Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருகி வரும் நிலத்தடி நீர் வளம்

Featured Replies

தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாடு, புத்தளம் போன்ற பகுதிகள் தமது நீர்த்தேவைக்கு முற்று முழுதாக நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் நிலை இருக்கிறது. நிலத்தடி நீர் தேக்கம் உருவாவது இயற்கையாக, பொதுவாக வருடாந்தம் பெய்யும் மழை மண் ஊடு வழிந்தோடி நிலத்தின் கீழ் சேமிக்கப்படும். நன்னீர் உவர் நீரிலும் அடர்த்தி குறைந்ததால் கீழே உள்ள உவர் நீரில் நன்னீர் மிதந்தபடி இருப்பதுடன், வருடம் வருடம் பெய்யும் மழை நீர் நிலத்தின் ஊடு கீழே சென்று உவர் நீர் மட்டம் மேலே எழாத வாறு தடுக்கிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரித்த விவசாய பாவனை காரணமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு இயற்கையாக வருடாந்தம் மண்ணினுள் சென்று நிலத்தடி நீரை புதுப்பிக்கும் அளவிலும் அதிகமாக இருப்பதால் நிலத்தடியில் இருக்கும் நன்னீரின் அளவு குறைவடைவதுடன், கீழே இருக்கும் உவர் நீர் மேல் எழுந்து கிணற்று நீரை உவர் நீரக்குகிறது. இப்படி பட்ட அனுபவம் யாழ்குடா நாட்டில் அதிகம். இதனால் பல ஊர்களில் நன்னீர் தேடி அலையும் நிலையில் மக்கள்.

அண்மையில் யாழ் குடாநாட்டில் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கிடைத்த முடிவு யாழ் குடாநாட்டில் இருக்கும் கிணறுகளில் 20 % மட்டுமே விவசாயத்துக்கு உகந்த நீரை கொண்டிருப்பதாகவும், 44 % ஓரளவு பொருத்தமானது என்றும் மிகுதி பாவனைக்கு உதவாது என்றும் சொல்கிறது (1).

இன்னும் ஒரு ஆய்வு அதிகரித்த விவசாய உரப் பாவனையால் கிணற்று நீரில் நைத்திறேர் அளவு அதிகரித்து காணப்படுவதாகவும், 88 % ஆனா ஆய்வுக்கு பயன்படுத்திய கிணற்று நீர் குடி நீர் பாவனைக்கு பொருத்தமற்றது என்றும் சொல்கிறது. அதிக அளவில் நைத்திரேர் உட்கொள்ளல் புற்று நோயை உருவாக்கலாம் (5).

1. http://idosi.org/aej...jaes7(1)/15.pdf

வேறு யாழ் குடா நாட்டு நீர் வளம் பற்றிய கட்டுரைகள்

2. http://sp.lyellcolle.../1/181.abstract

3. http://tsunami.obeys...5_Sri_Lanka.pdf

4. http://www.sundayobs...10/18/fea05.asp

5. http://www.cprm.gov....GC/1342837.html

6. http://pubs.er.usgs....cation/ofr77558

அண்மையில் வெளிவந்த ஆராச்சி கட்டுரை இந்த பிரச்சனை யாழ் குடாநாட்டுக்கு மட்டும் தனியனதல்ல ஐக்கிய அமெரிக்கா, இந்திய, மத்திய கிழக்கு என பல பிரதேசங்கள் இதே பிரச்சனையை எதிர் நோக்குவதாக சொல்கிறது.

அந்த ஆராய்ச்சி கட்டுரையும் அதை பற்றி வந்த செய்திகளும்

1. Gleeson T, Wada Y, Bierkens MF, van Beek LP.[size=3] Water balance of global aquifers revealed by ground water footprint.[/size] Nature. 2012 Aug 8;488(7410):197-200. doi: 10.1038/nature11295.

2. http://www.nature.co...-supply-1.11143

3. http://www.google.co...2b665fb0008.791

இந்த விடயம் பற்றி யாழ் களத்தில் 2005 ஆம் ஆண்டு எழுதிய பதிவு.

[size=6]தண்ணீர் தண்ணீர்... ... [/size]...

untitled6fs.jpg

இப்படி ஒரு தொடர் கவிதை எப்போதோ வசித்த ஞாபகம். நிச்சயமாக இது கவிதயல்ல.

உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பற்றிய ஒரு பார்வை.

தண்ணீருக்கான தேவை அதாவது தரமான குடி நீருக்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நன்னீராதாரங்கள் பரப்பளவில் வேகமாக குறைந்துவருகிறன. அத்துடன் இருப்பவையும் மாசாக்கத்துக்குள்ளாகிவருகி�

�ன.

எம் தாயகத்தில் இருக்கும் நன்னீராதாரங்கள் மாசக்கமடைந்துவருவதும் பரப்பளவில் குறைவடைந்துவருவதும் மிகவும் கவலைக்குரியது. இதைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிகைகளில் இடையிடையே கட்டுரை வரும் அத்துடன் அதன் கதை முடிந்துவிடும்.

கேள்விக்குள்ளாகும் நிலத்தடி நீர் வளம்.

1. அதிகரித்த நீர் பாவனையால் வருடாந்தம் பெய்யும் மழை நீர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரை மீள் நிரப்பமுடியாமை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் சமநிலையை பேணுவதற்காh முன்னோரால் ஆங்காங்கு அடைக்கப்பட்ட சிறிய குளங்கள் [யாழ்பாணத்து குளங்கள்] கைவிடப்படல் தூர்வாரப்படாமை. மழைநீர் தேங்கி நிலத்தின் கீழ் வடிந்து செல்லாமல் கடலை வீணே சென்றடைகிறது. மழை நீர் குளங்களில் தேக்கப்படும் போது அது சிறுக சிறுக வடிந்து சென்று நிலத்தடி நீர்ச்சமநிலையை பேணுகிறது.

வன்னி பெருநில வாழ்பனுபவம் கொண்டவர்களுக்கு இது புரியும் பெருங்குளங்களில் நீர்வற்றி வாய்க்கால் வரண்டால் சில இடங்களில் கிணறு வெறுமையாகிவிடும்.

வவுனியாவில் ஆங்காங்கு காணப்படும் குளங்களை நிரவி வீடமைத்து வருவதால் நீர்த்தட்டுபாடு ஏற்படுவாதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.

2. உவர் நீர் ஊடுருவல். இதை யாழ்குடாநாட்டை வாழ்விடாக கொண்டவர்களில் யாரேனும் கண்டு அனுபவித்திருக்க முடியும். அதிகரித்த நீர் பாவனை காரணமாக அடித்தளத்திலுள்ள உவர் நீர் மேலெழல். ஆரம்பத்தில் நன்னீராக இருந்த கிணறுகள் பல இன்று உவர் நீராக மாறியுள்ளன.

3. மலசலகூட கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் சாத்தியம். மாரிகாலத்தில் நீர் மட்டம் பலஅடி மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.

4. நிலத்தில் கொட்டப்படும் இரசாயன உலோக பொருட்கள் மழை நீருடன் கலந்து நிரத்தடி நீரை மாசாக்கும் சாத்தியம்

5. விவசாயத்தில் பாவிக்கப்படும் உரத்தில் காணப்படும் அமோனியா யுரியா போன்றவை நைத்திரேற்றாக்கத்துக்குட்ப�

�ும். இவை மண் துணிக்கைகளால் பற்றி வைத்திருக்கப்பட முடியாதவை. மண்ணும் நைத்தரேற்றுக்களும் எதிரேற்றமுடையவை. இதனால் இலகுவில் கழுவிச்செல்லப்பட்டு நிலத்தடி நீரை அடைகிறது. இவ்வாறு மாசாக்கமடைந்த நீரை அருந்துவதால் புற்று நோய் பிறக்கும், குழந்தைகள் நீலக்குழந்தை நோய்க்கு உட்படல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதை தீர்க்க.. ... .. ..

தற்போது மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.

அத்துடன் சிக்கனமாக நீர்பாசன முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தல்.

குளங்களின் புனருத்தாரணம்

மhசாக்கும் கழிவுகள் பற்றிய கவனம் என்பவை மிகமுக்கியமானது. இதை பற்றி நாமனைவரும் சிந்தித்தால் நம் தாயகத்தை வளப்படுத்தலாம்.

http://www.yarl.com/...?showtopic=4412

Edited by KULAKADDAN

இந்த உங்களது கட்டுரை முன்பு வாசித்திருக்கின்றேன் குளக்காட்டான் . அளவுக்கதிகமான முருகைகற்கள் சீமெந்து உற்பத்திக்காக தோண்டி எடுப்பதும் ஒரு காரணம் . அத்துடன் அதிகரித்துவிட்ட ஆழ்துளைக் கிணறுகளின் பயன்பாடு என்று பட்டியல் நீழுகின்றது . ஆக்கபூர்வமான பதிவிற்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

நன்றி கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.