Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணத்தில் நலன்புரி நிலையங்கள் அடுத்த மாதம் மூடப்படும்

Featured Replies

[size=4]வட பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் மீள்குடியேற்றும் பணி அடுத்த மாதம் நடுப் பகுதிக்குள் நூறு வீதம் பூர்த்தியடைந்து விடுமென பாதுகாப்பு செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம், இந்தப் பணிகள் முடிவடைந்ததும் வட பகுதியிலுள்ள நலன்புரி முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுமெனவும் அவர் கூறினார்.[/size]

[size=3][size=4]மன்னாரில் காத்தான்குளத்தில் இராணுவத்தினர் நிர்மாணித்த இரண்டு மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள கன்னிமரியாள் சிறுவர் இல்லத்தைத் திறந்து வைத்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.[/size][/size]

[size=3][size=4]இந்த மாதத்தினுள் மீள் குடியேற்றப் பணிகள் முடியவிருக்கின்ற போதிலும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலக் கண்ணிவெடிகள் அதிகமாக புதையுண்டிருப் பதனால், அப்பிரதேசத்தையும் மக்கள் வாழக்கூடிய பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வருவதற்கு மேலும் இரண்டு வார காலம் எடுக்கும் என்றும் அவர் அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]நலன்புரி முகாம்களில் உள்ள அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு முன்னரே வடபகுதியில் ஸ்திர நிலையும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது என இந்த சிறுவர் இல்ல திறப்பு விழாவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]2005 ல் எல். ரி. ரி. ஈ. இந்த சிறுவர் இல்லத்தை இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கியது. பல கொடை வள்ளல்களின் உதவியுடனும், மலேசியாவில் உள்ள சமூக சேவையாளர் குழுவின் உதவியுடனும் இராணுவம் இந்த இரண்டு மாடிக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்து அதற்கான சகல வசதிகளையும் செய்து முடித்துள்ளது.

[size=3][size=4]புனித கன்னி மரியாள் சிறுவர் இல்லம் 5.9 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட் டிருக்கின்றது. தளபாடங்களையும் ஏனைய வற்றையும் வாங்குவதற்கான செலவையும் உட்படுத்தி இதன் நிர்மாணப் பணிகளை முடிப்பதற்கு இராணுவத் தினருக்கு 1.1 மில்லியன் ரூபாவை மிச் சப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]பெற்றோர் அற்ற 6 முதல் 20 வயதுக் கிடைப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இந்த சிறுவர் இல்லத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் சிலருக்கு தாய் அல்லது தந்தையும் மற்றையவர்கள் அனைவரும் அநாதைகளாக இருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. வன்னியில் இருந்து வந்த சுமார் 20 பிள்ளைகள் சிறந்த பராமரிப்புடன் கல்வியையும் தொடர்வதற்கு இந்த சிறுவர் இல்லத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]மலேசியாவில் உள்ள இலங்கை அமைப்புகளை உள்ளடக்கும் ஒரு சம் மேளனம் வழங்கிய நிதியுதவி மூலமே இந்த சிறுவர் இல்லம் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவழி இலங்கை அமைப்புகளும் இதற்கு தாராளமாக உதவி செய்தன.[/size][/size]

[size=3][size=4]சிங்க இராணுவப் படைப் பிரிவின் 54 ஆவது பிரிவு இந்த நிர்மாண வேலைகளை தங்களின் உடல் உழைப்பால் பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது. எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளினால் பாதிப் புக்குள்ளான இந்தப் பிள்ளைகள் முன்னர் ஓலை வீடுகளில் தங்கியிருந்தே கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தமை குறப் பிடத்தக்கது.[/size][/size]

[size=3][size=4]பல சர்வதேச அமைப்புகள் தவறான நிலைப்பாட்டைக் கொண்டுவந்து அர சாங்கத்தின் அழுத்தங்களைக் கொண்டுவந்த போதிலும், எல். ரி. ரி. ஈ. கட்டுப்பாட்டில் இருந்து தப்பி வந்து உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் அரசாங்கமும் இராணுவமும் ஆகக்கூடுத லான பாதுகாப்பை வழங்கியது என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ; மீள்குடியேற்றம் மற்றும் சமூகங்களை ஒன்றிணைக்கும் பணிகளுடன் முன்னாள் எல். ரி. ரி. ஈ. போராளிகளுக்கு புனர் வாழ்வு அளித்து, அவர்கள் அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு உதவி செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் உண்மையிலேயே வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.[/size][/size]

[size=3][size=4]யுத்தம் முடிவடைந்து நாட்டில் சகஜ நிலை திரும்பிய பின்னர், வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த பல இலங்கையர் தாய்நாட்டுக்குத் திரும்பி உண்மை நிலையை இப்போது உணர்ந்துகொண்டி ருப்பதாகவும், இங்கு வந்த பின்னரே அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி தெரிய வந்ததாகக் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]இவ் வைபவத்தில் மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய டாக்டர் இராயப்பு ஜோசப், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னிப் பிரதேச பாதுகாப்புப் படைகளின் தளபதி ‘திஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, மலேசியாவில் இருந்து வந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.[/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=3][size=4][size=3][size=4]யுத்தம் முடிவடைந்து நாட்டில் சகஜ நிலை திரும்பிய பின்னர், வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த பல இலங்கையர் தாய்நாட்டுக்குத் திரும்பி உண்மை நிலையை இப்போது உணர்ந்துகொண்டி ருப்பதாகவும், இங்கு வந்த பின்னரே அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி தெரிய வந்ததாகக் கூறினார். [/size][/size][/size][/size]

[size=4]கனடாவில் இருந்து 25 வருடங்களின் பின்னர் வந்தவர் (கடத்தப்படவர்) நிலை என்ன ? [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.