Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கை வீட்டில் தாய், தந்தை மகளின் சடலங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர்.

4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81710/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண வீதியில் உள்ள வாடகை வீடொன்றில், தந்தை, தாய் மற்றும் தங்கையை மர்மமான முறையில் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற மகனை கைதுசெய்வதற்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமை மற்றும் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சந்தேக நபர் இந்த கொலையை செய்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர் பலரிடம் கடனாக பணத்தை பெற்று அதனை மீண்டும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர் விஷம் ஒன்றை உடலில் பரவச் செய்து, தந்தை, தாய் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சடலங்களில் வெளிகாயங்கள் எதுவும் காணப்படவில்லை.

சாரதியாக தொழில் புரிந்து வந்த 60 வயதான குமாரசுவாமி (தந்தை), 58 வயதான பூபதி (தாய்) , 23 வயதான குமாரசுவாமி அனதிபிரியா (தங்கை) ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பில் உள்ள முன்னணி மருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வரும் நிறுவனம் ஒன்றில் விநியோக முகாமையாளராக சில வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். 29 வயதான சந்தேக நபர் கொட்டகலை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர்.

அவர் கொழும்புக்கு தொழில் புரிய சென்ற பின்னர், ராமகிருஷ்ண வீதியில் இலக்கம் 6 என்ற விலாசத்தில் உள்ள வீடொன்றில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். அந்த வீட்டில் இரண்டு படுகை அறைகளும், ஒரு விராந்தாவும், சிறிய சமையலறையும் உள்ளன.

அவசர தேவை எனக் கூறி சந்தேக நபர் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கடந்த 12 ஆம் திகதி தனது காரில், கொட்டகலையில் இருந்து கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் குறித்த வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த 15 ஆம் திகதி இவர்களுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவம் இடம்பெற்று மறுதினம் 16 ஆம் திகதி காலையில், சந்தேக நபர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றதை பிரதேசத்தில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி வீட்டில் இருந்து துர்நற்றம் வீசுவதை அவதானித்த வீட்டு உரிமையாளரான பெண், அது குறித்து வெள்ளவத்தை காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற காவற்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் அறையொன்றின் கட்டிலில், மூன்று சடலம் காணப்பட்டுள்ளது. சடலங்கள் அதிகளவில் பழுதடைந்து காணப்பட்டுள்ளது. சடலங்கள் வெள்ளை துணியினால் மூடப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது கற்பூர வில்லை போடப்பட்டிருந்ததுடன், அறை முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தவிர ஒருவகையான மருந்தின் துண்டுகளும், அறையில் விழுந்து கிடந்த நிலையில் காவற்துறையினரால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் அழுகிய பின்னர், துர்நாற்றம் வீசுவதை தவிர்ப்பதற்காக வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள கடையொன்றில், இந்த கற்பூரவில்லைகளையும், வாசனை திரவியங்களை வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர்,

சந்தேக நபர் கொட்டகலையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று, அவருடைய துணிமணிகள் மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81772/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... நாதாரிகள், தமிழ் சமுதாயத்தில் பிற‌க்கவே... படாது.

அந்த வே-- மகனை, அந்தத் தாய் தந்தையர், சின்னனில் அடி கொடுத்து, வளர்த்திருந்தால்... அவன் இதைச் செய்திருப்பானா?

பிள்ளைக்கு, அடி கொடுத்து வளர்க்கப்படாது என்பவர்களுக்கு, இந்த அப்பாவி தாய்,தந்தையும், சகோதரியுமே... பலியானர்கள்.

இது, தொட‌ர்க‌தையாக‌... இருக்க‌ப் ப‌டாது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வெள்ளவத்தையில் சடலங்கள் மீட்பு; சந்தேகநபர் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க உத்தரவு[/size]

[size=2]

[size=4]gavel(34)(9).jpg[/size][/size][size=2]

[size=4](லக்மால் சூரியகொட)

வெள்ளவத்தை வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர், நாட்டைவிட்டு வெளியேறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை குடிவரவு, கடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பணித்தது.

இந்த சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களின் மகனான ராசன் குமாரசாமி காணாமல் போயுள்ளார் என்று நிதிமன்றத்தில் பொலிஸார் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதவான் பிரகாஷ் ரணசிங்க மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

மேலும், காணாமல் போயுள்ளவரின் நண்பிகள் இருவரினால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரு தொலைபேசிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கைத்தொலைபேசிய இணைப்புக் கம்பனிகள் இரண்டுக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

இதனையடுத்து இந்த வழங்கு விசாரணையை ஓகஸ்ட் 27 வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரின் சடலங்கள் வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டன.

சங்கிலி குமாரசாமி (வயது 60), ஐயப்பன் பிரமணி (வயது 58) மற்றும் அனிதா பிரியா (வயது 23) ஆகிய மூவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களாவர். இவர்கள் கொட்டகலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [/size][/size][size=2]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47010-2012-08-20-14-11-50.html[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன்: என்னை சில தினங்களில் உருக்குலைந்த சடலமாக காணலாம்

௭ன்னை மன்னித்து விடுங்கள், நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன். வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுசென்றிருந்தால் அம்மாவும், அப்பாவும் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்திருக்கும். ஆகையால்தான் நான் இந்த முடிவை ௭டுத்தேன் ௭ன வெள்ளவத்தை முக்கொலையின் பிரதான சந்தேகநபரான குமார சுவாமி பிரசான் மின்னஞ்சல்மூலமாக தனது சகோதரி ஒருவருக்குத் தெரிவித்துள்ளார்.

கடன் தொல்லை தாங்கமுடியாமலேயே நான் இந்த முடிவை ௭டுத்தேன். நான் கெட்டவன் அல்ல ௭ன்னை மன்னித்து விடுங்கள். சில தினங்களில் கிராமத்தில் காட்டுப்பகுதி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ௭ன்னை நீங்கள் சடலமாக காணலாம். ௭னது இந்த முடிவை யார் மீதும் சுமத்தவேண்டாம் ௭னவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று (20.08.2012) தனது ஒன்றுவிட்ட சகோதரியான ரோசி ௭ன்பவருக்கு இந்த செய்தி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த செய்தி சந்தேகநபருடைய நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் உடனடியாக அவ்விடயம் வெள்ளவத்தை பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சலை கொள்ளுப்பிட்டி 5ஆம் ஒழுங்கை பகுதியிலுள்ள கபே ஒன்றிலிருந்து தான் அனுப்புவதாகவும் அந்த இடம் தனக்கு ரொம்பவும் பிடித்தமான இடம் ௭னவும் சந்தேகநபரான பிரசான் அந்த மின்னஞ்சல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டா உள்ளிட்ட குழுவினர்கள் உடனடியாக அந்த கபே பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு பிரசான் இருக்கவில்ைல. அதனைத் தொடர்ந்து இவ்வாறு வந்த மின்னஞ்சல் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தபோது அந்த மின்னஞ்சல் செய்தியானது இரத்மலானை சந்தியிலுள்ள கபே ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டமை கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு தனது சகோதரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தி வருமாறு:–

ஹாய் அக்கா, மன்னித்துக்கொள்ளுங்கள். நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன். வாழ்க்கையை இவ்வாறே கொண்டு சென்றிருந்தால் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். அதனால் தான் நான் இப்படி செய்தேன்.

இப்போது வாழ்வதற்கு ௭னக்கு ஆசை ஏற்படுகிறது. ஒருவகை மருந்துப் பொருளே ௭ங்களது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ரொம்ப கடன் அக்கா இப்படிவந்தால் சொல்லி வேலையில்லை. இருந்தாலும், நான் கெட்டவன் இல்லை. ௭ன்னை நம்புங்கள். ௭னது குடும்பத்திற்கு நான் ஒரு நல்ல மனிதன்.

நான் இப்பொழுது கொழும்பு 3 இல் இருந்து வெளியில் செல்லுகிறேன். இன்னும் சில தினங்களில் கிராமத்தில் ௭ங்கோ ஒரு காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீச ௭னது சடலம் கண்டறியப்படும். அந்த நேரத்தில் நீங்கள் ௭ன்னை சடலமாக பார்க்கலாம். ஒரு தடவையாவது ௭னக்காக கண்ணீர் விடுங்கள். கண்ணீர் விட்டு அழவும். அக்கா நான் இப்பொழுது கொள்ளுப்பிட்டி ஐந்தாவது ஒழுங்கையிலுள்ள கபே ஒன்றில் இருக்கிறேன்.

நான் அதிகமாக விரும்பும் இடம் இது. சிறுவர்களுக்கு ௭ன்னைப்பற்றி அதிகமாக சொல்லவேண்டாம். அவ்வாறு சொல்லி ௭ன்னை கெட்டவனாக காட்டவேண்டாம். சிறுவர்களும் மகள் செலியும் ஞாபகத்திற்கு வருகிறது. நன்றாக படிக்கச் சொல்லுங்கள். சித்தப்பா உங்களைவிட்டும் குடும்பத்துடன் போகிறேன். மன்னித்து விடுங்கள். அண்ணா மன்னித்து விடுங்கள். ஜெகான் மன்னித்து விடுங்கள். பிரேம் மன்னித்து விடுங்கள். பெத்ஜானா மன்னித்து விடுங்கள். சசி அக்கா மன்னித்து விடுங்கள். லொரேன் மன்னித்து விடுங்கள்.

கடைசியாக மாமியிடம் தேநீர் கொஞ்சம் கேட்டேன். மாமி கொடுக்கவில்லை. அதற்குப் பரவாயில்லை. ௭னது இந்த முடிவை யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். நித்தியகல்யாணியிடம் ௭ன்னை மன்னிக்குமாறு கூறுங்கள். அவள் பாவம். அவளைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். நான் போகிறேன். ௭ல்லோரிடமிருந்தும் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன் ௭ன அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=276

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் கைது.

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,தங்கையை கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தவேளை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி வீரகேசரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை ஓய்வுபெற்ற போது கிடைத்த பணத்தை கொடுக்காததாலேயே குடும்பத்தவரை

25 ஆகஸ்ட் 2012

lg-share-en.gif

கொலை செய்தார் மகன் :

prasanth_CI.jpg

தந்தை ஓய்வுபெற்ற போது, கிடைத்த பணத்தை கேட்டதாகவும் அவர் அதனை கொடுக்கவில்லை எனவும் அந்த பணத்தை எடுப்பதற்காகவே, தாய், தந்தை, சகோதரி ஆகியோருக்கு யோகட்டில், விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ததாக கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள மகன், காவற்துறையினர் நடத்திய விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி இந்த கொலைகளை செய்த, சந்தேக நபர், கொழும்பில் இருந்து குருணாகல் நோக்கி பேருந்தில் சென்றுக்கொண்டிருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று (24) கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கடவத்தை காவற்துறையினரின் உதவியுடன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மதியம் சந்தேக நபரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், தலைமுடியை வெட்டி, தனது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்து தாய், தந்தை மற்றும் சகோதரின் அடையாள அட்டைகள், அவர்களை கொலை செய்ய பயன்படுத்திய விஷத்தன்மை கொண்ட தூளின் ஒரு பகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். தான் பெறும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் அந்த பணத்தை நண்பர்களிடம் கடனாக பெற்றிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் தான் மிகவும் ஆடம்பரமாக வாழ்வதாக பெற்றோருக்கு இனங்காட்டி கொண்ட, சந்தேக நபர் அதிக வாடகை செலுத்தி வாகனம் பெற்றுக்கொண்டு, சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை அழைத்து வந்துள்ளார்.

அதிகம் கடனை பெற்றதால், அதனை செலுத்த முடியாது, சிரமங்களை எதிர்நோக்கி வந்த சந்தேக நபர், தந்தை பணியில் இருந்து ஓய்வுபெற்ற போது கிடைத்த 3 லட்சம் ரூபாவை தனக்கு கொடுக்குமாறு கோரி வந்து;ளளார். இதனை கொடுக்க மறுத்ததால், பெற்றோருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற நபர், தான் சென்ற வாடகை காரில் பெற்றோர் மற்றும் சகோதரியை கொழும்பு அழைத்து வந்துள்ளார். பின்னர், தந்தையிடம் இருக்கும் பணத்தை கொள்ளையிட திட்டமிட்ட சந்தேக நபர், கொழும்பில் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் வைத்து பெற்றோரையும் சகோதரியையும் கொலை செய்துள்ளார். நித்திரை செய்ய பயன்படுத்தும் மருந்து ஒன்றை யோகட்டுடன் கலந்து கொடுத்து விட்டு, சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, கொட்டகலை வீட்டுக்கு சென்று தந்தையிடம் இருந்த பணத்தை தேடியுள்ளார். பணம் கிடைக்காதால், மனமுடைந்த சந்தேக நபர் பல நாட்களாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82002/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

3p.jpg

2p.jpg

1p.jpg

123PRASA.jpg

12345PRASHA.jpg

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்.

வெள்ளவத்தைப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்திய முக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் குமாரசாமி பிரசான் கொழும்பு பிரதான நீதவான் நீதின்றில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் திருமதி புஞ்சிஹேவா உத்தரவிட்டார்.

தாய்,தந்தை மற்றும் சகோதரி ஆகியோரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரசான் கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தவேளை கடவத்தையில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இச்சந்தேக நபரை வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இவரிடம் எதிர்வரும் 28ஆம் திகதி முழுமையான வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டதுடன் அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

கொழும்பு இராமகிருஷ்ணா டெரஸ் பகுதியில் கடந்த 18ஆம் திகதி தாய்,தந்தை,சகோதரி ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராணியப்பு தோட்டத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரையும் சந்தேக நபரான பிரசான் கொழும்புக்கு அழைத்து வந்தமையினாலும் அவர்களைச் சடலங்களாக மீட்கப்பட்ட பின்னர் பிரசான் தலைமறைவான காரணத்தினாலும் பொலிஸார் இவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா இறந்ததை அறிந்து அவரது தாலிக் கொடியை கழற்றி அடகு வைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன்: பிரசான்

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்த ௭னக்கு பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்காக வருமானத்திற்கு அப்பால் கடன் பெற்றேன். கடன்தொல்லையை ௭ன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா,அப்பாவிடம் பணம் கேட்டேன். அவர்களும் தரவில்லை இவ்வாறான நிலையிலேயே அவர்களுக்கும் தங்கைக்கும் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து வில்லைகளை கொடுத்தேன். அதில் அம்மா இறந்து விட்டார். அதனை அறிந்து நான் அம்மா அணிந்திருந்த தாலிக் கொடியை கழற்றி அடகு ைவ்த்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேகநபரான மகன் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் 3 மணிநேரம் விசாரணைகளை நடத்திய போதிலும் அவர் ஒருசொட்டு கண்ணீரையேனும் சிந்தவில்லை ௭ன்றும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தாய், தந்தை, மற்றும் தங்கை ஆகிய மூவரையும் படுகொலை செய்த சந்தேகநபரான பிரசான் மூவரும் கொலையுண்டதன் பின்னர் தாயின் தாலிக்கொடி அடங்களாக சடலங்களில் இருந்த சகல நகைகளையும் கழற்றி அவற்றை அடகு வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறித்த சந்தேக நபர் யோகட்டில் தூக்க மாத்திரையினை கல ந்து கொடுக்கவில்லையெனவும் மில்க்சேக் பழச்சாற்றுடன் கலந்தே தாய், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரையும் கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் வழங்கியு ள் ள ார். சந்தேக நபரான பிரசான் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பழச்சாறு பாணங்கள் விற்பனை நிலையமொன்றிலிருந்து கடந்த 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இரவு மில்க்சேக் பழச்சாறு பாணத்தைவாங்கிக் கொண்டு சென்றதாகவும் அதிலேயே தூளாக்கப்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து மூவருக்கும் கொடுத்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். முதலில் பாணத்தை அப்பாவுக்கும் பின்னர் அம்மாவுக்கும் கொடுத்துள்ளார். அந்த சமயம் தங்கை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். தங்கை குளித்து விட்டு வந்ததும் அவளுக்காக வைத்திருந்த மில்க்சேக்கை அப்பா ௭டுத்து கொடுத்துள்ளார்.

தங்கையும் அதனை முழுமையாக குடித்துள்ளார். மூவரும் ௭ந்தவித சந்தேகமுமின்றி அந்த பழச்சாற்றினை குடித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேகநபர் தாயின் கழுத்திலிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சகல தங்க ஆபரணங்களையும் கழட்டியதுடன் தங்கையின் கழுத்து மற்றும் காதுகளில் இருந்து நகைகளையும் கழட்டியெடுத்துக் கொண்டு மூவரையும் ஒரே கட்டிலில் வரிசையாக கிடக்கச் செய்து விட்டு தானும் சிறிதளவு தூக்க மாத்திரை கலந்த பழச்சாற்றினை அருந்திவிட்டு அன்றைய பொழுதை சடலங்களுடனேயே கழித்துள்ளார். அடுத்த நாள் 15 ஆம் திகதி விழித்தெழுந்த சந்தேகநபர் அன்றுமாலை கொழும்பில் சில பகுதிகளில் சுற்றித்திரிந்ததுடன் காதலியை சந்தித்து கதைத்தும் உள்ளார். அதனைத் தொடர்ந்து கொழும்பு ஹோட்டல் ஒன்றில் அன்றைய பொழுதை கழித்துள்ளார். அதன் பின்னர் அடுத்த நாளான 16 ஆம் திகதி மீண்டும் கொட்டகலை ராணியப்புத் தோட்டத்துக்குச் சென்று பிரசான் அங்கிருந்து மேலும் சில நகைகளையும் வங்கிப்புத்தகங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் ௭டுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்துள்ளார்.

இவ்வாறு கொழும்புக்கு வந்த பிரசான் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பிரபலமான நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில் சகல நகைகளையும் அடகு வைத்து விட்டு 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார். குறித்த ஹோட்டலில் இரண்டு நாள் தங்குவதற்காக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்ட அவர் அந்த ஹோட்டலில் ஒரு நாளே தங்கியுள்ளார். பின்னர் 18 ஆம் திகதி பதுளைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கொழும்பு வந்துள்ளார். இவ்வாறு பல இடங்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்த அவர் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளார். இவ்வாறு பல இடங்களுக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று சந்தேக நபர் கடவத்தை பகுதியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

வீரகேசரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.