Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போதுமே கறுப்பு எதிர் வெள்ளை. உங்கள் கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட சிக்கலான பிரச்சினை எங்களுடையது !

Featured Replies

லாகோஸ் நைஜீரியவின் மிகப்பெரும் நகரம். 300 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. உலகின் 5 பெரும் நகரங்களில் ஒன்றாக 2005 இல் தெரிவாகியது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் யானைத்தந்தம்,மிளகு, அடிமைகள் வியாபாரத்துக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க நாடுகளின் அகதிகளால் இன்று நிரம்பி வழிகிறது இந்த நகரம். பெற்றோலிய வளம் நிரம்பிய இந்நகரம் கட்டுப்பாடற்ற சனத்தொகைப் பெருக்கத்தினையும் சுமக்கிறது. இதன் பெருந்தெருக்களில் ஒரு மணித்தியாலத்தில் 15-20 கிலோ மீற்றர் வரையுமே பயணிக்க முடியும்.

என்னிடம் கறுப்புத் தோலை உன்னால் காண முடியாவிட்டாலும் நானும் ஆபிரிக்கன்தான் என்னை எரிச்சலூட்டுகிற லைபீரியப் பையனை நோக்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது. அவனுடைய மனப்பாங்கு என்னை எரிச்சலூட்டியது என்றாலும் என்னால் கத்த முடியவில்லை. மாலை வேளைகளில் லாகோஸ் வீதிகளில் நடக்கிறபோது அடிக்கடி நிகழ்கிற சம்பவமாகி இது மாறிவிட்டிருந்தது.

ஒரு நாள் மாலை பொழுதொன்றில் இந்தப் பையனின் தொல்லை தாங்க முடியாது ஆயிற்று. இரவு உணவுக்காக பிஸ்ஸாவை பெற்றுக்கொள்ள கடையொன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது கூடவே நடந்து வந்துகொண்டிருந்த அவனின் எரிச்சலூட்டும் பேச்சு என்னை அளவு கடந்த தொந்தரவாயிற்று. நீங்கள் எப்போதுமே எங்களைப் பற்றி (கறுப்பர்கள்) மோசமான மனப்பாங்கு கொண்டிருக்கிறீர்கள். அதனால் எங்களை அலட்சியமாக நடத்த முற்படுகிறீர்கள் என்றான். நான் கறுப்பன் என்பதற்காக தா**** ,பெட்டை நாய் போன்ற அசிங்கமான சொற்களை எல்லாம் தனக்கு மட்டுமே உரிமையான சொற்களைப்போன்று உபயோகிக்கும் அவனின் இயல்பு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொலைந்து போ எனக் கத்தினேன். அவ்வாறு கத்தியிருக்கக்கூடாதுதான். (கறுப்பர்களின் இருண்மை, வறுமை, தனித்தன்மை எதனையும் நான் அந்த கணத்தில் கருத்தில் கொண்டிருக்கவில்லை.)anton01.jpg

நானும் தென்னாபிரிக்கன்தான். பல்வகை இனக்குழுமங்கள் இணைந்துள்ள ஒரு தேசத்தில் கறுப்புத்தோல் மட்டுமே ஆபிரிக்க அடையாளம் எல்ல என்பதை விளக்குவதற்கு நான் பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால், அந்த லைபீரியப் பையனோ இவை எதனையும் உள்வாங்கியதாகத் தெரியவில்லை. பரபரப்பு மிகுந்த லகோஸ் தெருக்களில் அலையும் அவன் (ஐரோப்பிய அமெரிக்க) குடியேற்றவாத எதிர்ப்புணர்வையும் வெள்ளையருக்கெதிரான எதிர்ப்புணர்வையும் வெளிக்காட்டுவதிலேயே குறியாக இருந்தான். அவனைப் பொருத்தவரை நான் அவன் உணர்வு வேகத்தின் கோபங்களை அடியாக வாங்கிக் கொள்ளும் ஒரு குத்துச் சண்டை பஞ்சிங்பாக்தான். வார்த்தைகளை என் முகத்தில் ஓங்கி இறக்கி தன் உணர்வுகளுக்கு வடிகால் தெடுகின்றான் அவ்வளவுதான்.

ஆயினும் இந்த அனுபவமும் அவசியமாயிற்று. கறுப்புத் தோல் ஆபிரிக்கர்கள் தமது சக இனக்குழுமங்களின் பிரதிநிதிகளை எவ்வாறு உணர்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிற்று. ஆபிரிக்க கண்டத்திற்கு வெளியே தன் தாய் வீட்டை அறிந்திராத கறுப்புத் தோலைக் கொண்டிராத வெள்ளை மனிதர்கள்,இந்தியர்கள், சீனர்கள் எனப் பல்வேறு இனக் குழுமப் பிரதிநிதிகளையும் ஆபிரிக்கர்களாக அடையாளம் காண முடியாதபடி ஆபிரிக்க கறுப்புத்தோல் கருத்துருவாக்கம் ஆபிரிக்க பூர்வீகக் குடிகளிடையே சவரோடிப்போயிருந்தது.

00000

லாகோசிற்கான எனது பயணத்தைத் தயார்படுத்துவற்கு முன்பே இந்த நகரம் பற்றிய அதீத புனைவுகளுடனாக கதைகளைக் கேட்டிருந்தேன். எச்சரிக்கைகளைத் தாண்டியும் இந்தப் பயணம் எனக்கு ஆர்வமூட்டியது. ஆம். நான் கவனிக்கப்படுவேன். எனது பயணப் பைகள் சோதனையிடப்படும் என்பவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பும் இந்தப் பயணம் மீதான விருப்பு என் உணர்வுகளுக்குள் அதிக ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்திருந்தேன்.

ஆக்கத்திற்கும் அறிதலுக்குமான அகன்ற ஆபிரிக்க ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு ஆபிரிக்க நடன விழாக்களும் எழுத்தாளர் பட்டறைகளும் இந்தப் பயணத்தில் கறுப்பர்கள் பற்றிய புரிதலுக்குப் பெருந்துணை புரிந்தன. இந்த நிகழ்வுகளுக்காக அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இலண்டன், நைஜீரியா என பல நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்களும் ஆபிரிக்க நடன கலைஞர்களும் அதிகளவில் வந்திருந்தனர். ஆபிரிக்கா, அதன் கருப்பினவியல் ஆகிய விடயங்களில் அதிக கேள்விகள் ஒன்று கூடல்களின்போது எம்மால் கேட்கப்பட்டது. லைபீரிய பையன் போன்றோரின் மன அமைவு பற்றிய புரிதலுக்காக பல வகையான கேள்விகள் ஊடே முயற்சித்தோம்.

தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தின் வாணப் பிரதிமைக்குள் பொருந்த முடியாதிருக்கும் எங்கள் நிலமையைப் புரிந்து கொள்ளவிரும்பினோம். எழுத்து அல்லது ஒரு கலைப்படைப்பு ஊடாக ஒரு ஆக்கபூர்வமான தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வது என்ற முனைப்பு எம் முன் நின்றது. நேர்மையான ஒருங்கிணைவு மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை உணர்ந்தோம். நேர்மையீனம், அரைமனது முயற்சிகள் இதனை ஒருபோதும் சாத்தியமாக்காது.வனப்புமிகு நகர அமைப்பு, எழில் மிகு குடியிருப்புகள் அதிகம் இல்லாத ஆபிரிக்க நகரங்களில் லாகோஸ் உம் ஒன்றாக இருந்தது. மூன்றாம் உலகின் நகரங்கள் எதுவும் பிரகாசிப்பதில்லை என்ற உண்மைக்கு லாகோஸ் சாட்சியாய் இருந்தது. வறுமையையும் வளர்ச்சியின்மையையும் கடப்பதற்குரிய தேவையை நகரின் பெரும்பகுதி கொண்டிருந்தது.

எல்லாவேளையும் எனது கமரா என்னோடிருந்தது. கமரா வில்லையில் நாளாந்தம் லாகோஸ் நகரின் இரைச்சல்கள் மோதியது. எனது பாதுகாப்பு வலையாக எனது கமரா விளங்கியது. அடிக்கடி லாகோசில் இயல்பு நிலையும் பாதுகாப்புணர்வும் மறைந்துபோகும். சிலவேளைகளில் மரணங்களால் இந்த நகரம் மூச்சடங்கிப்போகும். ஒடுங்கிய வெளிகளில் அச்சத்தால் உறைந்துபோகும் அழிவுகளுக்கு முகம்கொடுக்கும் மக்களின் அலறல் எங்கும் பரவும். அப்போது தாறுமாறாக ஓடும் வாகனங்களால் உண்டாகும் விபத்துக்கள் அழிவுகளை ஏற்படுத்தும்.

லகோசில் உங்கள் கவனத்தைக் கவரும் முதல் விடயம் பதற்றமும் நகரமுடியாது அடைபட்டுப்போகும் போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சல், கோண்களின் அலறல் என்பவையே. இப்படியான ஒரு பயண நெருக்கடிக்குள் நீங்கள் சிக்கிக்கொண்டால் உங்களுக்கு வழங்கக்கூடிய ஓரே ஓரே ஆலோசனை பயணத்தை டக்சி ரைவரிடம் ஒப்படைத்துவிட்டு புன்னகையோடு நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்வதுதான்.

anton-2.jpg

லாகோஸ் ஆபிரிக்காவின் நியூயோர்க் எனப்படுகிறது. ஆனால் லாகோசின் முழுமையுமே நியூயோக்கின் ஐந்தாம் நிழற்சாலையாகப் பரவி விரிகிறது. லகோசே ஒரு பெரும் விற்பனை நிலையமாக மாறியிருக்கிறது. குளிர்பானம், சிகரட், துணி விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நிரம்பியிருந்தனர்.

லாகோசில் நீங்கள் கடைக்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. அதுவே உங்களைத் தேடிவரும். உங்கள் கார்கதவைத் தட்டும். நல்லபேரம்பேசும் திறன் மட்டுமே உங்களுக்குத் தேவைப்படும். விற்பனை அல்லது விட்டுவிட்டுப்போதல். இது இந்த வியாபாரத்தின் அடிப்படை. எம்முடைய குழுவில் இருந்த நைஜீரிய நடனக் கலைஞர் ஒருவரின் பேரம் பேசும் முறமை மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தையைக்கூட ஒரு மகிழ்சியான ஞயிறு மதிய போசனமாக மாற்றி விடக்கூடும் என நினைக்கவைத்தது. அவ்வளவு கறாராகவும் கடினமாகவும் அது அமைந்திருந்தது.

லாகோசின் பொதுப்போக்குவரத்து முறமை மனித உணர்வுகளின் மீதான தாக்குதலாகவே எப்போதும் அமையும். ஒருமுறை மினிபஸ் பயணமொன்று. இயற்கை முறை எயர் கெண்டிசனின் நன்மை பற்றிய செய்முறையாக அமைந்திருந்தது. ஒரு வெப்பம் நிரம்பிய இரவுப் பயணமொன்றில் மனிபஸ்சின் கதவுகள் முழுமையாகத் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே நிரம்பி வழிந்த காற்று வெப்பத்தாக்கத்திற்கெதிராகப் போராடியது.

லாகோசைவிட்டுப்புறப்பட முன்பு ஒரு குறுகிய பயமொன்றை நெருக்கமாக மிகுந்த வீதியொன்றின்ஊடாக மேற்கொண்டபோது நிர்வாணமான மனிதன் ஒருவன் நடைபாதை வியாபாரிகளிடையே கடந்துபோவதைக் கண்டேன். ஒருவரும் அதனைப்பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. எவரும் இரண்டாம் முறை திரும்பிப்பார்க்கவில்லை. அது அவனுடைய நாளாந்த நடவடிக்கையாக இருந்தது. அவன் வீதியின் இரைச்சல்களிடையே புதைந்துபோய்விட்டான்.

இப்போது நான் குரல்களால் கூச்சல்களால் இசையால் இனக்குழும வாழ்வால் ஏற்படும் எல்லா வகையான அசிங்கங்களையும் ஒழுங்குகளையும் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன். சிலவேளைகளில் இவை அதி, அதீத யதார்த்தமாகத் தோன்றக்கூடும்.anton-03.jpg

என்னுடைய கமராவில்லை எல்லாக்காலங்களிலும் கவனமாக அவர்களுடைய வறுமை உட்பட எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டது. இது ஆபிரிக்க யதார்த்தத்தின் கேள்விகள் எல்லாவற்றையும் உயர்த்திப்பிடித்தது. வீதியிழைக்கும் யந்திரங்களும் வீடமைப்புக்கும் வடிகாலைமைப்புக்கும் உதவும் யந்திரங்களும் தமது பயன்பாட்டை லாகோஸ் நகரிற்குபோதியதாக வழங்கவில்லை என்பது உணரப்பட்டது.

நான் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்கப்பெற்றேன். மிகச்சிறந்த இசைக்கலைஞர் ஒருவரின் நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தேன். அவ்வாலயத்தில் பல்வேறு ஆபிரிக்கத் தலைவர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் போராடிய ஸ்ரீவ்பிக்கோ முதல் அமெரிக்க குடியியல் உரிமைப் போராளி மாட்டீன் லுதர்கிங் வரை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெரிய ஓவியங்களால் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

அடையாளத்தைச் சுமந்துகொண்டு உங்களிடையே நகரும் லாகோஸ் வீதியில் பயங்கள் இருக்கும் வரை அமைதியான ஒரு வீதிப் பயணம் உங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. எனினும் லாகோஸ் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

0

ஐசீட் கமால்டின் (ஆங்கிலமூலம்)

பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் உதவி நிறுவனங்களில் பணிபுரிந்த ஐசீட் கமால்டின் தென்னாபிரிக்க மெயில் அனட் கார்டியன் பத்திரிகையாளருமாவர்

http://eathuvarai.net/?p=310

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.