Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது அகவையில் "மட்டு ஈழநாதம்"!

Featured Replies

இருள்படு துயரில் ஓர் தளைப்பு!

Administrator

Monday, 01 May 2006

அன்புடன் வாசகர்களுக்கு!

ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை.

அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்து வருகின்றது.

ஒவ்வொரு பத்திரிகைகளும் பத்திரிகா தர்மத்தைக் கடைப்பிடித்து ஒரு நடுநிலை பிறழாமல் செல்ல வேண்டும். இது கடினமான விடயம். ஈழநாதம் (மட். பதிப்பு) அதற்கென சில தனித்துவங்கள் இருக்கின்றன. தமிழ் தேசியத்திற்காக தமிழ் தேசியத்தின் குரலாக அது ஒலிக்கின்றது. இது ஈழநாதத்தின் தனித்துவமான பண்பு.

சிங்களப் பேரினவாதத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து தமிழ் பேசும் மக்களுக்கான தெளிவை ஊட்ட வேண்டிய பணியை முன்னெடுத்தது. சிங்களப் பேரினவாத அரசின் கூலிப்படையும் அதனோடு இணைந்து செயற்படுகின்ற துரோகக் கும்பலும் ஈழநாதத்திற்கு வேட்டு வைக்க முயன்றன.

கிழக்கில் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் கனதியாகி தலை விரித்தாடிய சூழலில் ஈழநாதத்தின் வரவை நிறுத்தி விடுவதற்கான பல்வேறு துரோகத் தனங்களையும் மேற்கொள்வதில் முனைப்புக் காட்டினார்கள். எனினும், ஈழநாதம் தமது இலட்சியத்தில் உறுதியாகவிருந்தது. இதன் உச்சக்கட்டமாகவே விநியோகப் பணியாளர்கள் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினர்.

எமது விநியோகப் பணியாளன் கண்ணமுத்து அரசகுமார் யூன் மாதம் 29ம் திகதி சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றார். அதற்குப் பின்னர் ஈழநாதத்தின் வரவில் தளம்பல் ஏற்படும் என நினைத்தவர்கள் தோல்வி கண்டனர். தொடர்ச்சியாக அதன் வருகை தடையின்றி வளர்ந்தது.

மீண்டும் ஒரு பணியாளன் மீது துரோகக் கும்பல் வேட்டு வைக்கின்றது. செப்டெம்பர் 30ம் நாள் கிருஷ்ணபிள்ளை ஜோக்குமார் என்ற விநியோகப் பணியாளனின் உயிர் தேசத்துரோகிகளால் பறிக்கப்படுகின்றது.

ஈழநாதம் சந்தித்த மிகத் துக்ககரமான நிகழ்வாக இவ்விரு பணியாளர்களது உயிர்கள் பறி போனது. எனினும், எமது பணிகளை நிறுத்தவில்லை. எத்தனை இடர்கள் துன்பங்கள் எதிர்நோக்கினும் ஈழநாதம் தினமும் அச்சேறியது. வாசகர் கரங்களில் தவழ்ந்தது. அதேவேளை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் வாசகர்களுக்கு சென்றடைவதில் தான் தடங்கல் ஏற்பட்டது.

எனினும் படுவான்கரை வாழ் மக்;களின் வாசிப்பு அவாவைப் பூர்த்தி செய்தது. ஒரு பத்திரிகை சுதந்திரமாக தமது கருத்துக்களை உரத்து ஒலிக்கின்ற போது அங்கே ஜனநாயகத்தினை அடையாளம் காண முடிகின்றது. ஆனால் படையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒரு பத்திரிகை சென்றடைந்து மக்களுக்கு சரியான தெளிவூட்டலை வழங்க முடியாத சூழல் என்றால் அங்கே ஜனநாயகம் இல்லை என்பது தான் அதன் அர்த்தம்.

அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அந்த ஜனநாயகப் பண்பு நிறைந்திருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதில் அடுத்த விடயம் என்னவெனில் ஒரு பத்திரிகையின் வளர்ச்சி அந்தப் பத்திரிகை மீது வாசகர்கள் காட்டும் ஆர்வமும், விநியோகமும் விளம்பரதாரர்களின் பேராதரவும் ஆகும்.

இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்கு ஈழநாதம் சென்றடைவதில் ஏற்பட்ட தடங்கல் நிலை விநியோகத்தில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. எனினும், படுவான்கரை வாழ் மக்கள் அதன் வளர்ச்சிக்குக் காட்டும் ஆதரவு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

இது உங்கள் பத்திரிகை. உங்கள் உணர்வுகளையும், உங்கள் மனச்சுமைகளையும், அபிலாசைகளையும் தாங்கி வருவதுடன் உங்களுக்க கவே குரல் எழுப்புகின்றது.

எனவே, அதனை எதிர்காலத்தில் வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும், அரவணைப்பும் இம்மண்ணில் அதிகரிக்கப்பட வேண்டும். இன்றையகாலம் ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் துரித வளர்ச்சியடைந்துள்ளன.

இணையத்தளங்களுடாக செய்தி பரிமாற்றங்கள், தகவல்களை அறிகின்ற நவீன வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதும் எமது மண்ணில் மக்களுக்கு அவ்வாறான வழிமுறைகள் இலகுவானவையல்ல. அது மாத்திரமன்றி ஒரு பத்திரிகையில் வாசிப்பு மூலம் கிடைக்கின்ற நிறைவு ஏனைய ஊடகங்கள் மூலம் கிடைப்பதில்லை.

இந்த அடிப்படையில் மக்களுக்கான சிறந்த ஊடகமாக அச்சு ஊடகங்கள் இருப்பதுடன் மிக அடிமட்ட சமூகத்திற்கும் சென்றடையக் கூடியதாக அமைகின்றது. எனவே, எதிர்காலத்தில் ஈழநாதம் வளர்வுறுவதற்கு எமது தாயக உறவுகள், வர்த்தக சமூகத்தினர் பூரண ஆதரவையும், ஒத்துழைப்பை யும் நல்கிட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

பிரதம ஆசிரியர்.

http://www.battieelanatham.com/newsite/ind...id=55&Itemid=36

  • தொடங்கியவர்

இரண்டாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மட்டு ஈழநாததிற்கு யாழ்கள உறவுகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்திக் கொள்கிறேன்! கலத்திலிருந்தே தடைகளை உடைத்து வீறுநடை போடும் பணி மகத்தானது.

புலத்திலுள்ள தேசியத்திற்கான ஊடகங்கள் செய்யத்தவறியவைகளை செய்யத்தவறியவைகளை செய்து காட்டி விட்டாய்!

உன் பணி தேசம் விடிவுறும் வரை தொடரட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இருள்படு துயரில் ஓர் தளைப்பு!

þÐ ±ýÉ ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä :roll:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அதன் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

மென்மேலும் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2வது அகவையில் காலடி வைத்திருக்கும் மட்டு ஈழனாதத்துக்கு எனது வாழ்த்துக்கள். எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் சேவைபுரியும் பத்திரிகையில் வேலை செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாதத்தின் வளர்ச்சிக்காக இன்னுயிர் ஈர்ந்தவர்கள்

மட்டு ஈழநாதம்

ஈழநாதம் பதிப்பின் விநியோகத்துக்கு சிறிலங்கா அரச படைகளும் அவை அரவணைத்து போஷிக்கும் ஒட்டுப்படைகளும் செய்யும் தடுப்புக்கள் சொற்பமானவையே அல்ல. இந்த தடுப்புக்களை எதிர்கொண்டு ஈழநாதம் செய்யும் ஊடகப் பயணத்தில் இரண்டு அரிய உயிர்களை இழந்திருக்கின்றோம். நாட்டுப்பற்றாளர்கள் க.அரசகுமார், கி.ஜோக்குமார் ஆகிய அந்த அர்ப்பணிப்பாளர்களின் நினைவுடனும் கனவுடனும் எமது ஊடகப்பயணம் தொடர்கின்றது.

நாட்டுப் பற்றாளர் கண்ணமுத்து அரசகுமார் (வவி)

கண்ணமுத்து அரசகுமார். அவன்தான் வவி. ஈழநாதம் (மட். பதிப்பு) அலுவலகத்தில் அவனும் ஒரு பணியாளனாக இணைகின்றான். அன்பு, சுறுசுறுப்பு, அவனது பணி விநியோகம்… அதிகாலையில் உந்துருளியில் அலுவலக வாயிலால் வருவான்.

பத்திரிகைப் பொதிகளை உந்துருளியில் வைத்துக் கட்டிக் கொண்டு பொழுது புலரும் முன்பே அவனது பயணம் தொடங்கிவிடும். கல்முனை தொடக்கம் அக்கரைப்பற்று வரைக்கும் விநியோக முகவர்களிடம் சேர்ப்பித்துவிட்டு வரும் போது சேகரிக்கப்பட்ட செய்திகளையும் கொண்டு வந்து ஆசிரியர்பீடத்தில் ஒப்படைப்பான்.

அன்பான மனைவி, செல்லமான குழந்தைகள். வவியின் வாழ்க்கை ஈழநாதம் விநியோகத்துடன் மகிழ்வுறக் காலம் நகருகிறது.

ஈழநாதத்தின் எழுச்சி துரித வளர்ச்சி வாசகர்களின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க, பேரினவாதிகள் தேசவிரோதக் கும்பல்கள் இதனை நிறுத்த வேண்டும் என சதித்திட்டமிடுகின்றனர். பல்வேறு துரோகத்தனங்களை மேற்கொண்டும் விநியோக சேவை தளம்பலின்றி நடைபெறுகிறது.

தமிழ்த்தேசியத்தின் மீது தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது பற்றுறுதி கொண்ட பணியாளன் அரசகுமார் அரச பயங்கரவாதத்தின் மிரட்டலுக்கு அடி பணியவில்லை (வவி) வவியின் உந்துருளி உறுமிக் கொண்டு தினமும் படை ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்று வருகிறது. அன்றுதான் யூலை 29ம் நாள் ஈழநாதம் கண்ணீர் விட்டுக் கதறியழுத நாள்.

ஆம். வவி வழக்கமான விநியோகத்திற்குச் செல்கின்றான். களுவாஞ்சிகுடி, கல்லாறு, கல்முனை, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனைக்கு அவன் செல்ல முன்னரே திட்டமிட்டு துப்பாக்கிகளுடன் நின்ற துரோகிகள் குறிவைத்து விட்டனர். புற்தரையில் அவனது உடல் சரிகிறது. கொண்டு சென்ற பத்திரிகைகள் குருதியில் நனைய அந்த ஆத்மா மூச்சு விடுகிறது.

இது ஈழநாதம் (மட்.பதிப்பு) கடந்த வருடம் கண்ட மிகப் பெரிய துக்கரமான நிகழ்வு. வவி தேசியம் மீது கொண்டிருந்த பற்றுறுதியும், நேசிப்பும் அவனுக்கு நாட்டுப்பற்றாளன் என்ற உயர் நிலையை வழங்குகின்றது.

இப்போது வவி சாதாரண மனிதனல்ல. தமிழ்த் தேசியத்திற்காக உயிர் விட்ட நாட்டுப் பற்றாளனாகி விட்டான். ஈழநாதம் என்றும் அவனை நினைவுகூரும்.

நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணபிள்ளை ஜோக்குமார்

கிருஸ்ணபிள்ளை ஜோக்குமார். சுறுசுறுப்பும், கலகலப்பும் நிறைந்தவன். எல்லோரிடமும் சரளமாகப் பேசி இதயத்தை வென்றெடுக்கும் குண இயல்பு குடிகொண்டவன். இவனும் ஈழநாதத்தின் விநியோகப் பணியாளரில் ஒருவன்.

இவனது விநியோகப் பயணம் மட்டக்களப்பு நகர் நோக்கியது. தினமும் காலையில் உந்துருளியில் பத்திரிகைப் பொதியினைக் கட்டிக் கொண்டு பறந்து செல்வான். மண்முனைத் துறையூடாகச் சென்று ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி அடுத்து வருவது மட்டக்களப்பு நகர்.

மட்டக்களப்பு நகரில் அத்தனை விநியோக முகவர்களுக்கும் விநியோகித்து விட்டு வீடு திரும்புவான் கொக்கட்டிச்சோலைக்கு.

வவி தேசவிரோதக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த ஜோக்குமார் மனந் தளரவில்லை. தமது விநியோகத்தில் தளர்ச்சியடையவில்லை. இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியிலுள்ள பகுதி மக்களுக்கு ஈழநாதம் சென்றடைய வேண்டும் என்பதில் ஒரே இலட்சியமாக இருந்தான்.

தினமும் அவனது பணி நடைபெறுகிறது. ஆனால் ஆகஸ்ட் 30ம் திகதி காலை இப்படியொரு அதிர்ச்சித் தகவல் அலுவலகத்துக்குக் கிடைக்குமா? என்று எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்

மட்டு-ஈநாதம் தமிழ் மண்னெங்கும் பரவிட தளராமல்,படை கொண்டு பதறாமல்,துணிவோடு மலரட்டும்....தொடர்ந்து...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.