இன்றைய மாவீரர் நினைவுகள் ..
-
Tell a friend
-
Topics
-
44
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்! "தொடக்கக்கால கட்டடம்" 'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்' 16.10.2005: 1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தகவல்: தமிழ்நெற் 'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை' ''நுழைவுவாயில்'' 'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.' 'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.' 'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.' 'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.' 'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.' 'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.' 'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.' 'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.' 'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்' 'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.' 'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.' 'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.' 'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.' 'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.' 'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.' 'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.' 'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.' 'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.' 'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.' 'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.' 'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.' 'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.' 'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.' 'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.' -
இதுவே நடைமுறை. ஆனால், நாங்கள் நாலு மணிநேரத்தில் சுங்கத்திலிருந்து விடுவித்து விடுவோம் என்று அமைச்சர் முன்னர் சொல்லியிருந்தார். நடைமுறையில் நாலு மணிநேரம் என்பது இப்படியும் ஆகிவிடும் என்று இப்பொழுது அவர்களுக்கு புரிந்திருக்கும்................... அரிசி எந்த நாட்டிலிருந்து வந்தாலும், 'ஆறு கப்பல் வந்தாலும் நீறு கப்பல். அரிசிக் கப்பல் வந்தாலும் தவிட்டுக் கப்பல்....................' என்றே ஆகிவிடுகின்றது...............
-
By நன்னிச் சோழன் · Posted
ஆழிப்பேரலையின் போது கனேடிய படைய மருத்துவர்களோடு படைய மருத்துவர் தணிகை அம்பாறை 2004/2005 கிளிநொச்சி 2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. -
By நன்னிச் சோழன் · பதியப்பட்டது
அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர். பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪 இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை. நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட்டம் நடந்திருக்கவேண்டும். பின்னர் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒரு குழுவால் அமரர் சிவசாமி அவர்களும் மற்றைய இன உணர்வாளரும் காட்டிக் கொடுக்கப்பட்டு இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடிய காங்கேசன்துறை தடுப்பு முகாமில் பலநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தார்கள். எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணிப்புக்களையும் பல துன்ப துயரங்களை சுமந்த அமரர் சிவசாமி அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் மண்ணில் குடும்பத்தோடு வீழ்ந்த வித்துக்களில் ஒருவராகிவிட்டார். அமரர் சிவசாமி அவர்கட்கும் அவரோடு வித்தான அவர்தம் குடும்பத்தினருக்கும், இறுதி யுத்தத்தில் சாவடைந்த அனைத்து உறவுகளிற்கு மீண்டும் ஒருமுறை புகழ் வணக்கம் செலுத்துவோம்.🙏 -சிற்சபேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.. -
அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன். அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம். கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள். என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல. குருநாகல் வைத்தியர் மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்காக வேண்டியே கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன். மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை. ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts