Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயருக்கு பாதுகாப்பு கோரி பிரார்த்தனை போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mannar_protest_bishop__CI.jpg

இலங்கையில் அண்மைக்காலமாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகளினால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களையடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளதாகவும், எனவே அரசு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் ஏகமனதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் குரலற்றவர்களின் குரலாக விளங்கும் ஆயருக்கு எதிராக வெளியிடப்படுகின்ற கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில் இந்து மதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருந்தனர். மன்னார் ஆயருக்கு ஆதரவான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுதீன், மன்னர் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு எதிராக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முக்கிய சந்திகளில் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஊர்வலத்துடன் கூடிய ஆர்ப்பாட்ட நிகழ்வாக முதலில் இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

இந்த வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோரும் கலந்து கொண்டி ருந்தனர்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் தம்மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் தவறானவை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமிழோசையிடம் கூறினார்.

Thanks BBC

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கிள்ளுக் கீரைகளாக நினைக்கும் மனோபாவம் சிங்களவர்களைவிட இஸ்லாமியச் சகோதரர்களிடமே அதிகமாகக் காணப்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பின் நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் இருக்கிறார் போலத் தெரிகிறது. என்ன செய்வது தோற்றுப் போய்விட்டோம். அதனால் வாலாட்டலாமென நினைக்கிறார். மொத்தத் தமிழினமும் இத்தகையோரின் நடவடிக்கைகளுக் கெதிராகச் சினந்தெழ வேண்டும். இவர்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் செய்ய வேண்டியது மொத்தத் தமிழர்களினதும் கடமை.

kajan%20mannar0.jpgphoto.gif

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை அவதூராக பாராளுமன்றத்தில் கதைத்து இன்று மன்னார் மாவட்டத்தில் தமிழ்-முஸ்ஸிம் மக்களுக்கிடையில் பேரினவாதத்தை தூண்ட முயலும்பங்கிரோத்து அரசியல்வாதியான றிஸாட் பதீயுதின் கண்டித்தும் மன்னார் ஆயருக்கு ஆதரவாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபதலைவரும் சட்டத்தரணியுமான ஜெயசிங்கம் ஜெயரூபன் ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடிபணிவு அரசியலை நடத்தி மகிந்தர் தருவதை பெற்றுக்கொள்ளலாம் என்னும் நிலையில் சில அரசியல் கட்சிகள் இருந்தாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் சார்ந்தும் தேசியம் சார்ந்தும் பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://eeladhesam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.