Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நீதிமன்றத் தீர்ப்பால், அரசியல் கைதியின் உடல்இன்று நல்லடக்கம்.

Featured Replies

[size=4]அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரியதாஸ் டெல்றொக்சனின் பூதவுடல் இன்று மாலை 4 மணிக்கு யாழ்.நீதிமன்ற அனுமதியுடனும், யாழ். பொலிஸாரின் பாதுகாப்புடனும் குருநகர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. யாழ்.பொலிஸாரினால் நேற்று முன்தினம் யாழ். நீதிமன்றில் குறித்த இளைஞனின் சடலத்தை நேற்றைய தினம் 4 மணிக்கு அடக்கம் செய்யுமாறும் மரண ஊர் வலத்தில் குடும்பத்தினர் மட்டுமே காணப்படல் வேண்டும் என்றும் அத்தோடு வாத்திய(பான்ட்) முழக்க மின்றி அடக்கம் செய்வதற்கும் யாழ். நீதிமன்ற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைப் பரிசீலித்த யாழ்.நீதிவான் மா.கணேசராஜா, பொலிஸாரினால் குறிப் பிடப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் அனுமதி வழங்கியதோடு நேற்றைய தினமே சடலத்தினை அடக்கம் செய்யுமாறும் உத்தர விட்டிருந்தார். இதனால் நேற்றைய தினம் சடலத்தினை அடக்கம் செய்வதற்கான கால அவகாசம் போதாமையினாலும், யாழ்.நீதிமன்றினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் முகமாகவும் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு நேற்று மீண்டும் எடுத்துக் கொள்ளப் பட்டது. [/size]

[size=4]இதில் மரணமடைந்த இளைஞன் சார்பில் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகத்தின் அனுசரணையுடன், சட்டத்தரணிகளான பார்த்தீபன்,சுகாஷ், ஸ்ரெலஸ்ரின் ஆகியோ ருடன் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை கவனிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் ஆகியோர் ஆஜ ராகியிருந்தனர். இதன்போது சடலத்தை நேற்றைய தினம் அடக்கம் செய்வதில் உள்ள இடர்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதோடு, உயிரிழந்தவர் கிறிஸ்தவ சமயமாக இருப்பதால் பான்ட் வாத் தியம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் எனவும் மேலும் அவர் சிறந்த கால்பந்து வீரர் ஆகையால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கக்கூடும் என்பதனாலும் குடும்பம் மட்டுமே ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி அனைவரும் பங்கு கொள்வதற்கும் அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கினை ஆராய்ந்த யாழ்.நீதவான் மா.கணேசராஜா சடத் தினை நாளை (இன்று)அடக்கம் செய்வதற்கு உத்தரவிட்டதோடு மரண ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டினையும் தளர்த்தினார். இதனடிப்படையில் பாசையூர் அந்தோ னியார் ஆலயத்திற்கு மாலை 3 மணியள வில் நல்லடக்க ஆராதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மாலை 4 மணியள வில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை யில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளத.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=30010

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.