Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!

Featured Replies

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!

[Wednesday, 29/08/2012 06:36 AM]

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகணத்தில் உள்ள தங்களது உறவுகளை வாக்களிக்க சொல்லுமாறு கேட்டே அந்த அவசர வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அன்பான புலம்பெயர் மக்களே!

இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு அரசியல் போரை கிழக்கு மாகாண மக்கள் மீது திணித்துள்ளது. அந்தப் போர்தான் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலாகும்.

இந்தப் போரில் தமிழர்களின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கடந்த காலங்களில் பல ஜனநாயகப் போர்க்களங்களை சந்தித்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.

இந்தத் தேர்தலை ஏன் நான் ஜனநாயகப் போர் என்கின்றேன் என்றால் இது இரண்டு இனங்களுக்கு இடையிலான 60வது ஆண்டுகால உரிமைப் போராட்டம். அதில் ஆயுதங்களுடனும் போரிட்டுள்ளோம், ஜனநாயக தேர்தல் களங்களின் ஊடாகவும் போரிட்டுள்ளோம்.

இதில் எந்தப் போராக இருந்தாலும் சரி அதில் வடகிழக்கு தமிழர்கள்தான் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றார்கள்.

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் எத்தனையோ பிரித்தாளும் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபோதும், எத்தனையோ துரோகிகள் ஒன்றிணைந்து எமக்கெதிராக செயற்பட்ட போதும் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் நெஞ்சுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த போதும் உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற நெஞ்சுறுதியுடன் உரிமைக்காக போரிட்டும் வென்றுள்ளோம், உரிமைக்காக வாக்கிட்டும் வென்றுள்ளோம்.

இன்றும் அதே போராட்டம் தொடர்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்கியுள்ளோம். இன்று எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்று கேட்டோம். இல்லை தரமுடியாது. நீங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லி அதை கிழக்குமாகாண தேர்தல் களத்தில் நாங்கள் நிரூபித்துக் காட்டுகின்றோம் என்று மீண்டும் ஒருமுறை சிங்கள அரசும் அவர்களது கைக்கூலிகளும் நெஞ்சை நிமிர்த்தி மார்புதட்டி நிற்கின்றனர்.

தமிழர்களாகிய நாம் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பல தடவைகள் வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்த வரலாறு ஜனநாயக தேர்தல் களத்தில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையிலேயே மீண்டும்ஒரு தடவை சிங்கள தேசம் தமிழர்களின் உரிமையை பறிப்பதற்காக, தமிழர்களின் தாயக மண்ணை இரண்டாக பிரித்து கிழக்கு தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கவில்லை என்று சர்வதேசத்திற்கு சொல்வதற்காக கிழக்கு மாகாணத்தில் பல கோடி நிதிகளை செலவளித்து பல சுயேச்சைக் குழுக்களை களமிறக்கி தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தமிழர்களின் வெற்றியை தமிழர்களை வைத்தே தடுத்து நிறுத்துவதற்கு மிகப்பெரிய அமைச்சர் பட்டாளங்களுடன் களமிறங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கில் உள்ள சிலர் யதார்த்தத்தை அறியாதவர்களாய் அபிவிருத்தியின்பால் ஆசைகொண்டு தமிழர்களின் உரிமைகளை சிங்கள தேசத்திடம் அடகு வைப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறானவர்களை தமிழ் தேசியத்துடன் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண தேர்தல் போர்க்களத்தில் வெற்றிபெற வைப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தங்களது உறவுகளுக்கு தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் இந்த விடயங்களை தெளிவுபடுத்தி, வருகின்ற 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க துணைநிற்குமாறு அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் உரிமையுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.

"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எத்தனை தேர்தல் போர்க்களம் வரினும் தமிழ் தேசியம் வெல்லும்."

நன்றி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு,

மட்டக்களப்பு மாவட்டம்.

http://www.2tamil.co...p?id=u2z203s294

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் உங்கட எல்லாம் தெரிந்த சுமந்திரன் வாயை இப்போதைக்குத் திறக்கவேண்டாம் தேர்தல் முடிந்ததும் புலம்பெயர் தமிழர்களை ஒரு கை பார்க்கலாம் எண்டு சம்பந்தர் ஐயா சொல்லிப்போட்டார்போல அதுதான் அவற்றை சத்தத்தைக் காணவில்லை. அல்லது புலம்பெயர் தமிழர்மீது காறி உமிழ்ந்து, தனது எசமானரான, தமிழர் விரோததேசமாம் இந்தியாவினை மனம்குளிரவைப்பார். இந்தியாவில் கொல்லைப்புறமாகப்போய் தமிழர்க்கு ஆப்புவைப்பது சிவகங்கைச் சின்னப்பயல் சிதம்பரம் தமிழர் தேசத்தில் கொல்லைப்புறமாக சிங்களப்பாராளுமன்றம்போய் தமிழர்க்கு ஆப்புவைப்பது சின்னப்பயல் சுமந்திரன். வடை வாழைபழம் தேத்தண்ணி வாங்கிக் கொடுத்தெல்லாம் நாம் ஐநா முன்றலில் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தேடமுடியாது என நல்லூர் சட்டநாதர் கோவிலுக்குப்பக்கத்தில இருக்கிற இளம்கலைஞர் மந்றத்தில கூட்டம் வைத்துக்கூறுய சுமந்திரன் ஐயாவினுடைய வாயையும் ஒருக்கத் திறக்கச் சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் சொல்கிறேன் ... உங்கட ரையில் குறித்து வைத்து கொள்ளுங்க...3012 லிம் அங்கிட்டு தமிழர்கள் உயிரோடு இருந்தால் இதே மாறி அறிக்கை தான் வரும்..

டிஸ்கி:

ஜன நாய் கம் என்றால் அதான் உலகம் பூர நடந்திட்டு இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண சபைத்தேர்தலும் தமிழர் அரசியலும் – நம்தேசம்

Namthesam.jpg

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் செப்ரெம்பர் 8 ம் திகதி நடாத்தப்படவுள்ள நிலையில் தமிழர் அரசியல்க்களம் வாதப் பிரதிவாதங்களால் சூடாக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவிற்குள்ளும், பிராந்திய வல்லரசின் கோடிக்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசிய அரசியலை, உயர்ந்த அர்ப்பணிப்புக்கள், தியாகங்களினுடாக சர்வதேச மயப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளது வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர் தாயகத்தின் ஓர் அங்கமான கிழக்கு மாகாணத்தின் மீது இத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை முறை என்பது தமிழர்கள் மீது அவர்களது விருப்பங்களிற்கு மாறாகத் திணிக்கப்பட்டது முதல் கடந்த 2009 மே மாதம் வரை தமிழ் அரசியல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் தமிழரது அரசியல் தலைமை துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கைமாறியது. இந் நிலையில் திணிக்கப்பட்டுள்ள இத்தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பதே இவ்விவாதங்களில் முக்கிய கருப்பொருளாகும்.

80 களின் பிற்பகுதியில் தென்னாசியாவில் குறிப்பாக இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருந்த பூகோள அரசியல் மாற்றங்களை தனது கட்டுப்பாட்டின் கீழு கொண்டுவருவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவே இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டமும், அதனூடான மாகாண சபை முறைமையின் உருவாக்கமுமாகும்.

அதாவது எண்ப துகளில் (பனிப்போரின் கடைசிக் காலம்) இலங்கைத்தீவின் அதிகார பீடம் இந்தியாவின் விருப்பிற்கு மாறாக அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குள் செல்வதனை தடுப்பதற்கான கருவியா கவே இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தியாவினால் கையில் எடுக்கப்பட்டது.

தமிழீழத்தை உருவாக்கப்போவதாக கொழும்பிற்கு ஓர் போக்குக்காட்டி எச்சரித்து அதன் மூலம் கொழும்பைப் பணியவைத்து தனது இலாபத்திற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமெரிக் காவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் புதுடில்லி அப்போது வெற்றியும் கண்டது. தமிழீழம் அமைத்துத் தரப்போவதாக நம்பிக்கையூட்டி தமிழ் மக்களைப் பயன்படுத்திப் பலிக்கடாக்களாக்கி தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது புதுடில்லி.

அவ்வாறு தான் பயன்படுத்திய தமிழ் மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்கள் மீது எப்போதும் அனுதாபம் கொண்டிருந்த தமிழக மக்களுக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தமானது ஈழத் தமிழ் மக்களது நன்மைக்காக உருவாக்கப்பட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் டில்லிக்கு எழுந்தது. அதற்காக தீர்வு என்ற பெயரில் ஏதோ ஒன்றைத் தமிழ் மக்களுக்குக் காட்டி ஏமாற்ற வேண்டும். அதேவேளை தனது அழுத்தத்திற்கு அடிபணிந்து கொண்ட கொழும்பை பகைத்துக் கொள்ளவும் கூடாது. அதற்கேற்ற வகையில் 13 ம் திருத்தச் சட்டம் என்ற ஓர் மாயமானை உருவாக்கி தமிழர் மீது இலங்கை இந்திய அரசுகள் திணித்தன.

இத்திணிப்பை அப்போது அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் நிராகரித்திருந்தனர். அது மட்டுமன்றி அப்போது இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் நடாத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலை ஈபிஆர்எல்எவ் தவிர்ந்த அனைத்து அரசியல் அமைப்புக்களும் புறக்கணித்தன. 13 ம் திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி டில்லிக்கு ஓர் கடிதத்தினையும் எழுதியிருந்தது.

அக்கடிதத்தில் அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவரும், தற்போதய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களும் கையொப்பமிட்டிருந்தார். பின்னர் அப்போதய இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த திரு.வரதராஐப்பெருமாள் கூட மாகாண சபை முறையை ஏற்க முடியாது என்று கூறி சுதந்திர தமிழீழத்தைப் பிரகடப்படுத்திவிட்டு இந்தியாவிற்கு ஓடியிருந்தார்.

உண்மையில் மாகாண சபையில் அப்படி என்னதான் இருக்கின்றது? இது ஓர் ஒற்றையாட்சிக்குட்பட்ட வெறும் அதிகாரப் பரவலாக்கம் (De-centralization) மட்டுமே. இம்முறையை தமிழ்த் தரப்புக்களின் விருப்பு வெறுப்புக்களைப்பற்றிக் கணக்கெடுக்காது இலங்கை அரசாங்கம் பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அகற்றிவிட முடியும்.

மேலும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டதாக காட்டப்பட்ட ஒருசில அற்ப சொற்ப அதிகாரங்கள்கூட உண்மையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாகாண சபைக்கு இல்லை. அது ஜனாதிபதியினால் நேரடியாகத் நியமிக்கப்பட்ட ஆளுனரிடமே உள்ளது. இவ் ஆளுனர் ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்களிற்கு மாறாக செயற்படின் ஜனாதிபதி இவரை எந்நேரமும் பதவி விலக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையானது வெறுமனே ஆளுனருக்கு உதவி வழங்கவும் ஆலோசனை வழங்கவும் மட்டுமே முடியும். அவ்வாலோசனைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுனரின் கேள்விக்குட்படுத்த முடியாத தற்துணிவு அதிகாரத்திற்குட்பட்டதாகும்.

மேலும் இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் தமிழ் மக்களின் தாயக பூமியானது சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு தமிழர் தாயகம் என்ற ஒன்றே இல்லை என்ற நிலைக்குள்ளாக்கப்படுவதாகும். அரச காணிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள், அபகரிப்புக்களை மாகாண சபைக்குள்ள எந்தவொரு அதிகாரத்தினாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆக இப்பேற்பட்ட மாகாண சபையை, இதுவரை காலமும் தமிழ்த் தேசியவாதிகளால் அடியோடு நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வந்த மாகாண சபையை வடக்கும் கிழக்கும் பரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியம் பேசி வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாகியுள்ளவர்கள் ஏற்று அங்கீகரிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் மட்டுமல்ல தமிழ் மக்களதுஅரசியல் இருப்பை மீள முடியாத பாரிய சகதிக்குள் கொண்டுசென்று புதைக்கும்.

பாரிய இன அழிப்பு அரங்கேறியுள்ள நிலையில் இதுவரை காலமும் இலங்கைத்தீவில் நிலவிவந்தது ஓர் இனப்பிரச்சினை என்ற பரிமாணம் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்குமான ஓர் அதிகாரப் பிரச்சினை என்ற ஓர் தவறான பரிமாணத்தினை எடுக்கும்.

ஆகவே இச்சூழ்நிலையில் இலங்கைத்தீவில் இன்று தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுப்பதாகக் கருதப்படும் இருதரப்புக்களில் ஒன்றாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்து தமிழ்த் தேசியவாத அரசியலை தக்கவைத்துள்ளது. ஆனாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பு இத்தனை இழப்புக்களையும் சந்தித்த பின்னர் மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்பதன் மூலம் இதற்கு ஓர் உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கி வரலாற்றுத் துரோகம் இழைத்திருக்கின்றது.

கூட்டமைப்பானது தனது ஏஐமான்களின் பூகோள நலன்களுக்காக தமிழ் மக்களின் அரசியலை பலியிட்டுள்ளது. இதனை அண்மையில் 98 கையொப்பங்களுடன் வெளிவந்துள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளது அறிக்கையும் கட்டியம்கூறி நிற்கின்றது. ஆகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியலை நேர்மையாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய சரியான மாற்றுத் தலைமையை அடையாளம் காணவேண்டிய தருணம் வந்துள்ளது.

- நம்தேசம் (ஆசிரியர் தலையங்கம்)

(14.08.2012 – 31.08.2012)

http://www.eelamview.com/2012/08/25/east-election/

  • தொடங்கியவர்

[size=4]கூட்டமைப்பு தனது வகை தீர்வை கண்டுகொள்ள வெளிநாடுகளில் தங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் பாரிய பங்காக பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் புலம் பெயர் தமிழர். அதாவது கூட்டமைப்பிற்கு வாக்களித்து கூட்டமைப்பு என்ற தேரின் வலக்கரை வடத்தை தாயக மக்கள் இழுக்கிறார்களின், புலம் பெயர் நாடுகளில் பிரச்சாரங்களை நடத்தி, அந்நாடுகளிடமிருந்து தமிழர் விடுதலைக்கான ஆதரவை தேடித்தந்து தேரின் இடக்கரை வடத்தை புலம் பெயர் மக்கள் இழுக்கிறார்கள். எனவே தனது போக்கு சார்ந்த பாதையில் புலம் பெயர் மக்களை நோக்கி கூட்டமைப்பு தனது கரத்தை ஆதரவுதேடி நீட்டுவதில் என்ன தப்பென்று நம்தேசம் எந்த இடத்திலும் கூறவில்லை. நம்தேசம் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கூறவில்லை. மாற்றுத் தலைமை ஒன்று தேவை என்பதை மட்டும்தான் சொல்கிறது. [/size]

[size=4]இயக்கத்தின் முடிவின்பின் தான் தடியை வாங்கி அஞ்சல் ஒட்டம் ஓடத்தொடங்கியிருப்பதாக கூட்டமைப்பு எப்போதும் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்க தூதுவர் பிளேக்கின் பேச்சின்படி கூட்டமைப்பு போர்குற்ற விசாரணையைவிட தீர்வு தான் கேட்கிறது என்பது. இது பழைய கதையாக இருக்க, நம்தேசம் கண்டு பிடித்திருக்கும் புதியது என்ன என்பது அதன் ஆசிரியர் தலையங்கத்தில் சொல்லப்படவில்லை. தமிழர் ஒன்றியங்கள், நா.க.அரசு போன்றவை தீர்வை விட போர்க்குற்றத்தை முதல் வைக்கின்றன. ஆனாலும் அவையும் தெரிந்துகொண்டே வெளிப்படையாக கூட்டமைபின் அரசியல் போக்கை அங்கீகரிக்கின்றன. ஏன் எனில் அரசு எந்த நேரமும் தான் விரும்பிய சட்டங்களைக்கொண்டுவந்து கூட்டணியை இல்லாமல் செய்தது போல கூட்டமைப்பையும், [/size]தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இல்லாமல் அழித்தொழிக்கலாம். இதனால்த்தான் தாயகத்தில் அரசியல் செய்ய கூட்டமைப்புக்கு நெகிழ்வுத்தன்மை தேவைப்படுகிறது

[size=4]நம்தேசத்தின் தலைப்பு பொதுவில் தேர்தலை பற்றியது மட்டுமே. ஆனால் முடிவில் ஆராய்ந்து முடித்திருப்பது கூட்டமைப்பற்றி. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில்லாமல் இழுத்துவந்து மாட்டியிருக்கிறது. மனோகனேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றோர் தமது சுதந்திரத்தை பாவித்து தமது பாதைகளில் போராடுகிறார்கள். அவர்கள் சொல்வதை கூட்டமைபோ, கூட்டமைப்பு சொல்வதை அவர்களோ 100% ஏற்கத்தான் வேண்டும் என்று எங்கும் இல்லை. இதையே புலத்திலும் பல அமைப்புகள் இருந்து போராடினாலும் ஒன்றை ஒன்று ஏற்கவேண்டியதிலை; ஆனால் எதிர்க்காமல் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதின் பொருள். மேலும் கூட்டமைப்பு 13ம் திருத்ததை ஏற்கவிலை என்று கூறித்தான் தேர்தலில் நிற்கிறது. இந்தியா, அமெரிக்க போன்ற நம்தேசம் குறிப்பிடும் நாடுகள் 13ம் திருத்தம் போதுமானதல்ல என்பதை இன்றைய நிலையில் ஏற்றிருக்கின்றன. நம்தேசம் கூட்டமைப்பு தேர்தலில் நின்றால் 13ம்திருத்தம் தமிழர்களால் அங்கீகரிப்பட்டதாகிவிடும் என்கிறது. ஆனால் தமிழர், தேர்தலில், [/size]கூட்டணிக்கு சுயநிர்ணயஉரிமையை வென்றெடுக்க கொடுத்த ஆணையை இல்லாமல் செய்தது அரசுமட்டுமே. எனவே அரசுக்காக நம்தேசம் கூட்டமைபை எதிர்கின்றதாயின், அது பொருள் இல்லாத ஒரு பகிடிசேட்டை கதை மட்டுமே

[size=4]இந்த தேர்தலில் கூட்டமைப்பின் கொள்கைகளை (மு.கா-கூட்டு போன்றவற்றில்) நோர்வே போன்ற நாடுகள் நெகிழ வைத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் இதே நாடுகளுடன்தான் இயக்கமும் தனது பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. இதன் கருத்து இயக்கமோ அல்லது கூட்டமைப்போ இந்த நாடுகள் 100% சரியென்று அடித்துக் கூறியதாக எடுக்கத்தேவை இல்லை. மாற்று திட்டங்கள் கிடையாதபோது இந்த நாடுகளுன் இணங்கிப்போவதுதான் செய்யத் தக்கது. அதாவது [/size]ஃபிறிச்சில் சோடா இல்லாத நேரம் தாகத்திற்கு கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குடிக்ககூடாது என்று புத்திமதி வழங்குவதை நம்தேசம் தவிர்த்துத்தான் இருக்கிறது.

[size=4]எவ்வளவு வாதிட்டாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டமைப்பின் ஒரு பாகமே, இது ஆரம்பகாலத்தில் திராவிடர் கழகமும், தி.மு.கவும் இருந்த நிலையே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உயரிய இலட்சியங்களை கூறினாலும் தேர்தல் அரசியலுக்கு கூட்டமைப்பின் நெகிழ்வுத்தன்மைதான் மக்களிடம் வாக்குகளைப்பெறுகிறது. இதற்காக நம்தேசம் அநாவசியமாக கூட்டமைப்பின் முன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கொண்டுவந்து அதை மானபங்கம் செய்யும் செயலை கூட்டமைப்பின் ஆதரவாளர்களை கொண்டு செய்விக்க முயலும் கீழத்தர அலுவலை செய்யக்கூடாது. நம்தேசத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதும் நம்பிக்கை இல்லை. நல்ல கொள்கைகள் உள்ள அமைப்பாக பலர் மதிக்கும் அதனை தமிழ் மக்களின் தலைமை தாங்க நம்தேசம் இடம் கொடுக்க ஆயத்தம் இல்லை. [/size]தனது கட்டுரையின் எந்த இடத்திலும் ஒரு நல்ல காரணத்தை வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தலைமை தாங்க இடம் அளிக்கும் படி நம்தேசம் வாதாடவில்லை. நம்தேசம் வேண்டுவது மாற்றுத்தலைமையே. இப்படி பிரயோசனம் இல்லாத கட்டுரை ஒன்று நமக்கு தேவையா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.