Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இருந்து சென்ற தமிழ் இளைஞன் மீது யாழில் சிங்களகுழு தாக்குதல்!

Featured Replies

யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள்.

ஊர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த 6பேர் அடங்கிய சிங்கள இளைஞர்கள் உந்துருளியில் சென்ற இருவரை மறித்து கடுமையாக தாக்கியுள்ளார்கள்.ஊர்தியால் உந்துருளியினை மோதி விழுத்திவிட்டு அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது கடும் தாக்குதலினை நடத்தியுள்ளார்கள்.

வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த பரித்தானியாவில் இருந்து சென்ற இளைஞனும் இன்னும் ஒருவரும் சென்று கொண்டிருந்த போது ஊர்தி செல்வதற்கு பாதை விட்டுக்கொடுக்காததன் காரணத்தால் இவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிங்கள இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

இரு தமிழ்இளைஞர்கள் சென்ற உந்துருளியினை ஊர்தியால் மோதி விழுத்திவிட்டு அதில் பயணம் செய்த பிரித்தானியா இளைஞன் உள்ளிட்ட இருவர்களையும் இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளார்கள் அதன்பின்னர் உந்துருளியினை நடுவீதியில் போட்டு இழுத்து அவர்களின் ஊர்தியால் சேதப்படுத்தியுள்ளார்கள் இதனை அருகில் நின்று பாத்துக்கொண்டிருந்த மக்கள் ஒன்று கூடுவதற்குள் ஆறு சிங்கள இளைஞர்களும் ஊர்தியில் ஏறிசென்றுவிட்டனர் இருந்தும் அந்த சிங்கள இளைஞர்கள் பயணித்த ஊர்தியினை அவதானித்தவர்கள் அதுதொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததினை தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினர் அவர்களை தேடிப்பிடித்து கோப்பாய் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சென்றவேளை தமிழ்இளைஞர்கள் மீது தாக்கிய சிங்களவர்களை எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளார்கள்.

என்ன நடந்த என்ற சம்பவத்தினை கேட்டுவிட்டு மதுபோதையில் இருந்த சிங்களஇளைஞர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார்கள் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கமுடியத நிலையில் காணப்பட்டுள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தால் சிங்களவர் இந்த ஆட்டம் ஆட முடியுமா ?

இப்போது கேட்பதற்கு யாரும் இல்லை இதுவும் செய்வார்கள் இதற்க்கு மேலும் செய்வார்கள் திருப்பி நாம் திருப்பி அடிக்கும்வரை ......

மீண்டும் வருவார்கள் பாடம் புகட்டப்படும் .

தமிழன் காலையும் மாலையும் இரவும் மட்டரகமான தமிழ் சினிமாவையும், தமிழ் தொலைக்காட்சி தொடர்களையும் தமிழ் பண்பலை நிகழ்ச்சிகளையும் தினசரி கேட்பதை நிறுத்தி - தினமும் உடற்பயிற்சி செய்து, காராட்டி, சிலம்பம் போன்ற தற்பாதுகாப்பு கலைகளையும் கற்று வரவேண்டும். இவற்றை இளவயது முதல் செய்வது கூடிய பயன் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.