Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 1[/size]

f4117b7c4f204835a2f41091630a0370.jpg

[size=4]இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலு‌ம், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பே‌ர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும்.

இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்‌‌பி, ஆய்தஎழுத்து அமெரோஸ் பெரோஸின் காப்பி என்று கண்டமேனிக்கு எழுதினால் யாருக்கு கோபம் வராது? சுஹாசினி இப்படிப்பட்டவர்களை திட்டி தீர்த்திருக்கிறார். எத்தனை டிவிடிகளைப் பார்த்து தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த காப்பி கண்டுபிடிப்பு இப்போது ஒரு நோயாகிவிட்டது. பேரரசின் தருமபுரியில் கூட உலக சினிமாவின் சாயல் தென்படுகிறதா என்று லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள். சமீபத்தில் வந்த கோ படத்தில் அரசியல்வாதியாக வரும் அஜ்மல் ஜீவாவை ஏமாற்றிவிடுவார். கமலின் சத்யா படத்திலும்கூட அரசியல்வாதி கிட்டி கமலை ஏமாற்றுவார். உடனே சத்யாதாண்டா கோ என்று அடித்துவிட்டார்கள். எந்தப் படமாக இருந்தாலும் தங்களுடைய விமர்சன கோணிப் பையில் அடைத்துவிட வேண்டும். அப்படி ஒரு வெறி.

இந்த கோணிப்பை இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது காப்பி அடித்து படமெடுக்கலாமா? அப்படி எடுத்தால் அது தவறா? இல்லை, காப்பி அடித்துவிட்டு அது பற்றி சொல்லாமல் கம்மென்றிருந்துவிடுவது தவறா? நந்தலாலா, தெய்வத்திருமகள் விஷயத்தில் இதுதான் நடந்தது. நந்தலாலா கிகுஜிரோவின் காப்‌பி, தெய்வத்திருமகள் ஐயம் சாமின் காப்‌பி. இதை எடுத்தவர்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை. இது தேசத்துரோகம் என்று ஒரு கோஷ்டி. இதிலென்ன துரோகம்... உலக சினிமா பார்க்காதவங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களுக்கு இது யூஸ் ஆகுமே என்று இன்னொரு கோஷ்டி. காப்பி தப்பில்லை, ஆனா எந்தப் படத்தோட காப்பிங்கிறதை நேர்மையா சொல்லிடணும் என்ற நேர்மை விளம்பிகள் இன்னொரு பக்கம்.

இந்த கோஷ்டி சண்டையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. எந்தப் படம் அல்லது எந்தக் காட்சி எந்தப் படத்திலிருந்து சுடப்பட்டது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். அந்த ஆவலை பூர்த்தி செய்யதான் இந்த காப்பி கல்சர். ( உஷ்...ஒருவழியா தலைப்புக்குவிளக்கம் கொடுத்தாச்சி).

முதலில் விஜய் படத்திலிருந்து தொடங்கலாம்.

விஜய்க்கு ஸ்டெடியான மார்க்கெட்டை உருவாக்கித் தந்த முதல் படம் பூவே உனக்காக. இந்தப் படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சி மலையாளப் படமொன்றிலிருந்து உருவப்பட்டது. முதலில் மலையாளப் படத்தைப் பார்ப்போம்.

துளசிதாஸ் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த படம் மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி. இந்தப் படத்தில் முகே‌ஷ், சித்திக் இருவரும் நண்பர்கள். முகேஷ் இந்து, சித்திக் முஸ்ஸிம். சித்திக்கின் தந்தைக்கு, தனது மகன் தனது நண்பனின் பள்ளியில் வாத்தியாராக வேண்டும் என்று ஆசை. அந்த பள்ளி அவர்கள் ஊரிலிருந்து நெடுந்தொலைவில் உள்ளது. சித்திக்கிற்கோ வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசை. தந்தைக்கும் மகனுக்குமான இந்த கருத்து வேறுபாடு முற்றும் போது சித்திக் செய்யும் ஒரு கோல்மால்தான் கதை.

சித்திக்கின் தந்தையின் நண்பர் சித்திக்கை சின்ன வயதில் பார்த்திருக்கிறார், வளர்ந்த பிறகு பார்த்ததில்லை. அதனால் தனக்குப் பதில் முகேஷை அந்த வேலைக்கு அனுப்பிவிட்டு அவர் வெளிநாடு செல்ல மும்பைக்கு செல்வார். இப்போது முகேஷ் சித்திக்கின் பெயரில் வாத்தியாராக வேலை பார்ப்பார். அதாவது முஸ்லிமாக. இந்நிலையில் முகேஷின் ஊரிலுள்ள பெண் ஒருத்தி அவர் தற்போது வேலைப் பார்க்கும் ஊருக்கு திருமணமாகி வருவாள். அவளை திருமணம் செய்திருப்பது ஒரு ராணுவ வீரன். தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் முகேஷ் தன்னைப் பற்றிய உண்மையை அந்தப் பெண்ணிடம் கூறுவார். இதனை தொலைவிலிருந்து அப்பெண்ணின் கணவன் பார்ப்பான். அதே நேரம் முகேஷுடன் வேலை பார்க்கும் முஸ்லிமான ஜெகதி இந்த ரகசியத்தை ஒட்டுக் கேட்பார். முகேஷ் ஜெகதியின் பரம விரோதி. முகேஷைப் பற்றிய உண்மையை அப்பள்ளியின் தாளாளர் ஹாஜியாரிடம் சொல்ல ஜெகதி ஓடுவார். அவரைத் தடுக்க பின்னாலேயே ஓடுவார் முகேஷ். அதேநேர‌ம், தனது மனைவிக்கு‌‌ம், முகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அப்பெண்ணின் கணவன் துப்பாக்கியுடன் முகேஷை சுட பின்னாலேயே ஓடுவான். இந்த ரேஸில் அவன் சுடும் குண்டு ஜெகதியின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.

இப்போது ஜெகதியால் பேச முடியாது. மருத்துவமனையில் பேப்பரில் விஷயத்தை எழுதி நர்ஸிடம் கொடுக்க முயலும் போது முகேஷு‌ம், சித்திக்கும் அதனை பிடுங்‌‌கி, நர்ஸை பற்றி தவறாக எழுதியிருப்பதாகப் போட்டுக் கொடுப்பார்கள்.

இந்தக் காட்சியை விக்ரமன் அப்படியே சுட்டு பூவே உனக்காக படத்தில் வைத்திருப்பார். விஜய் அந்த வீட்டின் வாரிசு அல்ல என்பதையு‌‌ம், அவர் அங்கு வந்ததற்கான காரணத்தையும் சங்கீதாவிடம் சொல்வதை ஒருவன் மறைந்திருந்து கேட்பான். அதை சொல்ல அவன் ஓடும் போது கத்தி எறிந்து விளையாடுகிறவனின் கத்தி அவன் தொண்டையில் செருகிக் கொள்ளும். அவனால் பேச முடியாமல் போகும். ச‌ரி, விக்ரமனும் துளசிதாஸைப் போல் யோசித்திருப்பார் என்ற நினைத்தா‌ல், மருத்துவமனை லட்டர் காட்சியும் அடுத்து அப்படியே வரு‌ம்‌, ஈயடிச்சான் காப்பி. மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி 1994 ல் வெளியானது. பூவே உனக்காக 1996.

ஒட்டு மொத்தப் படத்தை காப்பி அடிப்பது போல இப்படி ஒட்டுப் போடும் காப்பியும் உண்டு. இதில் இன்னொரு விசேஷம் மலப்புறம் ஹா‌‌ஜி படத்தை முறைப்படி உரிமை வாங்கி ராமன் அப்துல்லா என்ற பெய‌ரில் பாலுமகேந்திரா தமிழில் இயக்கினார். அப்படத்தில் இந்த துப்பாக்கி சேஸிங் காட்சியை நீங்கள் பார்க்கலாம்.

இது ஒரு சின்ன சாம்பிள். இது போல் ஒரேயொரு காட்சியை சுட்டது, பல படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக உருவியது, ஒட்டு மொத்தமாக சுட்டது என பலவகைகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம். [/size]

http://tamil.webduni...120303032_1.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 2[/size]

Bru4sm.jpg

[size=4]ஒரு கதையை‌க் கூறி அதற்கு சிச்சுவேஷன் எழுதச் சொல்லி உதவி இயக்குனர்களை தேர்வு செய்வது வழக்கம். இப்போதெல்லாம் டிவிடி பார்க்கத் தெ‌ரிந்தவர்களை மட்டுமே உதவி இயக்குனர்களாக சேர்த்துக் கொள்வதாக நண்பர் தெ‌ரிவித்தார். இவர் கே.எஸ்.ரவிக்குமா‌ரின் கதையிலாகாவில் இருந்தவர். ழான் ரெனோ நடித்த வசாபி படத்தை ஜக்குபாயாக மாற்றியதில் நண்பருக்கு கணிசமான பங்குண்டு.

காப்பி அடிப்பதில் முக்கியமானது எந்த வெளிநாட்டுப் படம் தமிழுக்கு பொருந்திப் போகும் என்று அறிதல். இதுவே காப்பி அடிப்பதற்கான முதல் தகுதியாக கருதப்படுகிறது. இந்த அறிதல் குறைவினால் வீணாகிப் போன படங்கள் தமிழிலுண்டு. இரண்டாவது தகுதி, மூலம் எதுவென்று அறிய முடியாதவகையில் பிரதியை உருவாக்குவது. இதற்கு க்‌ரியேடிவ் எனப்படுகிற திறமை அவசியமானது. சொந்தமாக கதையை உருவாக்குவதைவிட இதற்கு அதிக உழைப்பும், நுட்பமான திறனும் கைவரப் பெற்றிருக்க வேண்டும். நமது டிவிடி இயக்குனர்கள் அதிகம் தோற்றுப் போகிற பகுதி இது.

தமிழ் சினிமாவின் நலன் கருதி இந்தக் கட்டுரையில் எப்படி வெற்றிகரமாக காப்பியடிப்பது என்பதை பார்க்கப் போகிறோம். வாசகர்களும் இதில் நேரடியாகப் பங்குப் பெறப் போவதுதான் இதன் விசேஷம்.

நாம் பிரதி செய்யப் போகும் மூலப் படத்தின் கதையை இப்போது பார்க்கலாம்.

img1120407033_1_1.jpg

நமது நாயகன் ஒரு இளைஞன். வீட்டிற்கு தாமதமாக வந்து அம்மாவிடம் அடி வாங்குகிற அப்பாவி. ஒருநாள் ரயிலில் முழுப் போதையில் இருக்கும் பேரழகியான இளைஞியை சந்திக்கிறான். அவள் அப்படியே அவனுக்கு நேரெதிர். சண்டி. உட்கார்ந்திருக்கும் வேறொரு இளைஞனை மிரட்டி எழ வைத்து வயதானவருக்கு உட்கார இடம் தருகிறாள். அப்படியே ஒருவ‌ரின் தலையில் வாந்தியெடுத்து மயக்கமாகிறாள்.

நமது நாயகன் அவளை அறைக்கு தூக்கிச் சென்று வாந்தியை கழுவிவிடுகிறான். இதற்குப் பிறகு இருவருக்குள்ளும் நட்பு ஏற்படுகிறது. இளைஞனை அவள் ஒவ்வொரு நாளும் டீஸ் செய்கிறாள். அவளின் ஹை ஹீல்ஸைப் போட்டு நடக்கச் சொல்கிறாள். நாயகன் பொறுமையுடன் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறான்.

இவர்கள் எப்போது காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்லப் போகிறார்கள்? நாயகனுக்கும் நம்மைப் போலவே தவிப்பு. ஆனால் அவள் நான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவன் என்று ஒருவனை நாயகனுக்கு அறிமுகப்படுத்துகிறாள். அவள் அவர்களை தனியாகவிட்டு வெளியே சென்றதும் நமது நாயகன் நாயகியின் குணங்களைப் பட்டியலிட்டு அவள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்ன அர்த்தம் என்று அவனிடம் கூறுகிறான். அவளைப் பற்றிய முழுமையான அறிதலாக அது இருக்கிறது. இதனை சொல்லிவிட்டு ஹீரோ கிளம்பிவிடுகிறான். நாயகி வருகிறாள். அவளிடம் நாயகன் சொன்னதை அந்த நபர் விளக்குகிறான். அப்போதுதான் நாயகிக்கு அவன் எவ்வளவு தூரம் அவளது சுயத்தை தொடர்ந்து வந்திருக்கிறான் என்பது பு‌ரிகிறது. அழுகையுடன் அவனைத் தேடிச் செல்கிறாள்.

இந்தக் கதையில் நாயகி ஏன் மது அருந்தி கலாட்டா செய்தாள் என்பதற்கு இயக்குனர் ஒரு கதை வைத்திருக்கிறார். அது நமக்கு‌த் தேவையில்லை. மேலே உள்ள கதையை மட்டும் இப்போது நாம் தமிழுக்கு ஏற்ப மாற்றலாம்.

“முதலாவதாக நாயகன், நாயகியின் குணம். நாயகி டாமினேட்டிங் பெர்சனாலிட்டி. நாயகன் அப்பாவி.”

“செமயா இருக்கும் சார்.”

“பு‌ரியாம பேசறீங்களே சார். நம்ம ஹீரோ ‌ஜீவா மாதி‌ரி ஒரு ஆக்சன் ஹீரோ. எப்பிடி அம்மாஞ்சியா காமிக்கிறது?”

“அதுவும் ச‌ரிதான். பெம்பளைங்களே ஒத்துக்க மாட்டாங்க. இப்படி பண்ணுனா என்ன சார், ஹீரோவை டாமினேட்டிங் பர்சனாலிட்டியா மாத்தி ஹீரோயினை டம்மியாக்கிட்டா?

“அதுல என்ன பாஸ் சுவாரஸிமிருக்கு. நூத்துக்கு தொண்ணூறு படம் அப்படிதானே வருது.”

“பேசாம ஹீரோவையும் சண்டைக்கோழி ஆக்கிருவோம். ஹீரோயினும் லந்து பார்ட்டி, ஹீரோவும் லந்து பார்ட்டி...”

“சபாஷ், இது வொர்க்கவுட்டாகும்.”

“ஆனாலும் ஒண்ணு இடிக்குதே சார்.”

“என்ன?”

img1120407033_2_1.jpg

“ஓபனிங் சீன். நடிகைகள் பர்சனலா பார்ட்டியில் தண்ணியடிக்கிறதை படிக்கிறப்போ கிளுகிளுப்பா இருந்தாலும் சினிமாவில் தண்ணியடிச்சு வாந்தி எடுக்கிறது...”

“செட்டாகாதுன்னு சொல்ல வர்றீங்க.”

“ஆமா, தண்ணியடிக்கிற மேட்டர் நல்லா இருக்கிறதுனால வேணும்னா ஹீரோ தண்ணியடிச்சு ஹீரோயினை கலாய்க்கிற மாதி‌ரி மாத்திக்கலாம்.”

“பரவாயில்லையே. பத்து வார்த்தை பேசுறதுக்குள்ள பக்காவா செட்டாயிட்டீங்க. ஹீரோ அம்மாகிட்ட அடி வாங்குறதை அப்படியே சேஞ்ச் பண்ணி அம்மாஞ்சி ஹீரோ கேரக்டரை அம்மாவுக்கு தந்திடலாம்.”

“பின்றீங்க. ஹீரோயின் பத்தி நம்ம ஹீரோ பேசுற அந்த ட்டுவிஸ்ட்.”

“ம்ஹும்... அத மட்டும் தொடக் கூடாது. அந்த ட்டுவிஸ்டுக்காகதானே அந்தக் கதையையே செலக்ட் பண்ணியிருக்கோம். இப்போ நாம சேஞ்ச் பண்ணுனதை அப்படியே சொல்லிப் பார்க்கலாமா.”

“நான் சொல்றேன் கரெக்டா இருக்காப் பாருங்க. எடக்கு மடக்கான இரண்டு பேர். இரண்டு பேரும் ட்ரெயினில் சந்திக்கிற போதே பரஸ்பரம் காலை வா‌ரிக்கிறாங்க. இந்த எகனை மொகனை காம்பினேஷன் அப்படியே தொடருது. இவங்க காதலிப்பாங்களா மாட்டங்களாங்கிற குழப்பம் வரும் போது ஹீரோயின், இவரைதான் கட்டிக்கப் போறேன்னு ஒரு ஸ்மார்ட் பார்ட்டியை காமிக்கிறா. அப்செட்டாகுற நம்ம ஹீரோ, ஹீரோயினுக்கு இதெல்லாம் பிடிக்கும், அவ இப்பிடி இப்பிடி நடந்துகிட்டா அதுக்கு இன்ன மாதி‌ரி அர்த்தம்னு சொல்லிகிட்டு ஃபீலிங்கா கிளம்பிடறான். இதை தெ‌ரிஞ்சுக்கிற ஹீரோயின் அதே ஃபீலிங்கோட அவனைத் தேடிப் போறா. கரெக்ட்?”

“அவ்வளவுதான். நடுவுல கொஞ்சம் சொந்தச் சரக்கில் மானே தேனே போட்டோம்னா புதுசா ஒரு கதை ரெடி.”

“அந்த டுவிஸ்டை வச்சு இது எந்தப் படம்னு கண்டுபிடிக்க மாட்டாங்க?”

“எப்பிடி? அதுதான் மத்த எல்லாத்தையும் மாத்திட்டமே. இதுக்கு பேருதான் தோல் இருக்க பழம் திங்கிறது.”

கடைசி கட்டத்துக்கு வந்து விட்டோம். இப்போது நம்முன் இருக்கிற கேள்வி அந்த ஓ‌ரி‌ஜினல் படம் எது, காப்பி படம் எது.

இதற்கு ஒரேயொரு பதிலை மட்டும் தர முடியும். ஒ‌ரி‌ஜினல் 2001ல் Jae - Young Kwak இயக்கத்தில் வெளிவந்த மை சாஸி கேர்ள். காப்பி படம்...? கதையை மாத்தி எழுதிய நீங்களே முயற்சி பண்ணுங்களேன்.

அடுத்தமுறை வேறொரு ஸ்ட்ராங் காப்பியுடன் சந்திப்போம். [/size]

http://tamil.webduni...120407033_2.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.