Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)

Featured Replies

நோஸ்ராடாமஸ்....

1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது கச்சிதமாக நடந்தது.

நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாக பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.

நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களை குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம்.

(நோஸ்ராடாமஸ் மறுமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது.)

நோஸ்ராடாமஸ் ஆரூடங்களை கணிக்கும் போது, சாதாரண ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு [size=4]ophiuchus எனும் 13 இராசியையும் சேர்த்தே கணித்துள்ளார். அவரின் இக்கணிப்பிற்கு ஏதுவாக ஒரு பொறி இயந்திரத்தை கையாண்டுள்ளார். அதை பார்த்தவாறே தனது The centuries எனும் புகழ் பெற்ற ஆரூடத்தை எழுதினார். நோஸ்ராடாமஸ் தனது கையால் எழுதப்பட்ட உண்மையான புத்தகத்தில் படங்களையும் வரைந்திருந்தார். (வரைந்தமைக்கான குறிப்புக்கள் உள்ளன.) [/size]

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நோஸ்ராடாமஸின் புத்தகதில் வரையப்பட்டுள்ள படங்கள் இவர் நேரடியாக வரைந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்னோர் சாரார் அது அவரின் 2வது மணைவியின் மூலம் பிறந்த மகனை கொண்டு வரைந்தது என்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் படங்கள் சொல்லவருவது நோஸ்ராடாமஸின் ஆரூடங்களை தான்.

படங்கள் தரப்பட்டுள்ளன.

படங்கள் சொல்லவரும் விடையங்களையும் மேலும் பல தகவல்களையும் பார்க்கலாம்.

---------------------------------------------------------------------------------------------

1.jpg2.jpg3.jpg4.jpg

2)

ஓகே... ஒவ்வொரு படமாக ஆராய்வோம்....

-----------------------------------------------------------------------------------------

1st.jpg

இந்த படத்தில் ஒரு தேவதை போன்ற உருவமும்... அதனை ஒரு போர் வீரன் தாக்க முனைவது போன்றும் வரையப்பட்டுள்ளது.

இது குறிக்க வருவது "போப் ஜோன் 2" சுடப்பட்ட சம்பவத்தையாகும். (13/05/1981)

இப்படத்தில்...

தேவதை போன்று வரையப்பட்ட படமானது "ஜோன் போப் 2" பை குறிக்கின்றது. அதே வேளை சிப்பாய் உரு அளவில் தேவதையைகாட்டினும் சிறிதாக வரையப்பட்டதன் காரணம்... போப் இக்கு ஆபத்து வரும் ஆனால்... போப்பின் உயிரை பறிக்கும் அளவுக்கு பாரதூரமானதல்ல என்பதை குறிப்பதற்காகும்.

இப்படத்தின் பின் புலத்தில் ஒரு மிருகம் படுத்திருப்பது போன்றும்... ஒரு தலை காணப்படுவது போன்றும்... வரையப்பட்டிருப்பதன் காரணம் தெளிவு படுத்தப்பட வில்லை.

2nd.jpg

----------------------

சரி... இது நடந்து முடிந்தது. இதை பற்றி கதைத்து வியக்கலாமே தவிர ஒரு பலனுமில்லை. (படத்தை வைத்துக்கொண்டு விளக்கம் தேடியிருப்பார்கள் என கருதவும் சாத்தியமுண்டு.) அதனால்... இனி நடக்க இருக்கும் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

இந்த படத்தை பார்த்தீர்களானால்... ஒரு தேவதையை ஒரு வீரன் கழுத்தில் குத்துவது போன்று வரையப்பட்டுள்ளது. இங்கும் "போப்" ஏ தேவதையாக வரையப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த படத்தில் தேவதை உருவுக்கு நிகரான உயரத்தில் சிப்பாயினதும் உரு வரையப்பட்டிருப்பதானது போப்பின் அகால மரணத்தை குறிக்கிறது.

மேலும், சிப்பாயின் வாளை வானத்திலிரு ஒரு கரம் தடுப்பது(???) போன்று காட்டப்பட்டுள்ளது. அதனது அர்த்தமும் 3 நெருப்பு கம்பங்கள் எரிவதன் அர்த்தமும் தெளிவாக விளக்கப்படவில்லை.

இது 16 ம் பெனடிக் போப் (தற்போதைய போப்) பை குறிப்பதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், நோஸ்ராடாமஸின் குறிப்புக்களின் காலங்களை திட்ட வட்டமாக கணிப்பிட முடியாது என்பதால். நிச்சயமாக கூறமுடியவில்லை. (80% நம்புகிறார்கள், இது 16ம் பெனடிக் கைத்தான் குறிக்கிறது என.)

3rd.jpg

----------------------

அடுத்தும் இதே நிகழ்ச்சிகளுடன் சம்பந்தமான ஒரு படத்தை பார்ப்போம்... ( இந்த சம்பவங்களை ஒரேயடியாக பார்ப்பது இலகுவாக இருக்கும்.)

கோட்டை ஒன்று பத்தி எரிந்து கொண்டிருப்பது போன்றும், போர் வீரர்கள் சிலரை கொளை வெறியுடன் தாக்குது போன்றும் வரையப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பொருந்த தக்க தாக அவரின் நான்கு வரி குறிப்புகள் 3 உள்ளனவாம்.

இப் படமானது... வத்திக்கானின் வீழ்ச்சியையே குறிப்பதாக கருதப்படுகிறது.

படத்தில் அடி வாங்குபவர் கிறிஸ்தவருக்குரிய இயல்புடன் வரையப்பட்டுள்ளார், அதே வேளை போர் வீரர் குதிரையில் இருப்பதன் மூலம் அரேபிய இஸ்லாமியரால் ஏற்பட போகும் ஆபத்தை குறிப்பதாக கருதப்படுகிறது.

நோஸ்ராடாமஸின் குறிப்புகளின் படியும் வத்திக்கான் எரியும் எனவும்... கிறிஸ்தவர்கள் தமது மதம் மீதான பற்றை இழப்பார்கள் எனவும். வேற்று மதமொன்று தனது வீரியத்தை அதிகரித்து கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளாராம்

3)

1.jpg

இது தான் நோஸ்ராடாமஸ் ஆல் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்தின் வடிவமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தாலி லைப்ரரியில் தற்போது இருக்கிறதாம்.

--------------------------------------

5.jpg

இந்த படத்தை பாருங்கள்.

ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.

இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக... நோஸ்ராடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்... "ஒரு புதிய நகரத்தை... விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.." எனும் பொருள் பட எழுதியுள்ளாராம். அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது... விமானம். (நோஸ்ராடாமஸ் காலம் 1600)

ஆனால்... இன்னொரு குறிப்பில் "விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்..." அனும் பொருள் பட கூறியுள்ளார். அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது... 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.

--------------------------------------

4.jpg

இந்த படத்தை பாருங்கள்...

பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்... வரையப்பட்டுள்ளது.

இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என... ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முதல் துளி... ஜூலி கிறிஸ் (??? பேயர் நினைவில்லை... தெரிந்தவர்கள் கூறவும்...)

இரண்டாம் துளி... ஹிட்லர்.

மூன்றாம் துளியாக... பெரும்பாலும்... பில்லேடன் கருதப்படுகிறார். மேலும் சில தெரிவுகளும் இருக்கின்றன... கடாஃபி, முல்லா உமர் என்போரும் இதில் அடங்குகின்றனர்... கேனல் கடாஃபி தொடர்பான மேலும் பல குறிப்புகள் இருப்பதாக சந்தேகிக்க படுகிறது. ஆனால் உறுதியாக அவர்தான் என கூற முடியவில்லை.

( நோஸ்ராடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும்... லூஜி பாஸ்டர் (??? அ அல்லது டாவினா என நினைவில்லை) உடையது.)

இந்த படத்தில்... 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி... 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம். அதனால்... இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது. ( எனது கருத்தின் படி... முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்... யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்...

3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது... (இந்தியா,சீனா???!!!... வடகொரியா, தென் கொரியா...???!!!)

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை... 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது. ( 2016 ஆக இருக்குமோ???)

--------------------------------------

4)

3.jpg

இப்படம் 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையை குறிப்பது என கருதப்படுகிறது.

இப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது...

இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது.

இப்படத்தில்...

கீழ் புறத்தில்... ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே... கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது.

இப்படமானது... அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது.

மேலும்... சக்கரத்தின் மேலுள்ள கடிகாரம் ( முன்னைய காலங்களில் மணல் மூலம் நேரத்தை கணிக்க பயண்பட்ட கடிகாரம்) இது காலத்தால் ஏற்படப்போகும் மாற்றம் என்பதை குறிக்கிறது. அடுத்து... வாணில் இருந்து வரும் கையே இச் சக்கரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது எல்லாம் இறைவனின் செயல் என்பதை குறிப்பதாகும். ( நொஸ்ராடாமஸ் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. )

இப்படத்திலுள்ள ஏனைய உருக்களுக்கான விளக்கம் இன்னமும் தெளிவாக(??!!) விளக்கப்படவில்லை.

நொஸ்ராடாமஸின் நான்கு வரி குறிப்புக்கள் பலவற்றில் இந்த மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது...

பக்கத்து பக்கத்து நாடுகளினால் ஏற்படப்போகும்... 3 ம் உலக யுத்தத்தில்... பிரான்ஸ், இத்தாலி, பிறிட்டன் போன்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியை சந்திக்கும். மொத்த ஈரோப்பே கஷ்டங்களுக்கு உள்ளாகும். அதே வேளை இதை சாதகமாக பயண்படுத்தி ஏஸியா, அஃப்ரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த நாடுகள் முன்னேற்றமடையும்.இன்று எவ்வாறு ஈரோப் இருக்கிறதோ... அவ்வாறானதொரு நிலையை ஏஸியா அடையும். மக்களின் வாழ்க்கைதரம் முற்றாக மாறிவிடும். எனும் பொருள் பட கூறியுள்ளாராம்.

இனி வரப்போகும் இந்திய ஜெனரேஷன்... அவர்களின் பெற்றோர் நினைச்சு பார்க்காத அளவுக்கு நுட்பம் வாய்ந்தவர்களாக உருவாகுவார்கள்... எனவும் கூறப்பட்டுள்ளதாம்.

2027ம் ஆண்டில்... உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா, சீனா திகழும் என கூறப்பட்டுள்ளதாம்.

-----------------------------

------------------------------------------------------------------------------

5)

nostradamus1.jpg

நொஸ்ராடாமஸ்...

தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார். (அவருக்கு விசேடமாக உணர்ந்து கொள்ளும் தன்மையும் இருந்தது... )

வழமையாக வான சாஸ்திர நூல்களோ... வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக்கொண்டே கணித்தார்கள்.

ஆனால்; நொஸ்ராடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி (?) அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.

அந்த 13 வது ராசியிலிருக்கும் ஒரே ஒரு நட்சத்திரமான ஃபீக்கஸ் நட்சத்திரமே... இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது... முக்கியமாக 2012 இல் உலகம் அழியும் என்பதுடன் இதனை தொடர்பு படுத்தி பார்க்கிறார்கள். ஏனென்றால்.... அந்த ஃபீக்கஸ் நட்சத்திரம் இது வரை வானில் தோன்றியதில்லை.

2012ம் ஆண்டு 12ம் மாசம் 21ம் திகதியே அது வானில் முதல் முதலாக தோன்றப்போகிறது என நொஸ்ராடாமஸின் குறிப்புக்கள் கூறுகின்றனவாம். அது காட்சியளிக்கும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நிகழும் எனவும் அவர் தனது குறிப்புக்களில் கூறியிருக்கிறாராம். பஞ்சம், இயற்கை சீற்றம், யுத்தம் போன்ற அழிவுகளை அது ஏற்படுத்த இருக்கிறதாம்.

Coffin+of+Ophiuchus.jpg

இங்கு இன்னொரு விடையம்... கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கீறப்பட்டுள்ளதாம். ( உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.)

எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்... அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.

அது இருக்கட்டும்... நொஸ்ராடாமஸ் குறிப்பிடும் ஃபீக்கஸ் நட்சத்திரம் பற்றி விஞ்ஞனிகளின் கருத்தைப்பார்ப்போம்...

2012 ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காந்தப்புல பாதிப்பு எமது சூரிய குடும்பத்தை பாதிக்குமாம்.

இதனால் தான் பூமி தனது வட,தென் துருவங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

( இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, அதாவது... 72 வருடங்களுக்கு ஒரு முறை பூமி சற்று திருப்பமடைகிறது. அது 1 பாகையோ அல்லது 1 கலையோ என்பது எனக்கு நினைவில்லை.... .)

nostradamus2012dvd003.jpg

இதன் படி... அந்த நட்சத்திரத்தால் பாதிப்பு வருவது நிச்சயமென்றால்... உலகில் பாரிய அழிவுகள் வரும். ஆனால், ஒரேயடியாக அழிந்து போகாது.

அடுத்து... நொஸ்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.

ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது... இனி வரப்போவது 3 ஆவது... அது 2012 ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.

ஆனால், அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்று சொல்ல முடியாது.

அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப்பற்றியும் தெளிவாக கூறியிருக்கத்தேவை இல்லை.

3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத்தகுதியற்றதாகிவிடும் என குறிப்பிட்டுள்ளாராம்.

------------------------------------------------------------------------------

ஓ.கே.... மொத்தத்தில் உலக அழிவு பற்றி நொஸ்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்...

40 வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது... பனிப்பொழிவு நின்றுவிடும்... உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்... அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்துபோகும்... மனித இனமும் இக்காலப்பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.

அதற்குப்பிறகு...

40 வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது...

40 வருட கால மழையைத்தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவ்ரங்கள் உருவாகி... உயிரினம் தோன்றும்...

உலகம் புதுப்பிக்கப்படும்...

இந்தக்கூற்று கிறிஸ்தவ மததிலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது...

நொஸ்ராடாமஸ் பற்றி எழுதுவதற்கு அதிகம் இருக்கிறது... ஆனால்; நொஸ்ராடாமஸ் என்பதே பொய்... சூழ்ச்சி என சில கருத்துக்கள் இருக்கின்றன...

அதாவது... இந்த நொஸ்ராடாமஸ் எனும் நபர்... கிறிஸ்தவர்களாலும் அமெரிக்க வல்லரசு நாடுகளாளும் முஸ்லீம் மதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுப்பத்ற்காக உருவாக்கப்பட்டது. ( இங்கு 3ம் உலக யுத்தம் பற்றி கூறும் போது... முஸ்லீம் படைகள் உலகை அடக்க முனையும் என அடிக்கடி கூறப்ப்ட்டுள்ளது... இது முஸ்ஸீம்களுக்கு எதிரானதாக கருதப்படுகிறது...)

http://valaakam.blogspot.com

*******************************முற்றும்*********************************************************

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.