Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசை எதிர்க்க முடியாத கலைஞரும் அவருடைய உண்ணவிரதமும்.!

Featured Replies

தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் போராட்ட அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்று விமர்சித்தார் கலைஞர் கருணாநிதி. போராட்டத்தின் பின்னடைவிற்கு அது தான் முக்கிய காரணம் என்ற தோரணையில் அவர் ஆகஸ்து 12ம் நாள் நடந்த டெசோ மேடையில் பேசினார்.

தமிழகத் தலைவர்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒற்றுமை நிலவுகிறதா, இது தான் முக்கிய கேள்வி. மாநாட்டில் நிறைவேறிய 17 தீர்மானங்களில் இறுதியானது திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு இடையிலான பூசலை வெளிப்படுத்துகிறது.

“டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்குக் கண்டனம்” என்பது அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். இரு கட்சிகளும் தமது மேலாண்மையைக் காட்டுவதில் குறியாக உள்ளன. ஈழத் தமிழர் நலன் இரண்டாம் பட்சமே.

டெசோ மாநாடு வெற்றி – கலைஞர் பெருமிதம் என்று தி.மு.க சார்பு நாளேடுகள் முழக்கமிடுகின்றன. மாநாடு மிகவும் சிறப்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அதே ஏடுகள் ஈழம் பிரஸ் கூறிவரும் கருத்திற்கு மாறாக விமர்சிக்கின்றன.

எத்தனை மாநாடுகள் நடத்தினால் என்ன தீர்மானங்கள் நிறைவேற்றினால் என்ன இறுதி முடிவு மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது. மாநாட்டுத் தீர்மானம் இலக்கம் 3 “இலங்கையில் நடக்கும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்”; என்று கேட்கிறது.

மாநாட்டின் இயலாமையை வெளிப்படுத்த இது மாத்திரம் போதுமானது. நாய்கள் குரைக்கட்டும் வண்டி நகரட்டும், இது மத்திய அரசின் கொள்கை. உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது சென்னை வந்து கலைஞரைச் சிதம்பரம் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு தமிழ் ஈழ ஆதரவு மாநாடு என்ற தலைப்பையே கலைஞர் மாற்றிவிட்டார். டெசோ மாநாட்டில் “தமிழீழம்” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சகம் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறது. இதற்கு மாறாக அரசியலில் இறங்கு முகமாகச் செல்லும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மாநாட்டில் பேசினார்.

அவர் டெசோ மேடையில் “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தனித் தமிழீழ நாடு அமைவது தான் தீர்வு” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார். ஆனால் அது மாநாட்டு தீர்மானங்களில் ஒன்றாக இணைக்கப்படவில்லை. கலைஞர் ஆட்சியில் இருந்த போது தமிழீழத்திற்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ராம் விலாஸ் பஸ்வான அறியவில்லைப் போலும்.

டெசோ மாநாட்டிற்கு தடையும் இடையூறும் விதித்த இன்றைய அதிமுக அரசைக் கண்டிக்கும் டெசோ தீர்மானம் கடந்த கால வரலாற்றை மறந்து விட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழீழத்திற்கு ஆதரவான கூட்டங்களுக்குத் தடைவிதித்தார். தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஈழ ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்தார்.

பழ நெடுமாறன் அவர்களின் கூட்டங்களுக்குத் தடை விதித்தார். உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுத் தான் ஈழம் ஆதரவுக் கூட்டங்கள் நடந்தன. இது தான் டெசோ மாநாட்டிற்கும் நடந்திருக்கிறது. நடந்தது “நேற்று நான்;, இன்று நீ” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான்.

ஈழத் தமிழரை ஆதரித்துப் பேசியதற்காக நாஞ்சில் சம்பத், சீமான், வைகோ ஆகியோருக்கு எதிராக தேசத் துரோக வழக்குப் போட்டு முதல்வர் கருணாநிதி சிறையில் அடைத்தார். பேச்சு உரிமை பற்றிப் பேசுவதற்கு கலைஞருக்கு என்ன அருகதை இருக்கிறது.

சிங்கள அரசு 2008 – 2009 ஆண்டில் நடத்திய இனப் படுகொலைக்கு இராணுவ உதவி, இராசதந்திர ஆதரவு, வர்த்தகப் பொருளாதார வழங்கல் என்பனவற்றை இந்திய மத்திய அரசு தாரளாமாகக் கொடுத்துதவியது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் அனைத்திற்கும் கூட்டுப் பொறுப்பாளியாவார்.

அவர் இதய சுத்தியுடன் செயற்படுபவராக இருந்தால் மத்திய அரசிற்கு வழங்கும் ஆதரவையும் பங்களிப்பையும் விலக்கி விட்டு டெசோ மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் முட்டாளாக்கும் டெசோ மாநாட்டை நடத்தியிருக்கிறார்.

டெசோ மாநாட்டை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மேலிடத்து உத்தரவுக்கு அமைவாகப் புறக்கணித்தனர். தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமறைவானார். ஆனால் கப்பல்துறை அமைச்சர் ஐ.கே.வாசன் சென்னையில் தலை காட்டினார்.

“இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர் நலனில் மாத்திரமல்ல உலகத் தமிழர் நலனிலும் அக்கறை காட்டுகிறது. தமிழர் நலனுக்காக மத்திய அரசு தீவிரமாக உழைக்கிறது” என்று சொன்னார்.

இந்த வாக்குமூலம் ஒன்று மாத்திரம் ஈழத் தமிழர்களைத் திருப்திப் படுத்தப் போதுமானது என்று அவர் நினைக்கிறார் போலும். ஆகஸ்து 12ம் நாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி காங்கிரஸ் கட்சியினர் மாநாட்டில் பங்கு பற்ற மாட்டார்களா என்று கேள்விக்கு அது அவர்களுடைய கருத்து என்று பதில் கூறினார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 27ம் நாள் கருணாநிதி நடத்திய சில மணிநேரம் நீடித்த சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு டெசோ மாநாட்டில் அவர் புதிய விளக்கம் அளித்துள்ளார். “இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவாதம் அளித்து அதன் நகல் எனக்குத் தரப்பட்டது. போர் முடிந்ததாக நினைத்து நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது” என்றார்.

இந்த கூற்றைப் பொய்யாக்க இந்தியன் டிபென்ஸ் றிவியூ சஞ்சிகை நிருபர் சசிக்குமாருக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச பின்வருமாறு சொன்னார்.

கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முதல் நாள் மாலை நான்கு மணிக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர்; மேனன் கொத்தபாயவை அவசரமாகத் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக் குழு ஒன்று அவசரமாகக் கொழும்பு வரவிருப்பதாக மேனன் சொன்னார்.

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக நாம் யுத்தம் தவிர்ப்புப் பிரதேசத்திற்குள் செல் தாக்குதல்கள் உட்படச் சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

“எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்சவும், அதிபர் ராஜபக்சவின் செயலர் லலித் வீரத்துங்கவும் இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய சிங் ஆகியோர் இணைந்து செயற்பட்டோம்.”

இராணுவ நடவடிக்கை தொடர வேண்டும் என்பதில் இந்தியா காட்டிய ஆர்வத்தையும் கொத்தபாய இந்த நேர்காணலில் விளக்கிக் கூறினார். கொழும்பு சென்ற இந்திய அதிகாரிகள் குழுவின் தூண்டுதல் மற்றும் ஒத்துழைப்புடன் கருணாநிதியின் உண்ணா விரதத்தை நிறுத்தும் போலி அறிக்கை விடப்பட்டது.

கொத்தபாயாவின் இந்த வாக்குமூலம் கருணாநிதியின் உண்ணா விரதம் தொடர்பாகப் பல ஐயப்பாடுகளை எழுப்புகின்றன. “உண்ணா விரதம் நடத்திய நாளன்று எவருக்கும் அறிவிக்காது அதிகாலையில் அண்ணா சமாதிக்கு முன்னால் தீடிர் உண்ணாவிரதம் தொடங்கியதாகக்” கருணாநிதி சொல்கிறார். இதைத் தமிழக, இந்திய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

Indian Defence Review நிருபர் சசிக்குமாருக்கு வழங்கிய கொத்தபாயாவின் நேர்காணல் கருணாநிதியின் கூற்றை மறுக்கிறது. முதல் நாளே இந்திய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதி அடுத்த நாள் நடத்தவிருந்த உண்ணாவிரதத்தை நிறுத்தும் உத்தியை உருவாக்கி விட்டனர்.

கருணாநிதி சொல்வது போல் அவருடைய உண்ணாவிரதம் “எவருக்கும் அறிவிக்காது” நடத்தப்பட்டதல்ல. அடுத்ததாக இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றவில்லை. இந்தியா போரை நடத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது. இதில் கருணாநிதிக்கும் சம பங்கு உண்டு.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடரும். குடிலன் கருணாநிதியின் பொய், பசப்பு, துரோகத்தனம் நிரந்தரமானது. கருணாவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று ஈழத் தமிழர் ஒருவர் கேட்டார். பெரிதாக ஒன்றும் இல்லை என்பது தான் பதில்.

www.Tamilkathir.com

[size=4]2009ம் ஆண்டு ஏப்ரல் 27ம் நாள் கருணாநிதி நடத்திய சில மணிநேரம் நீடித்த சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு டெசோ மாநாட்டில் அவர் புதிய விளக்கம் அளித்துள்ளார். “இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவாதம் அளித்து அதன் நகல் எனக்குத் தரப்பட்டது. போர் முடிந்ததாக நினைத்து நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது” என்றார்.[/size]

[size=4]இந்த கூற்றைப் பொய்யாக்க இந்தியன் டிபென்ஸ் றிவியூ சஞ்சிகை நிருபர் சசிக்குமாருக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச பின்வருமாறு சொன்னார்.[/size]

[size=4]கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முதல் நாள் மாலை நான்கு மணிக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர்; மேனன் கொத்தபாயவை அவசரமாகத் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக் குழு ஒன்று அவசரமாகக் கொழும்பு வரவிருப்பதாக மேனன் சொன்னார்.[/size]

[size=4]முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக நாம் யுத்தம் தவிர்ப்புப் பிரதேசத்திற்குள் செல் தாக்குதல்கள் உட்படச் சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.[/size]

[size=4]“எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்சவும், அதிபர் ராஜபக்சவின் செயலர் லலித் வீரத்துங்கவும் இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய சிங் ஆகியோர் இணைந்து செயற்பட்டோம்.”[/size]

[size=4]இராணுவ நடவடிக்கை தொடர வேண்டும் என்பதில் இந்தியா காட்டிய ஆர்வத்தையும் கொத்தபாய இந்த நேர்காணலில் விளக்கிக் கூறினார். கொழும்பு சென்ற இந்திய அதிகாரிகள் குழுவின் தூண்டுதல் மற்றும் ஒத்துழைப்புடன் கருணாநிதியின் உண்ணா விரதத்தை நிறுத்தும் போலி அறிக்கை விடப்பட்டது.[/size]

[size=4]கொத்தபாயாவின் இந்த வாக்குமூலம் கருணாநிதியின் உண்ணா விரதம் தொடர்பாகப் பல ஐயப்பாடுகளை எழுப்புகின்றன. “உண்ணா விரதம் நடத்திய நாளன்று எவருக்கும் அறிவிக்காது அதிகாலையில் அண்ணா சமாதிக்கு முன்னால் தீடிர் உண்ணாவிரதம் தொடங்கியதாகக்” கருணாநிதி சொல்கிறார். இதைத் தமிழக, இந்திய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.[/size]

Indian Defence Review[size=4] நிருபர் சசிக்குமாருக்கு வழங்கிய கொத்தபாயாவின் நேர்காணல் கருணாநிதியின் கூற்றை மறுக்கிறது. முதல் நாளே இந்திய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதி அடுத்த நாள் நடத்தவிருந்த உண்ணாவிரதத்தை நிறுத்தும் உத்தியை உருவாக்கி விட்டனர்.[/size]

[size=4]கருணாநிதி சொல்வது போல் அவருடைய உண்ணாவிரதம் “எவருக்கும் அறிவிக்காது” நடத்தப்பட்டதல்ல. அடுத்ததாக இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றவில்லை. இந்தியா போரை நடத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது. இதில் கருணாநிதிக்கும் சம பங்கு உண்டு.[/size]

[size=4]தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடரும். குடிலன் கருணாநிதியின் பொய், பசப்பு, துரோகத்தனம் நிரந்தரமானது. கருணாவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று ஈழத் தமிழர் ஒருவர் கேட்டார். பெரிதாக ஒன்றும் இல்லை என்பது தான் பதில்.[/size]

கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் தக்கு முக்கு திக்கு தாளம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.