையானவர்தான். காரணம் அந்தக் கருணாவிற்கு தேசியத் தலைவரின் வழிகாட்டல் இருந்தது. ஆனால் ஓடிப் போன கருணா தற்பொழுது செய்துவரும் வேலையில் திறமைசாலி அல்ல. சுருங்கச் சொன்னால், நாங்கள் பெறுமதி மிக்க எதையும் இழக்கவும் இல்லை. எதிரிகள் பெறுமதி மிக்க எதையும் பெறுவும் இல்லை. கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை. இன்று விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறார் என்பதும் மாயை. அத்தோடு கிழக்கில் கருணாவிற்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று இருந்த மாயையும் நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளால் அடிபட்டுப் போய்விட்டது.

கருணா ஒவ்வொரு நாடாக ஓடிக் கொண்டிருக்கு, அவருடைய குழு உயர்பாதுகாப்பு வலையங்களில் இருந்தபடி, சிங்கள இராணுவத்தின் கட்டளையை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கருணா குழுவோடு ராசிக் குழு, ஈஎன்டிஎல்எவ் போன்ற குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கருணா குழுவை ஒரு சக்தியாக காண்பிப்பதற்காக, சிறிலங்கா இராணுவம் கருணா குழுவினரை உள்ளடக்கியபடி சில தாக்குதல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 12 ஆம் திகதி கருணா கிழக்கை விட்டு முற்றாக விரட்டியடிக்கப்பட்டார். அதை நினைவுகூரும் விதமாகவும், கருணா குழுவின் இருப்பை காட்டும் விதமாகவும், சிறிலங்கா இராணுவம் வரும் வாரங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தும். இவைகளை வைத்து கருணா பற்றிய மாயையை கட்டிக்காக்க முனையும்.

ஆனால் உண்மையில் கருணா குழு என்பது தனித்து இயங்குவதற்கு வல்லமையை எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை. ஆட் பலமோ, ஆயுத பலமோ, மக்கள் ஆதரவு சிறிதளவு கூட இல்லாது ஒரு ரௌடிக் கும்பல்தான் கருணா குழு.

80களிலும் 90களிலும் துரோகக் கட்சிகள், இயக்கங்கள் என்று இருந்தவை இன்று குழுக்களாக சுருங்கி விட்டன. அன்று விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை விட இன்று இருக்கின்ற கருணா, டக்ளஸ் போன்றவர்கள் எல்லா விதத்திலும் பலவீனமானவர்கள். வெறும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகளால் எந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஒரு சவாலாக மாற முடியாது. இந்தப் பொம்மைகளை பற்றி வெறும் பிரம்மைகளே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுக்கதைகள் மூலம் பலமானவர்களாக இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார

  • தொடங்கியவர்

கரிநாகம் கருணா போனால் மட்டகளப்பு போய்விடும் என்று நினைத்தால்?

விக்டர் அண்ணா போன பின் நாம் மன்னாரை இழந்து இருக்க வேனும் புலேந்தி அம்மான் போன பின் நாம் திருமலையை இழந்து இருக்கவேனும் மாறாக அவர்கள் இறந்த பின்னும் உரமாகதான் இருந்தார்கள்.......

ஆணால் யாரும் வேறும் எளும்பு கூடு ஆக போகவில்லை ஒவரு தளபதியின் இறப்பும் தாங்க முடியாத துன்பம் தான் ஆணால் அவர்கள் விட்டு சென்ற வெற்றியும் வீரமும் எமக்கு மேலும் மேலும் பல போராளிகளை தந்தது.......

நீ மட்டும் ஏதோ நாய் மாதிரி குரைச்சுது யாழ்ப்பாணத்தான் மட்டகளப்பான் என்று கடசியில் மட்டகளப்பு போராளிகளிடமும் தளபதிகளிடமும் அடி வாங்கி(சும்மா அடி இல்லை எங்க வீட்டு அடி உங்கள் வீட்டு அடி இல்லை செம அடிதான் கருணாக்கு ஜனனாயகம் சொல்லி கொடுந்த ஆக்கள் :P :P :P

இப்ப இருக்க ஒரு இடமும் இல்லாமல் ஊர் ஊரா ஒடி திரியுது அவன் சிங்களவனும் தொப்பி முக்காடும்களும் இந்த நாய்யின் பெயரை சொல்லி கொண்டு விளையாடுதுகள்.....

இந்த நாய் என்ன செய்யுது 6 மில்லியன் ருப்பிஸ் காசை கொண்டு வைக்கவும் இடம் இல்லாமல் சீங்கபூர். இந்தியா என்று அலையுது,,,,

கருணா ஒடு கண்ணா ஒடு எங்கள் பொட்டு அம்மான் சிரிக்கா முன் ஒடி தப்பு பொட்டு அம்மான் சிரிக்க தொடங்கினால் நீ எரிந்து விடுவாய் கண்ணா.

உனக்கு அழிவுகாலம் இன்று தொடங்க வில்லை எப்போ நீ ராஜன் சத்தியமுர்த்தியின் அன்பு கிடைத்ததோ அன்றே உனது அழிவுகாலம் பிறந்து விட்டது.....

எனது ஆசை வேற ஒன்றும் இல்லை உனது அழிவு ஒரு மட்டக்களப்பு வீரனால் தான் கிடைக்கவேனும் அதுவும் மட்டக்களப்பில்(கிழக்கில்)

நன்றி எனது கருத்தை எழுதுவதுக்கு சந்தர்ப்பம் தந்த யாழ்களத்துக்கு :wink:

உண்மையில் அந்த மண்ணின்மக்களுக்கு துரோகம் செய்த துரோகிகளுக்கு அந்தமக்களாலேயே தண்டனை வழங்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சசி தொடர்ந்து எழுதுன்கோ. அப்பதான் உந்தக் காக்கைவன்னியன் பற்றி சனத்துக்கு விளங்கும்

  • தொடங்கியவர்

என்ன கந்தப்பு அண்ணை இவரை பற்றி எழுத என்ன மாதக்கனக்கா தேவை?

5000ம் 6000ம் போராளிகளை வச்சு மட்டக்களப்புல ஆனையிறவு தானே பிடிச்சவர்?

அதுவும் உங்களுக்கு தெரியுமோ தெரியாது நியூட்டன் என்று ஒரு புலனாய்வு பொறுப்பாளரும், நீலன் என்ற புலன்னாய்வு பொறுப்பாளரும் தான் கரிநாகம் கருணாக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் மட்டக்களப்பில்.........

எத்தனை திறமையான தளபதிகளை அடக்கி வச்சு இருந்தவர் இவர் அவர்கள் சொல்லவும்(தலைவருக்கு) முடியாமல் கஷ்டப்படவர்கள்.............

ஒரு தளபதி (பெயர் மறந்து விட்டேன்) அவர் உயிரோடு இருந்தால் கருணா கிழக்குக்கு மாவட்ட தளபதியாக வந்து இருக்கமடார் என்று ஊரில் சொல்லுவர்கள்............

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை இயக்கும் அரசியல் ஆலோசர்! (பாகம் 1)

பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது.

கருணாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் முன்னர் கிழக்கு மாகாணத்தில் கருணாவின் சூட்டில் குளிர் காய்ந்தவர்களே இப்பொழுதும் சுயலாபங்களுக்குக்காக அவன் பின்னால் எல்லோரையும் வென்ற எட்டப்பர்களாக தமிழ் தேசியத்தையும் இலக்கையும் குலைப்பதற்காக வெறியர்களாக திரிகின்றனர்

துரோகி கருணாவின் பின் உள்ள இந்த சூத்திரதாரிகளையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக கருணாவின் அரசியல் ஆலோசகரையும் வெளிக்கொணர்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

துரோகி கருணாவின் படையில் எஞ்சிய துரோகிகளையும் கொண்டு தனது ஜனநாயக அட்டகாசங்களையும் செய்து கொண்டு வருவது ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் ஊடாகவும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த துரோகிகள் கீழ் கண்டவாறு பிரித்து தனது செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

1. கொழும்பு மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான துரோகத் தலைவன் - பிள்ளையான்

2. பொலநறுவை, வவுனியா மாவட்டம் - மங்களம், மார்க்கன்

3. மன்னார், புத்தளம் மாவட்டம் - மதுசன் (சித்தா)

4. கல்முனை, அம்பாறை மாவட்டம் - ஏறாவூரைச் சேர்ந்த குமாரசாமி புஸ்பகுமார் என்ற பாரதி அல்லது இனியபாரதி

5. மட்டக்களப்பு நகரப் பொறுப்பு - அஜித் (சுமன்), பிரதீபன், முகிலன்

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அலுவலகம் அமைத்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் துரோகச் செயல்களை வழிநடத்துகின்றார்கள். இவர்களில் பிரதீபன் என்பவர் கிழக்கில் இடம்பெற்ற கொள்ளை, பெண்கள் மீதான வல்லுறவு போன்றவற்றிற்கான காரணகர்த்தாவாக விளங்கியது மட்டும் அல்ல, கிழக்கில் இடம்பெற்ற பெண்போராளிகளின் கொலை, காட்டிக்கொடுப்பு ஆகியவற்றால் புலிகளால் தேடப்பட்டுவரும் மரண தண்டனைக்கு உரியவன்.

மேலே குறிப்பிட்டவர்களின் எடுபிடிகளாக சூட்டிதரன், சுதன், ராஜசீலன் ஆகியோர் இருக்கின்றார்கள். அத்துடன் புளொட்டில் இருந்து பின் இஎன்டிஎல்எவ் இற்கு மாறி முன்னைய காலங்களில் இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டிடம் பயிற்சி பெற்றவனான சந்திவெளியை சேர்ந்த மகேந்திரன்மாமாவும் துரோகி கருணா குழுவில் சேர்ந்துள்ளான்.

இவர்களுக்கான இராணுவத் தளபாடங்களை நேரடியாகவே இலங்கை இராணுவம் மற்றும் உளவுப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றின் கண்காணிப்பாளர்களாக கப்டன் கருணாரத்ன, கப்டன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டு இவர்களது அனைத்து தேவைகளும் 24 மணி நேரமும் பூர்த்தி செய்யப்படுகின்றன.

தாங்கள் ஆயுதக்கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு கிழக்கு மாகாண மக்களின் விமோசனத்திற்காக ஜனநாயக வழிக்கு வந்துள்ளோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு ஜனநாயக வழிகாட்டுபவர் வேறு யாருமல்ல. கொலை, கொள்ளைகளின் சொர்க்க புருசனாக விளங்கும் இனம் காட்டிக்கொடுப்பின் செம்மல் டக்ளஸ் தேவானந்தாவேதான் அவர். தேவமானவரின் விளையாட்டு கோல்ஃபேஸ் கடற்கரையில் காய்ந்த பனைமரங்களை நட்டு நூறு மில்லியன் ருபாய்களை கணக்கு காட்டுவது மாத்திரம் அல்ல, கோயில் திருப்பணியோடு மகேஸ்வரியுடன் விதவைகளுக்கு வாழ்வளிப்பது என்றும் கணக்கு காட்டி காசுகளை அள்ளுகிறார். முக்கியமாக அந்நிய நாட்டு உளவுப்பிரிவிடமும் மற்றைய சில நாடுகளிடமும் அற்ப சொற்ப ஆசைகளுக்காக தமிழினத்தின் இறைமையை விற்று பணம் பெற்று இறைச்சியை தான் தின்று கொண்டு எலும்பை கருணாவிற்கு கொடுக்கும் அடுத்து துரோகி இவன்.

கிழக்கில் இன வெறியர்களால் பல ஆயிரம் மக்கள் கழுத்தறுபட்டு உயிரோடு எரிக்கப்பட்டு பல பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எல்லாம் மறந்து, தேசியத் தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும், புலிகள் இயக்கத்தில் பெற்ற பயிற்சிகளையும் அதே இயக்கத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக பாவித்து அரச புலனாய்வுப்பிரிவுடன் சேர்ந்து இயங்குபவன் ஒன்றும் பெரிய வீரன் அல்ல. வெறும் தேசத் துரோகிதான். இதுவரை விடுதலைப்புலிகள் இவன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு இன்று வரை பதில் அளிக்காத கோழை இவன்.

இந்தக் கருணாவிற்கு ஒரு அரசியல் ஆலோசகர் உண்டு. கருணா தன்னை தேசியத் தலைவர் போன்று கற்பனை செய்ய, இவனுடைய அரசியல் ஆலோசகர் தன்னை அன்ரன் பாலசிங்கம் போன்று கற்பனை செய்கின்றார். இதற்கு ஓரளவு பெயர் ஒற்றுமையும் இருந்து தொலைப்பது காரணமாக இருக்கலாம். கருணாவின் அரசியல் அலோசகரின் பெயர் கே.ரி ராஜசிங்கம். கே.ரி.ஆர் என்று அழைக்கப்படும் இந்த ராஜசிங்கம் யார்? இவருடைய பின்னணி என்ன? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

- வன்னியிலிருந்து புலோலியூரான்.(¿ýÈ¢:www.webellam.com)

(¸Õ½¡ என்னும் கரிநாகத்தை ¿ýÈ¡¸ «È¢ó¾ µÕÅ÷. தலைமைக்குக் கூட ¦¾Ã¢Â¡¾ ÀÄ ¯ñ¨Á¸¨Ç ¸Õ½¡Å¢ý ÁÚÀì¸Á¡¸ ¦Åளி즸¡½÷¸¢È¡÷.)

உங்களுடன் சில நிமிடங்கள்.1

நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும் ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.

மேலும் நான் இந்தக் கபடதாரியும் நம்பிக்கைத் துரோகியுமான கருணாவின் தில்லுமுல்லுகளைப் பலவருடத்திற்கு முன்னரே கூறியிருப்பேனானால் இந்தத் தொடரில் வரும் சம்பவங்களைப் போல் ஏற்பட்டிருக்கும். அதாவது கடைசியாகத் தனது பிரச்சனையைத் தெரிந்து தலைமைக்குக் கூற முற்பட்ட போராளிக்கு எப்படிக் குளிர்பானத்தில் சயனைட் கலந்து கொன்றானே அப்படி எனக்கும் நடந்திருக்கும்.

மேலும் தமிழீழப்போரை கொச்சைப்படுத்தி அடாவடி செய்த இந்தக் கயவன் கருணாவின் மூச்சை எப்போதோ என் துப்பாக்கி நிறுத்தியிருக்கும். ஏனெனில் அருகிலிருந்த எனக்கு இது பெரிய காரியமாக அப்போது இருக்கவில்லை. ஆனால் அந்த அயோக்கியன் அன்று மரவீரராகியிருப்பான் நானோ துரோகியாகியிருப்பேன். தொடரும்.....வாழ்க தமிழ்த் தேசியம்.

அன்புடன் ஜரோப்பாவிலிருந்து A.M .T.KUDDY

நன்றி

http://tamilnews.tamilmedia.dk/content/view/1058/61/

உங்களுடன் சில நிமிடங்கள்.2

இதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

ஏனெனில் கருணாவின் அருகிலிருந்தபடியால் அந்தத் துரோகியின் உணர்வுகள் கபட நடவடிக்கைகள் அவன் புன்னகைக்குள் மறைந்திருந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை மறைந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை நேரடியாகக் கண்டவன் நான் என்பதால் இத் தொடரை எழுதுவதற்கு எனக்கு இலகுவாக உள்ளது. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்..

மேலும் ஜரோப்பாவில் மட்டுமல்ல இலங்கை உட்பட வேறு வெளிநாடுகளில் வாழும் கருணா என்ற துரோகிக்குச் சபாரம் வீசப் பிரதேசவாதம் பேசும் பித்தலாட்டக் காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

மீண்டும் மீண்டும் உங்கள் உடம்பெல்லாம் பிரதேசவாதம் என்னும் சேற்றை பூசுகிறீர்கள். எட்டப்பன் என்ற பெயரை தொட்டு நிற்காதீர்கள். உங்கள் காதுகளை எட்டாத பல விடயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன் எனவே இத் தொடரில் நீங்கள் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு கொடுப்பீர்கள் என எண்ணுகின்றேன். தொடரும்.....

வாழ்க தமிழ்த் தேசியம்.

அன்புடன் ஜரோப்பாவிலிருந்து

A.M.T.KUDDY

நன்றி http://tamilnews.tamilmedia.dk/content/view/1128/61/

துரோகி கருனாவின் மறுபக்கம்.3

தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.

மேலும்,விடுதலை உணர்வு கொண்ட வேனுதாசின் சத்தியாக்கிரக போராட்டம் என்பனவும் மட்டக்களப்பு மாவடத்தில் நடந்தவைகள்.இப்படியிருக்கும் போது தானே கிழக்கின் ஒரு ஆரம்ப கால விடுதலை வீரன் என்றும் கிழக்கின் மக்களுக்காக இன்றும் போராடப்போகின்றேன் என்றும் பொதுவான விடுதலைபோராட்டத்தை மட்டுமன்றி மட்டு-அம்பாறையின் விடுதலை போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் இந்த கருனா என்ற தேசத்துரோகியை நினைக்க நகைப்பிடமாகவுள்ளது.

இந்த ஆயோக்கியன் யார்!

இவனின் தனிப்பட்ட மனிதபடுகொலைகள் என்ன?

இந்த குள்ள நரியின் குள்ள விளையாட்டுக்கள் என்ன?

கபட செயல்கள் என்பன சிலர் அறிந்தும் அறியாத கதைகள் இதை தெரிந்தவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வாய்பேச முடியாத மௌனிகளான சம்பவங்கள் எத்தனையோ உள்ளளன.

தேசியத்தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும் இயக்கத்தில் தான் பெற்ற பயிற்சியையும் அந்த இயக்கத்திற்கே பாவித்து வெற்றீயிட்ட இந்த துரோகி ஒன்றும் பெரிய போர் வீரனல்ல! வெறும் தேசத்துரோகி முரளிதரன்தான்.

இறுதியில் துரோகிகள் பெற்ற பாடங்கள் என்ன! அவர்களின் இறுதிக்கதி என்ன! என்று இந்த நாகரீக உலகில் நாமறிந்த உண்மை இதுவே உலகின் யாதார்த்தம் எனவே தர்மத்துக்காக விடுதலைபோரை முன்னெடுத்து செல்லும் எம்தேசியத்தலைவரையும் தர்மப்போரில் வீரச்சாவை தழுவிக்கொன்ட மாவீரர்களையும் மக்களையும் ஓருதடவை மனதில் முன்நிறுத்தி தமிழ்தேசியம் எனும் உணர்வை உங்கள் முன் ஒரு தடைவ படரவிட்டு தொடர்கின்றேன் இந்த துரோகின் தொடரை…

பொறுத்திருங்கள் தொடர்கிறது கருனாவின் முதல் படுகொலை பிறந்த கிராமமான கிரானில்…

வாழ்க தமிழ்த் தேசியம்.

அன்புடன் ஜரோப்பாவிலிருந்து

A.M.T.KUDDY

நன்றி

http://tamilnews.tamilmedia.dk/content/view/1188/61/

துரோகி கருனாவின் மறுபக்கம் 4

கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.

தான் பிறந்த கிராமமான கிரானில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் மற்றும் எல்லோரும் தன்னை கண்டால் பயபக்தி அவர்களுக்குள் ஏற்படவேண்டும் என்றும் கருணா நினைத்தான். இதற்காக பினைத்தைத் தேடும் ஒநாய் போல அலைந்தான். அவ்வேளையில் கருனாவின் வலையில் சிக்கினான் கிரானைச்சேர்ந்த அப்பாவித்தமிழன்.

அந்த பொது மகன் சயனைட் வைத்திருந்தான் என்றும், தான் இயக்கபோராளி என்று எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தான் மற்றும், தனிப்பட்ட ரீதியான செயல்கள் செய்தான் என்றும் கருனாவால் கைது செய்யப்பட்டான்.

அந்த பொதுமகனை கருணாவும் சந்திவெளியை சேர்ந்த மதியும் சித்திரவதை செய்தனர். மதி என்பவன் கருணாவின் தனிப்பட்ட விசுவாசியாகயிருந்தவன். அந்த மதி யார்? அவனின் பின்னனி என்ன? இறுதியில் அந்த துரோகியின் கதி என்ன என்றெல்லாம் பிற்பகுதியில் பார்ப்போம்.

மேலும்,அந்தப்பொதுமகனை மதி மண்வெட்டியால் அடித்து கொன்றான். ஒரு இராணுவ உளவாளியை தாம் கைது செய்து கொன்று விட்டதாக கருணா கதைபரப்பினான்.

இப்படுகெலையை மட்டக்களப்பின் தமிழிழவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் ஜீம்கலித்தாத்தா கடுமையாக எதிர்த்தார். இப்படுகொலைச்செய்த மதியை இயக்கத்தை விட்டே துரத்த வேண்டும். கருணாவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜிம்கலித்தாவும் கிரானை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இதனால் கருனாவுக்கும் ஜிம்கலித்தாவுக்கும் முறுகல் நிலை கூட ஏற்பட்டது. அப்போது ஜிம்கலித்தாவின் குரல் எதிரொலிக்கவில்லை.

அப்போதைய சூழ்நிலையில் உண்மையான நிலை தலைமைப்பீடத்திற்கு கருணாவால் கூறப்படாமல் மறைக்கப்பட்டது. கருணாவின் காட்டில் மழை!

கருணா கயவனாக இனி காலடி வைக்க தொடங்கிறான் ஆதலால் இனி கயவன் என்றே தொடரலாம்…

கருணாவும் மதியும் அதாவது கயவர்கள் இருவரும் நமட்டு சிரிப்புடன் கைகுழுக்கிக்கொண்டார்கள். எப்படி இனிக் காய்களை நகர்த்துலாம் என கருணா என்ற அந்தக்கயவன் ஆழமாகச்சிந்தித்தான்.

பல கயவத்தனங்கள் அவன் சிந்தனையில் நிழலாடினாலும் தான் இயக்கத்தில் வேகமாக வளரவேண்டும் தன்னை நிலப்படுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டான்.

பொறுத்திருங்கள் மட்டக்களப்பு வருங்கால தளபதியாக வரவிருந்த கிரானை சேர்ந்த ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!

தொடரும்.....

வாழ்க தமிழ்த் தேசியம்.அன்புடன்

ஜரோப்பாவிலிருந்து

A.M.T.KUDDY

துரோகி கருனாவின் மறுபக்கம் 5

ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!ஜிம்கலித

துரோகி கருணாவின் மறுபக்கம் 6

கப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்

யார் இந்த பிரான்சிஸ்?

இலட்சியவாழ்வு!

தளர்விளா உறுதி!

தலமைத்துவ விசுவாசம்

வீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்பு

இதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவன் கேணல் கிட்டுவின் தோழமைக்குரியவன். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவனைக் கருதலாம்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவன் தனது சிறுவயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவனாவே இருந்தான்.

இயற்கையாகவே தமிழ்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இவன் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராகயிருந்தான்.

இக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றான். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு அரச சிறையிலிருந்த இவன் வாழ்க்கைப்படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாக ஆணிவேராகவும், அத்திவாரமாகவும், பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.

ஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1982ல் தன்னை இணைத்துக்கொண்டான். இந்த மாவீரனின் இயக்க வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது உண்மையே!

1983இல் பயிற்சிக்குச் செல்லும் போராளிகளுக்கு மட்டு அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். இவனது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரானது. தனித்துவமானது. இவனது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்துவைக்க ஏதுவாகயிருந்தது என்பது மறக்கமுடியாதது.

1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளர் நிர்மலாநித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார்.

1984இல் மீண்டும் அதை கப்டன் பிரான்சிசும், பசில்காக்காவும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதைச்செயல்படுத்தி நிர்மலாநித்தியானந்தனை மீட்டு பொலநறுவை வழியாக மதவாச்சி சென்று அங்கிருந்து மன்னார் புநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாககொண்டு சேர்த்தனர்.

இந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1984 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை பிரான்சிஸின் இயக்கவேலைகள் பரந்திருந்தன. அக்காலப் பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கேணல் கிட்டுவைச் சந்திப்பதுமாக இவர் இயக்கப்பணியில் வேகமாக ஈடுபட்டான். கேணல் கிட்டுவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பைப் பெற்றான்.

மேலும் கேணல் கிட்டுவின் நம்பிக்கையான தோழமைமிக்க அன்புமிக்க போராளியாகவும் கப்டன் பிரான்சிஸ் செயற்பட்டான்.

எனவே தமிழ் தேசியக் கொள்கைகளையும் ஒற்றுமைகளையும் அந்நாட்களிலேயே இவனது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்துதான்.

அரசியல் பணியில் மட்டுமல்ல எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன் பிரான்சிஸின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத்தாக்குதலான கஞவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தாக்குதல் 1984லும் மற்றும் 1985ல் ஏறாவ+ர் பொலிஸ் நிலையத்தாக்குதல். 1984ல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STFஇனர் மீதான பதுங்கித் தாக்குதல் என்பன கப்டன் பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாகயிருந்தது.

பிரான்சிஸின் இந்த இயக்க வளாச்சியையும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் எப்படி தகர்த்தெறியலாம். அதற்கு என்னவழிவகை என கருணா என்ன கயவன் கணக்கிட்டான். அதுமட்டுமல்ல பிரான்சிஸிற்கு அருணா கொடுத்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலை எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்.

1987இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலைசெய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சுழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல! ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப்பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப்போவது எதிரிகளும் எதிரிகள் சார்பான அரசியல்வாதிகளுமே என கப்டன் பிரான்சிஸ் அத்திட்டத்தை எதிர்த்தான்.

இதனால் கருணாவுக்கும் பிரான்சிஸிற்கும் கருத்துமுரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலமையை எடுத்துதம்பினான். தேசியத் தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை! எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது என்றும் அதேபோல்ச் செய்யும்படி பிரான்சிஸிற்கு கூறினார். இதைக் கருணாவுக்கும் செயற்படுத்துமாறு தலைவர் கட்டளையிட்டார்.

இதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது பிரித்தாளும் நடவடிக்கை புஸ்வானமானதையிட்டு பிரான்சிஸின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. தனது குள்ள நரிப்புத்தியைப் பயன்படுத்தி பல காரணங்கள்கூறி அந்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலைப் பிரான்சிஸிடமிருத்து மிகவும் கபடத்தனமாக அந்த கபடதாரியான கருணா பறித்தெடுத்தான். அந்த பிஸ்டலுக்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை.

1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸின் சொந்த ஊரில் IPKF சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் காலில் துப்பாக்கிச் சூடுபட்டு வீடொன்றின் புகைக்கூட்டில் மறைந்துகொண்டான். ஆனால் காலில் பீறிட்ட குருதி எதிரிக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அந்நிலையால் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச்சுடுவதற்குகூட பிஸ்டல் இல்லாத நிலையில் சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே வீரச்சாவையடைந்தான்.

அந்த மண்ணும் பெருமையுடன் அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.

இறுதி நேரத்தில் கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸின் கைகளில் இருந்திருந்தால் அந்த மாவீரன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகயிருந்திருக்கும் என எல்லோரும் கருதினர்.

எது எப்படியோ! பலகாலம் தனது படிப்பு, பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாககொண்டு இலட்சிவேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல்போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவையடைந்துவிட்டான்.பல

துரோகி கருணாவின் மறுபக்கம் 7

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.

அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.

தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!

ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை!

என்ன காரணம்?

அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.

ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.

ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!

இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.

அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.

தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.

அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.

இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.

இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.

இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.

தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?

எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?

சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று...!

தொடரும்...

நன்றி.

http://tamilnews.tamilmedia.dk/content/view/1538/61/

துரோகி கருணாவின் மறுபக்கம் 8

...மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.

முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.

அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.

இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.

இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.

இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிரு

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் அந்தரங்கம் 1

17-04-2006

திரு.கருனா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ்த் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியா மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருனா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்து வேளை சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.

வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியா குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை , பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.

மனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கபட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கானாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கானாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.

உடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கானாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருனா அம்மான் தமிழர் தாயகத்திற்கும். தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான.சூட்கேசினை கருனா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கனாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் ஊடனடியாக கருனா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.

பாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருனா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருனா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருனா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அச்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கானா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான். (தொடரும்)

தகவல் - சுழியன்

http://tamilnews.tamilmedia.dk/content/view/1636/63/

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் அந்தரங்கம் 2

17-04-2006

தமிழீழத் தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்த அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருனாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும்; ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார்.இதற்கிடைய

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் அந்தரங்கம் 3

17-04-2006

போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சீறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இந்த காலமும் அதுவே.இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிக

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் அந்தரங்கம் 4

17-04-2006

தலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார்.

பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால

இதை இப்பிடியே விட்டுட்டு - வேற வேலையை பாருங்கப்பா..

இங்கு குறிப்பிடப்படும் மனிதனைபற்றி - இனியும் பேசுவது- நேரவிரயம்!

பொதுவாக சிலாகிக்க படுவதுபோல் - கருணா - ஒன்றுமே எம் போராட்டத்தில் - பெரிதாய் பங்களிப்பு வழங்கவில்லை - என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை!

கருணா - கால்நடையாகவே - ஆயிரக்கணக்கான - போராளிகளுடன் வன்னி நிலம் மீட்க - கால் நடையாய் - சென்ற தளபதிதான் - பொய்யில்லை !

என் கோபமெல்லாம் - இத்தனையும் செய்த மனிதன் - கடைசியில் -

ஏன் இவ்ளோ பித்தலாட்டம் செய்தான் என்பதே!

இன்றைக்கும் பலருக்கு நினைவிருக்கலாம் - பிரதேசவாதம் பேசி -

தன்னை காப்பாற்றிகொள்ள - முயன்ற - இந்த நபர்- தலைவரை - ' கடவுளாய் நினைக்கிறேன்' என்று சொன்னதுதான்!

யாரை - ஏமாற்ற- இப்போ இதெல்லாம் - அதுதான் -கிளைமோர் -செய்கிறார் என்பது - அவரை நம்பி போன - என்றோ -எங்களூக்காக உயிரையும் கொடுக்க தயாராய் இருந்து-

இன்று - சிங்களவன் - காம்பில் - சாப்பிட்டுகொண்டு இருக்கிற - அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!

மத்தும் படி - பால்ராஜ் பத்தி எல்லாம் பேசுறீங்க........ம்ம்

இந்த புகழ்பூத்த தளபதி- எங்காவது - செய்தி ஊடகங்களில்- ஏதும் நிறைய பேசி கண்டு இருக்கிங்களா?

முதன் முதலில் முல்லைதீவில் - ஒட்டு மொத்தமா - இந்திய - கழுதைகளை அழிச்சது (ராணுவம்)- பின் நித்திகைகுளம் -

அப்புறம் சாள்ஸ் அன்ரனி - படை தளபதி -

ஓயாத அலைகள் ஒன்று - இரண்டு - மூன்று -

கொக்காவில் - மாங்குளம் - பலாலி ஏகப்பட்ட காவலரண் தகர்ப்பு - மணலாறு - ஆனையிறவு - ௧ - கிளிநொச்சி - பூநகரி - திரும்பவும் - முகமாலை - தீ சுவாலை -

நான் இன்னும் அவர் பத்தி முழுமையாய் அறியாதது இன்னும் இருக்கும்-

பட்- இந்த அஞ்சா நெஞ்சனை - அம்மான் - என்று சொல்லி இருக்கமா நாங்க யாரும்?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை இயக்கும் அரசியல் ஆலோசகர்! (பாகம் 2)

இன்று துரோகி கருணாவின் அரசியல் ஆலோசகராக செயற்படும் கே.ரி ராஜசிங்கம் 1940களின் இறுதியில் கணபதிப்பிள்ளை துரைரத்தினத்தின் கடைகெட்ட வாரிசாக பிறந்தவர். இவர் புலோலி மேற்கு பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டவர். இவருடைய மனைவி சுன்னாகத்தை சேர்ந்தவர்.

பாடசாலை ஆரம்பக் காலத்தில் தம்பசிட்டி கலவன் பாடசாலையிலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டவர். தரப்படுத்தலில் பல்கலைக்கழகம் கிடைக்காததாலும், இவரது பெற்றோர்களால் இவரது அட்டகாசத்தை தாங்க முடியாததாலும் இங்கிலாந்து, அமெரிக்கா என்று சில காலத்திற்கு அனுப்பிவிட, அங்கிருந்து ஆங்கில அறிவையும், வெளிநாட்டுக் குற்றவியல் திறனையும் வளர்த்துக் கொண்டு நாடு திரும்பினார்.

பின்பு ஜி.ஜி. பொன்னம்பலத்தை பிடித்து ஒருவாறு புலோலி பலநோக்கு கூட்டுறுவச் சங்கத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்நேரத்தில்தான் இவர் வீரகேசரிப் பத்திரிகைக்கு தனது கட்டுரைகள், செய்திகளை எழுதுவதும், அதன் ஊடாக வரும் வருமானத்தை தனது செலவுக்கு பயன்படுத்துவதும், அத்தோடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து பல பொருட்களை தனது வீட்டுக்குள் பதுக்கி வியாபாரம் செய்வதும் இவரது முக்கிய வேலையாக இருந்தது.

இப்படியான செயல்களினால் இவரிடம் பணம் தாராளமாக புழங்கியது. ஒருவாறு ஜி.ஜி பொன்னம்பலத்தின் ஆசீர்வாதத்தால் புலோலியில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளராக கே.ரி ராஜசிங்கம் பதவி பெற்றுக் கொண்டார். அந்நேரத்தில் புலோலி வங்கியானது கூட்டுறவுச் சங்கத்தின் கிளை நிறுவனமாக இருந்தது என்று நினைக்கிறேன். அப்பொழுது இந்த வங்கியின் முகாமையாளராக கடமையாற்றியவர்களில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே. பாலகுமார் குறிப்பிடத்தக்கவர். இதனால் பாலகுமார் அவர்களுக்கு கே.ரி. ராஜசிங்கத்தின் திருவிளையாடல்கள் நன்கு தெரியும். அதே போல் விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கும் கே.ரி.ராஜசிங்கத்தின் கூத்துகள் தெரியும். காரணம், ராஜசிங்கம் தன்னை வீரகேசரியின் முக்கியமான எழுத்தாளராக காட்டிக் கொண்டு திரிந்த பொழுது அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். (க.வே.பாலகுமார் மற்றும் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரின் சமகாலத்தவராக இருந்ததும், அந்த நேரத்தில் இவர்களை விட பிரபல்யம் வாய்ந்தவராக இருந்ததும், இன்றைய இவரது நிலையும் இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கலாம். இதுவும் இவர் கருணாவிடம் அரசியல் ஆலோசகராக சேர்ந்ததற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.)

ராஜசிங்கம் கூட்டுறவுச்சங்கத்தில் முகாமையாளராக வேலை செய்து கொண்டிருந்தாலும், அவருடைய அடிமனதில் இருந்த நோக்கம் எப்படியாவது ஒரு அரசியல்வாதி ஆகிவிடுவதுதான். இவருக்கு வேலை வாங்கிக் கொடுத்து ஜி.ஜி பொன்னம்பலத்தின் செல்வச் செழிப்பை பார்த்து, இவருக்கும் அரசியல்வாதி ஆக வேண்டும் என்கின்ற வெறி உருவாகியது. ஜி.ஜி பொன்னம்பலம் லஞ்சத்திற்கு பெயர் போன ஒருவராக இருந்தார். இவரது லஞ்சத்தின் உச்சக்கட்டம் மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமைக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு சென்றிருந்தது. அத்துடன் ஐந்தாயிரம் தொடங்கி இருபதாயிரம் ருபாய்கள் வரையான பணத்தை (அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய பணமாக இருந்தது) இலஞ்சமாக பெற்றுக் கொண்டு, பல தகுதி அற்றவர்கள் ஆசிரியராக நியமனம் பெறுவதற்கும் ஜி.ஜி பொன்னம்பலம் வேலை செய்தார்.

பணம் உழைப்பதற்கு சிறந்த தொழிலாக அரசியலைப் பார்த்த கே.ரி ராஜசிங்கம் கே.பி ரத்னாயக்க ஊடாக அரசியலில் பிரவேசித்தார். இவரும் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரே. பல காலமாக சிறிமா பண்டாரநாயக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து தபால் தொலைத் தொடர்பு அமைச்சராக பணியாற்றியவர். கே.பி ரத்னாயக்காவின் கண் பார்வையால் ராஜசிங்கத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளரார் என்கின்ற பதவி கிடைத்தது. பின்னர் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களை பொறுத்து, தனது சுயலாபத்திற்காக சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்று மாறி மாறி உடுப்பிட்டி பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் தேர்தல்களில் நின்று, ஒவ்வொரு முறையும் ஆயிரம் வாக்குகள் கூடப் பெற முடியாமல் கட்டுப் பணத்தையும் இழந்தார்

உடுப்பிட்டி ராஜசிங்கம், பருத்தித்துறை நகரபிதா நடாராஜா, மு.பொ.வீரவாகு, குணரத்தினம் இவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னால் ராஜசிங்கத்தால் தாக்குப் பிடிக்க முடியாது போயிற்று. அத்தோடு மாத்திரம் அல்ல, கூட்டுறவுச் சங்கம் சம்பந்தமான இவரது மோசடிகளை பருத்தித்துறையில் அனைவரும் அறிந்திருந்தனர். அத்துடன் பெண்கள் சம்பந்தமாக இவர் மீது இருந்த உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் இவரது தோல்விக்கு ஒரு காரணம்.

புலோலி வங்கிக் கொள்ளையின் பொழுது, இவர் தனக்கு அறிந்த, தெரிந்த, எதிரி எல்லோரையும் காட்டிக் கொடுத்தார். அதுவே இவருக்கு வினையாக மாறி, ஊரை விட்டு ஓடி கொழும்பு போய் சேர்ந்தார். அங்கிருந்து கொண்டு சிலரை தனது முகவர்களாக வட பகுதியில் நியமித்துக் கொண்டு, தனது காட்டிக் கொடுப்புகள் மூலம் பணம் சம்பாதித்தார். இவரின் காட்டிக் கொடுப்பின் விளைவுதான், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் கைது. ஆரம்பத்தில் மு.பொ.வீரவாகுதான் இதைச் செய்தது என்று பருத்தித்துறையில் கதைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் ராஜசிங்கம்தான் இதை செய்தார் என்று உறுதியாகியதும், புலிகளின் தேடுதலுக்கு ஆளானதும், இவர் தலைமறைவு வாழ்வை தேடுவதற்கு காரணமாகின.

அத்துடன் அன்ரன் பாலசிங்கம் தேசியத் தலைவருடன் இருந்தது ராஜசிங்கத்திற்கு மேலும் சிக்கலை கொடுத்தது. காரணம் வீரசேகரியில் வேலை செய்த காலத்தில் இருந்த ராஜசிங்கத்தின் சரித்திரத்தை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

உமாமகேஸ்வரன் பிரச்சனையால் இயக்கத்திற்குள் பிளவும் இதே நேரத்தில்தான் ஏற்பட்டது. ராஜசிங்கம் இதை சாதகமாக பயன்படுத்தி உமாமகேஸ்வரனுடன் கூட்டுச் சேர முயன்றார். உமாமகேஸ்வரன் ராஜசிங்கத்தை விட அறிவு மிக்கவர். இவரது கடந்த கால வரலாற்றையும், இவரது தீய தொடர்புகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர். இதனால் இவரை சற்றுத் தள்ளியே வைத்திருந்தார்.

1983 கலவரத்தில் இவர் வீட்டுப் பக்கமும் வரமுடியாமல், கொழும்பிலும் இருக்க முடியாமல் தாய்லாந்திற்கு தப்பி ஓடினார். அதன் பிறகுதான் இலங்கையில் இருந்து அகதிகளாக பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். இதை கே.ரி. ராஜசிங்கம் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இவரது ஆங்கில அறிவு, எழுத்துத் திறமை, அரசியல்வாதிகளுடனான தொடர்பு, இவரது முகவர்கள் (காட்டிக்கொடுக்கும் முகவர்கள்) இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிரயாண முகவராக ஆரம்பித்த இவரது தொழில் ஓகோவென்று ஓடத் தொடங்கியது. இன்று கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து சேர்ந்தவர்களில் பெரும்பாலோனோர் ராஜசிங்கம் மற்றது அவரது சீடர்களாக இருந்து முகவர்களாக மாறியவர்கள் (இவர்களது பெயர்களையும் தேவைப்படின் வெளியிடுவேன்) ஆகியோர் மூலமாகத்தான் வந்தவர்கள்தான்.

ஆரம்பகாலத்தில் ஆண்களும் பின்பு 90 களில் பெண்களும் அதிகமாக வந்து சேர்ந்தார்கள். இதில் குறிப்பாக பெண்கள் இந்தக் கும்பலால் அனுபவித்த கொடுமைகளை சொல்வதென்றால், அதற்கு பல நூறு பக்கங்கள் தேவைப்படும். பாலியல்ரீதியான கொடுமைகளோடு, இந்தப் பெண்கள் இவர்களுக்காக போதைப் பொருட்களைக் கடத்துவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

தொடரும்...

.வன்னியிலிருந்து புலோலியூரான்

- வெப்பீளம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் மைத்துனி சிங்களவரால் கொலை - நிதர்சனம்

http://www.nitharsanam.com/?art=17018

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.ரீ. ராசசிங்கம் பற்றிய பதிவில் சில தவறுகள் உள்ளன அவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலம் கே.ரி என்ற சுத்துமாத்துக்காரரை இனங்காட்டலாம் என நம்புகிறேன்.

1. கேரியின் தந்தையார் பெயர் கணபதிப்பிள்ளை துரைரத்தினம் அல்ல. கணபதிப்பிள்ளை தம்பிராசா. தம்பிராசா மியான்மர் (பர்மா) நாட்டில் பணிபுரிந்ததால் அவரை ரங்கூன் தம்பிராசா என ஊரவர் அழை;ப்பார்கள். அவரகளது வீட்டை ரங்கூன் இல்லம் என அழைப்பார்கள்.

2. கே.ரி. புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக (1972-1976) இருந்தார். இது வேதனமற்ற பதவி. அப்போது ஆட்சியிலிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலமையிலான மக்கள் முன்னணி அரசாங்கத்தின் சிபாரிசில் கிடைத்த பதவி. இந்த பதிவிக்கும் திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலத்திற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.