Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீது இந்தியா அதிருப்தி – மகிந்தவிடம் வெளியிட்டார் சிவ்சங்கர் மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SS.Menon-colombo.jpg

[size=4]தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கில் காணி விவகாரங்கள் மற்றும் வடக்கில் படைகளைக் குறைப்பது போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று கொழும்பில் நடத்திய சந்திப்புகளின் போதே இந்தியாவின் அதிருப்தியை சிறிலங்காவிடம் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் சிவ்சங்கர் மேனன் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்புகளின் போது அரசியல்தீர்வு குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இக்கடான நிலை- இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான உள்நாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக்குழு, சிறிலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச, தனது பங்கிற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தவறியது குறித்து இந்தியாவின் கவலையை மேனன் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நேற்றைய சந்திப்புகளின் பின்னர், இந்திய ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்த சிவ்சங்கர் மேனன் -

“ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அனைத்து மக்களும் சமஉரிமை, சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய பணிகளை மேற்கொள்வது தொடர்பாக சிறிலங்காவுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது.

இது தொடர்பாக ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள், இருதரப்பு உறவுகள், இருதரப்புக்கும் இடையேயான பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபருடன் விவாதித்தேன்.

அரசியல் நல்லிணக்கம், புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பாக சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் என்னிடம் விளக்கினார்.

இது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம், எனினும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக 2008ம் ஆண்டு ஒக்டோபரில் இருதரப்பும் ஒப்புக்கொண்ட உடன்பாட்டை தற்காலிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரைவில் நிரந்தரத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.

இருநாடுகளைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் நடத்திய பேச்சுக்களில்சில உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரின் எண்ணிக்கையைக் குறைத்தல், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம், வடக்கு,கிழக்குப் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் தொடருந்து பாதை அமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120630106497[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக 2008ம் ஆண்டு ஒக்டோபரில் இருதரப்பும் ஒப்புக்கொண்ட உடன்பாட்டை தற்காலிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரைவில் நிரந்தரத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.

இருநாடுகளைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் நடத்திய பேச்சுக்களில்சில உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.[/size]

இந்திய மீனவர்கள் எமது உறவுகளே, எனினும் இலங்கைத் தீவின் தமிழர்தாயகப் பகுதிக்குட்பட்ட கடற்பிரதேசங்களில் எமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும்வண்ணம் கடல்வளங்களைச் சூறையாடுவதை எம்மால் அனுமதிக்கமுடியாது. முதலில் இந்திய அரசு செய்யவேண்டியவேலை சந்திரனுக்கு ராக்கட் அனுப்புவதோ அன்றேல்கணட்ம்விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணைகளைத் தயாரிப்பதோ அல்ல. இவை அனைத்தும் ஏனைய கணைகள்போல் துருப்பிடிக்கவேபோகின்றது. முதலில் தமிழக மீனவர்கட்கு சுற்றுச்சூழலைப்பற்றிய விழிப்புணர்வையும் அதைப்பாதுகாக்கும் வண்ணம் பாவிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் முறைமையையும் பழக்கப்படுஹ்த்ல்வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.