Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"(அறிவியல் தொடர் )- ராஜ்சிவா -16

Featured Replies

வாவ் ..எனக்கு பிடித்த விடயங்கள் ............முழுமையாய் வாசித்தேன் ................

ஆர்வமாய் உள்ளேன் தொடருங்கள் நண்பரே ................பதிவுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]கடந்தவாரம் விடுபட்டுப் போன நீர்க்கரடி (Tardigrade) பற்றி மீண்டும் சில வார்த்தைகளுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். நீர்க்கரடி, வேற்றுக்கிரக உயிரினமா, இல்லையா என்று கேட்டால், அதற்குப் பதில் தெரியவில்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அந்த உயிரினத்தின் வாழ்வாதார நிலைமைகளில் சில, பூமியில் உள்ள ஒரு உயிரினங்களின் வாழும் முறைக்கு ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. பூமியில் பலவிதமான சூழல்களில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல்நீர், நன்னீர், நிலம், சேற்றுப்பகுதி, காடு, மலை, பனிப்பிரதேசம், பாலைவனம், வெப்பவலயம் எனப் பலவிதமான சூழல்கள் பூமியில் உண்டு. பூமியில் உயிரினம் தோன்றியதிலிருந்து, பூமியில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப படிப்படியாக அவை பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதன் என்னும் அறிவியல் உயிரினம் வரை வந்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சி (இலங்கையில் பரிணாம வளர்ச்சியைக் கூர்ப்பு என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் Evolution) என்பது பற்றி ஒரு தெளிவான கோட்பாடு அறிவியலில் உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தையாக சார்லஸ் டார்வின் (Charles Darwin) என்பவர் வர்ணிக்கப்படுகிறார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர், 20 வருட ஆராய்ச்சியின் மூலம் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory) வெளியிட்டார். டார்வின் பல கோட்பாடுகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றைத் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கை முழுமையாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் மத நம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கும் நேரடியான ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கி.பி.1600 களில் வாழ்ந்த இத்தாலிய அறிஞரான கலிலியோ கலிலி (Galileo Galilei) என்பவரால், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மை சொல்லப்பட்டபோது, மத பீடங்களால் வன்மையாக அவர் கண்டிக்கப்பட்டார். அதுவரை பூமியை மையமாக வைத்துத்தான் சூரியனும், சந்திரனும், பிறகோள்களும் சுற்றிவருகின்றன என்று மதநூல்களில் சொல்லப்பட்டதாக உயர்மட்ட மத அமைப்புகள் எடுத்துக் கொண்டு, கலிலியோ சொன்னதை மறுத்தது. அவர் சொன்னது தவறென்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டும் என அவரை வற்புறுத்தியது. அதன்படியே அவரும் ஒத்துக்கொள்ள வேண்டியும் வந்தது. அதன்பின், நாகரீகம் வளர்ந்த பிற்காலமான 1800 களில் மீண்டும் டார்வினால் மத நம்பிக்கைகளுக்கு எதிரான பரிணாம வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. மனிதனைக் கடவுள் ஆணாகவும், பெண்ணாகவும் நேரடியாகப் படைத்தார் என்று மத நூல்கள் சொல்லியபோது, "இல்லை, ஒவ்வொரு உயிரினமும் இன்னுமொரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகியது. அதுமட்டுமில்லாமல், இந்த வரிசையில் குரங்கிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான்" என்று டார்வின் கூறினார். இந்தக் கோட்பாடு அந்த நேரத்து மநநம்பிக்கையை அப்படியே புரட்டிப் போடும்படி இருந்தது. பல ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து அவர் சமர்ப்பித்த கோட்பாடு அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்றுவரை இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என்று பல மத நம்பிக்கையாளர்கள் சொல்லியபடியேதான் இருக்கிறார்கள். இதற்கு மத நம்பிக்கையாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் ஒன்றும் உள்ளது. 'குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருந்தால், இப்பொழுது குரங்குகள் எப்படி இருக்க முடியும்? அவைதான் மனிதனாக மாறிவிட்டனவே!' என்பதுதான் அந்த வாதம். கேட்கும்போது சரியானதாகத் தோன்றினாலும், இதற்கும் டார்வின் தனது கோட்பாட்டின் மூலம் பதில் சொல்லியே இருந்தார்.

டார்வின் சொன்ன அந்தப் பதில் நீர்க்கரடியின் தன்மைக்கும் பொருந்தும் என்பதால்தான், டார்வின் பற்றிக்கூட நான் இங்கு இவ்வளவு விவரமாகக் கூறவேண்டியிருந்தது. அதாவது, குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எப்படி இருக்க முடியும் என்பதற்கு டார்வின் சொன்ன விளக்கம் இதுதான். 'ஒரு காட்டில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் வாழ்வதற்கும், உண்பதற்கும் தேவையான அளவு பழங்கள் அந்தக் காட்டில் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அந்தக் குரங்குகள் நன்றாக இனத்தைப் பெருக்குகின்றன. இப்போது காட்டில் உள்ள பழங்கள் அனைத்துக் குரங்குகளுக்கும் போதாத அளவுக்கு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் பலசாலியான குரங்குகள், பலமில்லாத குரங்குகளை உணவைப் பெற முடியாமல் அடித்துத் துரத்துகின்றன. இதனால் பலமில்லாத குரங்குகளுக்கு உணவு கிடைப்பது சிரமமாகின்றது. எனவே அந்தக் குரங்குகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் செல்கின்றன. வேறு இடங்களுக்குச் சென்ற குரங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கு பழங்கள் மரத்தில் ஏறிப் பறிக்கவே தேவையில்லாமல், நிலத்திலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி இருக்கின்றன. அதனால் அந்தக் குரங்குகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறத் தொடங்குகின்றன. நிலத்தில் நின்றபடியே பழத்தைப் பறித்து உண்டதால், அவற்றுக்கு வால் என்பது பாவனைக்குத் தேவையில்லாமல் போகத் தொடங்கியது. இதனால் வால் படிப்படியாகச் சுருங்கத் தொடங்குகிறது. வாலில்லாத புது இனக் குரங்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பழைய காட்டில் பழைய குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பிரச்சினை மீண்டும் இந்தப் புதுக் காட்டிலும் தோன்றுகிறது. அங்கும் முன்னர் நடந்தது போல பலமில்லாத குரங்குகள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்றுகிறது. இப்படிப் படிப்படியாகக் குரங்குகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றடைந்ததால் இறுதியாக மனித இனம் தோன்றுகிறது. அதேநேரம் பல்வேறு வகையான குரங்கினங்களும் காணப்படுகின்றன. மனித இனத்தைச் சரியாகக் கவனித்தால், ஆரம்பக் குரங்கினங்களை விடப் பலவீனமான ஒரு இனமாகக் காணப்படுவது தெரிய வரும். மனித இனம், குரங்கின் ஒரு கிளை மூலம் உருவாக, குரங்குகளிலும் பல இனங்கள் உருவாகியிருப்பது தெரியவரும்[/size]

[size=4]. [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]இது போலத்தான் உலகில் உருவாகும், உருமாறும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியில் அது எங்கு வாழ்ந்து வந்ததோ, அந்த அடிப்படையிலேயே குணங்களும், உருவங்களும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். இதையே டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால், நான் கூறிய நீர்க்கரடியின் சில குணங்களும், வாழும் தன்மைகளும் பூமியில் எந்த இடத்திலும் இல்லாத ஒரு சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகியிருக்கிறது. பூச்சியத்துக்கு கீழே -272 பாகை சதம பாகை குளிர் என்பது, பூமியில் எந்த இடத்திலும் இல்லாதது. அதிக வெப்ப நிலையைப் பொறுத்தவரை, பூமியில் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்குக் குளிரான சூழ்நிலை உள்ள இடங்கள் பூமியில் எங்கும் இல்லை. அத்துடன், விண்வெளியின் மிகை அமுக்கத்திலும், கதிர்வீச்சுகளிலும் வாழும் உயிரினமாக நீர்க்கரடி இருப்பதும், பரிணாமக் கொள்கைப்படி சாத்தியமில்லாத ஒன்று. நீர்க்கரடிக்கு இந்தத் தன்மை ஏன், எப்படி உருவாகியது? இது ஒரு அசாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையை, இந்த உயிரினம் எப்படி அடைந்தது? இப்படிச் சிந்திக்கும் போதுதான், இந்த நீர்க்கரடி ஏன் ஒரு ஏலியன் சார்ந்த உயிரினமாக இருக்கக் கூடாது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். விஞ்ஞானிகள் இப்படிச் சந்தேகிப்பதற்கு, எழுந்தமானமாக காரணம் இருக்கவில்லை. அதற்கென அவர்களுக்கு ஒரு திடமான காரணம் இருந்தது. அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர் வேறு ஒரு சம்பவத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.[/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]கடந்த வாரம் செவ்வாயில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படும் எரிகல்லில், உயிரினப் படிவம் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அது போன்று வேறு சம்பவமும் நடந்துதான் இருக்கிறது. நாஸா விஞ்ஞானியான ரிச்சார்ட் ஹூவர் (Dr.Richard Hoover) என்பவர், அலஸ்கா பகுதிகளில் ஆராய்ச்சி செய்தபோது, விண்ணிலிருந்து வந்து விழுந்த எரிகல் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்லிலும் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. புழுவினது வடிவத்தில், பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற உயிரினத்தின் படிமத்தை அந்தக் கல்லில் அவர் கண்டுபிடித்தார். இது Cyanobacteria என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, 'உயிரினம் பூமி தாண்டி வேறு இடங்களிலும் இருக்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது' என்று பலர் கருதத் தொடங்கினார்கள். இதன்படி, பூமியில் இப்போது உள்ள உயிரினங்களின் ஆதாரமே வேற்றுக் கிரகங்களிலிருந்துதான் வந்திருக்கும் என்ற புதிய கோட்பாடும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட புத்தகங்கள் பல உண்டு. முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள். [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]உயிரினங்கள் ஏலியன்கள் சார்ந்தவை என்று விஞ்ஞானிகள் சந்தேகப்படுவதற்கு இன்னுமொரு திடமான காரணமும் உண்டு. இப்போது நான் சொல்லப் போகும் காரணம் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த ஒன்றாக இருக்கும். வழமை போல, இதை மறுத்தும் ஆதரித்தும் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், மறுத்துச் சொல்பவர்களின் குரல்கள் மிகுந்த பலகீனமாகத்தான் ஒலிக்கின்றது. இந்தச் சம்பவம் பற்றி விக்கிப்பீடியா கூடத் தவறான தகவலைத் தந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் முன்னர் சொன்னது போல, இது ஒரு ஹாலிவுட் படத்தின் கதையைப் போலவும் உங்களுக்குத் தோன்றலாம். உண்மை, பொய் என்பதை வாசிக்கும் உங்கள் கைகளிலேயே நான் விட்டுவிடுகிறேன். ஆனால் இந்தத் தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் மட்டும் எனக்கு உண்டு. இவ்வளவு தூரத்துக்கு நான் ஏன் பீடிகை போட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். விசயம் தெரிந்ததும் அதற்கான காரணம் உங்களுக்கே புரியும். [/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]1930 ம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்த மெக்ஸிகோ இனச் சிறுமி, தனது சொந்த இடமான ஷிகுவாகுவாவுக்குச் (Chihuahua) சென்றாள். அங்கு அவள் ஒரு மலைக் குகைக்கு அருகில் வித்தியாசமானதொரு மண்டையோட்டைக் கண்டெடுத்தாள். அந்த மண்டையோடு வழமையான ஒரு மனித மண்டையோடு போல இல்லாமல், மிகவும் வித்தியாசமான வடிவத்தில் இருந்ததை அவதானித்தாள். அந்த மண்டையோடுதான் இப்பொது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் 'ஸ்டார் சைல்ட்' (Starchild) என்று சொல்லப்படும் மண்டையோடாகும். மேலே படத்தில் காணப்படும் மண்டையோடுதான் அந்தப் பெண் கண்டெடுத்த மண்டையோடு. அந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் மிகவும் குறைந்த வயதுடையவர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது. சாதாரணமான ஒரு மனிதக் குழந்தையின் மண்டையோட்டையும், நட்சத்திரக் குழந்தையின் (Starchild) மண்டையோட்டையும் மீண்டும் ஒரு முறை ஒப்பீட்டுக்காகத் தருகிறேன் பாருங்கள்.[/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]இந்த மண்டையோட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில், பல விசயங்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தது. குறிப்பாக, கண்கள் இரண்டும் இருக்கும் குழிகள் மனிதனில் உள்ளவை போலில்லாமல் ஆழமற்றுக் காணப்பட்டன. அப்படி ஆழமில்லாத ஒரு மண்டையோட்டில் மனிதர்களின் கண்கள் அமைந்திருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல், மூக்கின் பகுதிக்கும், வாய்ப்பகுதிக்கும் இடையே கூட மிகவும் வித்தியாசமான தோற்றம் காணப்பட்டது. அந்த மண்டையோட்டின் ஒட்டுமொத்த வடிவமே, மனிதனின் மண்டை யோட்டைப் போல இல்லாமல் வேறாக இருந்தது. அப்படியாயின் இது யாருடைய மண்டை யோடாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தேடி மேலும் ஆராய்ச்சிகள் நடந்தன. ஆராய்ச்சியின் இறுதியில் இது சாதாரன மனிதனின் மண்டையோடே அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்பொழுது உங்களுக்கு வரும் சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கும் வந்தது. அதாவது, 'சில குறைபாடுள்ள குழந்தைகளின் தலைகள் வித்தியாசமான வடிவங்களில் இருப்பவைதானே! அப்படி ஒரு குறைபாட்டுடன் கூடிய குழந்தையின் மண்டையோடாக ஏன் இந்த மண்டையோடும் இருக்கக் கூடாது?' என்று நீங்கள் நினைப்பது போல, அவர்களிடையேயும் கேள்வி எழுந்தது. அதனால் அவை பற்றியும் தெளிவாக ஆராயப்பட்டது. முடிவு அந்த மண்டையோட்டின் சொந்தக்காரக் குழந்தைக்கு அப்படி ஒரு நோய் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று நிரூபணமாகியது. அப்படியென்றால், இந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் யார்? அவர் ஏன் இப்படிப்பட்ட வடிவத்தில் இருக்கிறார்? என்று யோசித்தபோது தான், ஏலியன்கள் பற்றிய சந்தேகம் எழத் தொடங்கியது. [/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]'இந்த மண்டையோடு ஒரு ஏலியனுக்குச் சொந்தமாக இருக்குமோ?' என்ற சந்தேகத்துடன் ஆராய்ச்சிகள் நடந்தன. மண்டையோட்டின் வடிவங்கள் பலவிதங்களில் ஆராயப்பட்டன. எதுவுமே மனித மண்டையோட்டுடன் ஒத்துவரவில்லை. ஆனாலும் அது ஏலியனின் மண்டையோடுதான் என்பதற்கு அந்த ஆதாரங்கள் மட்டும் போதுமானவை இல்லையல்லவா? அதனால், நவீன விஞ்ஞான ஆராய்ச்சியான டிஎன்ஏ (DNA) பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் மூலம் கிடைத்த முடிவுதான் கொஞ்சம் தலையைச் சுற்றும் விதமாக இருக்கின்றது. நான் மேலே ஏன் அவ்வளவு பீடிகை போட்டேன் என்பதற்குக் காரணமும், அந்த முடிவை ஒட்டியதுதான். "அப்படி என்ன முடிவுதான் கிடைத்தது?" என்றுதானே கேட்கிறீர்கள்! சொல்கிறேன். அந்த மண்டையோட்டின் டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், அந்த மண்டையோட்டுக் குழந்தையின் அம்மா சாட்சாத் பூமியில் வாழ்ந்த ஒரு பெண்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அப்பா.......?

அப்பா யாரென்று நிச்சயம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆனாலும், அதுபற்றியும், ஸ்டார் சைல்ட் பற்றியும் விபரமாக அடுத்த வாரம் பார்க்கலாம்.......![/size]

[size=4]http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5906[/size]

இன்று தான் வாசித்து முடித்தேன்!

அடுத்த பாகத்தில், ஏலியன்களைச் சந்திக்கலாம் என எண்ணுகின்றேன்! :D

தொடருங்கள்!

வாவ் ..எனக்கு பிடித்த விடயங்கள் ............முழுமையாய் வாசித்தேன் ................

ஆர்வமாய் உள்ளேன் தொடருங்கள் நண்பரே ................பதிவுக்கு நன்றிகள்

வருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றிகள் புங்கையூரான் அண்ணா, மற்றும் தமிழ் சூரியன் அண்ணா...:)

இப்பிடியான தொடர்களிற்கு யாழ் களத்தில் கிடைக்கும் அமோகமான வரவேற்பினால் :lol: சிறிது நாள்கள் இணைக்காமல் நிறுத்தி இருந்தேன் இப்போது மறுபடியும் இணைக்க தொடங்கி இருக்கேன் .. :wub:

  • 1 year later...
  • தொடங்கியவர்

மனிதர்களுக்கு இரண்டு பெரும் பயங்கள் உள்ளன. முதலாவது பயம், இந்த பூமியில் மனிதர்களைவிட அறிவு மேம்பட்ட ஓர் உயிரினம் தோன்றினால் என்ன செய்வது என்பது. மனிதனுக்கு பலம் பொருந்திய பிற விலங்குகள்மீது அவ்வளவு பயம் கிடையாது. யானைகளையே பிச்சை எடுக்கச் செய்துவிடுவான். சிங்கம், புலி, விஷப்பாம்புகள், கொடூர வைரஸ்கள், பேக்டீரியம்கள் என்று பலவற்றையும் தன் மூளையின் திறத்தால் கையாளத் தெரிந்தவன் மனிதன். ஆனால் மனிதன் அளவுக்கு மூளை கொண்ட, அல்லது அதற்கு அருகே நெருங்கக்கூடிய மூளை கொண்ட ஓர் உயிரினத்தை மனிதன் விட்டுவைக்க மாட்டான். எப்படியாவது அந்த இனத்தையே நிர்மூலம் செய்துவிடத் துடிப்பான் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படி அவன் செய்யாவிட்டால் அந்தப் புதிய இனம், மனித இனத்தை அழித்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

இரண்டாவது பெரிய பயம், மனிதனுக்கு இணையான இப்படிப்பட்ட இனம் இந்தப் பூமியில் இல்லை என்றால், இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மற்றொரு கிரகத்தில் இருக்கலாமோ என்பது. அப்படி ஏதோ ஓரிடத்தில் அவை இருந்து, அவை பூமியை நோக்கி வந்து நம்மை எதிர்கொண்டால் என்ன ஆவது என்பது.

ஏலியன் அல்லது வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா, இல்லையா; இருந்தால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்ற பல கேள்விகள், பல கதைப் புத்தகங்களை, சினிமாக்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் இது ஒரு குடிசைத் தொழில்போல. டாப்லாய்ட் இதழ்கள், கடந்த வாரத்தில் எங்கெல்லாம் பறக்கும் தட்டுகள் வந்து இறங்கியுள்ளன, அவற்றிலிருந்து கீழே இறங்கிய ஏலியன்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்கள், செய்தார்கள் என்பது பற்றி பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுவார்கள்.

இப்படிப்பட்ட மூன்றாம்தர இதழ்கள் சொல்கின்றன என்பதனாலேயே ஏலியன்கள் என்பவை வெறும் புருடா ஆகிவிடமாட்டா. ஏலியன்கள் இருக்கின்றன என்று வாதாடுவோர் எவற்றையெல்லாம் சாட்சியங்களாகக் காண்பிக்கின்றனர்?

ஒரு சாட்சியமாக அவர்கள் முன்வைப்பது பயிர் வட்டங்களை (Crop Circles). உலகின் பல இடங்களில் இவை தோன்றினாலும், மிக அதிகமாக இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வில்ட்ஷயர் கவுண்டிகளில் ஏவ்பரி, ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற இடங்களுக்கு அருகே இந்த மர்ம வட்ட டிசைன்கள் கோதுமை, சோள, பார்லி வயல்களில் திடீர் திடீரெனத் தோன்றுகின்றன. இரவு நேரத்தில், ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, யாருமே பார்க்காதவகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இவற்றில் நிச்சயமாகப் பல, மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவையே. ஆனால் அனைத்தையும் அப்படி ஆதாரபூர்வமாகச் சொல்லிவிட முடியாது. இதுகுறித்துப் பல அறிவியல் கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், குறிப்பாகக் கையைச் சுட்டி, இப்படித்தான் பல நூறு மீட்டர் அகலத்தில் இந்தப் பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம். மனோஜ் நைட் ஷ்யாமளனின் Signs என்ற படம் இந்தப் பயிர் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதே.
 

intha_unmaikal.jpg

உயிர்மை வெளியீடான ராஜ் சிவாவின் ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்ற புத்தகம் பயிர் வட்டங்களில்தான் ஆரம்பிக்கிறது. கணிசமான பக்கங்கள் பயிர் வட்டங்களைப் புரிந்துகொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் எங்கெல்லாம் பயிர் வட்டங்கள் தோன்றியுள்ளன, இவை குறித்து எம்மாதிரியான கதைகள் பரவியுள்ளன, இவற்றின் உண்மை என்னவாக இருக்கும் என்பதை எளிமையாக விளக்குகிறார் ராஜ் சிவா. அடுத்து, இவை ஏலியன்களால் பூமியின் மனிதர்களுக்கு ஏதேனும் தகவல் சொல்வதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி அதுகுறித்துப் பேசுகிறார் ராஜ் சிவா.

வேற்று கிரக உயிரினங்கள் உண்மையிலேயே இருந்தால் அவை பூமியை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது முக்கியமான கேள்வி. ஒளியின் வேகம், ஐன்ஷ்டைனின் சார்பியல் கொள்கை ஒரு விண்கலத்தின் வேகம் குறித்துப் போடும் கட்டுப்பாடுகள், ஒளியை நெருங்கும் வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தில் காலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் போன்ற அடிப்படை அறிவியல் கருத்துகளை ராஜ் சிவா அறிமுகம் செய்கிறார்.

வேற்று கிரக உயிரினங்களைத் தேடும் SETI என்ற திட்டம் குறித்துப் பேசும் ராஜ் சிவா, கார்ல் சேகன் உருவாக்கிய சமிக்ஞைப் படம், அதில் இருக்கும் குறியீடுகளின் பொருள் ஆகியவற்றைக் கொஞ்சமாக விளக்குகிறார். இவற்றைத் திரும்பவும் பயிர் வட்டங்களுடன் தொடர்புபடுத்துகிறார். கார்ல் சேகனின் சமிக்ஞைக்கு பதிலாக இருப்பதுபோன்ற வேறு ஒரு சமிக்ஞை பயிர் வட்டமாக ஓரிடத்தில் தென்பட்டதைக் குறித்துப் பேசுகிறார்.

ஏலியன்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அடிப்படையில் இதற்கான பதில் என்னவாக இருக்கும்?

பூமியில் உயிர்கள் தோன்றியதே அகஸ்மாத்தான ஒரு நிகழ்வுதான். இதே நிகழ்தகவின்படி இன்னோர் இடத்திலும் இந்த விபத்து நடக்கலாம். அப்படிப்பட்ட உயிர் - தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ளும் டி.என்.ஏ போன்ற ஒரு கரிம வேதிப்பொருள் - அது கரி அல்லாத சிலிக்கான் சேர்மமாகக்கூட இருக்கலாம் - இன்னொரு கோளில் ஏன் உருவாகக்கூடாது? அப்படி உருவானால், அதுவும் டார்வின் கொள்கைப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து மூளை வளர்ச்சி அடைந்து, இன்று நம்மைவிட அதிக மூளைத்திறன் கொண்டதாக இருக்கலாம்.

பயிர் வட்டங்கள் குறித்து எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. ஏன் இவை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நெல் வயல்களிலோ கோதுமை வயல்களிலோ காணப்படுவதே இல்லை? ஏன் இந்த ஏலியன்கள் நம்மை வெறுக்கின்றன? ஏன் அவை பொதுவாக மேலை நாடுகளிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகமாக உருவாகின்றன? மாறாக இந்தியாவில் பிள்ளையார் பால் குடிப்பது, சித்தர் பறந்துசெல்வது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன? ஏன் ஏலியன்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே பேசுவதற்கே ஆசைப்படுகின்றன? ஏன் மன்மோகன் சிங்கையோ, நரேந்திர மோதியையோ, ஜெயலலிதாவையோ தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை?

அடுத்து ராஜ் சிவாவின் முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்று கேட்கிறார் அவர். உண்மைகள் என்று அவர் சொல்பவை, ஏலியன்கள் குறித்து அமெரிக்காவில் வந்த பல்வேறு செய்திகள். ஏலியன்களையும் பறக்கும் தட்டுகளையும் கண்ணால் கண்டதாகப் பல சாட்சியங்கள் சொல்ல, அந்தத் தகவல்கள் வெளியே தெரியாமல் இருக்க, அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் மிகுந்த பிரயத்தனத்தைச் செய்கின்றன என்று எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

உண்மையில் ஏலியன்கள் பூமியின் மனிதர்களைத் தொடர்புகொள்கின்றன என்றால் அதை எந்த அரசுமே மறைக்கவேண்டிய தேவை இல்லை. உதாரணமாக, பயிர் வட்டங்கள் ஏலியன்களால் உருவாக்கப்பட்டன என்றே வைத்துக்கொள்வோம். அவற்றை இழுத்து மூட அரசுகள் முயற்சி செய்யவேயில்லை. மற்றபடி பறக்கும் தட்டுகள் குறித்தோ, ஏலியன்களின் உடல்கள் கிடைத்தது குறித்தோ நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் அவற்றை இப்போதைக்கு நம்பத் தயாராக இல்லை. மக்களிடையே ஏலியன்கள் குறித்த அச்சம் அதிகமாகி, அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடும் என்று ஓர் அரசு பயந்தால்தான் இந்தத் தகவல்களையெல்லாம் மூடி மறைக்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் கான்ஸ்பிரசி தியரிகளுக்குப் பஞ்சமே இல்லை.

ஏலியன்கள் தொடர்பாக அறிவியல் அடிப்படையில் தமிழில் கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதப்படவில்லை என்று சொல்வேன். அருண் நரசிம்மன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஒரு புத்தகமும் எழுதினார்; அது வெளியே வராததற்கு நான்தான் காரணம். இனி வெளியாகும் என்று நம்புவோம்.) ராஜ் சிவாவின் புத்தகம் தமிழர்களின் ஆர்வத்தைக் கட்டாயம் தூண்டும்வண்ணம் இருக்கும். அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை கூகிளில் தேடி எடுத்து மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அது கட்டாயம் படிப்போரிடம் விதைக்கும். புத்தகம் எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

வாங்கிப் படியுங்கள். சிறுவர்களைப் படிக்க ஊக்குவியுங்கள். 

 

 

http://www.badriseshadri.in/2014/01/blog-post.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.