Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமே தீர்வு - தமிழ் நாடெங்கும் விழிப்புணர்வு சுற்றுப் பயணம் (படங்கள்)

Featured Replies

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது. இதன் முதற்கட்டமாக இன்று தோழர்கள் சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் , தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர் இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் அவர்கள்.

மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன் , நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். செல்லுமிடம் எங்கும் , சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆங்காங்கே மனிதர்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் இலங்கை இனப் படுகொலை பற்றிய படங்களை காட்டியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

சுற்றுப் புயணம் மேற்கொண்டவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது..

தமிழக அரசு சட்டமன்றத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஐ.நா மன்றத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது, தமிழக மக்களின் போராட்ட அழுத்தங்கங்களுக்கு பனிந்து இந்திய அரசு, ஐ.நா தீர்மானத்தை ஆதரித்து. ஆகவே தமிழர்களின் ஒற்றுமையிலேயே தமிழர்களின் எதிர்காலம் ள்ளடு என்பதை தமிழினம் உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு உள்ள ஒரே தீர்வு தனித்தமிழ் ஈழமே, 1976 நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து 99 சதவீத மக்கள் வாக்களித்தனர், ஒத்து வாழமுடியாத இரு சமூகம் அமைதி வழியில் பிரிந்து போக உரிமை உண்டு என்கிறது ஐ.நா சர்வதேச வழிகாட்டல்கள், அந்த ஐ.நா சபை வாக்கெடுப்பு நடத்தி கிழக்கு தைமூர், எரித்தீரியா, ஸ்லோவோக்கியா, தெற்கு சூடான் போன்ற தனி நாடுகள் உருவாகியிருக்கின்றன.

அந்த வழியிலே பல நூற்றாண்டு காலமாக தங்கள் உடமைகளையும், உரிமைகளையும், உயிர்களையும் இழந்து அடிமைகளாக வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை ஐ.நா மன்றமே அமைதி வழியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும், இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரனைக்கு ஆனையிட வேண்டுமென தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடுவதன் மூலமே வாழ்வுரிமை இழந்து நிற்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும், இதுவே ஒவ்வொரு தமிழனின் சமுதாய கடமையாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடு தழுவிய விழிப்புணர்வு சுற்றுப் பயணம் செய்கின்றோம் என கூறியுள்ளனர்.

[show as slideshow]

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது. இதன் முதற்கட்டமாக இன்று தோழர்கள் சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ...

மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன் , நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். செல்லுமிடம் எங்கும் , சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆங்காங்கே மனிதர்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் இலங்கை இனப் படுகொலை பற்றிய படங்களை காட்டியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

...... தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடுவதன் மூலமே வாழ்வுரிமை இழந்து நிற்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும், இதுவே ஒவ்வொரு தமிழனின் சமுதாய கடமையாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடு தழுவிய விழிப்புணர்வு சுற்றுப் பயணம் செய்கின்றோம் என கூறியுள்ளனர்.

இம்மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.. பிரபல்யமான தொலைக்காட்சிகள் அடிக்கடி ஈழத்தின் இன்றைய நிலையையும், படுகொலைகளின் ஆதாரங்களையும் சில நேரம் காட்டினாலே அதன் தாக்கம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். ஆனால் சதைகளை வைத்து கல்லா கட்டும் தமிழ் ஊடகங்கள், ஈழச்செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன..

புதிய தலைமுறை, மக்கள் தொலைக்காட்சிகளுக்கு தமிழக ஏவல்துறை கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

[size=4]தமிழக மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்வை கொண்டுவந்தால் அது டெல்லியில் மாற்றத்தை நிச்சயம் கொண்டுவரும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.