Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத இராணுவ ஆட்சி! - கந்தரதன்

Featured Replies

பிரித்தானியாவில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு சிறீலங்காவிற்கு எதிராக தமிழ் மக்களால் கவன ஈர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு எழுச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாத இராணுவ ஆட்சியாளர்களினால், மிலேச்சத்தனமான கொடுமைகள் கட்டவிழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்துவதாக, 1983 ஜுலை 25 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை கடந்த வியாழக்கிழமை இரவு நெல்லியடிப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட எண்மர், நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், நெல்லியடி காவல்துறை அலுவலகத்தில் வைத்து, சிவாஜிலிங்கம் குழுவினரிடம் காவல்துறையினர், ‘29 வருடங்களுக்குமுன் இறந்தவர்களை நினைவுகூர்ந்து என்ன செய்யப்போகின்றீர்கள்?’ என்று கேலியாக கேட்டு விசாரித்ததுடன், வெளியில் இராணுவத்தினர் கடும் கோபத்துடன் நிற்கிறார்கள், அவர்கள் உங்களைத் தாக்கலாம் கவனமாகச் செல்லுங்கள் என எச்சரித்து தம்மை அனுப்பிவைத்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இவ்வாறு சொல்லுமளவிற்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டியுள்ளது. இவ்வாறே, தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் அடாவடிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றிலும் படையினர் ஈடுபடவில்லை என்று அரசு தெரிவிப்பது முற்றிலும் பொய் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் வவுனியா ஜோசெப் முகாமைச் சேர்ந்த படையினர், காணாமற் போனவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் வைத்து, காணாமற் போனவர்களின் உறவினர்களிடம் காணமல் போனோர் தொடர்பிலான முழுமையான விபரங்கள் திரட்டப்பட்டு வெள்ளைக் காகிதத்தில் கையப்பமும் பெறப்பட்டுள்ளன. மூன்று வருடங்களாகத் திரும்பி வராதவர்கள் இனி வரப்போவதில்லை. எனவே காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை மாணவர்களையும் சிறிலங்காப் படையினர் விடுவதாக இல்லை. யாழ்.

குடாநாட்டில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை சீர் குலைப்பதில் முனைப்புக்காட்டிவரும் இராணுவத்தினர், இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களையும் விட்டுவைப்பதாக இல்லை.

பூநகரிப் பிரதேசத்தில், பரீட்சை நடத்தக்கூடாது என்று கட்டளையிட்ட சிறீலங்கா இராணுவத்தினர் பரீட்சை எழுதுவதற்கு வந்த மாணவர்களை தமது விளையாட்டு விழா ஒன்றிற்கு அழைத்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயில் அமைந்துள்ள 65வது படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுக்காக பூநகரிக் கோட்டப் பாடசாலைகளின் 2ம் தவணைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் குறித்த நிகழ்வுக்காக படையினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

படையினரின் இத்தகைய அத்துமீறலால் கல்விச்சமூகம் மத்தியில் பெரும் விசனம் தோன்றியுள்ளது. முழங்காவில் ஆரம்ப பாடசாலை, இரணைதீவு ஆர்.சி.ரி.எம்.எஸ். பாடசாலை, குமுளமுனை சி.ரி.எம்.எஸ். பாடசாலை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகியவை உள்ளிட்ட பூநகரி வலயத்துக்குட்பட்ட 8 பாடசாலைகளிலேயே தவணைப்பரீட்சையை நிறுத்திவிட்டு மாணவர்கள் படையினரின் விளையாட்டு நிகழ்வுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்தவாரம் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு வாகனங்களில் வந்த சிறிலங்கா இராணுவத்தினர் அங்கிருந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு தமது விளையாட்டுப் போட்டி நடைபெறும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். விளையாட்டு விழாவிற்கு மாணவர்களை அனுப்ப தமக்கு ஒத்துழைப்புத் தராவிட்டால் தங்களுடைய கோபத்திற்கு ஆளாகி உயிரை விடவேண்டாம் என்றும் குறித்த பாடசாலை அதிபர்கள் சிறிலங்கா இராணுவத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் வலைய மட்டத்தில் நடைபெறும் இந்த 2ம் தவணைப் பரீட்சையானது மற்றைய பாடசாலைகளில் நடைபெற்று முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவணைப்பரீட்சை அட்டவணைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் படையினரால் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை இதுபோன்ற படையினரின் அத்துமீறும் செயற்பாடுகள் வீழ்ச்சிநிலைக்கே இட்டுச்செல்லும் என்று கல்விச்சமூகம் கவலை தெரிவித்துள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் தான்தோன்றித் தனமான இச்செயற்பாடானது மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கையில் முற்று முழுதாகப் பாதித்துள்ளது என்று பேற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்கச்சியில் சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய புத்தர்சிலை ஒன்று கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் முதலாவது இயந்திர காலாட்படைப் பிரிவினரால் இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் முதலாவது இயந்திர காலாப்படைப் பிரிவின் அதிகாரிகளும் படையினரும் பங்கேற்றதுடன், ஏழு பௌத்த பிக்குகளுக்கும் தானம் வழங்கப்பட்டுள்ளது.

1992ல் இயக்கச்சிப் பகுதியை சிறீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றும் வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் அமைந்திருக்கவில்லை. முன்னர் இயக்கச்சிப் பகுதி ஆனையிறவுப் பெருந்தளத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்தே, அங்கு புத்தர் சிலை ஒன்று இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்டிருந்தது. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனையிறவுப் பெருந்தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டபோது அந்த புத்தர் சிலை இல்லாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் இராணுவத்தினரால் திட்டமிட்டே அமைக்கப்படுகின்றது. இராணுவத்தினர் வைத்ததே சட்டம். எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழர்கள் பொறுமைகாப்பது? இது கேள்விகேட்கும் தருணமல்ல, செயற்படவேண்டிய தருணம்!

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.