Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..)

Featured Replies

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..)

Birthday-300x250.jpg

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

genocide-300x263.jpg

எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

எங்களை ஓரளவு மிகவும் குரூரமான அனுபவங்களுக்கு ஆளாக்கியது அஸவேதுவாவின் வெள்ளைக்கார ஆளுனர்கள். அவர்கள் இங்கு செய்த குரூரமான குற்றங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஊவா வெல்லஸ்ஸயில் கலவரத்தை முன்னெடுத்த ப்றவுன்ரிக் ஆளுனர் எமது மக்களை மிகவும் கொடுமையாக நடத்தியமையை அவரிட்ட சட்டங்களே தெளிவுபடுத்துகிறது. அச் சட்டங்களுக்கேற்ப மனிதர்கள் மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நிழல் வழங்கும் மரஞ்செடி கொடிகள் கூட அழிக்கப்படக் கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவை அவ்வாறே செயல்படவில்லையென ‘டேவ்’ சொல்கிறது. இராஜசிங்க அரசன், எஹெலபொல இளவரசியிடம் அவளது குழந்தைகளை அவளைக் கொண்டே உரலிலிட்டு இடித்ததாகச் சொல்லப்படும் கதையும் கூட ஆங்கிலேயர்களால் அரசனை அவமானப்படுத்த பரப்பப்பட்ட வதந்தி என்று இன்று கருதப்படுகிறது.

1983-300x212.jpg

எமது நாட்டில் முதன்முதலாக இனக் கலவரம் உருவானது 1956க்குப் பிறகே. வேறு மொழியொன்றைப் பேசுவதனாலேயே நாம் அதுவரையில் எம்முடனேயே ஒன்றாக இருந்த நேச ஜனங்களை பரம எதிரியாக நோக்கினோம். நிராயுதபாணிகளாக இருந்த அவர்களை நாம் முடிந்தளவு வதைக்குள்ளாக்கி வேதனைப் படுத்தினோம். நாம் எல்லோருமே இப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். எனினும் எங்களில் அனேகர் வெறுமனே பார்த்திருந்தோம்.

மக்களின் வாக்குகளால் பதவியேற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டம் தெற்கில் 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வடக்கில் போராளிகள் சிலரால் எமது இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டதும் நாங்கள் மீண்டும் அப் பழைய இனவாத ஆவேசத்தை தலைகளில் ஏற்றிக் கொண்டோம். எங்களில் சிலர் அவர்களுடனிருந்த, வடக்கிலிருந்து வந்திருந்த நண்பர்களைக் கூட குடும்பத்தோடு உயிருடன் வாகனங்களிலேற்றி எரித்தோம். அதையும் எங்களில் அனேகர் பார்த்திருந்தோம். அரசு உறக்கத்திலிருந்தது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தை மகாராணி நியமித்த ஒலிவர் குணதிலக நிறுத்தினார். எனினும் 1983இல் எங்களுக்கிருந்தது மக்கள் நியமித்த ஜே.ஆர். ஜெயவர்தன.

அவர் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இடம்கொடுத்து வெறுமனே பார்த்திருந்தார். துரதிஷ்டவசமாக முழு உலகத்தினரும் இதனைக் கண்டார்கள். தெற்கில் எங்களுடன் ஒன்றாக இருந்த தமிழர்கள், வீடு வாசல்களைக் கை விட்டுவிட்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். ஒரு கணத்துக்கேனும் நிராயுதபாணிகளாக இருந்த அவர்களது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொடுக்க தெற்கிலிருந்த எங்களுக்கும், அதே போல அரசாங்கத்துக்கும் முடியாமல் போனது.

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஒரு மக்கள் குழுவினரது வாழும் உரிமையை காப்பாற்றிக் கொடுக்காதிருக்கையில், அதைக் காப்பாற்றும் வேறொரு அரசாங்கம் குறித்த கனவுகளைக் காண்பது என்பது மிகவும் இயல்பானது.

அதன்பிறகு 1989 இல் தெற்கில் மீண்டும் மிகப் பெரிய கலவரமொன்று தோன்றியது. ஐயோ..அவ்வாறானதொரு கொடுமை. அப்பாவிகளைக் கொன்றது மாத்திரமல்லாது பிணங்கள் கூட அவமானப்படுத்தப்பட்டன. வீதிகள் தோறும் பிணங்கள்..டயர் சுடலைகள். ஒழுங்கமைக்கப்பட்ட குரூரமொன்றை நாங்கள் இங்கு காட்டினோம். மோதிய இரு புறமும் போட்டிக்கு குரூரமாகின. யார் செய்திருந்தாலும் விஜேசுந்தர, ரிச்சர்ட் சொய்ஸா போன்றவர்களின் படுகொலையானது மிகக் குரூரமான செயல். இக் குரூரமானது நாடு முழுவதிலும் பரவியது. வடக்கிலும் பரவியது.

வடக்கில் மரணத்தை வாழ்க்கையாகக் கொண்டு வரும் மனித வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டன. ஊர் முழுவதுமான, பேரூந்துகள் முழுவதுமான மக்கள் மாண்டனர். ஜனத்திரள் நிறைந்த வீதிகளில் பாரிய குண்டுகள் வெடித்தன. அதுவும் மிகப் பயங்கரமான யுகமொன்று. நாங்கள் தவறுதலாகவோ மிலேச்சத்தனத்தை வீரமாகப் பார்க்கப் பழகினோம். அவ்வாறு இல்லையேல் யாரேனும் எங்களை அப்படிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளினார்கள்.

இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இளவரசர்கள் கூட யுத்த களத்துக்கு அனுப்பப்படும் கட்டாய இராணுவ சேவையொன்று இங்கில்லை. எனவே எங்களில் அனேகர் வாழ்வதற்கு வேறு வழியேதுமின்றியே யுத்த களத்துக்குச் சென்றார்கள். வடக்கிலும் வசதியிருந்தவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு யுத்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளே. இரு புறத்திலுமே யுத்தத்துக்காக இணைக்கப்பட்டவர்கள் ஒருபொழுதேனும் யுத்தத்துக்குச் சென்றிராதவர்கள். இறுதிக் காலத்திலிருந்த பெரும்படையினர் இப்பொழுது எங்களையே சிறையிட்டு விலங்கிடுகிறார்கள். எனவே இங்கு நடந்த யுத்தம் குறித்து பிற மக்கள் ஒவ்வொரு விதத்தில் தீர்மானிக்கிறார்கள். சிலர் நாங்கள் மிகக் குரூரமானவர்கள் எனச் சொல்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர், வயிற்றுக்கு உணவு, மருந்தேதும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறிய பாலைவனமொன்றில் அடைக்கப்பட்டுள்ளவர்களது அச்சம், துயரம், வலியை அறிந்தவர்கள் அவ்வாறு சிறைப்பட்டவர்கள் மாத்திரமே.

அவ்வாறு சிறைப்பட்டவர்கள் இங்குமிருந்தார்கள் என்பதை அக் காலத்தில் நாம் சற்று மறந்திருந்தோம். நாங்கள் 70,000 பேருக்கு உண்ணக் குடிக்க அனுப்பி வைத்தோம். பார்க்கும்போது அங்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறான இடத்தில் மரணத்தை எதிர்நோக்கியவாறிருந்த சமூக சேவையாளர்களும் அகன்றிருந்தால் அம் மக்களுக்கு என்ன நடந்ததென்று உலகுக்குச் சொல்லத் தெரிந்த பிற மனிதனொருவன் இல்லை. எனினும் வானத்திலிருக்கும் செய்மதி இங்கு நடந்த எல்லாவற்றையும், இரவு பகல் பாராது பார்த்திருந்திருக்கிறது. பார்த்திருந்தவற்றை அறிவித்திருக்கிறது.

எங்களால் உலகுக்கு சமாதானம், சந்தோஷம், அமைதி போன்றவற்றைக் காட்டிக் கொள்ள முடியும்.எனினும் நாங்கள் இன்னும் எங்களது மிலேச்சத்தனத்தின் நிர்வாணத்தையே காட்ட முயற்சிக்கிறோம். அந் நிர்வாணத்தை நாங்கள் மூட முயற்சிப்பது அதற்கு சற்றும் சளைக்காத கட்டளைகளால். ஆகவே மூட மூட நிர்வாணம் இன்னுமின்னும் தென்படுகிறது.

எங்களது நாடு புத்தரின் தேசமென இப்பொழுது சிலர் சொல்கிறார்கள். புத்த புத்திரர்கள் ராஜ சபைகளில் உட்காந்திருப்பதுவும் இப்படியாக மட்டுமே. அவர்கள், உலகுக்கு அமைதியை வழிகாட்டுமொன்றை உருவாக்கப் mahintha1-248x300.jpg

பாடுபடுவதைத்தான் காண முடியவில்லை. இன்னும் சிலர், நாடு முழுதும் கோபத்தினதும் குரோதத்தினதும் நினைவுத்தூபிகளைக் கட்ட முயற்சிக்கிறார்கள். இவ்வாறு செல்கையில் இன்னுமொரு மஹிந்த (புத்தரைக் குறிக்கிறது. புத்தரின் நாமம் மஹிந்த) இந்தியாவிலிருந்து இங்கு வரக் கூடும். எனினும் இன்று அங்கு அசோக மன்னர்கள் இல்லை. நாங்கள் எங்களது கௌரவத்தைக் காத்துக் கொள்ள வேண்டியிருப்பது சிங்கங்கள், புலிகளாக எங்களை நாங்களே அடித்துக் கொன்று கொண்டு நாங்கள் அதில் வீரர்கள் என்று உலகுக்குக் காட்டுவதன் மூலமல்ல. எங்கள் எல்லோராலுமே மனிதர்களாக சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக ஒன்றாக இருக்க முடியுமென உலகுக்குக் காட்டுவதன் மூலம்தான். இப் புத்தர் பிறந்தநாளில் நாட்டுக்கு எவ்வாறாயினும் உலகுக்குக் கொடுக்கக் கூடிய தகவல் அதுதான்.

- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி: இனியொரு

http://inioru.com/?p=21400

[size=4]சரத்சந்திர போன்ற நியாயமான சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்கள். ஆனால், அவர்கள் மௌனமாக இருப்பதே புத்தரின் சாபக்கேடு. [/size]

[size=1]

[size=4]ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தொடங்கி, இனவழிப்பை வெளிப்படையாக செய்து இன்று நீதித்துறை மீதே கைவைக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. [/size][/size]

[size=1]

[size=4]இன்றும் சரத்சந்திர போன்ற நியாயமான சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்கள் மௌனமாக இருப்பதே புத்தரின் சாபக்கேடு. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.