Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மக்களை சந்தோஷத்தின் உச்சக்கட்டத்துக்கு கொண்டு செல்ல பிரபல நடிகை ராதிகா பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற இருக்கின்றது///////

ஏன் பா சுவிஸ் தமிழர்களே உங்க சந்தோஷத்தின் உச்சகத்துக்கு வேற நடிகைங்க யாருமே கிடைக்கலியா? ......எப்பவுமே உங்க taste ரொம்ப வித்தியாசம் தான் இன்னும் குஷ்பூ ராதிகா என்ற வட்டத்துக்குள்ளையே நில்லுங்க

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மக்களை சந்தோஷத்தின் உச்சக்கட்டத்துக்கு கொண்டு செல்ல பிரபல நடிகை ராதிகா பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற இருக்கின்றது///////

ஏன் பா சுவிஸ் தமிழர்களே உங்க சந்தோஷத்தின் உச்சகத்துக்கு வேற நடிகைங்க யாருமே கிடைக்கலியா? ......எப்பவுமே உங்க taste ரொம்ப வித்தியாசம் தான் இன்னும் குஷ்பூ ராதிகா என்ற வட்டத்துக்குள்ளையே நில்லுங்க

 அவர் டமிழ் சிங்கள..

மற்றும் ஐரோப்பிய  கொள்கைவாதி :icon_mrgreen:

. இதை விட என்னவேண்டும் சுண்டல்...? : :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தமிழர்களே தமிழர்களே......

உங்களுடைய கலா ரசனைக்கு நீங்க ராதிகாவ கூப்பிட்டதும் பாக்க பறவை முனியம்மாவ கூப்பிட்டிருந்தா சுவிஸ் தமிழ் பொண்ணுங்களுக்கு சமைக்கவாவது சொல்லி கொடுத்திருப்பா.....

சுவிஸ் தமிழர்களே தமிழர்களே......

உங்களுடைய கலா ரசனைக்கு நீங்க ராதிகாவ கூப்பிட்டதும் பாக்க பறவை முனியம்மாவ கூப்பிட்டிருந்தா சுவிஸ் தமிழ் பொண்ணுங்களுக்கு சமைக்கவாவது சொல்லி கொடுத்திருப்பா.....

சுவிசில.. ஐரோப்பாவில.. அமெரிக்காவில இல்லாத தமிழ் கலைஞர்களா... கூப்பிடுறதெண்டு வெளிக்கிட்டாச்சு... ராதிகாவா இருந்தாதான் என்ன?!!  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சென்று கொண்டிருக்கிறது இஸ்லாமிய தீவிரவாதம்?

‪#‎பாகிஸ்தான்‬ மாணவர்கள் படுகொலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

THE COMMONWEALTH WON'T MAKE ANY CHANGES TO THE GST, "FULL STOP, END OF STORY", FINANCE MINISTER MATHIAS CORMANN SAYS.

கடந்த வருடம் லேபர் கட்சியின் ஆட்சியில் இருந்து பொறுப்பெடுத்து கொண்ட டோனி அபோட் தலைமையிலான லிபரல் கட்சி அரசு GST வரியை கூட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் நிதியமைச்சர் GST வரியில் எந்தவித மாற்றமும் ஏற்ப்படுத்த மாட்டாது என்று அறிவித்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை தந்தாலும்......லிபரல் கட்சி ஏற்படுத்தி வரும் பல சிக்கன நடவடிக்கைகளும் புதிய வரிகளும் மக்களுக்கு கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தி வருவதால் ஆட்சி பொறுப்பெடுத்து ஒருவருடத்திலையே அதன் செல்வாக்கு மிக வேகமாக சரிந்து வரும் அதே நேரம் 2017 பொதுத்தேர்தலில் மீண்டும் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கும் பொதுப்படையான ஆதரவை வழங்காமல்......மக்களின் விருப்பத்துக்கே விட்டுவிடுவது தான் மிகப்பெரிய ராஜதந்திர முடிவாக இருக்க முடியும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலைசெய்யும் வடக்கிந்திய நண்பன் ஒருவன் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் மும்பை பிரிவில் இருக்க கூடிய ஒரு இளம் கட்சி தலைவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது......

அவர் சொன்னது

மோடியின் வெற்றிக்கு காரணம் தனியாக மோடி என்ற பெயரோ இல்லை மோடி என்ற மனிதரோ காரணம் அல்ல என்றும்..... கட்சியில் இருக்க கூடிய பல மட்ட தலைவர்களும் அவரின் வெற்றிக்காக உழைத்ததாகவும் குறிப்பாக கட்சியின் தலைமை பொறுப்பை எடுத்திருந்த ராஜ்நாத் சிங் மற்றும் அவருக்கு முன்பு தலைமை பொறுப்பில் இருந்த நிதின் கட்கரி. .. போன்ற தலைவர்களின் கடுமுழைப்பும் காரணம் என்றும் ஆனால் இன்று மோடிஅமித்ஷா போன்றவர்கள் கூட்டு சேர்ந்து அமைச்சரவையில் இருப்பவர்களை பெரிதாக மதிபதில்லை என்றும் அவர்கள் தங்கள் துறைகளில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது அமித்ஷா அல்லது மோடியின் அனுமதி பெறவேண்டும் என்றும் அமைச்சரவையில் இருக்கும் பல மூத்த தலைவர்கள் இதனால் வெறுப்பில் இருப்பதாகவும் கூறினார்......

இப்பிடியே போனால் மறுதடவை ஆட்சியை பிடிக்க மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்றும் கூறி ஆதங்கபட்டார்.......

இந்திய அரசியலின் தற்போதை நிலைகளை பார்க்கும் போதும் அப்பிடி தான் இருக்கின்றது......

இவர்களாவே மீண்டும்

காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவார்கள் போல .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"Today we can say again in a loud and clear voice that the United States should never condone or practice torture anywhere in the world," Clinton told the audience.

"That should be absolutely clear as a matter of both policy and law, including our international treaty obligations."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனை வாழவைத்தவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் வாழவைத்தவர் ஆவார் . ஒரு மனிதரை கொன்றவன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கொன்றவன் ஆவான், யுத்தத்தில் கூட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆடு மாடுகளைத் தவிருங்கள்

# முஹம்மது நபி அவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அது என்ன குடிகாரன்னா இளக்காரமா.. எப்ப பார்த்தாலும் புஸ்சு.. புஸ்சுன்னு விலையை கூட்டிப்போடுறீங்க. நாங்க குடிச்சு விழுந்து கிடக்குறதாலதானய்யா கவர்மென்ட்டே ஸ்டெடியா.. நிக்குது

இப்படிக்கி

தமிழக டாஸ்மாக்கின் வீர விழுதுகளில் ஓன்று.....

சொன்னது.....

வெளங்கிடும்....

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கொஞ்சம் தமிழகத்தையும்,காங்கிரசையும் விட்டு வெளிய வந்து வேறை ஏதாச்சும் எழுதுங்களேன்..இல்ல அடிக்கடி அயல் நாட்டோடையே நிக்கிறீங்களே என்ற சின்ன எரிச்சல் தான்..என்ன செய்யிறது.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் பூரா இலங்கை செய்திகளோட நிக்கேக்க நாங்களாவது தமிழகத்த, இந்தியாவ தொடுவமன்.....

அதுவும் யாழ் களத்தின் அதிகூடிய வாசகர்கள் அயல்நாட்டு காரர்கள் தான்....

என்னுடைய முக புத்தகத்தில் அதிக நட்புக்களும் அயல்நாட்டு தமிழர்கள் தான் சோ அங்க எழுதிறது இங்க வரும் ....

மற்றது இங்க வந்து நான் எழுதிறதா கட்டாயம் படிக்க வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்துவதில்லையே.......

மற்றவர்களின் விருப்புவெறுப்பு சார்ந்து நான் எழுத முடியாது...அதற்க்கான அவசியமும் எனக்கில்லை.....

நான் சும்மா பண்ணா ஏதாச்சும் உங்கள் பக்கம் எழுதுபவள் என்று தெரியும் அல்லவா.இன்றும் சொன்னேன் தானே..மன்னிச்சுக் கொள்ளவும்..இனிமேல் ஒன்றும் சொல்ல இல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிஞ்ச்சு ஒவ்வொருத்தனும் கார் ஓட்டுற வேகத்த பாத்தா எவன் மேலையாச்சும் ஏத்தாம போக மாட்டாங்க போல?

கொய்யால அப்பிடி வீட்ட போய் என்னத்த பெருசா வெட்டி புடுங்க போறானுங்க?

ஒருவேளை வீட்டுக்கு வீட்டுக்காரம்மா வர முதல் சமைச்சு வைக்கணும் எண்டதால இப்பிடி ஒடுறான்களோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: மக்கள் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்வதை நான் இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை என பெஷாவர் பள்ளி தாக்குதல் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்/////

எனக்கு என்னமோ இந்திய இராணுவம் யாழ்ப்பாண வைத்திய சாலைக்குள் சென்று நிகழ்த்திய படுகொலைகள் யாபகத்தில் வந்து தொலைக்கிது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை விட்டு சென்ற நொடியில் மரணித்து இருக்க வேண்டும்.... நடை பிணமாய் வாழ்வெல்லாம் திரிவதற்க்கு பதிலாய்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் கூட இன்னும் வரல்ல அதுக்குள்ளே easter eggs வந்திடிச்சு.....கடைகள்ள .....

#வியாபார உலகம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன தனிநாட்டுக்கு இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் ஆதரவு!!////////

நீண்டகாலமாக இழப்புகளாலும் ....மரணங்களாலும் துயரங்களை அனுபவித்துவரும் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் அந்த வகையில் அவர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் ஜனாதிபதிக்கி நன்றிகள்......பலத்த எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் கூட துணிந்து அவர் குரல் கொடுத்திருப்பது இரண்டு நாடுகளினதும் இரண்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே.......

இப்பிடி ஒரு முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு குறைந்த பட்சம் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றாவது சொல்ல மனம் வருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரமணியசுவாமி ஜோக்கர் அல்ல. அவரிடம் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கிறது. சட்டநுணுக்கம் தெரிந்தவர். ஹார்வேர்டில் போய் லெக்சர் தருகிறார். ஆனால், தன் அறிவு அனைத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தும் மிக மிக ஆபத்தான ஒரு மனிதர். அவர் ராஜபக்ஷேவால் பா.ஜ.கவுக்குள் திணிக்கப்பட்ட ஓர் ஏஜென்ட். வைக்கோ.....////

இது தான் உண்மை....இது தான் ஜதார்த்தம்.....நாங்கள் வேண்டும் என்றால் எங்களை திருப்த்தி படுத்த அவர் ஒரு ஜோக்கர் என்று சொல்லிவிட்டு போகலாம் ஆனால் பல்வேறு அரசியல் மட்டங்களிலும் உலகநாடுகளிலும் செல்வாக்கு கொண்ட மிக ஆபத்தான மனிதர்

......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கியூபா தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை தோல்வி அடைந்துவிட்டது... இந்த காலாவதியான அணுகுமுறையை முடிவுக்கு கொண்டு வருவோம். இரு தேசங்களிடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பிறந்தேன்..... பனிப்போர் காலத்தில் நாம் வியட்நாமுக்காக யுத்தம் நடத்தினோம்.. அதே வியட்நாமுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தினோம்.. அதே பாதையில்தான்..." என்று நீளும் இந்த "சரணாகதி" உரைதான் கம்யூனிச கியூபா தேசத்தினருக்கான சர்க்கரை செய்தி.. இந்த உரையை நிகழ்த்தியது.....தங்களை பரம எதிரியாக கருதி முழுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து- தங்களது தேசத்தின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொலை செய்ய முயன்ற அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய பேரரசின் அதிபர் ஒபாமா என்கிற போது உண்மையிலேயே இது கியூபா குடிமக்களுக்கு மட்டுமல்ல.. உலகத்துக்கே இன்ப அதிர்ச்சிதான்... இங்கே வென்றிருப்பது 'நிஜமான' மக்களின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவும் வீரகாவியமான சே உள்ளிட்ட அவரது சகாக்களும். இன்றும் அவருக்கு உற்ற உறுதுணையாக இருக்கும் கியூபா மக்களும்தான்..

பொருளாதார தடைகளையும் அடக்குமுறைகளையும் மிரட்டல்களையும் கண்டு அஞ்சிடமால் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு.......தேசத்தையும் அந்நிய சக்திகளால் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு Cuba நல்ல உதாரணம்........

உலக வரலாறுகள் பல ஈழத்தமிழர்களுக்கு உதாரணமாகி முன்னிற்கின்றது............ஈழத்தமிழர்களுக்கு தற்பொழுதைய தேவை நல்ல ஒரு தலைமை....

தமிழர் தலமைகள்

ஒரு தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை முடிவெடுக்கமுடியாது

அல்லது அதை வெளியில் சொல்லமுடியாது ஒதுங்கி பதுங்கி 

தத்தமது சுயநலவாழ்க்கைகளை பாதுகாப்பதிலேயே காலம் கழிக்கின்றனர்

கவனமாக உள்ளனர்

தமிழ் மக்களோ

தமக்கான முடிவுகளை எடுத்து  அறிவித்து செயற்படுத்தும் தலமையைத்தேடியபடி....

ஆனால் கண்ணுக்கெட்டிய  தூரம்வரை.....

கானல்நீர்தான் தெரிகிறது.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ரஜனிக்கு போட்ட வலையில கடைசியில சிக்கியிருக்கிறது கங்கை அமரனாம் தமிழக பா ஜா க க்கு....

தவிலிசை அக்கா ராஜா கோஷ்டியல வைச்சு பாட்டுப்போட்டி நடத்த தான் சரி .....

அப்பிடியே கங்கை அமரன முதல்வர் வேட்பாளரா அறிவிச்சா இன்னும் சூப்பர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களைப் போல் வர விரும்புகின்றேன்! கொழும்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்த சிறுவன்

//////

ஏன் ராசா? வேற ரோல் மொடேலே கிடைக்கலியா? இன்னுமொரு 100000 தமிழர்கள இந்த உலகத்தே விட்டே அனுப்புற பிளானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசதிகள் வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் இறைவா அடுத்த ஜென்மத்திலாவது சொந்த ஊரை சொந்த நாட்டை விட்டு புலம்பெயராத வாழ்வைத்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.