Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓன்றிணைந்து விரட்டியடிப்போம் அணி திரள வருக வருக! – ஜெயா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeyanantha%20muurththi.jpg

முள்ளிவாய்க்கால் நினைவுகள் எமது நெஞ்சங்களில் ஆராத துயராக வழிந்தோடிக் கொண்டிருக்கும் நிலையில், எம் உறவுகளின் உருதியைக் குடித்த அரக்கனான, சிறீலங்காவின் அதிபரும் போர்க்குற்றவாளியுமான மஹிந்த ராஜபக்ச இந்த மண்ணில் கால் வைக்கவிடாது விரட்டியடிக்க பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மறுதினம் (26-05-2012) சனிக்கிழமை லண்டன் Down Streetயில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்கள் முடிசூடி அறுபதாண்டுகள் நிறைவையொட்டி நடைபெறவுள்ள வைரவிழாவுக்கு, சர்வதேசத்தின் போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது உலகில் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மேலும் உச்சாகப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

போர் இடம்பெற்ற பகுதியான முள்ளிவாக்கால் பகுதியில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கு பணியாற்றிய வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடி வாக்குமூலமளித்துள்ளனர். அத்துடன், அப்பகுதியில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபையின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், மகாராணியார் தமது வைரவிழாவுக்கு இவ்வான மனித குலத்திற்கு கேடுவிளைவிக்கும் நபர்களை அழைப்பது அந்த விழாவையே கலங்கப்படுத்துவதாக உள்ளது.

ஒரு தேசத்தின் இனம் கருவோடு அழிக்கப்பட்டது மட்டுமல்ல, இன்றும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்க சிறீலங்கா அரசாங்கம் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இவற்றை கவனத்தில் கொண்டும், தமிழ் மக்களின் சுயகௌரவத்தையும் கருத்தில் கொண்டும் மகாராணியார், போர்க்குற்றவாளிக்கு விடுக்கப்பட்டுள்ள விருந்துனர் அழைப்பை இரத்துச் செய்ய வேண்டும்.

நாளை மறுதினம் இடம்பெறும் போர்க்குற்றவாளிக்கு எதிரான மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் பிரித்தானிய வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிக்காட்டும் பலத்தினூடாக பிரித்தானிய மண்ணிலேயே தரையிறங்க விடக்கூடாது என்றார்.

இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் பலத்தினூடாகவே எமது தாயக மக்களின் விடிவுவாசல் உள்ளது. எனவே அன்பார்ந்த பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே என்ன வேலைப் பளுங்கள் இருந்தாலும், அனைத்தையும் சிறிது நேரம் எமது உறவுகளுக்காக ஒதுக்கி வைத்து இந்த மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

உலகத்தலைவர்கள் கூடப்போகும் நேரம் இது. மகிந்தாவை உலகத்தலைவர்களுக்கு தெரிய வைக்கும் நேரம் இது. இயலுமான ஐரோபிய உறவுகள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும். இரு இடத்தில் மட்டும் கவன ஈர்ப்பு நடத்தினால் மகிந்தா தயாராக வந்து இன்னொரு இடத்தில் தோன்றி பிரசரம் நடத்திவிடுவார். வேறு வேறு குழுக்கள் வேறு வேறு இடங்களில் அவரை எதிபார்த்திருக்க வேண்டும். மகிந்தாவின் பொதுநல தொடர்பு கம்பனிகள் அந்த நாட்களில் ஏதாவது இலங்கை சம்பந்தமாக TV பிரசாரங்களில் இறங்கலாம். Channel 4ஐ கேட்டுபார்க்கலாம் அந்த நாட்களில் இலங்கை கொலைக்களம் பகுதிகளை மீள் ஓட்டம் விடும் படி. இது ஒன்று கூடி இருக்கும் தலைவர்கள் அவற்றை பார்க்க வசதியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.