Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா சிறை தாக்குதலில் காயமடைந்த ஒரு தமிழ் அரசியல் கைதி பலி.

Featured Replies

வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இணைப்பு: 29ம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினை அடுத்து மஹர சிறைசாலைக்கும், ராகம மருத்துவமனைக்கும் கொண்டு வரப்பட்ட காயமடைந்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு வழக்கறிஞர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இந்த காயமடைந்த கைதிகளை சென்று பார்வை இடுவதற்கு வழக்கறிஞர்களுக்கு இருக்கின்ற உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று கூடிய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டம் இது தொடர்பில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிர்மலரூபன் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.

மஹர, போகம்பர சிறைச்சாலைகள், அனுராதபுர, ராகம, வெலிசர மருத்துவமனைகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட அனைத்து கைதிகளையும் பார்வை இடுவதற்கு கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

காயமடைந்த கைதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகள் வழங்கப்படுவதையும், நடந்த சம்பவம் தொடர்பான பக்க சார்பற்ற முழு விசாரணைகள் நடத்தப்படுவதையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நாம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றை கோருகிறோம்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இனிமேல் ஒத்திவைக்கப்பட முடியாத நிரந்தர தீர்வுக்கு அரசாங்கம் உடனடியாக வர வேண்டும் என வலியுறுத்தி கூறுவதுடன் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இங்கு இன்று கூடிய நாம் அனைவரும் திட சங்கற்பம் பூண்டுள்ளோம் எனவும், இது தொடர்பில் உடனடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் உரிய பல்வேறு முடிவுகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பின்வருவோர் சார்பாக அறிவிக்கின்றோம்.

மக்கள் கண்காணிப்பு குழு இணைத்தலைவர்கள் நிமல்கா பெர்னாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜெயலத் ஜெயவர்தன, எம். ஏ. சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ. சரவணபவன், அப்பாதுரை விநாயகமூர்த்தி, பொன் செவராசா, கட்சி தலைவர்கள் வி.ஆனந்த சங்கரி, வழக்கறிஞர்கள் ரத்தினவேலு, மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், முஜிபர் ரகுமான், கட்சி பிரதிநிதிகள் எஸ்.கஜேந்திரன், உதுல் பிரேமரத்ன, மாநகரசபை உறுப்பினர் எஸ், பாஸ்கரா, சமூக செயல்பாட்டாளர்கள் வண.சக்திவேல், பிரியதர்ஷனி ஆரியரத்ன, யுஜின் மரியாம்பிள்ளை, கல்யானந்த பெரேரா, ஏ.செர்லீன்.

http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய கொடுமைகளிற்கு எப்போது முடிவு வருமோ ? :(

நிமல ரூபனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ayavarthana_28_5-100x100.jpg[/size]

[size=3][size=4]வவுனியா சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் உயிரிழந்த நிமல ரூபனின் உயிருக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே முழு பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:[/size][/size]

[size=3][size=4]அரசியல் நோக்கத்திற்காக இலங்கையிலுள்ள சிறைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்கள் உண்மையிலேயே அரசியல் கைதிகளாகும். இந்த கைதிகள் குறித்து இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொய் வாக்குறுதிகளை மாத்திரம் தாராளமாக வழங்கி வருகின்றது.[/size][/size]

[size=3][size=4]இவ்வாறு பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கம் ஏமாற்றி வருகின்ற நிலைமையில் அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் துரதிஷ்டமான சம்பவத்திற்கு முகங்கொடுத்தனர். இந்த பொறுப்பில்லாத அரசாங்கத்தின் கைதிகள் குறித்தான கவனயீன ஏனோதானோ என்ற நடவடிக்கையே இச் சம்பவத்திற்குக் காரணமாகும்.[/size][/size]

[size=3][size=4]அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் எந்தவொரு கைதிக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் தயார் என்பது தற்போது நிருபனமாகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களாக செயற்பட்ட கருணா அம்மான் என்ற தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளதோடு பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியையும் வழங்கியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]அத்துடன் சர்வதேச பொலிஸாரால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு மறைவிடமான சொகுசு வாழ்க்கையை அரசாங்கம் தனது நிழலில் வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்காதோருக்கு தேசத்துரோகி என்ற பெயர் சூட்டப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]அரசியல் நோக்கத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரம் உள்ளது. அவருக்கு நெருக்கமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கிய பலர் கொலை குற்றவாளிகளே.[/size][/size]

[size=3][size=4]எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ இருந்த போது அரசியல் கைதிகளை விடுதலை செய்க என்று உள்நாட்டிலுமல்லாமல் வெளிநாடுகளிலும் குரல் எழுப்பியிருந்தார். இன்று அவர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. எனினும் அவர் அன்று கடைபிடித்த அதே கொள்கையில் இன்றும் இருக்க வேண்டும்.[/size][/size]

[size=3][size=4]நிமல ரூபனின் கொலை மற்றும் வவுனியா சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பக்க சார்பின்றிய விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதே போன்று குற்றவாளிகள் எவராகவிருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.[/size][/size]

[size=3][size=4]சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். மேலும் இக் கைதிகள் குறித்து கவனம் செலுத்துமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிநிதியிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தனது அறிக்கையில் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]http://www.saritham.com/?p=63582[/size][/size]

[size=4]சிறை அதிகாரியின் காலைத்தொட்டு கும்பிடச்சொல்லி அடித்துள்ளார்கள்.[/size]

1983 ஆம் ஆண்டு கருப்பு யூலையில் சிறையில் கொன்றார்கள். இன்றும் கொல்கிறார்கள். இவர்களுடன் வாழச்சொல்லியே உலகம் கொல்லுகின்றது.

ராசபக்சா லண்டனிலிருந்து துரத்தப்பட்ட நாட்களிலிருந்து இலங்கை அரசு மேற்குநாடுகளை வளைத்துப் போடுவதில் சில வெற்றிகள் கண்டிருக்கிறது. எனவே இவற்றை செய்யப் பயப்படாது. அரசுக்கெதிராக தீவிர பிரச்சாரம் புலம் பெயர் நாடுகளில் எடுக்கப் படவேண்டும். இந்த இளைஞனின் படத்தை ஒலும்பிக்கில் தொடர்ந்து காட்ட வேண்டும்.

[size=4]சிறை அதிகாரியின் காலைத்தொட்டு கும்பிடச்சொல்லி அடித்துள்ளார்கள்.[/size]

1983 ஆம் ஆண்டு கருப்பு யூலையில் சிறையில் கொன்றார்கள். இன்றும் கொல்கிறார்கள். இவர்களுடன் வாழச்சொல்லியே உலகம் கொல்லுகின்றது.

தமிழர் பிரதிநிதிகள் இவை போன்ற ஒவ்வொரு படுகொலைகளையும் ஆதாரங்கள் (பெயர், திகதி, விபரம், சான்றிதழ்கள், சம்பவம் நடந்த இடம் - சூழ்நிலை, குடும்பத்தினரின் முறைப்பாடுகள், ஈற்றில் பத்திரிகை செய்திகள், கண்டனங்கள், சிங்கள பயங்கரவாத அரசின் மழுப்பல் பதில்கள் போன்றனவற்றுடன்) சேகரித்து, முறையாக ஆவணப்படுத்தி அவற்றை சர்வதேசத்திடம் (தமிழின விரோத வட இந்தியக் காட்டுமிராண்டிகளிடம் இலை) வழங்கும் வரை, சர்வதேசம் "சேர்ந்து வாழ என்ன குறை?" என்றே கேட்கும்.

நா. க. த. ஈழ அரசின் முக்கிய சில பணிகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். சிங்கள அரச பயங்கரவாதிகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட 2000 க்கு மேற்பட்ட திட்டமிட்ட படுகொலைகளை, 12,000 க்கு மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களை நா. க. த. ஈழ அரசு பதிவு செய்திருக்க வேண்டும். இவை தவிர ஆக்கிரமிப்பு, குடியேற்றம், வரலாற்று சிதைப்பு, கைது, கடத்தல், கப்பம், பாலியல் கொடுமைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றையும் பதிவு செய்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு நா. க. த. ஈழ அரசு மீண்டும் அடுத்த அறிக்கை, செவ்வி விடும் நன்னாளை எதிர்பார்த்து நித்திரை கொள்கிறது. காலத்தின் தேவைகளுடன் ஒப்பிடும் போது அதனது செயற்பாடுகள் வெறும் 5 % க்கும் குறைவானதாகவே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.