Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன்(ம்) பெயர்ந்தவனின் புலம்பல் -(பாகம் 1) - கண்டறியாத சுத்தத் தமிழும் எங்கடை பிள்ளைகளும்......

Featured Replies

[size=4]கருத்து இலக்கம் 50க்கான என்னோட பதில் . என்னது.............. நான் தமிழை கொல்றேனா :o :o ? ( இவங்க பாரதிதாசன் பல்கலைக்களகம் எனக்கு பட்டம் தர்றாங்க :lol: ) எங்க நாட்டையும் என்னோட தமிழையும் மட்டம்ன்னு (உங்க மொழில ஊத்தை ) சொல்ல யாருங்க பெர்மிசன் தந்தாங்க ^_^ ? என்னோட எழுத்து தப்புன்னா நிர்வாகத்தில இருக்கிறவங்க சொல்லியிருப்பங்க அலைமகளு :) . உங்க மென்ராலிட்டி ரெம்ப ஓவருங்க . உங்க பர்சனல் தேவைங்களுக்கு எங்க நாட்டையும் எங்க ஊரு மொழியையும் யூஸ் பண்ணுவீங்க . அப்புறம் எங்க நாடும் மொழியும் உங்களுக்கு " ஊத்தை " நல்லா இருக்குங்க உங்க ஞாயம் . கொஞ்சமாவது திருந்துங்கம்மா :D . உங்களப்போல இருக்கிறவங்க தான் சண் குரூப்பையும் ஜெயா டீவியையும் வெளிநாட்ல வளர்த்துவிடுறாங்க . அப்புறம் எங்க ஊரு தமிழை நொட்டை சொல்ல வார்றது ^_^ . நா ஒன்னும் மனசில வைக்கலீங்க ஃபிரெண்ட்ஸ்சா இருப்போம் ஓக்கேயா :D:icon_idea: ?[/size]

  • Replies 55
  • Views 5.7k
  • Created
  • Last Reply

இங்கே இரண்டு வேறுபட்ட விவாத தலைப்புகள் ஒன்றாக கலந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

1.)மொழிபெயர்ப்பு: தொல்காபியர் காலம் தொட்டு பிறமொழிச் சொற்கள் தமிழில் பாவிக்கப்படுவது ஏற்கப்பட்டிருகிறது. அவர் சமிஸ்கிருத சொற்களை வடமொழி சொற்களாகவும் மற்றயவற்றை திசை சொற்களாவும் ஏற்றிருக்கிறார். எனவே தமிழுக்குள் எப்படி மற்றைய மொழிச்சொற்களை ஏற்றுகொள்வதென்பது தமிழின் பொதுவான வளர்ச்சி சம்பந்தமானது. நான் சிறுவனாக இருந்த போது இலங்கை கல்வித்திணைகத்தில் இருந்த தொழில் நுட்ப அறிஞர்களும், பேராசிரியர்களும் இணந்து வெளியிடும் சொற்களை பாவிக்கும் புத்தகங்கள் மட்டும்தான் பாடப்புத்தகங்களாக அனுமதிக்கப்படும். எனவே நாம் எழுதியதில் கல்வித்திணைகத்தின் ஆளுமை மிகவாகக் காணப்பட்டது. இது தமிழ் நாட்டில் எழுத்தாளர்களால் எழுந்தமானமாக பாவிக்கும் மொழிபெயர்ப்புகளை எமது எழுத்திலிருந்து விலக்கி வைத்தது. தனால் மேலும் தமிழ் நாட்டின் சிலபகுதிகளில் தமிங்கிலிஸ் உதயமானதுபோல் நாம் கஷ்டப்படவில்லை.

. கல்வித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாக கடமையாற்றிய தமிழர், கடமைக்காகவோ அல்லது காசுக்காவோ தமிழை மொழிபெயர்க்காமல், சங்க, தேவார, சோழகாலங்களில் காணப்பட்ட சொற்களை நேரம் செலவழித்து தேடிப்பயன் படுத்தியதால் இவை யாழ்ப்பாணத்தமிழுடன்(பேச்சு வழக்கிலிருக்கும் மிகப்பழையதமிழ்) மிகவும் எடுபட்டன. இலங்கை அரசு கல்வித்திணைக்களத்தில் இருந்த தமிழர்களை நீக்கியபின்னர் அங்கிருந்து வரும் தமிழ் சொற்கள் யாழ்ப்பாணத்தமிழின் பழமையை பாதுக்காப்பவையாக இருக்கவில்லை.

இருந்தாலும் கல்வித்திணைக்களம் பிரசுரித்து நமது கணித,உயிரியல் பாடப்புத்தகங்களில் காணப்பட்ட "ஆர்முடுகல், அமர்முடுகல், திராணி" போன்றசொற்கள் அப்போதும் யாழ்ப்பாணத்தின் பழைய கிராமங்களிலும் காணப்படாத பழய சொற்களாவும் அவற்றை கல்வித்திணைகளம் கிண்டியெடுப்பதால் யாருக்கு என்ன லாபம் என்பது போன்ற விவாவதங்களும் அப்போதும் இருக்கவேதான் செய்தன.

ஒருகாலத்தில் சிங்கத்திற்கு 51 ஒரு தமிழ் சொற்களும், 58 வடமொழிச் சொற்களும் தமிழ் புலவர்கள் பாவித்ததாக கேள்விப்பட்டுள்ளேன். தை பாண்டித்தியமாகமட்டும் கருதி, சாதாரண பாவனைகளுக்கு இரண்டு மூன்று சொற்களாகமட்டும் நாம் நிறுத்திக்கொள்வதால் மற்றய கலைகளுக்கும்ர இடமளிக்கலாம். எனவே அகிலத் தமிழ் உலகும் பாவிக்கத்தாக நல்ல தமிழ் சொற்களை ஒரு அமைப்பு அங்கீகரித்து ஏற்று வெளிவிடுவது செந்தமிழ் சிதையாமல் இருக்க அவசியம்தான்

84 லிருந்து நான் 97 வரையும் நான் நண்பர்களுடனும் வீட்டிலும் பேசுவதை தவிர தமிழை, எழுதவோ வாசிக்கவோ இல்லை. (இதனால் எனக்கு யாழில் ஆரம்பத்தில் “னா, றா லை” போன்ற எழுத்துக்களை தட்டச்சு செய்யதபின் குழப்பமாக இருந்தது) ப்போது ஒரு 7-8 வருடமாகத்தான் இணையத் தமிழை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். இதில் தமிழ்நாட்டு தமிழ்ழாதிக்கம் மிகவும் காண்படுகிறது..

கல்வித்திணைக்களத்தின் வழிகாட்டுத்தல் வலிமையற்றுப் போனபின் இப்படி நாம் பலரும் தமிழ்நாட்டு ழிழின் தாக்கம் காணப்படும் இணைய தமிழில்த்தான் எமது வழிகாட்டுதலிற்கு தங்குகிறோம். மேலும் புலம்பெயர் தமிழும், சில இடங்களில், பெரிய அளவில் யாழ்பாணத்தமிழும் சிறிய அளவில் தமிழ்நாட்டுச் சினிமா கலந்த தமிழாகவும் தான் வரையறுக்கப் பட்டிருக்கிறது. இதனால்த்தான் குமட்டி பழம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நமது எழுத்தாளர்களும், ஒழுங்கற்றதாயினும் தமிழ்நாட்டு அறிஞ்ஞர்களின் மொழிபெயர்ப்புக்களையே பின்பற்றுகிறார்கள்.

2.)புலம் பெயர் தமிழின் பாடவிதானம்:(பன்றி, பன்டி, பன்னி) சரியான சொற்கள் எதுவாயிருந்தாலும் தமிழ் என்று சொல்லி புலம்பெயர் தமிழ் பிள்ளைகள் எதை படிக்க வேண்டும் என்பது இன்னொரு விவாதத் தலைப்பு. நான் பலதடவைகள் புலத்து பிள்ளைகள் பேச்சுத்தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற விவாத்தைதான் கேட்டிருக்கிறேன். இதற்காக வைக்கப்படும் ஒரு விளக்கம் பிள்ளைகள் வீட்டிற்கு வந்தால் பெற்றாரின் உரையாடகளிடமிருந்து தமது மொழிவளத்தை உரமூட்டிக்கொள்ள முடியுமென்றும், வெளிநாடுகளில் தமிழை படிப்பது தமிழாரக தலைமுறைகள் இருபதற்கேயல்லாமல் வேறு அற்கு எந்த உபயோகமுமில்லை என்றும் வைக்கப்பட்டது. என்னுடைய மனத்தில் இப்படியான விவாதம் குறுகிய மனப்பான்மையும், சந்தர்ப்ப வாதமும் போலத்தான் தென்படுகிறது.

புலம்பெயர்பிள்ளைகள் செந்தமிழை(எழுத்து தமிழைத்)தான் கற்க வேண்டும் என்பது என் விருப்பம். நாம் புலத்துப்பிள்ளைகள் என்று சொல்வது பிரதாணமாக ஈழத்தமிழ் வாரிசுக்களைத்தான். அப்படியாயின் இருக்கும் பேச்சுவழக்குகளில் யாழ்பாணத்துத்தமிழ் எழுத்துத்தமிழுடன் மிக நெருங்கிய உறவை கொண்டிருக்கும்போது, அந்த பிள்ளைகளுக்கு எழுத்துத்தமிழை படிப்பிப்பதால் பேசும்பொது எற்படும் சிக்கல் பெரிதாக இருக்க முடியாது. தமிழை படிக்க என்று ஆரம்பிக்கும் போது தமிழ் நாட்டுப் பிள்ளைகளும், ஈழத்துப் பிள்ளைகளும் செந்தமிழைத்தான் வகுப்பறையில் கற்கிறார்கள். எனவே புலம்பெயர்பிள்ளைகளாலும் அதையே கற்பது எந்த புதிய பிரச்சனைகளயும் கொண்டுவராது என்பதுமட்டுமல்ல, ஈழத்தில் இப்போது காணப்படும் தமிழ் பாடப்புத்தக தட்டுப்பாடுகளுக்கு புலம் பெயர் பிள்ளைகள் தமிழ்நாட்டுப் பாடநூல்களையும் பின்பற்ற முடியும். செந்தமிழ் பொதுவான மொழி என்பதால் புலம் பெயர் நாடுகளில் தமது துறைகளில் முன்னேற்றம் காணும் பிள்ளைகள் தமது அறிவுத்துறைகளை ஒரு நாளில் தாயகத்திற்கு அளிக்க முயன்றால் அவர்கள் செந்தமிழை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அவசியம். இருந்தாலும் தமிழை படிக்கும் போது புலம் பெயர் பிள்ளைகளுக்கு, செய்யுள் வடிவ இலக்கிய பாடங்களை குறைத்து கதைவடிவில்(வசன நடையில்) வைத்திருந்தால் அது பிள்ளைகளுக்கு கூடிய தமிழை குறைந்த முயற்சியுடன் கற்க இடமளிக்கும்.

Edited by மல்லையூரான்

[size=4]கருத்து இலக்கம் 50க்கான என்னோட பதில் . என்னது.............. நான் தமிழை கொல்றேனா :o :o ? [/size]

[size=5]தமிழைக் கொல்லாமல் என்ன வளர்க்கின்றீர்களா சகோதரி???[/size] [size=5]இதுவே விளங்காட்டி[/size]

[size=4]( இவங்க பாரதிதாசன் பல்கலைக்களகம் எனக்கு பட்டம் தர்றாங்க :lol: ) [/size]

[size=5]ஒரு தாய் மொழியை அதுவும் சொந்த நாட்டிலில் இருந்து கொண்டு உருப்படியாக எழுதத் தெரியாத உங்களுக்கு[/size] [size=5]பட்டமா?[/size] [size=5] பாரதிதாசன் என்ன எந்தப் பல்கலைக்கழகம் என்றால் என்ன உங்கட நாட்டில் சும்மா தானே பட்டம் குடுக்கிறவை. இது எல்லாம் எங்களுக்குத் தெரியாதா??[/size]

[size=4] எங்க நாட்டையும் என்னோட தமிழையும் மட்டம்ன்னு (உங்க மொழில ஊத்தை ) சொல்ல யாருங்க பெர்மிசன் தந்தாங்க ^_^ ? [/size]

[size=5]உங்கட நாட்டுக்கு 2001 ல் நான் வந்தனான், உங்கட நாடு குப்பை இல்லை, குப்பைக்குள் ஒரு நாடு!![/size]

[size=5]நாங்கள் பேச்சு, எழுத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் வசிக்கின்றோம்!![/size]

[size=4]என்னோட எழுத்து தப்புன்னா நிர்வாகத்தில இருக்கிறவங்க சொல்லியிருப்பங்க அலைமகளு :) .[/size]

[size=5]அதை அவர்களிடமே கேட்டுக் கொள்ளவும்![/size]

[size=4]உங்க மென்ராலிட்டி ரெம்ப ஓவருங்க . உங்க பர்சனல் தேவைங்களுக்கு எங்க நாட்டையும் எங்க ஊரு மொழியையும் யூஸ் பண்ணுவீங்க . [/size]

[size=5]உங்கள் நாட்டையா???? உங்கள் மொழியையா???[/size]

[size=5]ஆமியை யார் யாருடைய நாட்டுக்கு அனுப்பியது என்று இன்னுமா தெரியவில்லை???? முள்ளிவாய்க்காலில் இவ்வளவு நடந்ததிற்கும் உங்கட இத்தாலிப் பெண்தானே பொறுப்பு? [/size]

[size=4]அப்புறம் எங்க நாடும் மொழியும் உங்களுக்கு " ஊத்தை " நல்லா இருக்குங்க உங்க ஞாயம் . கொஞ்சமாவது திருந்துங்கம்மா :D . உங்களப்போல இருக்கிறவங்க தான் சண் குரூப்பையும் ஜெயா டீவியையும் வெளிநாட்ல வளர்த்துவிடுறாங்க .[/size]

[size=5]வாசிக்கவும் தெரியாதா?? நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் உந்த ஊத்தை படம், பாட்டு பார்ப்பதில்லை, கேட்பதில்லை, அவையளின் ஊத்தை ரிவியும் இல்லை என்று[/size][size=5] [/size]

[size=4]அப்புறம் எங்க ஊரு தமிழை நொட்டை சொல்ல வார்றது ^_^ [/size]

[size=5]நான் நொட்டை சொல்லவில்லை, உண்மையைச் சொல்லுகின்றேன்!![/size]

[size=4] நா ஒன்னும் மனசில வைக்கலீங்க ஃபிரெண்ட்ஸ்சா இருப்போம் ஓக்கேயா :D:icon_idea: [/size]

[size=5]நான் கருத்தெழுதிய அடுத்த நிமிடமே மறந்துவிடுவேன்[/size]!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தான் சொல்லுங்க அலை அக்கா இந்த இந்திய பொண்ணுங்களோட தமிழனா சுண்டல்க்கு ரொம்ப இஷ்டம் நல்லா cute அ இருக்கும் கேட்டுக்கொண்டை இருக்கலாம் இந்திய தமிழ் பொண்ணு ஒன்ன லவ் பண்ண தான் சுண்டல்க்கு விருப்பம் பட் அம்மா விடைலியை....

நீங்க என்ன தான் சொல்லுங்க அலை அக்கா இந்த இந்திய பொண்ணுங்களோட தமிழனா சுண்டல்க்கு ரொம்ப இஷ்டம் நல்லா cute அ இருக்கும் கேட்டுக்கொண்டை இருக்கலாம் இந்திய தமிழ் பொண்ணு ஒன்ன லவ் பண்ண தான் சுண்டல்க்கு விருப்பம் பட் அம்மா விடைலியை....

[size=6]சுண்டு[/size] :blink: :blink: :blink:

ரொட்டியும் கடலைக் கறியும் சாப்பிடவா சுண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் எத்தின நாளைக்கு தான் புட்டும் இடியப்பமும் சாபிடுறது ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.