Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலஅபகரிப்பு ஆவணங்கள் யேர்மனியில் ஐ.நா.உதவிஅமைப்பிடம் சமர்ப்பிப்பு!

Featured Replies

சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக யேர்மனியில் நடைபெறும் அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்களுக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி யேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது .

நேற்று 25 .06 .2012 தினத்தில் Bonn நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகளும் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக மத்திய மாநில பேச்சாளர் செல்வன் கோகுலன் அவர்களும் கலந்துகொண்டார் .

நடைபெற்ற நிகழ்வை டீழnn நகர மேயர் Angelica Maria Kappel அவர்கள் சிறப்பு வாழ்த்துரையோடு ஆரம்பித்துவைத்தார் .அதை தொடர்ந்து பேராசிரியர் Christian Tams, LL.M. (University of Glasgow) சர்வதேச சமூகமும் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளின் கோட்பாட்டை பற்றி விளக்கமளித்தார் .மனிதவுரிமை மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பை சார்ந்த திரு Schütte அவர்கள் சர்வதேச சமூகம் மனித உரிமைகளை காக்க வேண்டிய அதன் கடமைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படும் சிரமங்களும் அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்படும் தடைகளை பற்றியும் எடுத்துரைத்தார் .

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப்படுகொலை பற்றி கலந்துரையாடப்பட்டது . சிறப்பாக 2006 – 2009 காலப்பகுதியில் ஒண்டரை லட்ச்சத்துக்கும் மேலான மக்கள் படுகொலை செய்யபட்டார்கள் என்றும் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது இனவழிப்பு சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு நடந்துகொண்டிருக்கிறது எனவும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் மன்னார் ஆயர் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருகின்றது என இவ் நிகழ்வில் செல்வன் கோகுலன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்து

லிபியா மற்றும் சிரியா போர்குற்றவாளிகளின் மீது அழுத்தம் கொடுத்து மற்றும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேச சமூகம் தமிழின படுகொலைவாதி ராஜபக்சாவை விருந்தினராக அழைப்பது ஏன் என்ற கேள்வியும் சபையில் எழுப்பபட்டது .

இதற்கு பதிலளித்த பேராசிரியர் Tams மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பை சார்ந்த திரு Schütte தமிழ் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இனவழிப்பு என்பது இனப்படுகொலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் தவறியதற்கான மிக சிறந்த உதாரணம் என்றும் மிக விரைவில் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் .

இவ் நிகழ்வை ஒழுங்குசெய்த ஐநாவின் உபமைப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு பொறுப்பாளர்களிடம் தமிழர்களின் நிலஅபகரிப்பு விடையமாக ஆவணங்களும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது .

bonn2.jpgbonn3.jpg

யேர்மன் தமிழர் மக்கள் அவை

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.