Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிசுமந்த நாட்களை வலிமையுள்ளதாக மாற்றியமைக்க ஒவ்வொரு தமிழர்களும் முன்வரவேண்டும் - ஈழதேசம்.

Featured Replies

tamileelam_news_20120306_1958351609.jpgஉலகத்தமிழினம் வலிசுமந்த நாட்களாகிய மே-16 தொடக்கம் 20 வரையான நாட்கள் என்றென்றும் நெஞ்சைவிட்டகலாத துயர நாட்களாக இருந்தாலும் எமது விடுதலையினை வீச்சாக்கி இறுதி வெற்றியை நோக்கி எம்மை உந்தித்தள்ளும் உந்துசக்தியாக அமைந்துவிட்டது.

முள்ளிவாய்க்காலோடு தமிழனின் கதை முடிந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் மார்தட்டி நின்றாலும் முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது தமிழீழ விடுதலையின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிட்டதனை உலகம் இன்று கண்டுணர்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைக்காக மூன்று தசாப்தங்களாக அறவழியில் எமது முதல் தலைமுறையினரும் முப்பத்து மூன்று வருடங்கள் கருவியேந்தி கரிகாலன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் களமாடி பல்வேறு நிலைகளை அடைந்தாலும் 2009 மே-16ற்கு பின்னரான இந்த மூன்று ஆண்டு காலப்பகுதியென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதிமுக்கியமான காலமாகும்.

முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் துயரமானது உலகத்தமிழர் பெருவெளியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நகர்த்தியிருந்தது. இதுவரை பகுதிநேர பங்காளர்களாகவும் நிதிப்பங்காளர்களாகவும் பொருளுதவிப் பங்காளர்களாகவும் இருந்த உலகத் தமிழர்களை முழுநேரப் பங்காளர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் கொண்டுவந்தது இந்த முள்ளிவாய்கால் பெருந்துயரம்தான்.

நாம் சாம்பல் மேட்டில் இருந்து புதிதாய் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் பீனிக்சு பறவைகள் என்பதை பறைசாற்றும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஆற்றிவரும் களச்செயற்பாடுகள் அமைந்துள்ளன. அறவழியிலாகட்டும் ஆயுதவழியிலாகட்டும் தற்போது அரசில் இராசதந்திர வழிகளிலாகட்டும் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் செல்பவர்கள் குறிக்கப்பட்டவர்களாகவே இருந்து வருவது வேதனையான விடையமாகும்.

போர்க்கள வெற்றிகளை கொண்டாடுவதற்கு அணிதிரளும் உலகத்தமிழர் கூட்டம் உரிமைப் போராட்டத்தில் தொடர்ந்து கரம்சேர்த்து பலம்சேர்க்க பின்னிற்பது எமது இனத்தின் சாபக்கேடாகிவிட்டது. முள்ளிவாய்க்கால் பேரனர்த்தம் நிகழப்போகின்றது தடுத்து நிறுத்துங்கள் என உலக நாடுகளை நோக்கி குரலெழுப்பி போராடியபோது இலட்சக்கணக்கில் வந்தீர்கள். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் தமிழினத்தின் தலைமகன் எங்கள் உங்கள் கைகளில் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இனவிடுதலையினை உறுதியாக்குவதற்கு நிறைவாகும் வரை மறைவாக இருந்துவரும் இந்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்பதை தயைகூர்ந்து சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே.

சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்து நீங்கள் உங்கள் வாழ்வை பற்றிய சிந்தனைக்குள் சென்றுவிட்டீர்கள். அதுதான் தவறாகிவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எம் எல்லோர் கைகளிலும் ஒப்படைத்துவிட்டு விடுதலைக்கான நாள் குறித்து அதற்கான தயார்படுத்தலில் இருக்கும் தலைவனின் திட்டம் அறியாததால் இந்த நிலை.

அன்பார்ந்த உறவுகளே! நாம் இழந்தோம். எந்த இனமும் இதுவரை இழக்காத இழப்பை எமது இனம் சந்தித்தது. மனிதாபிமானம் பற்றி வாய்கிழியப் பேசும் உலக நாடுகள் சாட்சியாக இந்த இனஅழிப்பு நடாத்தப்பட்டது. இது எதனால் என்பதை சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே.

நாம் அற்ப காரணங்களை முன்னிறுத்தி வேலிச்சண்டை போல நாடு மீட்கும் போராட்டத்தை மலினப்படுத்தியதன் விளைவுதான் அந்த நிலைக்கு காரணம். அவன் அப்படி.. இவன் இப்படி.. அவன் அந்தப்பக்கம்.. இவன் இந்தப்பக்கம்.. என ஒவ்வொருவரையும் ஒரு வட்டத்திற்குள் நீங்களாகவே நிறுத்திவிட்டு அவர்களோடு சேர்ந்து களமாட தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டீர்கள்.

புலத்து உறவுகளிற்கு அன்பான வணக்கம்.

உங்களையோ உங்கள் பிள்ளைகளையோ கழுத்தில் நஞ்சை சுமக்கவோ கைகளில் ஆயுதங்களை ஏந்தவோ அழைக்கவில்லை. விடுதலைக்கான அரசியல் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அணிதிரளுமாறே கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரை பதித்த தளபதி கிட்டு மாமாவின் தாய் தந்தையரது பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஒப்பற்ற தளபதியாக கிருட்டினகுமார் என்ற புத்திரனை தமிழ் மக்களின் கிட்டு மாமாவாக்கிய சதாசிவம்பிள்ளை முன்னைநாள் தமிழரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கியவர்.

கிட்டுமாமாவின் தாயார் ஆரம்பகால விடுதலைப் போராட்டத்தில் பெண்களை திரட்டுவதிலும் அவர்களிற்கான உதவிகளை செய்வதிலும் ஈடுபட்டிருந்ததோடு மட்டுமல்லாது ஆரம்பகால சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைக்குழந்தையாக கிட்டு மாமா இருந்த சமயத்தில் சிறைசென்று பெருமை சேர்த்தவர் என்ற விடையங்களை பழ.நெடுமாறன் அய்யாவின் “பிரபாரன் தமிழர்களின் எழுச்சியின் வடிவம்” வரலாற்றுப் பெட்டகத்தில் இருந்து படிக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவர்கள் மட்டுமல்ல ஏராளம் பெற்றோர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றித்து பலம் சேர்த்துள்ளார்கள். இன்றும் பலமாகவும் பாலமாகவும் விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஆனால் புலத்தில் உள்ள பெற்றோரே தலைவர் நம்பியிருக்கும் இளைஞர்களிற்கு பெரும் தடையாக இருப்பது ஏற்புடையதல்ல.

முதலில் உங்கள் பிள்ளைகள் மீது விதித்துள்ள தடையினை விலக்கிக் கொள்ளுங்கள். வீட்டில் எமது இனத்தின் வரலாற்றைப் பேசுங்கள். பிள்ளைகளிற்கு விடுதலைக்கான தேவையினை வலியுறுத்துங்கள். முடிந்தால் நீங்களே கைபிடித்து போராட்டக்களம் அழைத்து வாருங்கள். முடிந்தவரை தடையாக இருக்காதீர்கள் என்பதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள்.

இனிமேலாவது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு தாயக விடுதலை ஒன்றையே இலக்காக கொண்டு களத்திற்கு வாருங்கள். உலகத்தமிழினம் வலிசுமந்த நாட்களை ஒன்றுபட்டு நினைவு கூறுவோம். அழுது கண்ணீர் வடிப்பதற்கான நேரமும் அல்ல காலமும் அல்ல. இழந்தவற்றை பெறுவதற்கும் அறுவடைசெய்வதற்கும் வேள்வி நடத்துவதற்கான காலம் இது.

தமிழீழ விடுதலை ஒன்றுதான் சர்வதேசத்தின் மேற்பார்வையில் சிங்களத்தால் வலிந்து உயிர்பறிப்புச் செய்யப்பட்ட எமது சொந்தங்களின் ஆத்மாவை சாந்தியடைய செய்யும். நீங்கள் வசிக்கும் நாடுகளில் எங்கெல்லாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அலைகடலென திரண்டு செல்லுமாறு ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றது.

நாலு நாள் நாலு பேர் கூடிவிட்டு கலைந்து செல்லும் துக்க நிகழ்வல்ல. நாடி நரம்புகளில் ஓடும் செங்குருதி ஓயும்வரை எம் சித்தம் நிறைந்து வலிமை சேர்க்க வேண்டும். ஒன்று கூடி அழுவோம். அரற்றுவோம். மனவேதனைகள் பாரங்கள் சுமைகள் தணியட்டும். ஆனால் விடுதலை நெருப்பை எக்காரணம் கொண்டும் அணையவிடக் கூடாது.

சர்வதேசம் பார்த்திருக்க நிகழ்த்தப்பட்ட மானுடப்படுகொலைக்கு நாம் நீதி கேட்டு ஒன்று கூடுவோம். வலிசுமந்த இந்த நாட்களில் எமது உறவுகளிற்காய் நடைபோடும் எமதுகால்கள் மௌனசாட்சியாக நின்ற உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கட்டும்.

புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாய்த்தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. தமிழர்கள் எங்கிருந்தாலும் உங்கள் கால்கள் நிகழ்விடம் நோக்கி அடியெடுத்து வைக்கட்டும். அது தமிழீழத்திற்கான பயணத்திற்கு வலிமை சேர்க்கட்டும். நம்பிக்கையுடன் வாருங்கள் நாளை நமதே.

இந்த நேரத்தில் யாழப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் முடிவல்ல…” என்று சிங்கள இராணுவத்தின் இரும்புப்பிடிக்குள் இருந்து முழங்கிய எமது உறவுகளின் வீரம் பெரும் ஆறுதலையும் உத்வேகத்தையும் தருகின்றது.

வலிசுமந்த நாட்களை வலிமையுள்ளதாக்கி விடுதலைப் போராட்டத்திற்கு உறுதிசேர்ப்போம் வாரீர்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

-ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்-

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ்

தமிழர்கள் எங்கிருந்தாலும் உங்கள் கால்கள் நிகழ்விடம் நோக்கி அடியெடுத்து வைக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.