Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்தமிழ் ஈழம் என்றுமே தேன்தமிழ் வளர்க்கும் மண்தான்

Featured Replies

தென்தமிழ் ஈழம் என்றுமே தேன்தமிழ் வளர்க்கும் மண்தான்

போடியார் மாஸ்டர்

Monday, 01 May 2006

எங்கள் தாயகத்தின் புவியியல் ரீதியாகப் பிரிக்கப்பட முடியாத அங்கம் தென் தமிழீழமே ஆகும். தமிழர் தாயகத்தின் தலைநகரான திருமலை, மட்டுமாநகர், அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களைக் கொண்டதே தென்தமிழீழம் என்று காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டார்.

தென்தமிழீழம் வளம் கொழிக்கும் வளங்களைக் கொண்ட கலை, கலாசாரங்களைப் பேணும் பண்பாட்டு மையமாக எப்போதும் இருந்து வருகின்றது. தென்தமிழ் ஈழத்தில் ஆற்றுகைக் கலைகள், கவின்கலைகள், நுண்கலைகள் என்பவற்றோடு இப்போது காண்பியற் கலைகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

சுவாமி விபுலானந்தர் ஆற்றிய பணிகள்

எங்கள் தமிழர் தாயகத்தில் நீண்டதொரு கல்விப் பாரம்பரியம் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. ஆறுமுகநாவலர் ஏற்றி வைத்த அந்த தீபத்தை அவரின் மறைவின் பின் அணையாது பேணி இலங்கையிலும் இந்தியாவிலும் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகிலும் நற்பணியாற்றியவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் ஆவார். அவர் தனது பௌதீகவியல் அறிவை ஆதாரமாகக் கொண்டு சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தார். அதன் விளைவாக யாழ் நூலை இயற்றினார். தமிழரது பாரம்பரிய வாத்தியமான “யாழ்” பற்றிய சிறப்புக்களை அவர் எடுத்து விளக்கினார். அதன் பின்னரே தமிழ் உலகு அதன் மகத்துவம் பற்றிப் புரிந்து கொண்டது.

இவரால் தொடரப்பட்ட தமிழ்ப் பணிகளைப்; பின்னர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேராசிரியர் சி.மௌனகுரு என மிகச்சிறந்த புலமையளர்கள் முன் எடுத்து வருகின்றமையும் சிறப்பாகும். இதனால் என்றும் தமிழர் தாயகத்தின் கல்விப் பாரம்பரியத்தின் ஒளிதீபம் அணையாத தீபமாக சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

கலையும் இலக்கியமும் வளரும் சிறப்புக்கள்

தென்தமிழ் ஈழத்தில் நீண்ட பல காலமாகவே கலைஞர்கள் நாட்டுக் கூத்து, காமன் கூத்து, வசந்தன் கூத்து, மகிடி போன்ற பல்வேறு ஆற்றுகைக் கலைகளை வளர்த்து வருகின்றனர். புராண இதிகாசக் கதைகளை கலை வடிவமாக்கி மேடைகளில் அரங்கேற்றி வந்துள்ளார்கள். இவற்றைவிட இசை நாடகம், வில்லுப்பாட்டு போன்ற மேடை நிகழ்வுகளையும் அவர்கள் போற்றி வளர்த்து வருகின்றார்கள். சிற்பக் கலைஞர் விக்கினேஸ்வரன் போராளிகளது போராட்ட நிகழ்வுகளை எல்லாம் மிகத் துல்லியமாகவும் தத்ரூபமாகவும் சிற்பங்களாக, காலத்தால் அழியாத கருவூலங்களாக உருவாக்கித் தந்துள்ளார். இவ்வாறாக நுண்கலைகளோடு பாரம்பரிய இசைமரபும் இன்று தென்தமிழீழத்தில் வளர்ந்து வருகின்றது.

ஆற்றுகைக் கலைகளில் மட்;டுமல்ல ஆக்க இலக்கியத்திலும் தென்தமிழீழம் எப்போதும் சிறப்படைந்தே வந்துள்ளது. தமிழ் உலகில் புகழ்பெற்ற ஏ.பெரியதம்பிபுலவர் மரபுவழிச் செய்யுள்கள் மூலம் மட்டக்களப்பு மக்களது சமூக, இலக்கிய, கலை வாழ்வை வெளிக்கொணர்ந்தார். கவிஞர் காசி ஆனந்தன் இசைப் பாடல்கள் மூலம் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் வலுச்சேர்த்தார். அவரது இசைப்பாடலான

மீன்மகள் பாடுகின்றாள்

வாவி மகள் ஆடுகிறாள்

மட்டுநகர் அழகான மேடையம்மா - இங்கு

எட்டுத்திசையும் கலையின் வாடையம்மா

என்ற இசைப்பாடல் மட்டு நகரின் அழகையும் இயற்கை வனப்பையும் கலை, இலக்கிய செழுமையையும் மனதில் பல படிமங்களில் பதிய வைக்கின்றது. அது ஒரு ஒலி ஓவியம். தேனிசை செல்லப்பாவின் இனிய குரலில் அது இசைக்கோலமாக வடிவம் பெற்றுள்ளது. இன்னும் காலஞ்சென்ற கவிஞர்களான நீலாவணன், பாண்டிய+ரான் போன்றவர்கள் மரபுக் கவிதைகள் மூலம் புகழ் பெற்றார்கள்.

இன்று சண்முகம் சிவலிங்கம், உமா வரதராஜன், எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் ஆக்க இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார்கள். முன்னைய தலைமுறையைச் சேர்ந்த பெரும் புலமையாளர்களான எப்.எக்ஸ்.சி.நடராசா, வி.சி.கந்தையா போன்ற பெரியார்கள் உரை நடை இலக்கியத்தின் மூலமாக பல்வேறு பரிமாணங்களையும் இலக்கிய வாழ்வையும் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

கிழக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றுகைக் கலையின் தேடல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு ஒப்படைத்துள்ளதோடு அவற்றை அற்புதமான கதாபாத்திரங்களாக்கி அரங்கேற்றி அரங்கக் கலைக்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றார்.

போராசிரியர் நுஃமான் கவிதை இலக்கியம், விமர்சன இலக்கியம் என பல்துறை பணிகளை ஆற்றி வருகின்றார். இன்னும் பல புலமையாளர்கள் கலை, இலக்கியப் பணிகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் தென்தமிழீழம் பெரும்பங்காற்றி வருகின்றது. 1944ஆம் ஆண்டு தொடக்கம் அப்போதைய தமிழ்த் தலைமை தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று குரல் எழுப்பிய காலம் தொடக்கம் தென்தமிழீழத்தின் பங்கு அளப்பரியதாகவே இருந்து வருகின்றமை மறுக்கப்படாத உண்மையாகும்.

1947ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் தேசியவாதக் கொள்கைகளை முன்வைத்தோர் வெற்றி பெற்றார்கள். இதன்பின் தமிழ்த் தலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக 1949இல் தமிழரசுக்கட்சி உதயமானது. இதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதி தேர்தல்களில் பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது. ஆனால், கிழக்கு தேர்தல்களில் இப்போட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கைகொடுத்த தென்தமிழீழம்

1952ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தல் தான் தமிழரசுக் கட்சி உதயமான பின்னர் எதிர்நோக்கிய முதல் பாரளுமன்ற பொதுத்தேர்தல் ஆகும். இந்தப் பொதுத்தேர்தலில் தமிழரசுத் தலைவர் தந்தை செல்வா காங்கேசன்துறையில் போட்டியிட்டார்.

ஆனால், வெற்றிபெற முடியவில்லை. கிழக்கே திருகோணமலையிலும் வடக்கே கோப்பாயிலும் தமிழரசுக்;கட்சி வெற்றி பெற்றது. மிகச் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் திருமலையின் என்.ஆர்.ராகவரோதையமும் கோப்பாயினது கோமகன் வன்னிய சிங்கமும் தோற்றம் பெற்றார்கள். ஆனால், 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருமலை, மூதூர், மட்டக்களப்பு, படடிருப்பு, பொத்துவில் என தென்தமிழழீத்தின் பல தேர்தல் தொகுதிகளில் தமிழ்த் தேசிய வாதத்துக்கான மக்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.

இதன்பின்னர் இற்றைவரை நடைபெற்ற எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ் தேசியவாதம் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. திருமலையில் இராகவரோதயம், மூதூரில் ஏகாம்பரம், பட்டிருப்பில் எஸ்.எம்.இராசமாணிக்கம், அம்பாறையில் அறப்போர் அரியநாயகம், நொத்தாரிசு கந்தையா என பல தமிழ் உணர்வாளர்களால் தமிழ் தேசியம் கட்டிக்காக்கப்பட்டடு விசாலிப்பு பெற்றது.

கடந்த காலங்களில் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் கொள்கை முரண்பாடு காரணமாக வேறுபட்டு நின்றாலும் திரு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் தமது அரசியல் நலன் கருதி தென்தமிழீழத்தில் வேட்பாளர்களை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது. இதன்மூலம் தென்தமிழீழத்தின் பாராளுமன்ற ஆசனங்கள் தமிழர் தரப்பிலிருந்து கைநழுவி பேரினவாதிகளின் கைக்குள் போய்விடக்கூடாது என்பதில் எப்போதுமே அவர் அக்கறையாக இருந்தார் எனலாம்.

1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஈரோஸ் இயக்கம் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட போது இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால், 2000ஆம் ஆண்டில் திருமலை மாவட்டத்தில் பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளோடு புதிதாக அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களும் போட்டியிட்டன. இதன் விளைவாக வாக்குகள் சிதறியமையால் 2000ஆம் ஆண்டில் திருமலையில் ஒருவர் கூட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட முடியாமல் போய் விட்டது. இந்தநிலைமை பேரினவாதிகளுக்கே அனுகூலமாயிற்று.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை பாராளுமன்றத்தின் 10வது பொதுத் தேர்தலின் போது அக்கால கட்டத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்தில் சரியான தமிழ்த்தலைமை கிடைக்கவில்லை. ஆனால், தென்தமிழீழத்தில் காலஞ்சென்ற மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் உறுதியான தமிழ்த் தேசிய தலைமையை உருவாக்கி, வடக்குத் தமிழ் ஈழத்துக்கும் ஒரு சரியான தலைமைத்துவத்தை வழங்கினார். 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமியும் அவரது குடும்பத்தவர்களும் படுகொலை செய்யப்;ட்டமையைக் கண்டித்து அம்பலப்படுத்திய பெருமை ஜோசப் பரராசசிங்கம் அவர்களையே சாரும்.

இதேபோல அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மனித உரிமைகளுக்காக பெரும் போராட்டங்களை நிகழ்த்தினார். 2004 ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற 13வது பொதுத் தேர்தலின் விiளாவாக திருமலையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளமன்ற உறுப்பினர்களுமாக எல்லாமாக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தென்தமிழீழத்தில் தமிழ்த் தேசியத்தை உறுதிப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள். தமிழ் தேசியவாதம் அங்கு இப்போது உறுதியான தளத்தைப் பெற்றுள்ளது.

1970களில் தமிழ் இளைஞர் பேரவை

1970ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தலைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை உருவானது. பின்னர் தமிழ் இளைஞர் பேரவை எழுச்சி பெற்றது. வடக்கு தமிழீழத்திலும் தென்தமிழீழத்திலும் தமிழ் இளைஞர் பேரவை காத்திரமான பங்களிப்பைச் செய்தது.

ஆரம்ப காலத்தில் பரமதேவா, ரஞ்சன், பொன்.வேணுதாஸ், மண்டூர் மகேந்திரன், யோகன் கண்ணமுத்து, பன்னீர்ச்செல்வம் போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் தமிழ்த் தேசிய வாதத்தை வளர்த்தெடுத்தார்கள். இவர்களில் பரமதேவா, பொன்.வேணுதாஸ், ரஞ்சன், (பொத்துவில் எம்.பி கனகரத்தினத்தின் மகன்) போன்றவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து களமாடி வீரமரணமடைந்தார்கள்.

கவிஞர் காசி ஆனந்தனின் சகோதரர் சிவஜெயம் ஒரு முழுநேரப் போராளியாக பணியாற்றி வீரமரணமடைந்தார். இதேபோல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலைப்புலிகளோடு இணைந்து அர்ப்பணித்தமையால் போராட்டம் கூர்மை பெற்றுமுனைப்படைந்தது. விடுதலைப்புலிகள் தென்தமிழீழத்தின் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் பணிகள்

தென்தமிழீழத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரும் பணி செய்துள்ளார்கள். இவர்களில் நாட்டுப்பற்றாளர் நடேசன், உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் மாமனிதர் சிவராம், (தராகி) இன்னும் சுடரொளி பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன், முதலானோர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரையே தியாகம் செய்தார்கள். இதேபோல கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா அவர்களது பணிகளும் விதந்து போற்றப்படுகின்றன.

தென்தமிழீழத்தில் அண்மையில் எற்பட்ட சில அசாதாரண நெருக்கடிகளில் முன்னணி போராளிகளான கௌசல்யன், சேனாதிராஜா, பாவா, யோகா, நீலன் என முக்கிய போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள்.

ஆனால், அவை தமிழ் தேசியவாத உறுதிப்பாட்டையும் முன்னெடுப்புக்களையும் சீர்குலைத்து விடவில்லை. உறுதியான தலைமையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் முன்னோக்கிய அசைவியக்கம் உறுதியாகவே உள்ளது. 2006ஆம் ஆண்டு திருமலையிலும் அம்பாறையிலும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் தென்தமிழீழத்தின் வெகுஜன தளம் தமிழ் தேசிய விடுதலைப் போரின் முன்னெடுப்புக்களில் எவ்வளவு தூரம் உறுதியாகவுள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கு துலாம்பரப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய தலைமைகள் பரப்புரைகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு தேர்தல் காலச் சூழ்நிலைகள் இருந்த போதும் மக்களே முன்வந்து அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு உள்ளிடட பல பிரதேச சபைகளில் வாக்குச்சீட்டுக்கள் மூலம் தமிழ்த் தேசியத்தின் பால் தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

-போடியார் மாஸ்டர்

http://www.battieelanatham.com/newsite/ind...id=63&Itemid=41

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாஞ்சரி.. அதோட எங்கட அரசியல் ஆலோசகர் அதாவது மதியுரைஞருடைய தாயுூரும் தென் தமிழீழத்தில மட்டக்களப்பு மாவட்டத்தில மண்டூர் பிரதேசம் தான் எண்டதையும் குறிச்சுக்கொள்ளுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.