Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு-தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Featured Replies

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும்,

இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. இந்த நிலப்பறிப்பு நடவடிக்கையானது சிறீலங்கா அரசினால் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக ஆரம்பக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலப்பறிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் அப்பிரதேசத்தின் குடித்தொகையின் வீதாசாரத்தினை முற்றாக மாற்றியமைத்துள்ளனர். இச்செயற்பாடானது ஆங்கிலேயர்கள் தீவை விட்டு வெளியேறியதிலிருந்து தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும்வரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆயுதப்போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய 1970களில் இருந்து 2009 மே மாதம் வரையான காலப்பகுதியில் இந்த நில ஆக்கிரமிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிங்களதேசம் முழு வீச்சோடு சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல், நிலப்பறிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 6 ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அந்த வேலைத்திட்டம் இன்று வடக்கிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழித்தல் என்ற ஓர் இலக்கினை நோக்கியே நடைபெறுகின்றன. இவ்வாறான நோக்கில் செயற்படும் சிங்கள தேசததின் இந்த வேலைத்திட்டத்தினை முறியடிப்பதற்கான ஒரே வழி தமிழ்த் தேசத்திற்கான அரசியல் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வது மட்டுமேயாகும்.

அது மட்டுமன்றி ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எவ்வித தயக்கமும் இன்றி தீவிரப்படுத்தி வருகின்றதெனின் அந்தத் தீர்மானத்தின் பலவீனங்களை நாம் நன்றாக விளங்கிக்க கொள்ள முடியும். அத்துடன் ஜெனீவா தீர்மானத்தினை உரிய முறையில் அமுல்ப்படுத்துமாறு கோருவதன் மூலமோ அன்றி எல்.எல்.ஆர்.சி யினை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு கோருவதன்மூலமோ சிறீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புச் செயற்பாடுகளை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்பதனை இனியாவது சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், நிலப்பறிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவும் ஐனநாயக வழியிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(18-06-2012) நண்பகல் 1.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை யாழ் நகர பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சோமசுந்தரப்புலவர் சிலையருகில் நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வேண்டுகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்

தலைவர் பொதுச் செயலாளர்

http://eeladhesam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size="4"]வரவேற்புக்குரியது . நாங்கள் இன்னும் [/size][/size][size=1]

[size="4"]கூடிய கவனம் எடுத்து போராட்டத்தை விரிவடையச்செய்ய [/size][/size][size=1]

[size="4"]வேண்டும்.இது தமிழர்களின் இருப்பின் முக்கிய நேரம் .[/size][/size][size=1]

[size="4"]இல்லாவிட்டால் எமது மண்ணை , எம் இனத்தின் [/size][/size][size=1]

[size="4"]அடையாளங்களை நாம் இழக்க நேரிடும்.[/size][/size]

[size=4]இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த மக்கள் அகிம்சை போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கட்சி பேதங்களை மறந்து இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.[/size]

[size=1]

[size=4]இவ்வாறு ஒற்றுமைப்பட வேண்டிய காலத்தின் தேவை, இணைவோம், வெல்வோம். [/size][/size]

[size=5]The referendum model presented herewith aims at kindling further discussions. We look forward to opinion of our readers in correcting or evolving the views [TamilNet Editorial Board][/size]

[size=5]Considering the articulating pressures and claims coming from India and the so-called International Community, and considering the nature of the Eezham Tamil political groups and their mandate in the island and in the diaspora, a probable model for the referendum could have three options:[/size]

  • [size=5]Independence of Tamil Eelam[/size]
  • [size=5]Unitary Sri Lanka[/size]
  • [size=5]Exploring any other alternative[/size]

[size=6]Declare for referendum in any unity meeting[/size]

[size=5][TamilNet, Saturday, 16 June 2012, 00:06 GMT][/size]

[size=5]All groups of Eezham Tamils in the island and in the diaspora, seeking various shades of political solution beyond the present constitution of Sri Lanka, should meet together to present a joint stand of them, is an opinion currently pressurising all of them, mainly the TNA, both the factions of the TGTE, GTF and the Country Councils in various Western countries. While it is well known that the pressure ultimately comes from dubious international crisis management forces that are keen in diffusing the national question of Eezham Tamils through ‘tangent’ approaches, Eezham Tamil political groups could make use of the move to solidly present certain fundamentals to the edification of the so-called international community and India. The most fundamental, democratic and irrefutable stand is to demand for getting an answer from the concerned people through a referendum.[/size]

[size=3]

[size=5]TamilNet Editorial Board[/size][/size]

[size=3]

[size=5]- [/size][size="3"][size=3]It is of utmost importance that the current Tamil leadership in the island and in the diaspora should now take a united policy decision on the benchmark to be adopted on the legality and illegality of settlements in the North and East, and declare that policy to the world for future deliberations.[/size][/size][/size]

[size=3]

[size="3"][size=3]- [/size][/size][size="3"]For a long time now, cautious political analysts among Tamils have repeatedly been telling their politicians to trust the people first and build their politics based on people[/size].[/size]

[size=3]

- While India and the so-called IC continuously vilify the Tamils and the diaspora, ask them to drop this and that, and try to project their own agenda as the opinion of Tamils, the Tamil groups have never asked the IC or India to tell the SL government to drop at least the 6th Amendment so that the Tamils could freely tell their opinion.[/size]

[size=3]

- The arrangement to include political representation from Tamil Nadu in unity meetings is a safety mechanism against any intimidation coming from Washington or New Delhi.[/size]

[size=4]வடக்கில் நடக்கும் காணி அபகரிப்பு நீதிமன்றின் உதவியுடன் தடுக்க வேண்டும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-16 10:01:33| யாழ்ப்பாணம்][/size]

[size=4]இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்ப தற்கு முன்னதாக, வடபகுதியில் இரு க்கக்கூடிய கணிசமான காணிகளை அபகரிப்புச் செய்கின்ற பெரியதொரு திட்டத்தில் அரசும், படைத்தரப்பும் இணைந்து ஈடுபட்டுள்ளமை இப் போது பகிரங்கமாகியுள்ளது.

இலங்கையில் இனப்பிரச்சினை என்ப தற்குள் இருக்கக்கூடிய நிலப்பிரச் சினை என்பது மிகவும் முக்கியமான தாகும்.வடக்குக் கிழக்கு மாகாணங் கள் தமிழர் தாயகம் என்ற எல்லைப்ப டுத்தலை எந்தக் காரணங்களைக் கொண்டும் அரசால் முறியடிக்க முடி யவில்லை. இலங்கையின் வரலா ற்று ஆய்வாளர்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இனப்பிரச்சினைக் கான தீர்வு என்ற விடயம் முன்னெழு கின்றபோது,வடக்குக் கிழக்கு மாகா ணங்களின் இணைவு என்பதே இனப் பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை யாக அமையும்.இருந்தும் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அங்கு ஒரு நிர்வா கக் கட்டமைப்பை உருவாக்கியதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள், வட க்கு மாகாணத்துடன் இணையவே ண்டிய அவசியம் இல்லை என்று கூறுமளவிற்கு கனகச்சிதமாக இராஜ தந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அரசாட்சியில் தமிழ்த் தரப்பை இருத்தி தமிழர்களு க்கே கிழக்கு மாகாண ஆட்சி அதிகா ரம் என்பதுபோல காட்டிய இலங்கை அரசு,இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே குழ ப்பத்தை ஏற்படுத்தக் கூடியதான அர சியல் சிக்கலை உருவாக்கத் தலைப் பட்டுள்ளது.கிழக்கின் நிலைமை இது வாக இருக்க, வடக்கில் மாகாணச பைத் தேர்தலை நடத்துவதற்கு முன் னதாக, வட மாகாணத்தில் உள்ள பெருமளவு காணிகளை அபகரிப்புச் செய்வதன் ஊடாக வட பகுதியில் சிங்கள குடியேற்றத்தை - படையின ரின் குடும்பங்களை குடியிருத்தும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படு மாக இருந்தால், வடக்கு மாகாண சபையில் தமிழ் ஆட்சி ஏற்பட்டாலும் அதனால் எந்த பிரயோசனமும் நிக ழப்போவதில்லை என்பது நிறுத்திட் டமான உண்மை.

எனவே வடக்கில் திட்டமிட்டு நடை பெறும் காணி அபகரிப்பை கடுமை யாக எதிர்க்கும் தார்மீகப் பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டு.எனவே இது விடயத்தில் நீதிமன்றின் உத வியை நாடுவது அவசியமானதா கும்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.