Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri-lanka%20-%20%20may%202012.jpg

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன. அதாவது சிறிலங்காவின் 20 மில்லியன் மக்களில் 21 சதவீதத்தைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு NYDailyNews ஊடகத்தில் [May 17th 2012] வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் வடபகுதி நோக்கிச் செல்கின்ற வீதியின் ஊடாக நள்ளிரவன்று, 'றக்' வாகனத்தை றொபேற் பெர்னாண்டோ செலுத்திக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்காவின் தென்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தளபாடங்களை, கொழும்பிலிருந்து 390 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சிறுபான்மைத் தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு நோக்கி சிங்கள வர்த்தகர்கள் தமது வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், பெர்னாண்டோ தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் வீதி வழியாக பயணிப்பதென்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் சிறிலங்காவின் வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் பெரும்பகுதியை புலிகள் அமைப்பு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால், சிங்களப் பயணிகள் இவ்வீதியைப் பயன்படுத்துவதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

"யுத்தம் முடிந்த பின்னர் நாம் இந்த வீதியால் மட்டுமல்ல, குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் எதுவுமின்றி நாடு பூராவும் தங்கு தடையின்றி சுதந்திரமாக பயணிக்க முடிகின்றது. இது யுத்தத்தின் முடிவால் எமக்கு கிடைத்த நல்வாய்ப்பாகும்" என பெர்னாண்டோ தெரிவித்தார்.

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிடைக்கப் பெற்ற நல்வாய்ப்பின் மூலம், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு வரை சுதந்திரமாகப் பயணிக்க முடிகின்றது.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான தயார்ப்படுத்தல்களை சிறிலங்க அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிகழ்வில் 12,000 பாதுகாப்புப் படையினர் பங்குபெறும் இராணுவ அணிவகுப்பும் மேற்கொள்ளப்படுகின்றது.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன. அதாவது சிறிலங்காவின் 20 மில்லியன் மக்களில் 21 சதவீதத்தைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதான கட்சியாகக் காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டில் முன்னேற்றம் எதுவும் எட்டப்படாததால் இடைநிறுத்தப்பட்டது.

நாட்டில் அரசியற் தீர்வொன்றை எட்டுவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்பது தேவையில்லை எனவும், இது உண்மையில் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

தாம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது உரிய தீர்வெதனையும் முன்வைக்கத் தவறியமை தொடர்பில் தமிழ் சமூகம் கவலை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

"அரசியற் தீர்வை முன்வைக்காது தாமதப்படுத்துவது மட்டுமன்றி தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதாவது வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் ஒரு பகுதியினர் மீளவும் அவர்களது இடங்களில் குடியேற்றப்படாமை, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலங்கள் இன்னமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழ் சமூகம் முகங்கொடுக்கின்றது" என சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை முன்வைப்பதற்கும், மற்றும் அவர்களின் இதர பிரச்சினைகளைத் தீர்த்து, பிராந்தியங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் விருப்பங் கொண்டிருக்கவில்லை என நாங்கள் கருதுகின்றோம்" எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் சம்மதத்துடனும் 'உள்நாடு' சார் அரசியற் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தேவை உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. "எம்மால் முன்வைக்கப்படும் தீர்வானது உள்நாட்டு நகர்வாக மட்டும் இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். இதை விடுத்து வெளிநாடுகளினதும், உதவி அமைப்புக்களினதும் அழுத்தத்தின் பேரில் அவர்களின் எண்ணத்தை முதன்மைப்படுத்திய தீர்வை நாம் விரும்பவில்லை. இவ்வாறானதொரு தீர்வானது நாட்டில் உள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சீர்திருத்தங்களை முன்வைப்பதில் ஒருபோதும் உதவாது" என சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறிலங்காவானது இவ்வாறான தீர்வை முன்வைப்பதில் நீண்ட தூரத்தைக் கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அயல்நாடான இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு நாடுகள் சிறிலங்கா மீது அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றன. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தொடரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ் ஆணைக்குழுவானது யுத்தம் தீவிரம் அடைந்திருந்த இறுதி எட்டு ஆண்டுகளில் உண்மையில் என்ன நடந்ததென்பதை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

"நாட்டில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் சிறிலங்காவில் வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், மீண்டும் நாட்டில் மோதல் ஒன்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எவ்வாறான அரசியற் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இன்னமும் சரியான தீர்வு எட்டப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

http://www.puthinapp...?20120520106232

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும்,

புலிகள் தோற்கடிக்கப்படவில்லை.

தற்போதுதான் தாயகத்திலும் புலத்திலும் சர்வதேச ரீதியிலும் பலமாக அவர்கள் வளர்ந்துள்ளனர்.

அவர்களது தேவை பலமாக உணரப்பட்டுள்ளது.

( எதிர்ப்பவர்களாக இருந்தவர்களாலும் கூட)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டில் யுத்தம் நடத்தி மக்களை ரகசியமாக கொன்று குவித்த சிங்கவன் குழவி கூட்டுக்கு கல் எறிந்து குழவியை கலைத்து குழவிபோல் எங்களையும் துரத்தி துரத்தி நாட்டை விட்டு கலைத்ததால் நாம் உலகம் பூராவும் பரவி சிங்களவன் நடத்திவந்த அரச பயங்கரவாதத்தை உலகறிய செய்த பெருமை அவர்களையே சேரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.