Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம்

Featured Replies

ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம்

பகவன்

Thursday, 04 May 2006

நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவடிவம் வருமாறு:-

செயலாளர் நாயகம்,

ஜக்கியநாடுகள் சபை

ஊடாக

பொறுப்பதிகாரி,

யுனிசெவ்

கிளிநொச்சி

மதிப்புக்குரிய ஐயா,

வணக்கம்.

தமிழ் ஊடகத்துறை மீதான அராஜகத்திற்கான கண்டனம்

தமிழ் ஊடக அமையத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம் எமது ஊடக செயற்பாட்டு சுதந்திர, சனநாயக உரிமைக்கு ஏற்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தின் அடிப்படையிலான பாரிய அச்சுறுத்தல் தொடர்பான கீழ் காணும் விடயங்களை தங்களின் மேலானதும் உன்னிப்பானதும் விசுவாசம் மிக்கதுமான கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சனநாயக நாட்டின் தரம், அரச நீதியின் தன்மை என்பன அந்த நாட்டின் ஆட்சியாளர் மக்களுக்கு வழங்கும் எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பது தங்களுக்கு தெரிந்தவிடயமே.

சிறிலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த சில தசாப்த காலமாகவே இத்தகைய சனநாயகப் பண்புகளற்ற தன்மையுடன் தான் இயங்கி வருகின்றார்கள் என்பதையும் இதனடிப்படையில் இந்த நாட்டின் ஊடகவியாளார்கள் அதுவும் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் பன்முகப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதையும் சர்வதேச சனநாயக சமூகம் பாராமுகமாக அலட்சியப்படுத்துவது தான் துயரம் தரும் விடயமாகும்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சிறிலங்கா அரச ஆயுதப் படையினரதும் ஆயுதந்தாங்கிய துணைப்படையினரதும் தொடர்ச்சியானதும் நன்கு திட்டமிட்ட வகையிலானதுமான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொடூரமான கொலைகள் இன்று ஓர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக தமிழ் ஊடகத்துறையே இத்தகைய கலாசாரமற்ற மந்த புத்தியுள்ள படையினரால் இலக்கு வைக்கப்படுகின்றது என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

இந்த சனநாயக விரோத, மனித அடிப்படை உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சிறிலங்காவின் அரச பீடத்தின் ஆசீர்வாதமும் அங்கீகாரமும் இருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

அரச தரப்பினர் மறுத்தாலும் கூட இதுவே உண்மையாகும். தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் தேசியம் தழுவிய போக்கில் சிந்திக்கும் ஊடகவியலாளர்களை தமது எதிரிகளாக கருதி அவர்களின் சனநாயக ரீதியிலான ஊடக செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரினவாதிகளின் சிந்தனைக்கு பலியானவர்களின் பட்டியல் நீளமானது என்பதுடன் தொடர்ந்து கொண்டும் வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கடந்த செவ்வாய்கிழமை (02.05.2006) அன்று மாலை யாழ்ப்பாணம் உதயன் தமிழ் நாளிதழ் அலுவலகத்தில் மாலை ஏழு மணியளவில் அத்துமீறி பின்வழியால் உள்நுழைந்த கறுப்பு உடையணிந்த ஆயுதபாணிகளான ஐவர், அங்கு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்திக் விட்டு ஆசிரிய பீடத்துள் நுழைந்து தேடுதலை மேற்கொண்டதுடன் அங்கு எவரும் அவர்களிடம் சிக்காததால் அங்கிருந்த கணனிகள் உட்பட சாதனங்களை நிர்மூலம் செய்துவிட்டு கண்மூடித்தமான துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கு அங்கு பணிபுரியும் அப்பாவிகளான சந்தைப்படுத்தும் முகாமையாளர் சுரேஸ் என்பவரும் விநியோகப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

மறுநாள் (03.05.2006) கொண்டாடப்படவிருந்த சர்வதேச ஊடக சுதந்திர தினத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும், அவமதிப்பாகவுமே இதனை பார்க்கவேண்டியுள்ளது.

இந்த ஆயுதக்குழுவினர் யார் என்ற கேள்விக்குரிய விடையை அந்தநாளிதழின் ஆசிரிய பீடத்தவரே அச்சத்தின் காரணமாக மறைமுகமாகக் கூறியுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பதினைந்து நிமிடங்களில் அப்பத்திரிகையின் முக்கியஸ்தரோடு தொடர்பு கொண்ட சனாதிபதி, நிகழ்வின் முழுப் பரிமாணங்களையும் தெளிவாக விசாரித்து அறிந்து கொள்ளாமல் பொறுப்பற்ற வகையில் மறுநாள் ஊடக சுதந்திர தினத்தில் தான் கலந்து கொண்டு உரையாற்றும் வைபவத்தை குழப்பி தனக்கு அபகீர்;த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் புலிகளே இதனைச் செய்துள்ளனர் என்றுள்ளார்.

ஆனால், இதனைப் புலிகள் செய்யவில்லை என அவரின் கூற்றை நிராகரித்த உதயன் நிர்வாகியிடம் அப்படியானால் அது குறித்து விசாரணை செய்கின்றேன் என சமாளித்தார். அவரின் இந்த பேச்சிலுள்ள அலட்சியம், உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அவரது மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்பதுடன் எந்தப் பழியையும் புலிகள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முனைப்புக்காட்டும் அவரது நியாயமற்ற குரூர சிந்தனையையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இது சமாதானத்திற்காக உழைப்பதாகக் கூறும் ஒரு சனாதிபதிக்குரிய பண்பாக இல்லை என்பதே கவலை தரும் விடயமாகும்.

ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய உணர்வுடனும் சத்திய வேட்கையுடனும், உண்மைகளை உலகிற்கு அறிவிக்கும் இலட்சியத்துடனும் செயற்பட்ட நிமலராஐன் முதல் சிவராம் (தாரகி), மற்றும் சுகிர்தராஐன் வரையிலான பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோரின் மரண விசாரணைகளை அரசாங்கம் எவ்வாறு கையாண்டது, கையாளுகின்றது என்பதை நாமறிவோம்.

இவற்றிற்கு தான் சாட்சியங்கள் இல்லை, ஆதாரம் இல்லை என அரசு காரணங்களைக் கூறினாலும், சில மாதங்களின் முன்னர் Nஐ.வி.பியினர் கொழும்பில் நடத்திய பேரணியின் போது செய்தி சேகரிக்கச் சென்ற சுடரொளி பத்திரிகையின் செய்தியாளர் யதுர்சன் Nஐ.வி.பி குண்டர்களால் தாக்கப்பட்டமைக்கு ஆதாரமாக ஒளி நாடாக்கள் உட்பட சான்றுகள் இருந்த போதும் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

இது தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி தாக்கி, கொலை செய்வோரை அரசாங்கம் பாதுகாக்க விரும்புகின்றது என்ற செய்தியை உரத்துச் சொல்வதாகவே உள்ளது.

உதயன் பணியாளர்கள் மீதான இந்த படுகொலை தொடர்பான அரசின் விசாரணை என்பதும் இந்த அடிப்படையிலேயே அமையும் என்றே எண்ணவேண்டியுள்ளது.

நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித்தமானதும் ஐனநாயக விரோதத் தன்மைகொண்டதுமான இந்தச் கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல, தமிழ் ஊடகத்துறையையே நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம், அஞ்சுகின்றோம்.

முன்னெப்போதுமில்லாதவாறு இந்த சமாதான காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், தமிழ் ஊடகத்துறைக்கும் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலானது ஒரு சனநாயக நாட்டின் இறைமைக்கு அவமானகரமானது என நீங்கள் கருதவில்லையா?

தமிழ் ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் இந்த பேராபத்து நிலையிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கும் அதன் ஆயுத துணைப்படைகளுக்கும் எதிராக கண்டனம் தெரிவிக்கவும், சனநாயகத்தின் பெயராலும், சமாதானத்தின் பெயராலும் உங்களுக்கும், ஏனைய சர்வதேச சமூகத்திற்கும் பாரிய தார்மீக பொறுப்புண்டு என்றே நாம் நம்புகின்றோம்.

இது குறித்து எடுக்கப்போகும் நியாயபூர்வமானதும் கடுமையானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையே தமிழ் ஊடகவியலாளர்களினதும், ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தினதும் எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்துடன் கூடிய ஐனநாயக உரிமைகளை பாதுகாக்கும் எனவும் நாம் நம்புகின்றோம்.

மட்டு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.