Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக் கூத்தில் எல்லோரும் கலைஞரே..!

Featured Replies

ஈழக் கூத்தில் எல்லோரும் கலைஞரே..!

kalainjar.jpg

ஈழம் எனும் போது காதில் தேன் வந்து பாய்வதாக இருந்த காலம் மாறி, வெறுப்பும் விரக்தியும் விரவிக்கிடக்கும் போக்கு நிறைந்திருக்கின்ற காலம் இதுவாகக் காணப்படுகிறது.

சமூக வலைத்தள உரையாடல்களிலும் இவை பற்றித் தொடர்கின்றன. பகிரப்படும் பல கருத்துக்கள் விசுவாசிப்புக்களாகச் சுருங்கி விடுகின்ற போதும், ஒரு சில கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவையாகவும், அடிமுடி தேட வைப்பவையாகவும் அமைந்து விடுகின்றன.

அவ்வாறான தேடல் ஒன்றில் சந்தித்த சில கருத்துக்களுடனான தொகுப்பு இது...

ஈழத்தில் பிறந்ததற்காக சின்ன செருக்கொன்று எப்போதுமே என்னோடு இருந்தது. “இறுதிக் கோரங்கள்- பிழையான அரசியல் வழிநடத்தல்கள்“ என்கிற அடையாளங்களுக்குள் சிக்கி அல்லல்பட்டு வெறுப்படைந்தாலும்; இறுதியில் ஈழத்த்தில் பிறந்தவன் என்பது எனக்கான செருக்காகவே இருக்கிறது.

ஆனால், “முதுகுத்தண்டை தொலைத்தவன் - சொம்புகள்- ஜல்லிகள்“ வாங்கித்தர நினைக்கிற தனி ஈழத்தில் சத்தியமாக நான் வாழ்வதற்கு விரும்பவில்லை. அடக்குமுறைக்குள் வாழ்ந்தாலும் ஈழத்தமிழன் என்கிற செருக்கான அடையாளத்துடன் வாழ்க்கிறேன். எமக்குள்ளும் “ஜல்லியடிப்பவர்கள் இருந்தாலும்- உயிர்களையும்- சொத்துக்களையும் எவ்வளவு இழந்தாலும்“ இறுதியில் ஈழத்தமிழன் என்கிற அடையாளம் மிகப்பெரியதாகவே மிஞ்சுகிறது. அப்படியிருக்க “அதிக மறதிக்காரர்கள்- மங்குனிகள்“ பெற்றுத்தரும் ஈழம் “மற்றொரு மங்குனி நாடாகவே“ இருக்கும். அப்படிப்பட்ட ஈழம் தேவையில்லை.

ஈழம் என்கிற பெயருக்குள் எப்போதும் அடங்க மறுக்கிற திமிர் ஒன்று இருக்கிறது. அந்த திமிருடன் நிறைவான அரசியல் சித்தாந்தத்தோடு- ஏற்கனவே பெற்றுக்கொண்ட படிப்பினைகளுடன் எதிர்கால சமூகம் ஈழத்தை பெற்றுக்கொள்ள முயலட்டும். மற்றப்படி, இவர்களின் “மறதி - திடீர்“ அக்கறைகளினால் ஈழமொன்றும் மலர்ந்துவிடவும் போவதில்லை. வேணுமென்றோல் உங்களது ஜல்லியடிக்கும் அரசியலை புரிந்து கொள்ள மறுக்கிறவர்களை ஏமாற்ற இது உதவும்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் தளமொன்றின் கருத்தாடற் பகுதியில் Purujoththaman Thangamay என்பவரால் பகிரப்பட்டிருந்த கருத்தே மேல்காணும் பத்திகள்.

இந்த மூன்று பத்திகளில் ஒரு தலைமுறையின் ஈழம் குறித்த ஏக்கம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என்பன பதிவுசெய்யப்பட்டிருப்பதை உணராலாம். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் தமிழீழம் குறித்த திடீர் அக்கறை தொடர்பில் பகிரப்பட்ட கருத்தாக இவை அமைந்தாலும் கூட, அதற்கும் அப்பால் தமிழக அரசியல் தலைமைகள் அனைவரது செயலுக்கும் பொருந்தக் கூடிய வரிகளே அவை.

அதே கருத்தாடற் பகுதியில் LK Veenthan எனும் இலங்கையர் ஒருவரின் கருத்துக்கள் பின் வருமாறு அமைகின்றது.

நீங்கள் எம் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. ஆனாலும் 'ஈழம்' என்னும் எமது கனவு தற்போது கலைந்துவிட்டது என்பதை நீங்களும் (தமிழகம்), புலம்பெயர் தமிழரும் உணர வேண்டும். ஈழத்தில் நித்திரையே இல்லாத இரவுகளில் கனவு என்பது பொய்யே!! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காள‌ன்களும், தமிழ் இணைய புரட்சியாளர்களும் ஒன்றே! பலருக்கு 2009 இலிருந்தும், சிலருக்கு 1983இல் தொடங்கி 30 வருட 'நிறைவுக் கொண்டாட்டமாக(?)' இருக்கும் ஈழப் போர், 60+ வருட அரசியல் போராகவும் விஜனின் வருகை(சிங்கள குடியேற்றம்?) உட்பட்ட பல நூற்றாண்டு இன மோதலாக இத்தீவில் நடைபெறுகின்றது! இதற்கு தீர்வான 'ஈழம்' என்பது 1995 இல் ஏற்ப்பட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் கனவாகவும், 2009பின் பொய்யாகவும் போய்விட்டது.

ஈழம் தொடர்பாக கலைஞரின் செயற்ப்பாடு என்பதுகளில் திருப்தியளித்தாலும் அன்றும் இன்றும் அவர் 6 கோடி தமிழக மக்களின் அரசியல் தலைவர் என்பதை உணராத நாம், அதே அரசியலை பிரபாகரனை வைத்துச் செய்த எம்.ஜி.ஆரை கொண்டாடுகின்றோம்! இன்றுபோல் ஆட்சி இழந்த நிலையில்தான் அன்று 'டெசோ'வினை ஆரம்பித்தர் கலைஞர். அன்று அதற்கான தேவையும் இலக்கும் நிறையவே இருந்தன. ஆனால் இன்று? இல்லாத ஊருக்கு வழி சொல்லுவதுபோலதான் அமையபோகின்றது இந்த டெசோ!

கலைஞருக்கும் தி.மு.கவுக்கும் ஈழத்தமிழர் மீது உண்மையான பற்று இருந்தால் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய தீர்வு ஒன்றுக்கு இலங்கை அரசை சம்மதிக்க வைக்க வேண்டும். கொலைகார பிரபாகரன் என்னும் போது எமக்கு எப்படி கோபம் வருகின்றதோ அதேபோலத்தான் துரோகி என்னும்போது உடன்பிறப்புகளுக்கு கோபம் வரும் என்பதையும் ஈழத்தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் மாற்று விடுதலை இயக்கத்தினை எப்படி துரோகி என சொல்லி ஈழப் போராட்டத்திலிருந்து துரத்தினமோ அதேநிலையினை மீண்டும் நாம் கையில் எடுத்துள்ளோம்.

நேற்று காங்கிரஸ், இன்று தி.மு.க, நாளை? இப்படியே போனால் நாம் அனாதையாக மடியவேண்டியதுதான். இங்கு இலங்கைத் தலைநகரில் கொழும்பில் சொத்துக்களை வாங்கும் புலம்பெயர் உறவுகள் ஈழம் பற்றி கதைப்பது வேடிக்கையாக இருக்கு. வன்னியில் சோத்துக்கே வழியில்லாமல் கையேந்தும்போதும், 'துரோக இந்தியா' மலசல‌கூடத்தை விட சிறிய வீடு கட்டி கொடுக்கும்போதும் வாய்மூடி இருக்கும் புலம்பெயர் உறவுகள். வடக்கில் கோயில்களும் திருவிழாக்களும் ஆடம்பரமாக செய்கின்றீர்கள்! ம்.. நடக்கட்டும்...

இந்தக் கருத்துக்கள் ஈழம் குறித்த கலைஞரின் செயல்களை மட்டும் சீர் நோக்காது, புலம்பெயர் தமிழர்களது ஈழம் குறித்த அக்கறையையும் விமர்சிக்கிறது. மேற் குறித்த இந்த இரு கருத்துக்களும் சற்று மாறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படையில் ஒன்றுபடுகின்றன. இவ்வாறான கருத்துக்களை புறந்தள்ளி ஈழம் குறித்துப் பேச முடியாது.

karunanidhi_pranab_mukerjee.jpg

கலைஞரின் ஈழம் குறித்த சிந்தனையும், ஆர்வமும் எத்தகையது என்பது தெரிந்ததே..

kalainjar1.jpg

1985ல் இப்படி இருந்த டெசோவை 2012ல் மீள் தொடங்கு நிலைக்கு ஆளாக்கியவர் கலைஞரே என்பதை அன்றைய நாட்களில் அவருடன் நெருக்கமாக இருந்த பழ.நெடுமாறன் சொன்னதை ஹரி ஹரன் எனும் சமூகத் தளப் பயனாளர் தனது தளத்தில்,

இன்று பழ. நெடுமாறன் அய்யாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது டெசோவை பற்றிய பேசினார். டெசோவை தன்னிச்சையாக இருக்கும் அங்கத்தினர் யாரையும் கேட்காமல் கருணாநிதி கலைத்த பொழுது வீரமணியும் நெடுமாறன் அய்யாவும், விடுதலை சம்பந்தம் அவர்களும் கருணாநிதியை சந்தித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிராபகரன் என்னை மதிக்கவில்லை அவருக்காக நான் எதையும் செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார். வீரமணியும், நெடுமாறன் அய்யாவும் ஈழமக்கள் முக்கியமா? பிராபகரன் முக்கியமா? என்று கேட்டதற்கு இதை பற்றியெல்லாம் பேசவேண்டாம் பிராபகரன் என்னை மதிக்கவில்லை நான் இயக்கங்கள் அனைவரையும் அழைத்த பொழுது வந்து என்னை சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு முன் நடந்த திமுக பொது குழு கூட்டத்தில் பாலஸ்தின விடுதலை ஆதரவாக தீர்மானம் இயற்றி இருந்தார்களாம், விடுதலை சம்பந்தம் கருணாநிதியின் பால்யகால நண்பர் அவர் உடனே “பாருங்கள் கலைஞர் நீங்கள் பாலஸ்தீன விடுதைலையை ஆதரித்து தீர்மானம் இயற்றி இருக்கிறீர்கள் ஆனால் இன்று வரை அந்த திமிர் பிடித்த யாசர் அராபத் உங்களை வந்து சந்திக்கவில்லை, என்ன திமிர் அவருக்கு” என்று சொல்லியிருக்கிறார்.

உடனே கலைஞர் சத்தம் போட, சம்பந்தம் அவர்களும் விடாமல் நான் இதை விடமாட்டேன் யாசர் அராபத்தை கண்டிப்பாக இதற்காக கேள்வி கேட்பேன் என்று விடாமல் வாதிட்டு இருக்கிறார். வீரமணியும் நெடுமாறான் அய்யாவும் பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது சம்பந்தம் அவர்களை வெளியில் அழைத்து வந்துவிட்டனராம்... எனப் பதிவு செய்கின்றார்.

kalai.jpg

இவை உண்மை இல்லை என ஒருபோதும் கலைஞரால் மறுத்துரைக்க முடியாத சாட்சியங்களாய் இன்னும் சிலர் வாழ்கிறார்கள் என்பது கலைஞருக்கும் தெரியும். அது போக டெசோவை புதுப்பிப்பதும் அதன் மூலம் ஈழம் காணலாம் என்பதும் காலம் கடந்த முயற்சி என்பதுவும் கலைஞருக்குத் தெரியும். கலைஞருக்குத் தெரிந்திருப்பவை இன்னும் பல. ஆனாலும் அவர் ஆட்டத்தை ஆடித்தான் ஆகவேண்டும். அது அளப்பி ஆட்டமாக இருந்தால் கூட. ஆடுகின்றார்....

கலைஞர் மட்டும்தான் அளப்பி ஆட்டம் ஆடுகின்றரா..?

கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது என்ற வை.கோவின் கூற்றை, பிரஸ்ஸல்சில் நடைபெற்றது மாநாடு அல்ல. அது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் நடக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கிற கூட்ட அறை ஒன்றில் சோசலிஸ்டு பாராளுமன்ற உறுப்பினர் பவுல் மர்பியின் முயற்சியில் நடைபெற்ற அரங்க உரையாடல். வைகோவிற்கு பேச 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. பத்து நிமிடங்களில் மிக நேர்த்தியாக சுருக்கமாக கருத்துக்களை வைத்திருக்க முடியும். வழக்கம் போல வீராவேசமாக, உணர்ச்சிப் பெருக்கை கொட்டினார் வைகோ. அந்த அரங்கத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் பேசுபவர்கள் என்பதால் தமிழர்களுக்கு இனிப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அழுத்தம் கொடுத்து பேச வேண்டிய விசயங்களை, பேச வேண்டிய இடத்தில் வைகோ பேச தவறினார் என Thiru Yo தனது தளத்தில் போட்டுடைக்கின்றார்.

தமிழகத்தின் கோஷங்களும், கொடும்பாவி எரிப்புக்களும், பேரணிகளும், பெரு உண்ணாவிரதங்களும், ஏது நன்மையும் செய்யாது ஈழ மக்களுக்கு என்கின்ற உண்மை எப்போதோ தெரிந்துவிட்ட போதும், எல்லோரும் ஆடுகின்றார்கள் ஈழக் கூத்து. இதில் எல்லோரும் கலைஞரே..!

சமூக வலைத்தளங்கள் புரட்சி செய்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத போதும், சில புரிதல்களைச் செய்ய முனைகின்றன என்பது உண்மை..!

http://www.4tamilmedia.com/special/news-review/5031-2012-05-02-15-53-54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.