Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் புகைப்படக்கருவி மூலம் சிறந்த படங்கள் எடுப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரை உங்கள் அனுபவங்களில் கண்டிருப்பீர்கள் ஓரளவு அல்லது மிகச்சிறந்த முறையில் படமெடுப்பவர்களின் படங்களைப் பார்த்துவிட்டு அட...படங்கள் சூப்பராய் இருக்கு என்ன கமராவில் எடுத்தனி என்று கேட்பார்கள் இவரும் நான் இந்தக் கமராவில் தான் எடுத்தனான் என்று சொல்ல...சரி பாப்பம் இப்படி ஒன்று வாங்கத்தான் வேணும் என்று சொல்லி அடிச்சுப்பிடிச்சு ஒரு கமராவை வாங்கி அதில் படங்களை எடுத்தால் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் தான் வருவதுண்டு.... அட நல்லகாலம் முக்கியமான படங்களில் சிலதென்றாலும் வந்துட்டுதே என்று ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் ஏன் மற்றப் படங்கள் பிழைத்தது என்று தெரியாமலே மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளுவார்கள்.

நல்லாய் படம் எடுப்பவர்களும் விசயங்களை சரியாய் சொல்லாமல் அப்படியிருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று மழுப்பி பதில் சொல்வார்கள்...

எனவே நல்ல கமரா இருந்தும் தாங்கள் எடுக்கும் படங்களில் நல்ல எல்லாம் நல்ல படங்கள் வராமல் குருடன் பொண்டாட்டிக்கு அடிச்சது போல அங்கை ஒண்டு இங்கை ஒண்டு எனறுதான் வருகுது என்று வருத்தப் படுபவர்களும் உண்டு..

எடுக்கும் படங்களை உடனே பார்க்கும் வசதியிருக்கும் இந்த டிஜிற்றல் உலகத்திலே இருந்தும் இப்படி சிக்கல்களுடன் இருப்பவர்களுக்கு மத்தியில், டிஜிற்றல் கமரா வர முதல் பிலிம் கமராவில் படம் எடுத்தவரின் பாடு எப்படி இருந்திருக்கும் நீங்களே யோசியுங்கள். எதோ படமெடுக்கும் ஆசையில் கமராவை ஆசைப்பட்டு வாங்கி, காசு உழைக்கும் ஆசையில் முக்கியமான புரோக்கிராமுகளை எடுத்துவிட்டு, அந்தப் பிலிமைக் கழுவி படங்கள் கையில் வரும் மட்டும் அரைவாசி உயிரே போய்விடும் காரணம், படமெடுத்துக் கொடுக்க அட்வான்ஸ் வாங்கியாச்சுஆனால் படம் வராமல் படமெடுத்துப் போட்டு ஒழிச்சுத்திரிஞ்ச்ச ஆட்களும் உண்டு, அடிவாங்கிய ஆட்களும் உண்டு இப்படிப் பலபேர்.

சரி பழைய கதைகள் விட்டுட்டு விசயத்துக்கு வருவோம், காசுக்கு படமெடுக்கிற ஆட்களுக்கு இல்லாவிட்டாலும் தங்கடை பிள்ளைகளில் படங்களையோ தனது குடும்பப் படங்களையோ எடுக்கவேணுமென்று சிந்திப்பவர்களுக்காகவாவது இந்தத் திரி உதவட்டுமே...

இந்தத் திரியில் பெரிசாக ரெக்னிக்கலாக நானொன்றும் சொல்லப்போவதில்லை ஆனாலும் நல்ல படங்கள் எடுக்க தெரியவேண்டிய அடிப்படை விசயங்களை எவ்வளவு இலகுவாகப் புரியவைக்க முடியுமோ அவ்வளவு இலகுவாக நான் எனது பாணியில் புரியவைக்க முயற்சிக்கிறேன். தயவு செய்து முறையாக புகைப்படக்கலையை கற்றவர்கள் சண்டைக்கு வரவேண்டாம், இது உங்களுக்காக அல்ல,

பலர் டிஜிற்றல் கமரா வைத்திருந்தாலும் நான் பிலிம் கமரா எப்படி வேலை செய்தது எனும் முறையுடன் தான் ஆரம்பிக்கவேண்டிய தேவையுள்ளது. எனவே ஒவ்வொரு பகுதியையும் தொடர்ச்சியாக தவறவிடாமல் படியுங்கள், நான் எப்போது உங்களை னான் சொன்னமுறையில் படங்கள் எடுக்கச்சொல்கிறேனோ அப்படி எடுத்து வரும் உங்கள் படங்களை இணைத்து உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள், நிச்யமாக னல்ல படங்கள் உங்கள் கமராவிலிருந்து வர ஆரம்பிக்கும்...

விரைவில் பகுதி ஒன்றுடன் வருகிறேன்... காத்திருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் உங்களை அன்புடன் இத்திரியின்மூலம் வரவேற்கிறேன். நிறைய விடையங்களை அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறோம்.

தொடருங்கள் இளங்கவி. வாசிக்க ஆவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Elugnajiru, கறுப்பி, தப்பிலி எனது பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்காகவும் மற்றும் ஏனையோருக்காகவும் எனது பதிவின் முதல் பகுதியை ஆரம்பிக்கிறேன்.. எல்லோருக்கும் புரியக்கூடிய முறையில் சொல்ல உத்தேசித்திருப்பதால் ரெக்னிக்கலாக இல்லாமல் மிகவும் எளிதானதாகவே எனது பதிவுகள் அமையும் என முற்கூட்டியே தெரிவிக்கிறேன்

பதிவு - 1

1) எனது கண்ணையும் கமராவையும் ஒப்பிட்டு எனது பதிவைத் தொடங்குகிறேன். முழு இருட்டில் நம்மால் பார்க்க முடியுமா. எம்மைச்சுற்றி ஆயிரம் பொருட்கள் இருந்தாலும் எதையுமே பார்க்கமுடியாத இருட்டு என்றால் நம்மால் எதையுமே பார்க்கமுடியாது. ஆனால் எம் அருகில் ஒரு மெழுகுதிரியோ அல்லது ஏதாவது வெளிச்சம் வந்தவுடன் நாம்மால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறதல்லவா? எப்படி, என்ன மற்றம் எமக்கு பார்க்க உதவியது என்று யோசித்தால் ஒன்று புரியும் அதுதான் ஒளி( Light), ஆம் ஒளிதான் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதாவது மெழுகு திரியிலோ அல்லது பில்பிலோ இருந்து வரும் ஒளி பொருட்களில் பட்டு தெறித்து நம் கண்ணை அடைவதால் நம்மால் அந்தப் பொருட்களைக் கானமுடிகிறது..

2) முழு இருட்டில் மெழுகுதிரி வெளிச்சத்தில் எமக்கு தேவையான ஏதோ ஒன்றைத்தேட எமது கண்ணை அகல விரித்து தேடிக்கொண்டிருப்போம், ஆனால் அதே அறையில் திடீரென 200 வாற்ஸ் பல்ப் ஒன்று திடீரென எரிந்துவிட்டால் எனது கண் திடீரென கூசி சுருங்கிக்கொள்ளும், வெளிச்சம் இல்லாத நேரம் கண்கள் அகல விரிந்தும் வெளிச்சம் கூடிய நேரம் கண்கள் சுருங்கியும் எமக்கு பார்க்க உதவுகிறது, அதாவது எமது கண்களிலுள்ள பகுதியொன்று எனது கண்ணுக்குள் செல்லும் ஒளியை நிலமைகளுக்கு ஏற்றால் போல கட்டுப்படுத்தி எனக்கு சரியாக பொருட்களைப் பார்க்க உதவுகிறது. கமராவிலும் இதே போன்று ஒரு பகுதி, அதை Aperture என்று கூறப்படுகிறது.

3) இருளான பகுதியில் மிக மிக ஒளி குறைந்த ஓர் இடத்தில் உள்ள பொருளை எனது கண் பார்த்து அடையாளம் காண கண்டுகொள்ள எமது கண் சில வினாடிகளாவது அந்தப் பொருளைப் பார்க்க வேண்டியிருக்கும், ஆனால் உச்சத்திலிருக்கும் சூரியனை ஒருதடவையாவது பார்க்கவேண்டுமென்று விரும்பினால் கண்ணை நன்றாக மூடிவைத்துக்கொண்டு சூரியன் திசை நோக்கி தலையை வைத்துக்கொண்டு டக்கென்று கண்ணைத் துறந்து மூடிவிடுவோம், சில வினாடிகள் கண்ணை திறந்திருந்தால் கூட கண் குருடாகிடுடும். அதாவது நிலமைகளுக்கு ஏற்ப கண்ணுக்குள் ஒளி செல்லும் நேரத்தை கண் இமைகள் தமது திறந்து மூடும் வேகத்தால் கட்டுப்படுத்துகின்றன. இதே பொன்று ஓர் அமைப்பு கமராவில் உள்ளது அது தான் Shutter Speed.

4) பொருட்களில் தெறித்து வரும் ஒளிக்கற்றைகளை கண்கள் அகல விரிந்தோ அல்லது கொஞ்சம் மட்டும் திறந்தோ செல்லவிடும் அளவு, அந்த ஒளிக்கற்றைகளை செல்லவுடும் நேரம் என்பதற்கு ஏற்ப எமது விழித்திரையில் மாற்றம் ஏற்பட்டு எம்மால் அந்தப் பொருளை பார்க்க முடிகிறது. எனது விழித்திரையை பழைய கமராவில் Film க்கு ஒப்பிட்டுக் கொள்ள்லாம்.

ஆனாலும் Film ன் ஒளியை உணரும் தன்மையின் வேகத்தைப் பொறுத்து நாங்கள் கமராவால் எடுக்கும் பொருளின் விம்பம் அங்கே பதிய எடுக்க எடுக்கும் நேரம் மாறுபடும். அதாவது அதிக உணரும் தன்மையுள்ள Film க்கு பொருளின் விம்பம் பதிய அதிக ஒளி தேவைப்படாது, மாறாக மற்றதற்கு அதிக ஒளி தேவைப்படும். இதை கமராவில் ISO setting என்று கூறலாம்.

தொடரும்....

மிக எளிதாக எல்லோரும் விளங்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள் இளங்கவி .

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும், புகைப்படக் கலையில் நல்ல ஆர்வமுண்டு!

தங்கள் பதிவை, மிக ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன்!

தொடருங்கள், இளங்கவி!

பின் வருவது போன்ற, படங்கள் எடுப்பதில், ஆர்வம் அதிகம்!

article-2071439-0F18B01C00000578-321_470x549.jpg

இந்த திரியில் புகைப்பட கலையை மட்டுமல்ல கண்ணை பற்றியும் ஒளியியலை பற்றியும் சேர்த்து படிக்கலாம் போலிருக்கு. :D

நன்றாக இருக்கிறது. தொடருங்கள். :)

எனக்கும் ஆர்வம் உண்டு. விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]தப்பிலி, புங்கையூரன், துளசி ukkarikalan அனைவருக்கும் நன்றி...

பகுதி - 3

நாங்கள் பார்க்கும் விம்பத்தை கமராவில் உள்ள பிலிமில் சரியாகப் பதிவதற்கு தேவையான விடயங்களை பகுதி - 2 இல் பார்த்திருந்தோம். அவையாவன

1) ஒளி - Light

2) ஒளி செல்லும் அளவை கட்டுப்படுத்தும் துவாரம் - Aperture

3) ஒளி செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு - Shutter Speed

4) பிலிமின் ஒளியை உணரும் தன்மை - film's ISO

இனி வரப்போகும் பகுதிகளில் ஒர் படம் கமராவில் பதிவதற்கான இந்த நாலு முக்கிய காரணிகளையும் அதன் ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்தி அழைப்போம், ஒளி (Light), Aperture ( ஒளி செல்லும் துவாரத்தில் அளவு), Shutter Speed ( ஒளியை அனுமதிக்கும் கதவு திறந்து மூடும் வேகம்), Film ISO ( பிலிமின் ஒளியை உணரும் வேகம்/ தன்மை).

சரி இனி விசயத்துக்கு வருவோம். கமராவில் புகைப்படம் எடுக்கும் போது என்ன மாற்றம் ஏற்படுகிறது. ஒரு உருவத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை வில்லையினூடாக கடந்து ஒளிசெல்லும் துவாரத்தினூடாக சென்று, ஒளியை அனுமதிக்கும் கதவையும் கடந்து இறுதியாக பிலிமை அதாவது புகைப் படச்சுறுளை அடைகிறது. ஒளிக்கற்றைகள் பிலிமை அடைந்ததும் பிலிமில் ஒர் இரசாயன மாற்றம் ஏற்பட்டு விம்பத்தின் உருவம் பிலிமில் பதிகிறது. உருவத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை எப்படி பிலிமை அடைகிறது என்பதை கீழ்வரும் படம் விளக்கும். ஆனால் அப்பெச்சர் அமைப்பும் சட்டர் அமைப்பும் காட்டப்படவில்லை. லென்சுக்குப் பின்னால் அப்பெச்சர் அமைப்பும் பிலிமுக்கு முன்னால் சட்டர் அமைப்பும் வளமையாக அமைக்கப்படுவது உண்டு.

cameradiagram.jpg

அப்பெச்சரை இலக்கம் கொண்டே அளக்கப்படுகிறது, நீங்கள் கமராவில் f 2.8, f 5.6, f 8.0, f 11, f 16 போன்ற இலக்கங்களை உங்களது கொம்பக்ற் கமராவையோ அல்லது எஸ் எல் ஆர் கமராக்களையோ பயன்படுத்திப் படமெடுக்கும் போது ஸ்கிறீன் டிஸ்பிளேயில் அவதானித்திருப்பீர்கள், அப்படி அதனை அவதானிக்காவிட்டிருந்தாலும் இனியாவது அவதானியுங்கள். முக்கியமாக நீங்கள் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய விசயம் என்னவென்றால் சிறிய இலக்கம் பெரிய ஒளி செல்லவிடும் துவாரம் என்றும் பெரிய இலக்கம் சிறிய ஒளி செல்லவிடும் துவாரம் என்பதுமாகும்.

ஒரு கமராவில் பொருதப்பட்டுள்ள லென்சுக்கும் அந்தக் கமரா கையாளக்கூடிய அப்பெச்சர் ரேஞ்ச்சுக்கும் பெரிய ஒற்றுமையுள்ளது ஆனால் நான் அதில் அதிகம் கவனம் செலுத்தப்போவதில்லை, அது உங்களுக்கு இப்ப தேவையுமல்ல.

அடுத்து, சட்டர் ஸ்பீட் எப்படி அலவிடப்படுகிறது. 1/2, 1/4 ,1/8, 1/16, 1/30, 1/60, 1/125, 1/250, 1/400 எனும் இலக்கத்தையும் படம் எடுக்கமுதல் கமரா டிஸ்பிளேயில் அவதானித்திருப்பீர்கள், அப்படி அவதானிக்காதவர்கள் இனியாவது படத்தை கிளிக் செய்யமுதல் வாசித்துவிட்டு கிளிக் செய்யவும்.

இதிலும் மிக முக்கியமான விசயம் என்னவென்றால் ஒன்றின் கீழ் வரும் இலக்கம் அதிகரித்துச் செல்லச் செல்ல ஒளியை உள்ளே அனுமதிக்கும் கதவு மூடித்திறக்கும் நேரம் குறைந்துகொண்டே செல்கிறது என்பதை ஞாபகம் வைத்திருந்தால் சரி...

அதாவது 1/2 என்பது அரை வினாடியக் குறிக்கும், 1/400 என்பது ஒரு வினாடியில் நானூறில் ஒரு பகுதி நேரமாகும். 1/8000 வரைக்கும் சில கமராவில் சட்டர் ஸ்பீட் உள்ளது என்பதும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்து பிலிம் iso செற்றிங்கிலும் 50, 100, 200, 320, 400, 800 போன்ற இலக்கங்களை கமராவில் அவதானித்திருப்பீர்கள், இதிலும் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது யாதெனில் குறைந்த இலக்கங்களைக் கொண்ட பிலிம்கள் ஒளியை உணரும் தன்மை குறைவு எனவும் கூடிய இலக்கங்களைக் கொண்ட பிலிம்கள் மிகவும் வேகமாக/அதிகமாக ஒளியை உணரும் தன்மையுள்ளவை எனவும் வகைப்படுத்தப் படுகின்றன. அதாவது குறந்த ஒளியுள்ள இடத்தில் எடுக்கபடும் படங்களையும் பதியக்கூடிய தன்மையுடையன எனலாம்.

சரி... அடிப்படையில் புகைப்படம் எடுக்கத் தேவையான முக்கிய விடயங்களைப் பார்த்துவிட்டோம், இனி எமது படம் எடுக்கும் வேலையைத் தொடங்குவோம்...

உதாரணத்துக்கு சொன்னால் அரையடி விட்டமுள்ள ஒரு குழாய் மூலம் 15 நிமிடங்களுக்கு ஒரு தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் பாய்ச்சி ஒரு பெரிய பாத்திரத்தை நிரப்ப முடிந்தால், தண்ணீர்க் குழாயின் விட்டத்தை நாங்கள் பெரிதாக அதாவது ஒரு அடியாக மாற்றினால், அதே பாத்திரத்தை நிரப்ப எடுதக்கும் நேரம் அண்ணளவாக அரைவாசியாக குறைக்கப்பட்டுவிடும். இதேபோல குழாயின் விட்டத்தை அரையடியிலிருந்து காலடியாகக் குறைத்தால் அதே பாத்திரத்தை நிரப்ப நேரம் இப்போது அரை மணித்தியாலமாகக் கூடிவிடும்...

இதே போன்ற ஒற்றுமைதான் கமராவிலுள்ள அப்பெச்சர், சட்டர் ஸ்பீட் ஆகியவற்றைக் கையாளும் முறையிலும் தங்கியுள்ளது. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்... [/size]

Edited by இளங்கவி

அண்ணா அனைவருக்கும் விளங்கும் விதத்தில் தரும் உங்களுக்கு பாராட்டுகள். :) தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள் bio படித்தீர்களா? biology, physics எல்லாம் சேர்த்து விளக்கம் தருகிறீர்கள். :D அதுதான். அல்லது science இல் நல்ல ஆர்வம் உள்ளவராக இருக்க வேணும். :rolleyes:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இளங்கவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.