Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆஸ்திரேலியா பிராஜவுரிமை வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்கு செல்ல இங்கிருக்கும் இந்திய தூதரகத்துக்கு அலைய தேவை இல்லை விசா வாங்க , உங்களுக்கான 30 நாள் விசா சென்னை விமான நிலையத்திலேயே கிடைக்கும்......

 

நன்றி  ஐயப்பா..... :icon_idea:

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந்துக்கு ஒரு சவுந்தர்யா என்றால் சத்தியராஜ் கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை எல்லாம் வீணாக்க ஒரு சிபிராஜ் .....

வரல்லனா விட்டிடனும் ...சும்மா அப்பா பேர கெடுக்கப்படாது நடிக்கிறம் என்ற பெயரில.......

‪#‎நாய்கள்‬ ஜாக்கிரதை...

"நாய்கள் ஜாக்கிரதை" பார்த்திட்டுத் தான் சுண்டல் இப்படி எழுதினவரோ!...இது தெரியாமல் நானும் பார்த்திட்டேன். இதை விட நாயை விட்டு என்னை கடிக்க விட்டு இருக்கலாம்:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயில்ல ஒரு ஆன்டி இன்னொரு ஆன்ட்டிக்கு மீன் குழம்பு எப்பிடி வைக்கிறது எண்டு ரெசிப்பி சொல்லிட்டு இருக்கா.....

ஹா ஹா முடியல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புவதாக நடிகர் ராணா டக்குபாதி தெரிவித்துள்ளார்//////

தாராளமா போங்க sir ....அதுக்கு தானே நீங்க திரிஷாவ கழட்டி விட்டீங்க .....சமந்தா சித்தார்த்த கழட்டி விட்டா ....சோ இப்போ நீங்க தாராளமா போய்க்கலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இந்திய பிரதமர் மோடி மகிந்தா கூட சிரிச்சிகிட்டு கைய குடுத்திட்டு நிண்டாலும் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்திய சர்வதேச புலனாய்வு துறையும் இந்திய வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களும் முடிவெடுத்து விட்டதாகவே தோன்றுகின்றது.....இதில் சுவாமி, மோடி போன்றவர்கள் தலை கீழாக நின்றாலும் அவர்களின் முடிவில் செல்வாக்கு செலுத்த முடியாது.... ....

இலங்கையில் ஆட்சி மாற்றம் என்பது ஏதோ தமிழர்கள் மீது அக்கறை கொண்டதற்காக அல்ல மாறாக மகிந்தவின் ஆட்சியின் கீழ் இலங்கையில் அதிகரித்து வரும் சீன மற்றும் பாகிஸ்தானிய செல்வாக்குகளால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இப்பொழுது உணர தொடங்கி இருப்பதால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Melbourne நகரை தலைநகரமாக கொண்ட Victoria மாநில தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சி எதிர்கட்சியான தொழில் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்து வீடு செல்கின்றார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதுமே புலம்பெயர் நாடுகளிலையே தமிழ் மற்றும் தமிழீழம் தொடர்பான எந்த ஒரு நிகழ்வுகளையும் சிறப்பாக மக்கள் நிறைந்த மண்டபங்களோடு நடாத்தி முடிப்பதில் சுவிஸ் தமிழர்களை யாரும் விஞ்சிவிட முடியாது

வாழ்த்துக்கள் சுவிஸ் செயல்ப்பாட்டாளர்களுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்போ ஆதரவோ இன்றும் புலிகளை பற்றி தமிழகத்தில் தினமும் ஒரு அரசியல் வாதி பேசிக்கொண்டிருப்பது தான் புலிகளின் வெற்றி......

அது குஷ்பூ ஆகட்டும்

கல்யாண ராமன் ஆகட்டும் ......

உங்களின் அரசியல் வாழ்கையின் வெற்றி புலிகளை ஏறிமிதித்தால் தான் கிடைக்கும் என்றால்....... உங்களின் வெற்றிக்கி படிக்கட்டுகளாக இருக்க புலிகள் ஒன்றும் சொல்லபோவதில்லை.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல பேருடைய பெயர்கள் எதிரணியின் பொது வேட்டபாளர் தெரிவுக்கு அடிபட்டுக் கொண்டிருந்த போது எதிரணியினர் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் என்றே அரசாங்கம் நினைத்தது.

ஆனால் எதிரணியும் அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததை அதனால் புரிந்து கொள்ள முடியாமல் போனதுதான் ஆச்சரியம்.

அதுவும் மிகப் பெரிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டிருந்த அரசாங்கத்தினால் இது பற்றித் துப்பறிய முடியாமல் போனது அதன் துரதிஷ்டம் என்றே கருத வேண்டும்.

விடுதலைப் புலிகளை அழிக்கும் அளவுக்கு அவர்களின் கட்டமைப்புகளைச் சிதைக்கும் அளவுக்கு புலனாய்வு அமைப்புகளை திறமையாகப் பயன்படுத்திய அரசாங்கத்தினால் எதிரணியின் பொது வேட்பாளர் யாரெனக் கண்டறிய முடியாது போனதைப் பெரும் தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்போ ஆதரவோ இன்றும் புலிகளை பற்றி தமிழகத்தில் தினமும் ஒரு அரசியல் வாதி பேசிக்கொண்டிருப்பது தான் புலிகளின் வெற்றி......

அது குஷ்பூ ஆகட்டும்

கல்யாண ராமன் ஆகட்டும் ......

உங்களின் அரசியல் வாழ்கையின் வெற்றி புலிகளை ஏறிமிதித்தால் தான் கிடைக்கும் என்றால்....... உங்களின் வெற்றிக்கி படிக்கட்டுகளாக இருக்க புலிகள் ஒன்றும் சொல்லபோவதில்லை.......

 

ஒவ்வொரு கால கட்டத்திலும்,ஒவ்வொரு அரசியல் பிரிவுகளுக்குள் போக முன்,பின் என்று சில பேச்சுக்களை வைத்துக் கொள்வார்கள் போலும் அதில் இவரும் விதி விலக்கல்ல..சில மருந்துகள் சாப்பாட்டாடுக்கு முன்,பின் எடுக்க வேண்டும் இருக்கிறது தானே.அது போலத் தான் இவரை போன்ற அரசியல் வாதிகளின் பேச்சுக்களும் விட்டுடுங்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதிய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேச வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள்.

‪#‎அவர்களிடம்‬ ‪#‎தகுதியில்லாத‬ ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் எதிர் பா ஜ க என்று வந்தபொழுது பா ஜ க

இதுவே பா ஜ க எதிர் ம தி மு க என்றால்

‪#‎I‬ ‪#‎support‬ ‪#‎ம‬ தி மு க தான்

வைக்கோ தமிழ் ஈழத்தின் நீண்ட கால ஆதரவாளர் அதற்காக வருடக்கணக்கில் சிறை சென்று தன்னுடைய அரசியல் வாழ்கையில் பலவற்றை இழந்தவர்...... வைக்கோ எங்களுக்கு முக்கியம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யார் என்றே தெரியாமல் இருந்த பா ஜ கவின் கல்யாண ராமனுக்கு தான் பிரபலமாக ஒரு வழி தேவைப்பட்டது அதுக்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் புலிகளையும் தேசிய தலைவரையும் கொச்சை படுத்தி பிரபலமாகலாம் என்ற ஆயுதம்...

அதுக்கு கூட எங்கள் தேசிய தலைவர் தான் தேவைப்பட்டு இருக்குறார்.....

வாழ்க வசவாளர்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Phil Hughes

இந்த உலகை விட்டு விடைக்கொடுக்கும் இறுதி சடங்கு அவர் படித்த பழைய பாடசாலையில் மண்டபம் நிறைந்த மக்கள் நிறைந்திருக்க நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது ஆஸ்திரேலியா பிரதமர் உட்பட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் மண்டபத்தில் கூடி இருக்க கிரிக்கெட் விளையாட்டையே உயிர் மூச்சாக கொண்டு அந்த விளையாட்டின் போதே உயிரை கொடுத்த அந்த இளம் வீரனின் இறுதி நிகழ்வுகள் இப்பொழுது ஆஸ்திரேலியா சானல் 9 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரசாந்த் படத்துக்காக பாடிய லட்சுமி மேனன்!/////

ஏம்மா இப்பிடி பண்ணுரீங்கலேம்மா.......

அவரு நடிக்குறதே இருந்திட்டு ஒருபடம் அதுவும் வந்த வேகத்தில காணாமல் போய்டும் இதுக்குள்ள நீங்க வேற பாடி பயமுறுத்தினா.....என்னமா ஆகுறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலையிலேயே துடைப்பம், மம்பட்டியுடன் கிளம்பிய த்ரிஷா/////

வர வர படத்தில நடிக்கிற சான்ஸ் குறைஞ்சா இப்பிடி தான் ஆகும்.....சீக்கிரமா கல்யாணத்த கட்டிக்கோ பாப்பா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நான் ஒருமாதமாக தமிழ் பேப்பரே படிக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்/////.

எதுக்கய்யா இவரை எல்லாம் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராய் வைச்சிருக்கீங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு காங்கிரசின் முக்கிய உறுப்பினரிடம் இருந்து வந்திருக்கும் மிக முக்கியமான அறிக்கை......

காவேரி நீர் முல்லை பெரியாறு அணை தமிழக சட்டம்

ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் தூக்கி சாப்பிட கூடிய ஒரு முக்கிய பிரச்னையை கையில் எடுத்து கண்டன அறிக்கையாக வெளியிட்டு இருக்கின்றார்.... தமிழகத்தின் அடுத்த ஆட்சி காங்கிரஸ் தான்//////

குத்தாட்ட நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதா? குஷ்பு கண்டனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் எப்படி போனால்

நமக்கென்ன.?

இருந்தாலும் கேட்காது மனது....

நிலையில்லா உலகில்...நிலைப்பதில்லை

விலையில்லா பிறப்புகள்...

அப்படியும்...நம்

நியாபகத்தில் வருவது

ஔவை பாட்டி சொன்னது தான்...,

#மதியார்தன் தலைவாசல் மிதியாதே...என்று

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை..ஏதாவது ஒரு விடையத்தில் மற்றவர்களிடம் படித்த பின்னர் தான் இவ்வாறனவற்றை எல்லாம் உணர முடிகிறது..அதுவரை நாங்களும் குழந்தைப் பிள்ளைகள் போல தான்.. :):(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முலமைச்சர் இருக்கையை தவிர்த்து நிதியமைச்சர் இருக்கையில் இருந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் பன்னீர்/////

பேசாமல் முதலமைச்சர் இருக்கையில் அம்மாவின் பாதணிகளை வைத்து உங்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்தலாமே? இருக்கையும் வெறுமையா இருக்காது அம்மாவும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகிட்ட மாதிரியும் இருக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லேட்டாக வந்தால் வெளியே நிற்க வேண்டும்.. பாஜக எம்.பிக்களுக்கு மோடி கிடுக்கிப்பிடி!//////

என்னய்யா இவரு அரசு நடத்துறாரா இல்லை பாடசாலை நடத்திறாரா ?

விட்டா முட்டி போடணும் தோப்புகரணம் போடணும் பாராளுமன்றை சுத்தி சுத்தி ஓடனும் என்டெல்லாம் சொல்லுவாரு போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வெள்ளைக்கார அந்நிய தேசத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே சைவ சமையம் அழிக்கப்பட்டு கிறிஸ்தவ மதம் மிக வேகமாக பரவிக்கொண்டிருந்த காலபகுதியில் யாழ்ப்பாணத்தில் தமிழையும் சைவ சமையத்தையும் மீண்டும் வீரியத்தோடு தூக்கி நிறுத்திய ஆறுமுக நாவலர் மறைந்த தினம் இன்று..... அவரின் நினைவுகளை போற்றுவோம்....

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உடமைகள் அணைத்தையும் திரும்ப தருவேன் உயிரை தவிர-ராஜ பக்ஷே/////

இதென்னப்பா உரிமையை கேட்டா உடமைய தருவேன் என்கிறாரு..........

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உடமைகள் அணைத்தையும் திரும்ப தருவேன் உயிரை தவிர-ராஜ பக்ஷே/////

இதென்னப்பா உரிமையை கேட்டா உடமைய தருவேன் என்கிறாரு..........

 

 

தமிழரிடமுள்ள நல்ல குணமும்

அதேநேரம் கெட்ட குணமும் ஒன்றே ஒன்றுதான்...

வாங்கிய  எதையும் இலகுவில்  மறந்துவிடமாட்டார்கள்.....

இது அவருக்கும் புரிய  ஆரம்பித்திருக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.