Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமெல்டாவுக்கு புதிய பொறுப்பு – சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்தும் மாற்றப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Emelda.jpg

[size=4]முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து மாற்றப்பட்டு, சமூக சேவைகள் அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். அரசஅதிபராக இருந்த இவர் அண்மையில் கொழும்புக்கு மாற்றப்பட்டு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் மேலதிக செயலராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறுகிய காலத்தில் அவர் மீண்டும் மாற்றப்பட்டு, சமூகசேவைகள் அமைச்சின் செயலரான நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இமெல்டா சுகுமார் உள்ளிட்ட 18 அதிகாரிகளை அமைச்சுகளின் புதிய செயலர்களாக நியமித்துள்ளார்.

இவர்களில் இமெல்டா சுகுமார் மட்டுமே தமிழராவார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120713106581[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாற்ற பட்டாலும் நல்ல பதவி தானேய் கொடுதிருக்கினம் அமைச்சின் செயலாளர் அதுவும் இவா ஒராள் தான் தமிழ் மிச்சம் எல்லாம் சிங்களம்.

பதவி நல்லது கெட்டது என்பது எவ்வளவுக்கு அதில் முடிவெடுக்கலாம் என்பதில் தங்கியுள்ளது.

நல்ல பதவி கொடுக்க இருப்பவரை அதிரடி மாற்றமாக ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றியிருக்க வேண்டிய தேவை இல்லை. ஆற அமர விட்டு பெட்டி கட்ட நேரம் கொடுத்திருக்கலாம்.

சுகுமார் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க பட்டதே போரின் பின் அவ அரசுடன் செயல் பட ஆயத்தமாக இருப்பது கண்டபின்தான். ஜெனீவாக, கனடா பொன்ற இ்டங்களிலிருந்து திருமதி சுமார் எந்த நன்மையையும் அரசுக்கு கொண்டுவரவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து படையினரை காப்பாற்ற கொடுத்த திட்டங்களை போட்டுடைத்தவ. எனவே ஆள் சரியாகத்தான் இருக்கிறாவா என்று மகிந்த நேரே பார்ப்பதற்குத்தான் முதல் மாற்றம் ஜனாதிபதி மாளிகைக்காக இருந்தது. இப்போது சரியாகக் காணப்பட்டிருக்கிறா. ஆகையால் சமூக சேவை அமைச்சுக்கு மாற்றப்படிருக்கிறா.

அந்த அமைச்சு நிறைய வெளிநாட்டு பணம் பெறும் அமைச்சு. அதில் சிங்களவன் ஒருவனை போட்டு அவனுக்கு பங்கு கொடுப்பதிலும் பார்க்க சுகுமாரை போடுவதால் அவ தேவையானதெல்லாவறையும் மகிந்தாவுக்கும் கோத்தாவுக்கும் இனாமாக செய்து கொடுப்பா. இந்த நியமனத்தில் தமிழர் அமர்த்தப்படுவது, அவ எவ்வளவு தூரம் நாட்டுக்கும் இனத்திற்கும், துரோகியாக விரும்புகிறார் என்பதைதான் காட்டும். அவரின் திறமையை அல்ல.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி போட்டு பரிமாற பச்சில் இலை வெட்டி வெட்டி..

உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பைதொட்டி..

:) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.