Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்களை விடுவிக்க கோரி ஜேர்மனி இந்திய தூதரகத்தின் முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

germany0_seithy300612.jpg

[size=4]தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி ஜேர்மனி தலைநகரம் பெர்லினில் இன்று காலை ஜேர்மனி ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.[/size]

[size=4]மனித நேயம் அற்ற நிலையில் சித்திரவதை முகாமில் சிக்கித் தவிக்கும் உறவுகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணா நிலையில் உள்ளார்கள், அவர்களில் சிலர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பெறுவதாகவும் அறிகின்றோம்.[/size]

[size=4]காந்தி தேசம் என தன்னை தானே புகழாரம் பாடும் இந்திய அரசு சிறைகளில் வாடும் அகதிகளை விடுவிக்காமல் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள், மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்களை மட்டும் காவி கொண்டு தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய மக்களை பொய்யான குற்றச்சாட்டில் இந்திய அரசு செங்கல்பட்டு சிறப்பு சித்திரவதை முகாமில் அடைத்துள்ளது.[/size]

[size=4]இதற்கு எதிராக தமிழகத்தில் எமது தமிழின உணர்வாளர்கள் தமது ஆதரவை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பெர்லினில் இந்திய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.[/size]

http://youtu.be/NBCfpbPX93I

[size=4]இவ் நிகழ்வில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழ் உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பதாதைகள் மற்றும் ஆங்கில மொழியில் பேச்சின் ஊடாக உண்ணா நிலையில் உள்ள உறவுகளின் நிலைமைகள் ஜேர்மன் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.[/size]

[size=4]தமிழீழத்தை கூறுபோட்டு இலங்கை அரசின் இனவழிப்புக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய அரசை கண்டித்து பல தடவை கடந்த காலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இந்திய தூதரகத்திற்கு முன்றலில் செய்து இருந்தாலும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கண்ட தூதரக அதிகாரிகள் மிகவும் விழித்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.[/size]

[size=4]தூதரக உயர் அதிகாரிகள் பலதடவை தமது ஜேர்மன் ஊழியர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் இனம் காணுவதற்காகவும் ஒளித்திருந்து புகைப்படம் எடுக்கும் வகையில் பணித்திருந்தார்கள்.[/size]

[size=4]அத்தோடு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கவனித்துக் கொண்டிருந்த ஜேர்மனியரை அவ்விடத்தில் அவர்கள் நிற்க தடை என்றும் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தவறான செய்திகளை இங்கு பரப்பும் வகையல் இந்திய தேசத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்றும் தமது ஊழியர்கள் ஊடாக பரப்புரையில் ஈடுபட்டனர்.[/size]

[size=4]ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் "இந்தியா, அகதிகளை சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக நடத்து" , "செங்கல்பட்டு சித்திரவதை முகாமை இழுத்து மூடு", "செங்கல்பட்டு சித்திரைமுகாமில் தவிக்கும் அகதிகளை விடுதலை செய்", மற்றும் "ஈழத்தமிழ் அகதிகளை மறைமுகமான சித்திரவதை செய்வதை நிறுத்து" எனும் வாசகங்கள் பதித்த பதாதைகளை தாங்கியவாறு நீதிக்கான இவ் நிகழ்வில் ஈடுபட்டனர்.[/size]

[size=4]இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் அவையால் கையளிக்கவிருந்த மனுவை மேலதிகாரி வாங்க மறுத்த நேரத்திலும் வாசலில் பிறிதொரு அதிகாரியால் பெற்றுக்கொண்டனர்.[/size]

  • [size=4]germany5_seithy300612.jpg[/size]
  • [size=4]germany6_seithy300612.jpg[/size]
  • [size=4]germany7_seithy300612.jpg[/size]
  • [size=4]germany8_seithy300612.jpg[/size]
  • [size=4]germany1_seithy300612.jpg[/size]
  • [size=4]germany2_seithy300612.jpg[/size]
  • [size=4]germany3_seithy300612.jpg[/size]
  • [size=4]germany4_seithy300612.jpg[/size]
  • [size=4]germany9_seithy300612.jpg[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

தொடர்ந்து எழுச்சியுடன் நடைபெறும் போராட்டங்கள் , ஈழத் தமிழர்களின் உண்ணா நிலை போராட்டங்கள், மற்றும் தமிழக முதல் அமைச்சருக்கு எழுதிய கடிதங்கள் மூலமாக ஒரு அழுத்தம் ஏற்பட்டு, நேற்று நான்கு முகாம் தமிழர்களுக்கு விடுதலை அளிக்க மாவட்ட ஆட்சியர் கையொப்பம் இட்டார் .

இந்த முடிவால் சிவகுமார், கமலநாதன், யோகநாதன் , தனுஜன் ஆகிய நால்வரும் நாளை முகாமில் இருந்து விடுதலை ஆக உள்ளனர். இருப்பினும், தாங்கள் அனைவரும் விடுதலை ஆகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட மாட்டோம் என மீதம் உள்ள முகாம் வாசிகள் அறிவித்து உள்ளனர்.

இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுடன் நைஜீரிய அகதிகளும் இரண்டு பேர் உள்ளனர் . இன்று இந்த நைஜீரிய அகதிகளும் ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக உண்ணா நிலை போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழ் மக்களே சிலர் முகாம் தமிழர்க்கு ஆதரவாக போராட்ட தயங்கும் போது நைஜீரிய நாட்டு அகதிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட முன்வந்திருப்பது அவர்களின் மனிதத் தன்மையை காட்டுகிறது. இன்று முகாம் வாசிகள் அனைவரும் உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

http://www.newsalai.com/2012/07/blog-post_5718.html#.T-_wlaKjcAA.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.