Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் – பழ. நெடுமாறன்

Featured Replies

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார்.

இலங்கையில் போர் நடந்த போது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும் என்று கூறியுள்ளார்.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங்களில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்துடன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினைக்குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார்.

ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர் உடன்பாடு செய்ய முடியாது, எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு.

ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப்படித்தான் இந்திய அரசு செயல்படவேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் எனது நிலைப்பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி.

ஈழப்போராளிகளுக்கிடையே சகோதர யுத்தத்தை தூண்டிவிட்டதற்கும் அந்தப்போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும் நெடுமாறன்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். வரலாற்று உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இவ்வாறு கூறியிருக்கிறார்.

1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் சகல போராளி இயக்கங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. ஈழ விடுதலை அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மனமாற விரும்பினார். இதற்காக குறிப்பிட்ட நாளில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் தன்னைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது இந்த அழைப்பை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி போராளி இயக்கத் தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையும் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்துவதற்கான முதல் நடவடிக்கையை இதன் மூலம் மேற்கொண்டவர் கருணாநிதிதான், தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிளவு வேலைகளை வரிசையாக சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். உதாரணத்திற்கு இங்கே ஒன்றை சுட்டிக்காட்டினேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தவரும் கருணாநிதியே. இந்த உண்மையை மறைக்க பிறர் மீது பழிசுமத்த முற்படும் அவரின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை.

தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானத் தீர்மானத்தில் ஜெயலலிதா கொண்டுவந்தது எனக்கு நினைவு இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு அதன் நகல்களை நாங்களும் எங்களுடைய தோழமை கட்சிகளும் கொளுத்தி கைது செய்யப்பட்டோம். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்பவனைப் போல நாடறிந்த இந்த உண்மையை மறைப்பதற்கு கருணாநிதி முயற்சி செய்கிறார்.

டெசோ மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் போடக்கூடாது என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவரைச் சந்தித்து வற்புறுத்தியதாகவும் அதனை தான் ஏற்றுக்கொண்டதாகவும் நெடுமாறன் கூறியிருப்பது பொய்யாகும் குற்றம் சாட்டியிருக்கிறார். அது உண்மையில்லை என்றால் நடத்தப்பட்ட மாநாட்டின் பெயரிலோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிலுமோ தமிழீழம் என்ற சொல்லே இடம்பெறாமல் போனதற்கு யார் பொறுப்பு? மத்திய அமைச்சர் பொறுப்பு இல்லை என்று சொன்னால் இவர் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். எதைக் கண்டு அஞ்சி அவர் இவ்வாறு செய்தார் என்பதையாவது வெளியிடவேண்டும்.

நேற்றைய தினம் இந்திய நாடாளுமன்றத்திற்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டதற்கு பின்னணி என்ன? முன்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மதுரையில் நடத்தவிருந்த பெரும் ஆர்ப்பாட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதே அதைப் போல இப்போதும் கைவிடப்பட்டிருக்கிறது. திரைமறைவில் நிர்பந்தம் செய்தது யார்? பகிரங்கமாக வெளியிடும் துணிவு கருணாநிதிக்கு உண்டா?

ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது நடத்திய டொசோ மாநாடும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது. முதிர்ந்த வயதில் அதற்குத்தக்க பக்குவம் இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளால் மற்றவர்கள் மீது வசைபாடுவது அவரையே திருப்பித் தாக்கும் என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறாரோ அவ்வளவுக்கு அவருக்கு நல்லது.

( பழ. நெடுமாறன் )

ஒருங்கிணைப்பாளர்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

http://thaaitamil.com/?p=29791

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

வயதில் பெரியவர் நெடுமாறன் அவர்கள் .. நாய் நம்மை கடித்தால் நாயை நாம திரும்ப கடிக்க கூடாது . இது எளியவனுடைய சின்ன வேண்டுகோள்..

டிஸ்கி:

எதுக்கு கருநாகம் இவ்வளவு நாடகம்.. அதாவது இப்போ மனிதனுடைய வயதில் கணக்கில் வைத்து... 90 முதல் 10 கிளாஸ்( அவுங்களுக்கும் விளங்கும்) ஆக இப்பொதைய 15 ரூ 90 வயது வரைக்கும் உள்ளவர்களுக்கு கருநாவின் பவுசு என்ன என்று தெளிவாக தெரிந்து இருக்கும் .. எல்லாருக்கும் தெரிந்து இருந்தும்....

அப்படி இருந்தும் கருநா ஏன் நாய் மாறி ஈழம் ஈழம் என்று குலைக்கிறார்..?

அங்கிட்டுதான் ரேட்டிக்ஸ் இருக்கு அது உங்களுக்கு தெரியாது..

வரலாறு வரலாறு..

கோப்பெருஞ்ச்சோழனுக்க்காக பிசிராந்தையாரும் .. வடக்கிருந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?? ரெல் ரெல் மீ.. ஏதோ வரலாற்றில் படிக்கிறம் .. நீங்க நேரில் பார்த்திருக்கீங்கள்..? கருநாவுக்கு வரலாறு எல்லாம் நல்லா தெரியும் எப்படி செய்தால் வரலாற்றில் இடம் பெறலாம் என.. அதனால் தான் தன்னால் ஆகவில்லை என்றாலும் இப்படி அவுழித்து விடுவது...

டிஸ்கிக்கு டிஸ்கி:

நீங்கள் எல்லாம் மிஞ்சி போனால் ஒரு 70 ரூ 90 அதுக்குள்ள மேல ரிக்கட் வாங்கி போடுவீர்கள் ஆனால் தானை தலைவர் கருநா அப்படி இல்லை .. கலியுகத்தில் விதிக்கபட்ட 136 வருடம் வாழ்ந்துதான் செத்து போவார்.. களத்தில் அதிகபடியாக வயசுல்ல தோழர்கள் ஒரு 80 என்று வைத்துகொள்ளுவம் .. இன்னும் ஒரு 50 உயிரோட இருப்பீங்களா..? ரெல் ரெல் மீ... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முப்பதே கஸ்ரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.