Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுஷ்மா என்றில்லை யாரு வந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்தியில் கொள்கை என்பது மாறபோவதே இல்லை........ஒரே வழி இந்தியாவை தாண்டி ஒரு பலமான ஷக்த்தியுடன் ஈழத்தமிழர் தரப்பு உறவை முன்னெடுப்பதே.... அதற்க்கு பல விட்டுக்கொடுப்புகளை தமிழர்தரப்பு செய்யவேண்டி இருக்கும்.....

 

அதாவது கொடி...........???

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்முடைய விடுதலையை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு யாரும் பெற்றுத்தர மாட்டார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இருக்கும் புறச்சூழலை சாதகமாகப் பயன்படுத்துவதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது கொடி...........???

திருகோணமலை துறைமுக பயன்பாடு.... மன்னார் எண்ணைவளம்...... இப்பிடி எதோ ஒன்றை கேட்டு தான் வருவார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை துறைமுக பயன்பாடு.... மன்னார் எண்ணைவளம்...... இப்பிடி எதோ ஒன்றை கேட்டு தான் வருவார்கள்.....

 

 

இவற்றை இந்தியாவிடம் கொடுப்பதைவிட

மேல தோசங்களுக்கு   கொடுக்கலாம்

இந்திகள் பெற்றுக்கொண்டதும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு

கொடுத்தவாக்கை  காற்றில் பறக்கிவிட்டுவிடுவார்கள்....

 

ஆனால் தலைவர்  சொன்னது தான் ஞாபகம்  வருகிறது

நான் இல்லாதபோது

முழுமையாகவோ

பிரித்து பிரித்தோ  தமிழீழத்தை கொடுங்கள்

நானிருக்கும்வரை விடமாட்டேன் என.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுதே உறவைத்தேடி வந்த சீனாவை கெட்டியாக பிடித்திருக்கலாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்தா இப்பொழுது முக்கிய பிரமுகர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு அத்வானிக்கு அருகில் போய் அமர்கின்றார்.....

இப்பொழுது ஆப்கானிஸ்தான் அதிபர் வந்து இறங்குகின்றார் ...

சந்திரபாபு நாயுடு சோனியா காந்தி போன்ற பல முக்கியஸ்தர்கள் மோடியின் பதவியேற்ப்பு விழாவில் கூடி இருக்க இன்னும் சற்று வேளையில் இந்தியாவின் 15 ஆவது பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கின்றார்.....

மோடி மிகவும் கம்பீரமாக இந்தியாவின் தலைமகனாக அமர்ந்து இருக்கின்றார் அவருக்கு அருகில் ராஜ்நாத் சிங் மற்றும் Arun ஜெட்லி அமைச்சர்களாக போருபெடுக்க போகின்றவர்கள் அந்த சந்தோஷமான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்கின்றார்கள்....

இதோ இப்பொழுது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் விழாமேடைக்கு வருகின்றார்

அனைவரும் எழுந்து நிக்க இந்திய தேசிய கீதம் இசைக்கபடுகின்ற்றது

மோடி சத்தியபிரமாணம் செய்துகொண்டு இருகின்றார்

இந்திய நாட்டின் 15ஆவது பிரதமாராக மோடி அவர்கள் அடுத்த 5 வருடங்களுக்கான பொறுப்பை எடுத்து இந்தியாவின் உத்தியோக பூர்வ பிரதமராகி விட்டார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மோடி.....இந்து சமயமும் இந்துக்களும்......மற்றும் ஏனைய மக்களும் உங்கள் ஆட்சியின் கீழ் சிறக்கட்டும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்வானியும் மகிந்தாவும் நல்லா கதை நடக்குது....

மகிந்தா: எப்பிடியாச்சும் மோடிய இலங்கை விவகாரத்தில தலையிடாம பாத்துக்கோங்க ஜி.....

அத்வானி: அடபோங்கப்பா...... அவரு என்னையே செல்லாக்காசு ஆக்கிட்டாரு நீங்க எல்லாம் எம்மாத்திரம்......எதுக்கும் சீனாவா கேட்டியா பிடிச்சுக்கோங்க......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மோடி.....இந்து சமயமும் இந்துக்களும்......மற்றும் ஏனைய மக்களும் உங்கள் ஆட்சியின் கீழ் சிறக்கட்டும்.......

 

எதனால் காங்கிரஸ் தோல்வியடைந்ததோ .....அதை திரு.மோடி அவர்கள் நிவர்த்தி செய்தால் சந்தோசமே.....இவர் மூலம் ஈழத்தமிழர் விடயத்தில் எள்ளளவும் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என்பது என் ஊகம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

train க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது அண்டைக்கு இடியுடன் கூடிய செம மழை உடன பக்கத்தில நிண்ட ஒரு தமிழ் பொண்ணு அர்ஜுனா அர்ஜுனா எண்டு காத பொத்திக்கிட்டு யாரையோ கூப்பிட தொடங்கினா ........ நான் அவா அண்ணனா தான் பேர சொல்லி கூப்பிடிறா போல நான் ஒண்டும் பண்ணலியே எதுக்கும் எஸ்கேப் அகிடுவம் எண்டு எஸ்கேப் ஆகிட்டன்

ஆனா அந்த பொண்ணு அர்ஜுனா என்று சொன்னதுக்கு விளக்கம் இண்டைக்கு தான் தெரிஞ்சிச்சு....

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது. அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

அடிப்பாவிங்களா ஆஸ்திரேலியா க்கு கடல் தாண்டி வந்தும் இதை சொல்லிட்டு இருக்கீங்களா டி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நல்ல ஒரு உருப்படியான அறிவிப்பு கல்வியமைச்சருக்கு பாராட்டுக்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரித்தபடி வந்தார் ராஜபக்சே ; டில்லியில் வரவேற்பு!

சிரிச்சபடி வராமல் ஒரு பதவியேற்பு விழாக்கு

அழுதுகிட்டா வருவாங்க.....மகிந்த மேல இருக்கிற விசுவாசத்துக்காக .....இப்பிடி கேணைத்தனமா செய்திகள் போடுறதில தினமலர யாரும் அடிச்சிக்க முடியா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலியிடம் அனுமதி கேட்டு முத்தம் தருவதை காதலியே விரும்ப மாட்டாள்............. !

கண்ணியமான அத்து மீறலை அத்தை மகளும்

தடுக்க மா்ட்டாள்...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி .... என்று அரசுடன் இணைந்து அரசியல் செய்யும் டக்கி மாமாவை ஏன் மகிந்த மாமா இந்தியாக்கு போகும் போது கூட்டிட்டு போகாம கழட்டி விட்டிட்டு போனவர்? டக்கி மாமாவின் அரசியலுக்கு இது இழுக்காச்சே..... அட flight ல இடம் இல்லை எண்டா கூட.... அடுத்த flight ல அழைச்சிட்டு போய் இருக்கலாம்ல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரிசு அரசியல் என்பது எல்லா இடமும் தான் இருக்கு அமெரிக்காவில் புஷ் குடும்பம் தொடங்கி பஞ்சாபில் பாதல் குடும்பம் வரை வாரிசு அரசியல் கொடிகட்டி பறக்குது......ஆக கருணாநிதியை மட்டும் இந்த விடையத்தில் போட்டுத்தாக்கி பயன் இல்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜபக்ஷே வந்திருந்த காரணத்தால்

அவனுக்கு எதிற்ப்பு தெரிவிக்கும் வகையில் நானும் அந்த நிகழ்ச்சியில கலந்து கொள்ளவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் மக்களே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவனும் கோட்டு சூட்டு... போட்டிட்டு கோட்டுக்கு போற அதிசயம் இந்த வெளிநாடுகள்ள தான் நடக்கும்...... என்னமா வெளிக்கிட்டு போறாங்க ஒண்டுமே பண்ணாத மாதிரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு கவுரவமான பதவி கொடுக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sundal: அப்பிடி ஜெயலலிதா செய்தால் மிகச்சிறந்த முடிவாக இருக்கும்.... நல்ல ஒரு ஈழத்தமிழர் ஆதரவாளர்.... நல்ல தொண்டர் பலம் மிக்கவர் குறிப்பாக வன்னிய இளைஞர்கள்...... பா ம க வில் இவர் இருந்து விலகியது பா ம கவிற்கு மிகப்பெரிய இழப்பு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

2. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைப்படும்.

3. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப்செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

4. இன்டர்நெட்டில் பொதுவாக சொல்லும் 3 பொய்கள்a.i have read and agree to the terms of service.b. Status: offlinec. Yes.I am over 18 years old

5.

ஒரு டாய்லெட் சீட்டை விட ஒரு சராசரியான செல்போனில் பேக்டீரியா அதிகமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம்

சன் டிவியில் இயக்குனர் ஷங்கரின் வாரமாம்... ஷங்கரின் படங்கள் எல்லாம் பட்டைய கெளப்ப போகுது பாத்து மகிழுங்கள் மக்காள்ஸ்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வாரம்

சன் டிவியில் இயக்குனர் ஷங்கரின் வாரமாம்... ஷங்கரின் படங்கள் எல்லாம் பட்டைய கெளப்ப போகுது பாத்து மகிழுங்கள் மக்காள்ஸ்......

 

ஷங்கர் தான் சொந்த செலவிலை படம் எடுத்தால் ஒரு கொஞ்ச லட்சத்துக்கை எடுத்து முடிப்பார். ஆனால் வேறை  ஆக்கள் செலவளிக்க இவர் படம் எடுப்பரெண்டால் மில்லியனுக்கு கிட்ட வரும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

70 மில்லியனுக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் இருந்தும் உலகம் என்னவோ 15 மில்லியன் சிங்களவர்களுக்கு சார்பாக தான் இருக்கு...... ஏன் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வை விட பக்கத்து நாட்டு சிங்களவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்குது இந்திய மத்திய அரசு..... ஏன் இப்பிடி உலகநாடுகளால் நாங்கள் புறக்கனிக்கபடுகின்றோம்?????

காரணம் ஒன்றே ஓன்று தான் ஜெர்மனியில் யூத இனத்தை ஹிட்லர் அழித்த போது எப்பிடி ஒட்டு மொத்த உலக யூத மக்களும் ஓன்றுபட்டு ஒற்றுமையாக இருந்து போராடினார்களோ அந்த ஒற்றுமை எங்களுக்குள் இல்லை

வெறும் 200 ரூபாய்களுக்காக பேசப்டுகின்ற தமிழ் நாட்டின் வாக்குகளும் வெறும் புரியாணிக்காக பேசப்டுகின்ற அவர்களின் உணர்வுகளும்...... ஒன்றை மட்டும் சொல்லி நிற்கின்றது..... அதாவது ஒரு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் ஓன்று பட்ட மக்களாக இருந்தாலும் ஈழத்தமிழினம் யாரையும் நம்பாமல் தங்கள் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே......அதற்க்கு எங்களுக்கு தேவை மிகச்சிறந்த ஒரு அரசியல் தலைமை......

அதை காலத்தாய் தான் எங்களுக்கு தரவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

70 மில்லியனுக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் இருந்தும் உலகம் என்னவோ 15 மில்லியன் சிங்களவர்களுக்கு சார்பாக தான் இருக்கு...... ஏன் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வை விட பக்கத்து நாட்டு சிங்களவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்குது இந்திய மத்திய அரசு..... ஏன் இப்பிடி உலகநாடுகளால் நாங்கள் புறக்கனிக்கபடுகின்றோம்?????

காரணம் ஒன்றே ஓன்று தான் ஜெர்மனியில் யூத இனத்தை ஹிட்லர் அழித்த போது எப்பிடி ஒட்டு மொத்த உலக யூத மக்களும் ஓன்றுபட்டு ஒற்றுமையாக இருந்து போராடினார்களோ அந்த ஒற்றுமை எங்களுக்குள் இல்லை

வெறும் 200 ரூபாய்களுக்காக பேசப்டுகின்ற தமிழ் நாட்டின் வாக்குகளும் வெறும் புரியாணிக்காக பேசப்டுகின்ற அவர்களின் உணர்வுகளும்...... ஒன்றை மட்டும் சொல்லி நிற்கின்றது..... அதாவது ஒரு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் ஓன்று பட்ட மக்களாக இருந்தாலும் ஈழத்தமிழினம் யாரையும் நம்பாமல் தங்கள் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே......அதற்க்கு எங்களுக்கு தேவை மிகச்சிறந்த ஒரு அரசியல் தலைமை......

அதை காலத்தாய் தான் எங்களுக்கு தரவேண்டும்....

உண்மையான காரணம் தமிழனது 'ஒற்றுமையின்மை' என்று கூறப்படுவது முற்றிலும் சரியல்ல!

 

யூதர் உட்பட, எல்லா இனங்களிலும் சுயநலவாதிகள் இருக்கிறார்கள்!

 

ஏன், இயேசு நாதரைக் காட்டிகொடுத்தவன் கூட யூதனே!

 

உண்மையான காரணம், தமிழர்- சூத்திரர்களாக, வருணாசிரம தர்மத்தால் வரையறுக்கப் பட்டவர்கள்!

 

எந்தவிதப் பின்னணியும் இல்லாது, சரித்திர ஆதாரங்களுமில்லாது, தமிழன் பழிவாங்கப்படுகின்றான்!

 

இதுவே, முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்கும் காரணமாகும்!

 

உதவி செய்ய விரும்புபவனையும், வருபவனையும், விலகிச் செல்லும்படி 'புத்திமதி' சொல்பவர்கள், எமக்குத் தூரத்தில் இல்லை! :o

 

அருகிலேயே தான் உள்ளார்கள்!

 

சரணடைந்த போராளிகள், கொல்லப்பட்டு, அவர்கள் தலைகள் கூடக் கோடரிகளால், கொத்தப்பட்டமை, தேவர்களால், அசுரர்கள் கொல்லப்பட்டமைக்கு நிகரானது!

 

இப்போதாவது உங்களுக்கு உண்மையான 'கொலையாளிகள்' யார் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Super ji super ji super ji

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலைச்சாமி, முனுசாமி,சின்னசாமி வரிசையில் இப்போ அ தி மு கவில் இருந்து வேலுச்சாமி என்பவரும் நீக்கப்பட்டு இருக்கின்றார்.... சாமி பேரை கடைசி பாதியாக கொண்டவர்களை எல்லாம் அம்மா கட்சியைவிட்டு நீக்கும் மர்மம் என்ன....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.