Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியின் லிங்கா திரைப்பட வெளிநாட்டு உரிமையை பெற்றிருப்பது நடிகரும் விஜயகாந்த் கட்சி MLA வும் இப்போ அம்மா ஆதரவு MLA ஆகவும் இருக்கும் நடிகர் அருண் பாண்டியன்......

இந்த நடிகர் அருண் பாண்டியன் யார் என்றால் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய முகவர்.......

இந்த ஐங்கரன் நிறுவனமும் lyca மொபைல் நிறுவனமும் தான் இந்திய திரைப்பட தயாரிப்புகளில் கூட்டு......

சோ மிக சுலபமான சமன்பாடு இது தான்

அ தி மு க அதரவு MLA அருண்பாண்டியன்+ஐங்கரன்=lyca

இப்போ புரிதா எப்பிடி கத்தி திரைப்படம் ஜெயா டிவி யின் கைகளுக்கு சென்றது என்று

இது தெரியாம வேல்முருகன் எல்லாம் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கார் என்று புரியல்ல...

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அம்மா விடுதலையானதை அடுத்து அவங்க கட்சி நண்பர்கள் செமையா கொண்டாடி முடிஞ்சிது.......

இன்றைக்கு எப்பிடியோ சில மாநில தேர்தல் முடிவுகள் வரத்தொடங்க பிஜேபி நண்பர்கள் கொண்டாடத்தொடங்க போறாங்க......

இதில தி மு க நண்பர்கள நினைச்சா தான் பாவமா இருக்கு.....

அண்மைக்காலமா தோல்விகளாலும் உள்கட்சி பூசல்களாலும் பொழிவிழந்து காணப்படும் கட்சியா சப்பெண்டு இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்திய நீதித்துறைய பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் அங்கே பிரதமர் முதற்கொண்டு முதல்வர் வரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் சுதந்திரம் இருக்கு...அவர்களும் நீதிமன்ற படிகளை ஏறித்தான் ஆகணும்...ஆனா இலங்கையில் நீங்கள் அப்பிடி ஒரு அரசியல்வாதி மீது வழக்கு தொடுத்தால்......தொடுத்தவரை காணாமல் போனோர் பட்டியலில் தான் தேடவேண்டி இருக்கும்........

எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தன்மை ரொம்ப பிடிக்கும்.....ஒரு சில கேள்விகள் விமர்சனங்களுக்கு அப்பால்......

ஆனால் இலங்கையை பொருத்தவரை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பது வெறும் எழுத்தளவில் தான்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில அவமானங்கள் தான்

நமக்கான

முன்னேற்றப்படி

சில வருத்தங்கள் தான்

நமக்கான

புதிய சிந்தனையின் தொடக்கம்

சில புறக்கணித்தல் தான்

நமக்கான

வளர்ச்சிப்பாதை

சில ஏமாற்றங்கள் தான்

நமக்கான

தடைகள் உடைக்கும் ஆயுதம்

கவலையை விடு

காலம் இன்னும் இருக்கிறது

கிழக்கே சூரியன்

நமக்காக உதிப்பான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சி.பி.ஐ.,யின் கவுரவமே முக்கியம்: ரஞ்சித் சின்கா//////////

ஓ.....அப்பிடி ஓன்று இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாடு என்று ஒன்று இல்லாமல், நாடு, நாடாக சிதறிக் கிடந்தனர் யூத இன மக்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். யூதர்களுக்கு கொடுமை புரிவதில் தீவிரமாக இருந்தான் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் முறியடிக்கப்பட்டதும், ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவை, யூதர்களுக்கு உரிய நாடாக அறிவிக்க நேச நாடுகள் முன்வந்தன. ஆனால், யூதர்கள் அதை ஏற்கவில்லை. தங்கள் பழைய நாடான, இஸ்ரேலே வேண்டும். என்றனர். எனவே, அரபு பகுதியில், மீண்டும் யூதர்களின் இஸ்ரேல் அமைக்கப்பட்டது.

உலகம் எங்கிலும் இருந்த யூதர்கள், இஸ்ரேலில் குடியேறினர். வழக்கொழிந்து போன ஹீப்ரு மொழியை, மீண்டும் பேச்சு மொழியாக்கினர். பள்ளி, கல்லூரி பாடம் எல்லாம் ஹீப்ரு மொழியில்

இன்று, அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. பல யூதர்களுக்கு, இஸ்ரேல் சலித்துப் போய் விட்டது. விலைவாசி உயர்வு, கடுமையான வரிவிதிப்பு, வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்காமை, அரபு நாடுகளுடன் இடைவிடாது நடக்கும் யுத்தம், இவையெல்லாம் சேர்ந்து, நவீன இஸ்ரேல் மக்களை, சலிப்படையச் செய்து விட்டது.

எனவே, மேற்கு நாடுகளுக்கு தற்காலிக விசா வாங்கிக் கொண்டு, சுற்றுலா பயணிகளைப் போல இஸ்ரேலை விட்டுப் புறப்படுகின்றனர். அப்படிப்

போகிறவர்கள் அப்புறம் திரும்பி வருவதே இல்லை. சென்ற ஆண்டில் மட்டும் பல லட்சம் யூதர்கள் இஸ்ரேலிலிருந்து, 'எஸ்கேப்!' யூதர்களை எப்படி இஸ்ரேலிலேயே தக்க வைத்துக் கொள்வது என்பதுதான், இஸ்ரேலின் தற்போதைய பிரச்னை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா 'மிஸ் பண்ணும்' பெங்களூர் நிருபர்கள்.. போர் அடிக்கிறதாம்!//////

அடப்பாவிங்களா உங்களுக்கு போர் அடிக்கிறது எண்டதுக்காக மறுபடியும் அம்மா வந்து உள்ள இருக்க இது என்ன உள்ள வெளிய விளையாட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழன், அதிமுகவில் சேர மாட்டேன்.. அடித்துச் சொல்கிறார் வாகை சந்திரசேகர்//////

அப்போ அதில இருக்கிறவங்க எல்லாரும் சிங்களவங்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் திடீரென பெய்த மழைதான் - சென்னை மேயர்.//////

நல்ல வேளை குண்டு கல்யாணம் குத்தாட்டம் ஆடியதால் குண்டும் குழியுமாகி போன வீதிகள் தான் என்று சொல்லல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் ராஜபட்சேவிற்கு "பாரதரத்னா" விருது வழங்கவேண்டும் என்றும், விடுதலை புலிகளை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தவர் ராஜபச்சே என்று மோடியிடம் சொன்னேன்.

அதற்க்கு மோடியும் ஒப்புதல் தந்துள்ளார் - சு சாமி

# பிறவி குற்றங்கள் மத்தியில் இவன் பிறப்பின் குற்றம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு கோடிக்கு மேல் இருக்கும் தமிழர் தமிழ் நாட்டில், மீதி கோடி தமிழர் அயல் நாட்டில் பிரிந்து இருந்தாலும் உணர்வில் கலந்து தான் இருக்கிறோம் என்று ஏக வசனம் பேச நான் வரவில்லை ஏன் என்றால் அது நம் தமிழ் நாட்டின் அரசியல் வாதிகளின் வேலை.

ஒவ்வொரு முறையும் ஈழம் பிரச்சனை என்று அரசியல் வாதிகள் பேசும் போதும் எனக்கு தோன்றும் கேள்வி இவர்கள் தமிழர் தானா என்று .

இன்றைய நாளில் அரசியல் வாதி என்று சொல்லும் எல்லோரும் அயோக்கியர்களே அதில் யாரும் விதிவிலக்கு அல்ல.ஈழ கொடுரத்தை தடுக்க நினைத்து இருந்தால் அன்றே தடுத்து இருக்க முடியும்.ஆந்திராவில் எனக்கு என்று ஒரு தனி மாநிலம் வேண்டும் என்று ஒரு பிரிவினர் போராடி பெறுகின்றனர்.ஆனால் இங்கே அரசியல் நடத்த வேண்டும் என்பதற்க்காய் மட்டும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

மாணவ அமைப்பு போராடினால் தமிழ் அமைப்பு வேடிக்கை பார்க்கிறது.தமிழ் அமைப்பு போராடினால் அரசியல் வாதிகள் வேடிக்கை பார்க்கின்றான்.அரசியல் வாதி போராடினால் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

அங்கே ஒரு மனிதன் போராடும் போது குரல் கொடுக்க இங்கே ஆள் இல்லை.ஒருவரை குறி வைத்து ஒரு இனத்தையே அளிக்கும் போது தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை .ராஜ பக்சே விமானத்தில் பறந்து டெல்லி வந்தால் நாம் நம் எதிர்ப்பை தரையில் நின்று கருப்பு கொடி காட்டி எதிர்க்கிறோம்.

ஈழ தலைவர் பிரபாகரனை தமிழன் என்ற ஒரே காரணத்தில் தான் நாமும் நம் அரசியல்வாதிகளும் காக்க மறந்து விட்டோம்.இதே அவர் இந்த சாதியை சேர்ந்தவர் என்றோ இல்லை இந்த மதத்தை சார்ந்தவர் என்று முன்னிலை படுத்தி இருந்தால் அந்த சமுக ஆதரவு முழுமையாய் கிடைத்து இருக்கும்.ஆனால் தமிழன் என்று சொன்னதால் தமிழனில் நான் எந்த சமுக தமிழன் அவர் எந்த சமுக தமிழர் என்ற எண்ணம் தோன்றி விட்டது.

செய்தி தாளில் ஒரு பக்க கட்டுரை என்னுடையது வர வேண்டும் என்று அரசியல் வாதிகள் ஈழ சம்மந்தமாய் அறிக்கை விடும் போதெல்லாம் இவர்கள் தான் உண்மையில் ராஜபக்சேவின் நெருங்கிய தோழமை என்றும், நம் நாட்டின் தேச துரோகிகள் என்றும் எண்ண தோன்றுகிறது.

செய்தி தாளின் விற்பனைக்காய் இவர்கள் வியாபார பொருளாய் ஆக்கி இருப்பது தமிழனை தான்.ஒன்றே ஒன்று தான் சொல்ல விரும்புகின்றேன் நீங்கள் நல்லவர்கள் என்றால் உதவி செய்யவில்லை என்றாலும் இப்படி ஈன பிறவியாய் வாழாதீர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்டு புலம்பெயர் தமிழர்கள் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் சுலமபமா செலவழிக்க லைக்கா நிறுவனத்துக்கு இருக்கிற ஒரே வழி விஜய் அண்ணாவ வைச்சு வரிசையா ஒரு 5 படம் பண்ணா காணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரில் நடந்த மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட 3 வீரர்கள் பஸ்சில் ஏறி வந்து போட்டியை முடித்ததால் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.//////////

ஹா ஹா இதென்ன புது விளையாட்டா இருக்கு....ஒலிம்பிக்ஸ்ல இத அங்கீகரிச்சா ஆஸ்திரேலியா சார்பில் நான் கலந்து கொள்ளலாம்னு இருக்கன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னாது விஜய்ட கத்தி படம் நெட் ல ரிலீஸ் ஆகிடிச்சா......

ஹா ஹா தமிழேண்டா .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா தீபாவளி ஸ்வீட்ஸ் எல்லாம் ஒரு வெட்டு வெட்டியாச்சு..... இனி செய்யவேண்டியது ஒரு 18 Kஂ நடக்கணும்........அப்போ தான் ஒடம்புக்கு நல்லது......

அதுவும் அந்த பூந்தி லட்டு இருக்கே லட்டு ...... வரவே வா இன்னா டேஸ்ட்டு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகவில் இணைகிறார் குஷ்பு ..

அப்போ ஜெயலலிதாவை பற்றி கூட்டம் போட்டு தெருத்தெருவா கேவலமா பேசினது நாற வாயி.....

இனி பேசப்போறது நல்ல வாயி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் அடுத்த CM விஜய் அண்ணா தான்

எதிர்காலத்தில் CM பதவிக்கு விஜய் அண்ணாக்கும் குஷ்பூ அக்காக்கும் தான் போட்டி....

சீமான் எல்லாம் அவுட்

‪#‎கொளுத்தி‬ போடுவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா கருணாநிதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவதில்லை என்று கழுவி ஊத்தின இரத்தத்தின் இரத்தங்கள், இந்த வாட்டி அம்மாவும் வாழ்த்து சொல்லலை பண்ணீரும் வாழ்த்து சொல்லாதத பாத்தா அவிங்களும் இந்து பண்டிகைங்கள புறக்கணிக்க தொடங்கியாச்சா....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொத்து குவிப்பு வழக்கில் மாட்டுப்பட்டு அம்மையார் முழிப்பதால் இப்போ முழுக்கட்டுப்பாடும் மத்திய அரசின் கைகளிலாம்...... சுவாமியானவர் கூட அரசை கொண்டு நடத்தும் அளவுக்கு தமிழக நிலைமை இருக்காம்.... கத்தியை எதிர்த்த மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கில் இருந்து எல்லாமே மத்தியில் இருப்பவர்களின் லாபியாம்..... அதுமட்டுமல்ல கத்தி திரைப்படத்தை அம்மையார் எதிர்க்காததுக்கு காரணமும் தளபதியானவர் மத்தியில் இருப்பவர்களை அணுகியது தானாம் அதுமட்டுமல்ல இப்போ வழக்கின் பிடி மத்தியில் இருப்பவர்களின் கையில் இருப்பதனால் ராஜபக்ஷ எதிர்ப்பு இலங்கை எதிர்பெல்லாம் இனி இருக்காதாம்.....ஹிந்தி மொழியை கூட தமிழகத்தில் இதைவைத்து கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தும் வேலை நடக்க இருக்குதாம்......

சென்ற காங்கிரஸ் அரசும் தி மு க வை அவர்கள் செய்த ஊழலை வைத்தே மிரட்டியது நினைவிருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எல்லையில்... பாகிஸ்தான் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்துவதால்....
இம்முறை தீபாவளிக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு... இந்திய இராணுவம்.... இனிப்பு வழங்கவில்லை.
 

- ஒரு தொலைக்காட்சியில் கேட்டது- :D  :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராளிங்களா எதுக்கு அடிச்சிக்கிறீங்க ....

தீபாவளி ஹிட் 'கத்தி'யோ, 'பூஜை'யோ இல்ல: டாஸ்மாக் தான்

தீபாவளி பண்டிகை அன்று விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் கத்தி படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 12.5 கோடியும், பூஜை ரூ.3 கோடியும் வசூல் செய்துள்ளன. ஆனால் தீபாவளி அன்று டாஸ்மாக்கின் வியாபாரம் ரூ.138 கோடி ஆகும்

‪#‎தமிழேன்டா‬

  • கருத்துக்கள உறவுகள்
ஊழலை வைத்தே மிரட்டியது நினைவிருக்கலாம்.
ஊழலை வைத்து மீறட்டுவது இந்திய மத்திய அரசின் வெளியுற கொள்கையும் ஆகும்::::::மகிந்தா அரசை இனபடுகொலையை வைத்து மீற்ட்டுதல்.
  • கருத்துக்கள உறவுகள்

போராளிங்களா எதுக்கு அடிச்சிக்கிறீங்க ....

தீபாவளி ஹிட் 'கத்தி'யோ, 'பூஜை'யோ இல்ல: டாஸ்மாக் தான்

தீபாவளி பண்டிகை அன்று விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் கத்தி படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 12.5 கோடியும், பூஜை ரூ.3 கோடியும் வசூல் செய்துள்ளன. ஆனால் தீபாவளி அன்று டாஸ்மாக்கின் வியாபாரம் ரூ.138 கோடி ஆகும்

‪#‎தமிழேன்டா‬

 

தமிழக அரசு, தீபாவளி அன்று.... டாஸ்மாக் வியாபரத்தை,

30 கோடி அளவில் எதிர் பார்த்ததாக எங்கோ வாசித்தேன்.

ஆனால்... தமிழக மக்கள், நான்கு மடங்கிற்கு மேல்.... மதுபானத்தை வாங்கி சாதனை படைத்து விட்டார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் போன தலைமுறைகள் என்றால் 1970 களின் பிற்பகுதியில் இருந்து 1980 கள் கடந்து 1990 ஆரம்பகாலம் பிறந்த தலைமுறைகள்.....தான்...

இந்த தலைமுறைகள் தான்

யுத்தம்

மக்கள்

மண்

இடம்பெயர்வு

இறப்பு

என்று அவலங்களின் மத்தியில் வாழ்ந்த தலைமுறை.......

அதற்க்கு முன்னரும் சரி பின்னரும் சரி நல்லா அனுபவித்தார்கள்.....

அனுபவிக்கின்றார்கள்......

சொந்த நாடு ஊர ரொம்ப மிஸ்ஸிங் .......

காசு பணம் வசதிகள் வாய்ப்புகள் என்று வெளிநாடுகளில் இருந்தாலும் உங்கள் சொந்த இனத்தோடு சொந்த மொழி பேசுபவர்களோடு..... அதே கலாச்சாரத்தைக்கொண்ட இன குழுமத்தோடு வாழுகின்ற வாழ்க்கை எங்கும் வரபோவதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு இப்பொழுது அடிகடி சுவாமி வந்து போவது அரசியல் பேரம் பேச தானாம்..... அ தி மு க வின் அதிகார மையமாக விரைவில் சுவாமி ஆகிவிடுவாராம்.... அம்மையாருக்கும் சுவாமிக்கும் இடையில் நின்று பேச்சுவார்த்தை செய்வது அரசியல் சகுனி என்று கூறப்படும் ..... "சோ" வாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.