Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகள் சிறப்பு முகாம். அரசின் சதித்திட்டம் பின்னணி – அவிழ்க்கப்படும் முடிச்சுகள்.

Featured Replies

பல்வேறு காலகட்டங்களில் உயிர் பிழைக்க அகதிகளாக ஈழத்திலிருந்து தாய் தமிழகத்திற்கு நம் சொந்தங்கள் வந்ததை நாம் அறிவோம் அப்படி வருபவர்கள் ராமேஸ்வரத்தில் பதிவு செய்த பின்னரே தமிழகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டுமென்ற நிலைஉள்ளது இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தும் கியு பிரிவு காவல் துறையினர் ஆண்களிடம் உடைகளை அவிழ்த்து ஆய்வு செய்கின்றனர் ஆய்வின் பொழுதே உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளை ஆதாரமாக வைத்து இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என முடிவுக்கு வருகிறனர் பின் அவர்களுக்கு பதிவு கொடுத்து எதாவது முகாமிற்கு அனுப்பி விடுகின்றனர் நம் சொந்தங்களும் குழந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுடன் உயிர் பிழைத்து மறு வாழ்வு வாழ போவதாக நிம்மதி பெற்று தங்கள் குடும்பத்தாருடன் காலத்தை கடத்துகின்றனர். நாட்கள் செல்கிறது புலிகள் என் கருதப்படுபவர்கள் கியு பிரிவுகாரர்களால் அழைக்கப்பட்டு நீ ஆயுதம் கடத்தினாய், மண்ணெண்ணை ,ரத்த பொட்டலம் கடத்தினாய் ,கடத்தலுக்கு உதவி செய்தாய் என பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கின்ற்னர் இவர்கள் மீது போடப்படுவது பொய் வழக்குதான் என அறிந்து கோபப்பட்டு எத்தனையோ முறை கியு பிரிவு காரர்களின் வழக்கு கட்டை நீதிபதி எடுக்க மறுத்த நிகழ்வுகளும் உண்டு .

ஒருமுறை இனி இதுபோன்ற பொய் வழக்கை எடுத்து வராதே என கியு பிரிவிகாரரை பார்த்து நீதிபதியே வழக்கு கட்டை தூக்கி எறிந்த நிகழ்வும் ராமேஸ்வர நீதிமன்றத்தில் நடந்துள்ளது.

ஓராண்டு ,ஈராண்டு ,சிறை தண்டனைக்கு பிறகு ,அல்லது வழக்கு பொய் என நீதிமன்றத்தாலேயே வெளியில் வந்தாலும் இவர்களை மட்டும் விடுதலை அடைந்ததாக கருத முடியாது . தங்குவதற்கு முகாமிற்குத்தான் செல்ல வேண்டும் அல்லது வெளியில் தங்க வேண்டுமானாலும் இவர்களின் அனுமதி இல்லாது தங்க இயலாது .

எதோ ஒரு வகையில் தமிழகத்தை நம்பி வந்த ஏதிலிகளை தங்களின் அடிமையாக இருக்க வைக்கின்றனர் கியு பிரிவினரும் அவர்களூக்கு ஊதியம் தரும் தமிழக அரசும் கொடுமையிலும் கொடுமையாக எந்தவித காரணமுமின்றி இவர்களிலிருந்து ஒரு சிலரை அவ்வப்போது குறிப்பாக புலிகள் என கருதப்படுவர்களை எந்தவித வழக்குகள் இல்லாவிட்டாலும் அல்லது வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியில் வந்தவர்களை செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு அனுப்புகின்றனர்.

அந்த முகாமில் இந்த சட்டபிரிவின் கீழ் இவர் இவர் குற்றம் செய்த்தாக அடைத்து வைத்துள்ளோம் என் கியு பிரிவினரால் பதில் சொல்ல முடியாது நம் சொந்தங்களை அடைத்து வைக்க அவர்கள் பயன்படுத்தும் ஆணை தமிழ் நாட்டிற்கு இலங்கையிலிருந்து வரும் அகதிகள் நடமாட்டத்தை முறைப்படுத்தலுக்காண ஆணைகள் 4/3/56(1) அயல் நாட்டார் சட்டம் 3(2) மத்திய அரசால் 31/1946 இன் படி வழங்கப்பட்டு 1958 ஏப்ரல் திங்கள் இந்திய அரசின் உள்த்துறை 4/3/56(1)இன் படி வெழியிடப்பட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது அயல் நாட்டார் வசிப்பதை முறைப்படுத்தும் பொருட்டு இலங்கை நாட்டை சேர்ந்த ——————- த/பெ ——————– இவர் காஞ்சிபுரம் ஆட்சி தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு செங்கல்பட்டில் அமை ந்துள்ள் குடி புகுந்தவர்கள் மற்றும் அகதிகள் முகாமில் வசித்துவர தமிழ் நாடு ஆளுநர் அதிகாரமளிக்கிறார்.

மேற் சொன்ன ———————-த/பெ —————– இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதியின்றி மேற்சொன்ன சிறப்பு முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கபடமாட்டார் சட்டப்படி முறைப்படுத்துதல் என்ற போர்வையில் இந்த முகாமில் வெளி நாட்டிலிருந்து இந்தியாவிர்க்கு வந்து கடவு சீட்டின் படி விசாவில் அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் சட்டத்திர்க்கு புறம்பாக தங்குவதாக கைது செய்துள்ளோரை அடைத்து வைத்துள்ளனர்.

அதில் நைஜீரியர்கள் இருவர் ,சில நேரங்களில் பிற வெளிநாட்டினர் இருந்ததுண்டு அவர்களை அந்த நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தலையிட்டு விடூவித்து சென்றதுண்டு.

எங்களூக்கும் நாடு இருந்தால் யாராவது வந்து மீட்பார்கள் என்ன் செய்ய நாங்கள் ஆதரவற்ற் அனாதைகள் யார் மீட்பார்கள் என் நம்மிடமே அவர்கள் சொல்லி அதை கேட்பது நமக்கு மிகுந்த அவமானமாகும்.

இப்போது நம் சொந்தங்களின் நிலை எப்படிப்பட்டது இந்த முகாமில் அடைக்கப்பட்டு இருந்தவர்களில் பலர் தொடர் ந்து 13 நாளாக உண்ணா விரதமிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல் பட்டு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ள்னர். அங்கு ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் ஈழத்தாய் என்று சொல்லப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனை.

அண்ணா நாங்கள் பல முறை இந்த அரசை நம்பி ஏமாந்து விட்டோம். எங்களில் ஒருவராது சாகாது இந்த அரசு இதை கண்டு கொள்ளாது நான் இறந்து விட்டால் ஒன்றே ஒன்று செய்வீர்களா .தம்பி அப்படி ஆக விடமாட்டோம் தம்பி என்றேன் அண்ணா என் உடலை என் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்ற்தும் இதை கூட கூடி போராடி உயிரை காப்பாற்ற முடியாதா என என்னுள் எண்ணினேன். இவர்களின் மீதான வழக்கு என்ன ?

இப்போது மருத்துவமனையில் இருப்பவர்களான ஜெயதாசன், செந்தூரன் சதிசுகுமார் ,செல்வராஜ்,பராபரன், நர்மதன் ,சிவக்குமார் , செல்வம் ,சேகர் என 9 பேர் உள்ளனர்

1. சதீசுகுமார் மண்டபம் முகாமில் பதிவு வழக்கு பதிவு 420 பிரிவில் சிறை பின் குற்றம் செய்யவில்லை என விடுதலை ஆனாலும் சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

2. செல்வராஜ் மண்டபம் முகாமில் பதிவு –ஈரோடு முகாமில் குடும்பத்தினருடன் இருந்தவர் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருந்தார் வழக்கு பதிவு வெடிமருந்து வைத்திருந்ததாக சொந்த பிணையில் வெளிவந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

3. பராபரன் கடவு சீட்டோடு விமானத்தில் சென்னைக்கு வந்து ஏனைய அகதிகளை போல காவல் நிலைய வெளிபதிவில் வாழ்ந்து வந்தவர் சென்னையில் இருப்பவரை சுதா என்ற பெயரில் உள்ளவர் இவர் என கருதி குற்ற வழக்கு 420 இல் கேரள காவல் துறையால் சிறையில் அடைக்கப்பட்டவர் வெளிவந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

4. நர்மதன் அகதியாக ஈழத்திலிருந்து வந்து இறங்கி பதிவு செய்த உடனே ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைப்பு பிணையில் வெளி வந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

5.செந்தூரன் மண்டபம் முகாமில் பதிவு 420 குற்ற வழக்கில் கேரள காவல் துறையால் சிறையில் அடைக்கப்பட்டவர் பிணையில் வெளி வந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

6.சிவக்குமார் பல ஆண்டுகளாக பதிவுடன் பாண்டிச்சேரி அகதி முகாமில் இருந்தவர் ஈழத்திர்க்கே சென்று விட படகில் போனவரை கைது செய்து கடவு சீட்டு இல்லாது சுற்றி திரிந்தார் என வழக்கு பதிவு (இந்த நாடு வேண்டாம் என தப்பி செல்பவர்கள் மீது என்ன பிரிவில் வழக்கு போட என இனிதான் சட்டம் இயற்ற வேண்டும்) அது இல்லாததால் இச்சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைப்பு பின் பிணையில் வெளி வந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு வாய்தாவிர்க்கு சென்று வந்து வழக்கே பொய் என விடுதலை ஆன பிறகும் இந்த முகாமில் ஒன்பது மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளார்

7.சேகர் மண்டபம் முகாமில் பதிவு பின் -வாழவந்தான் கோட்டை அகதிமுகாமில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார் அவரை விசாரிக்க ராமேஸ்வரம் அழைத்து சென்று அடி அடி என அடித்து உதைத்து கடவு சீட்டு இல்லாது சுற்றி திரிந்தார் என வழக்கு பதிவு செய்து மதுரை சிறையில் அடைத்தனர் விடுதலை ஆகி வெளி வந்தவரை சிறை வாசலில் காத்திருந்து அழைத்து வந்துசெங்கல்பட்டு முகாமில் அடைப்பு

8. செல்வம் 9 .ஜெயதாசன்.

இவர்களை போன்று முகாமில் உள்ள மீதமுள்ள் 21 பேர் மீதும் பொய்யாக புனையப்பட்ட வழக்குகள் இப்படி பொய் வழக்கில் இவர்களை உள்ளே வைத்திருக்கும் தமிழக அரசை பார்த்து நாம் எழுப்பும் கேள்விகள்

*13 நாள் கட ந்து உயிர் போகும் தருவாயிலும் இதுவரை ஒரு பேச்சு வார்த்தைக்கு கூட அரசு தரப்பிலிருந்து வராதது ஏன்? யாரவது ஒருவர் சாகட்டும் என வேடிக்கை பார்க்குமளவுக்கு தமிழர் உயிரை கேவலமாக எண்ணுகிறீர்களா?

* பொய் வழக்கில் தொடர்ந்து அடைக்கப்பட்டு அதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் பல் வேறு கட்ட போராட்டங்கள் அமதியான வழியில் நடத்தியதை இந்த விரும்பவில்லையா? அப்படியானால் வன்முறையை போராடுபவர்களிடம் அரசே திணிக்க முயர்சிக்கிறதா?

* மீனவர் பிரச்சனைக்கு கடந்த அரசை போல ஒன்றும் உருப்படியாக செய்ய முடியாது தவித்து ,மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வரும் உங்களூக்கு, உங்களின் அதிகாரத்திர்க்கு உட்பட்டு இருக்கும் செங்கல் பட்டு முகாம் பிரச்சனைக்கு உங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்படி நடக்க என்ன சிக்கல் உள்ளது?

*ஆஸ்திரேலியாவிர்க்கு தப்பி சென்ற் தமிழர்கள் 90 பேர் மரணம் ,இலங்கையில் இன்னும் எம் தமிழ் உற்வுகள் தினமும் நூற்றுக்கண்க்கில் சிங்கள் படையால் பாலியல் வல்லூருக்கு ஆளாகிறார்கள் ,மீனவர் மீது தாக்குதல் ,அணைகட்டி இடையூறு செய்யும் கேரளா அரசை வழிக்கு கொண்டுவர வழிகள் இருந்தும் கடுமையாக நடக்காதிருப்பது தேவையற்ற கூடங்குள்ம் அணு உலை இவ்வாறு தமிழினத்திர்க்கு எதிராக நடக்கும் செயல்களை தமிழகத்தை தலைமையேற்று ஆழும் அரசு, அதன் மக்களை காக்க கடமையுள்ள அரசு எங்கும் தமிழர்கள் பாதிக்கபடுவதை எவ்வள்வு நாள் வேடிக்கை பார்க்க போகிறது?

விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டிக்க இந்த முகாம் தொடர வேண்டும் என்ற கூற்றுக்கு அரசின் பதில் என்ன்? எம் தமிழ் சொந்தங்களே அங்கு எப்போதும் 50 பேராவது இருந்தே ஆக வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வந்துள்ளனர் சிறப்பு முகாமில் உள்ளவர்கள். பிரச்சனை செய்து பலவித போராட்டங்களை முன்னெடுத்து, கியூ பிரிவினருக்கு ஏன் அரசுக்கு கொஞ்சம் தலைவலி ஆகும்போது அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தி சிலரை விடுவித்து திறந்தவெளி முகாமிற்கு அனுப்புவர்.

ஆயினும் 2009 க்கு பிறகு ஏன் இந்த கியு பிரிவு காவல்துறையினர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என நமக்கு எண்ண தோன்றும் அதற்கான ஆதாரபூர்வமான பதில் இது ஒன்றை தவிர வேறு இல்லை ஆம் விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டிக்க .. அதாவது புலிகளின் செயல் பாடுகள் இன்னும் தமிழகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது இங்கே பாருங்கள் இவர்க்ள் அனைவரும் புலிகள் ……ஆகையால் தடையை ரத்து செய்வது இந்தியத்திற்கு ஆபத்து என ஓலமிட்டு தொடர்ந்து பொய் காரணத்தை கூறி தடையை நீட்டிக்கலாம்.

அன்புமிக்க தோழர்க்ளுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமையை பார்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு நம் சொந்தங்கள் அநீதியாக அடைக்கப்ப்ட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நம்மால் முடியும் அதுவும் முடியவில்லையென்றால் அவர்களின் சாவிற்கு காரண்மாக போகும் பாவிகள் நாமே.

இதை இன்றே எல்லோரிடமும் பரப்பி சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து திறந்தவெளி முகாமிற்கு மாற்று என் கோரி நடக்கும் முற்றுகை. 30.6.12 காலை 9.30 மணிக்கு செங்கல்பட்டில் நடக்க இருக்கிற்து அனைத்து கட்சிகளூம் தமிழ் அமைப்புகளூம் பங்கு கொள்கிற்து. நம் இனத்து அடையாளங்களின் உயிர் காப்போம் வாரீர் வாழவைக்க வாரீர்!

அதியமான்

பொது செயலாளர்

தமிழர் முன்னேற்ற கழகம்!

http://thaaitamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.