Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதி புற்றுநோயால் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maj.gen.jeyathilake.jpg

[size=4]சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.

இவர் மரணமாகும் போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வந்தார்.

54 வயதான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமானார்.

34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றவர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிழக்கிலும், வடக்கிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலகவின் இறுதிச்சடங்கு இன்று கண்டியில் நடைபெறவுள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120820106832[/size]

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

எல்லா கடவுள்களும் அவரின் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளட்டும் .

அவரின் ஆன்மாவுக்கு ஒரு வேண்டுகோள் .

மேலோகம் என்று ஒன்று இருந்தால் அங்கு எமது உறவுகளை சந்தித்தால் எனது சார்பாக ( நான் தமிழ் இந்தியன் ) மன்னிப்பை கூறவும் . ஒரு தமிழனாக இயலாமைக்கும் ஒரு இந்தியனாக ஊமையாகவும் செவிடாகவும் குருடாகவும் இருந்ததற்கும் .

மேலும் அங்காவது இன துவேசம் இல்லாது அனைவரையும் அரவணைத்து வாழவும்.

அவர் மன்னிப்பு கேட்க தேவையில்லை .

ஏனெனில் அவர் தன் இனத்தின் கட்டளை ஏற்று போராடியவர் . எங்கள் இனத்தில் உள்ளவர்கள் போல துரோகியாக இல்லாது தன் இனத்திற்கு சாகும் வரை உழைத்து இருப்பவர் . சிங்களனே உனக்கு உன் இனபற்றுக்கு ஒரு மனமார்ந்த சல்யூட்.

என் இனத்தில் நான் மனதார சல்யுட் பண்ணும் அளவுக்கு தகுதியானவர்களை மூன்று வரும் முன்பே தொலைத்து விட்டேன். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன். வேறு யாரவாது வருவார்களா சல்யுட் மட்டும் பண்ணிட்டு ஒதுங்கி வேடிக்கை பார்க்கலாம் என்று . அது ஒன்று தான் கையாலாகாத என்னால் முடியும். நான் என்னை மட்டும் கூறுகிறேன் . பிறரை கூறவில்லை

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இனஅழிப்புப் போரில் பிரதான பங்காற்றிய இராணுவத்தளபதிகளில் ஒருவரான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக்க புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.

இவர் மரணமாகும் போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வந்தார்.

54 வயதான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமானார்.

34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர்இ இந்தியாஇ அமெரிக்காஇ பிரித்தானியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றவர். தமிழ் மக்களுக்கு எதிரான போரில் கிழக்கிலும் வடக்கிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர் வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலகவின் இறுதிச்சடங்கு நேற்று கண்டியில் நடைபெற்றதாக சிறீலங்கா செய்திகள் தெரிவிக்கிக்ளறன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமாவரான இவர், வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலைசெய்யப்படுவதற்கு காரணகர்த்தாவாக விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=29486

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.