Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் புலனாய்வினர்

Featured Replies

யாழ்ப்பாணம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எம்.பி. தெரிவித்தார்.

நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி.மேலும் தெரிவித்ததாவது,

“ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலையே இது. எனினும், நாங்கள் இதற்குப் பயப்படப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம். இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது புலனாய்வுப் பிரிவினரே மோட்டார் சைக்கிளில் புலிக்கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப நினைத்தார்கள். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் முதியர் ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[size=4]முதியவர் விரைவில் குணமடையட்டும். [/size]

[size=4]

இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது புலனாய்வுப் பிரிவினரே மோட்டார் சைக்கிளில் புலிக்கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப நினைத்தார்கள். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் முதியர் ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
[/size]
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெல்லியடி ஆர்ப்பாட்டத்தின்போது புலிக் கொடியுடன் வட்டமிட்ட மர்ம நபர்கள்[/size]

[size=2]

J01(47).jpg

(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

[size=4]தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் புலிக்கொடியை ஏந்தியவாறு பஸ் நிலையத்தை வட்டமிட்டுச் சென்றுள்ளனர்.

தலைக்கு கறுப்பு நிறத் தலைக்கவசம் மற்றும் கறுப்பு நிற ஜெக்கட்டும் அணிந்தவாறு இவர்கள் புலிக்கொடியுடன் பஸ் நிலையத்தைச் சுற்றி வந்தனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருந்த நிலையிலேயே இந்த மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலே இது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.[/size]

J02(37).jpg[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.