Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை உடைத்து த.தே.ம.மு கவனயீர்ப்பு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு. (காணொளி & படங்கள்)

Featured Replies

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது.

இதன் போது இராணுவப் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தை குழப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக் கணக்கிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை மனிதர்களாக நடத்துவதோடு அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் த.தே.கூ, தமிழ் தேசிய முன்னணி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது தமது எதிர்பை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் புலிக்கொடிளை தாங்கிவாறு 4 பேர் நெல்லியடி பஸ் நிலையப்பகுதியில் சுற்றித்திரிந்தனர். இவர்களது மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும் பின்னனால் இருந்தவரிடமும் புலிக்கொடி இருந்தது. அவர்கள் சாதாரணமாகவே திரிந்தனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் பிரசன்னம் அதிகமாக இருந்த போதும் குறித்த நபர்கள் சுற்றித்திரிந்ததைக் காணமுடிந்தது.

அத்துடன் வல்லை இராணுவ காவலரனில் பயணிகள் பஸ்களை மறித்த இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் இன்றைய தினம் மிரட்டி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

42.jpg32.jpg22.jpg13.jpg

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5/

[size=1]

[size=5]ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் இருந்து மக்கள் உரிமைப்போராட்டங்கள் நடாத்துகின்றனர். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான மக்களின் எழுச்சிமிக்ய் போராச்சங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-31-17/reflections/138-globalization-and-transnational-tamils-recollecting-random-thoughts

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.