Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக அரசியல் செய்கின்றனர் – கோத்தபாய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kotaapaya-100x100.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக அசியல் செய்கின்றனர். பிரபாகரன் இருந்தபோது அதற்கு இடம் தரப்படவில்லை என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரமான ஆயுதக்குழு ஒன்றை தோற்கடித்ததன் மூலம் இலங்கையில் சமாதானம், விடுதலை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடிந்துள்ளது. படையினன் அர்ப்பணிப்பும் தற்துணிவுமே இந்த வெற்றிக்கான அடிப்படைகளாகும். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த இடத்திலும் பிரச்சினைகள் இடம்பெறவில்லை. போரின்போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரையும் மீண்டும் குடியமர்த்தும் போது, விடுதலைப்பு லிகள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதே பிரதான தடையாக அமைந்திருந்தது. எனினும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை அரசாங்கம் வெற்றிகண்டது.

மக்கள் போன் போது இடம்பெயர்ந்த நிலையில் படையினரே அவர்களது வீடுகளில் கூரைகள், ஜன்னல்கள் என்பவற்றைக்கொண்டு தமது முகாம்களை அமைத்ததாக குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும் பொதுமக்கள் இடம்பெயரும்போது விடுதலைப்புலிகளே குறித்த கூரைகளையும் ஜன்னல்களையும் எடுத்துச்சென்றிருந்தனர்.

போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளுக்காக தற்போது பூஸாவில் மாத்திரமே தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தண்டனைக்கு பதிலாக முன்னாள் புலிகளுக்கு நன்நடத்தைகள் சொல்லித்தரப்படுகின்றன.

வடக்கில் இராணுவ பிரசன்னம் இருப்பதாக கூறப்படுகின்றபோது அங்கு நாளுக்கு நாள் இராணுவ பிர சன்னம் குறைக்கப்பட்டு பொலிசா ன் அதுவும் தமிழ்த் தெந்த பொலி சான் சேவைகள் பெற்றுக்கொடுக் கப்பட்டுள்ளன.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து பேசப்படுகின்றது. இன்று வடக்கு, கிழக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை. பலாலியில் மாத்திரம் பாதுகாப்பு தேவைக ளுக்காக முன்னரை விட சிறிய இடம் அதியுயர் வலயமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த நிலங்களுக்கு உரியவர்களுக்கு நட்ட ஈடுகளும் வழங்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளிடம் பாரியளவில் ஆயுதங்கள் இருந்தன. மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்றும் மீட்கப்பட்டு வருகின்றன.

சரணடைந்த விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களை கொண்டு மீண்டும் பிரச்சினை உருவாக்க வெளிச்சக்திகள் முயல்கின்றன. அதற்கு இடம் தரப்படமாட்டாது. போர் முடிவடைந்துள்ளது. படையினருக்கு இன்று யுத்தத்துக்கு பதிலாக அபிவிருத்தியில் பங்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களே பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று வடக்கு, கிழக்கில் சுதந்திர மாக அரசியல் செய்கின்றனர். பிரபாகரன் இருந்தபோது அதற்கு இடம்தரப்படவில்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=59143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.