Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா குழு சிறிலங்காவுக்குள் நுழையத் தடை?

Featured Replies

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்து ஆராய ஜெனிவாவில் இருந்து ஒரு குழுவை சிறிலங்காவுக்கு அனுப்ப ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கடந்த 14ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் பயணம் வரும் ஜுலை மாதம் இடம்பெறும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா ஏற்கவில்லை என்பதால், இந்தக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில், எந்தவொரு ஐ.நா அதிகாரிகளின் பயணத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வரவேற்காது என்று சிறிலங்காவின் உயர்மட்ட அரசஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120527106273

  • கருத்துக்கள உறவுகள்

united-nations-seithy150.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் குழுவை இலங்கைக்கு அனுமதிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்து ஆராய ஜெனிவாவில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கடந்த 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் பயணம் வரும் ஜுலை மாதம் இடம்பெறும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தை இலங்கை ஏற்கவில்லை என்பதால், இந்தக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில், எந்தவொரு ஐ.நா அதிகாரிகளின் பயணத்தையும் இலங்கை அரசாங்கம் வரவேற்காது என்று இலங்கையின் உயர்மட்ட அரசஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=60778&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

தமிழரசு இணைக்க பட்ட செய்திகளை திரும்ப திரும்ப இணைக்காதீர்கள் search பண்ணிட்டு இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இருந்து பக் பண்ணு என்று கோத்தா சொன்னதும் 2007ம் ஆண்டு பக் பண்ணிக் கொண்டு ஓடின ஆக்கள் தானே. ஒரு பெரும் இன அழிப்புக்கு ஐநாவும் அந்தச் செயல் மூலம் காரணமாக இருந்தது. இன்று அவர்களுக்கே தடை..!

ஐநாவை அதன் விதிகளை மதிக்காத நாட்டை ஏன் ஐநா மன்றில் அங்கத்துவம் கொடுத்து வைச்சிருக்கினம்.

அரச பயங்கரவாத நாடாக சிறீலங்காவை பிரகடனப்படுத்தி.. ஐநாவில் இருந்து விலக்கி வைத்துவிட்டு.. ஐநா பாதுகாப்புச் சபையின் விசேட அனுமதியோடு.. ஈராக்கில் சதாம் என்ற 800 பேரைக் கொன்ற போர்க்குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்தது போன்று.. சிறீலங்கா போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐநா முன் வர வேண்டும். அத்தோடு தமிழ் மக்களுக்கு.. பொஸ்னிய யுத்தத்தில்.. இனப்படுகொலை ஆன மக்களுக்காக கொசவோவை பிரித்து கையளித்தது போல.. தமிழீழத்தைப் பிரித்துக் கையளிக்க வேண்டும்..!

இதன் மூலமே அந்தப் பிராந்தியத்தில் மனித உரிமைகளையும் சமூக அரசியல் உரிமைகளையும் மேம்படுத்த முடியும். ஐநா எனியும் தயங்காமல் இதனை செய்ய வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

2007 இல் ஐநாவை ஊரைவிட்டே ஓடவைத்தவனும் சிங்களவன்தான்.. :D உங்கள் உயிருக்கு இனிமேல் உத்தரவாதம் தரமுடியாது என்று சொன்னால் ஐநா அதன் ஊழியர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா..!? அந்த வித்தையைத்தான் சிங்களம் பயன்படுத்திக் கொண்டது.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே புதிராக இருக்கிறது

சிறிலங்காவுக்குள் ஐ.நா அடங்குகிறதா?

ஐ.நா விற்குள் ஸ்ரீலங்காஅடங்குகிறதா?

http://leo-malar.blogspot.com/2012/05/blog-post_27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.