Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்

1. போராட்டத்திற்காகவும்இ அதன் பின்பு அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் புனர்வாழ்வு முகாமிலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்திருக்கிறது. நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அந்த நோக்கம் எய்தப்படாமல் வலுக்கட்டாயமாக வல்லரசுகளின் துணையோடு இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களது மற்றும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?

ஆ: இல்லை. நிச்சயமாக இல்லை.கடந்த முப்பது வருட கால ஆயுதப் போராட்டமே தமிழர்களுக்கென ஒருதனி நிலம் தேவையென்ற யதார்த்தத்தை உலகிற்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் தமிழர்களின் போராட்டமானது வேறு வடிவங்களில் முனைப்புப் பெற்று வளர்ந்து செல்கின்றது. எனவே போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றுமே வீணாகிப் போய் விடாது. ஆயுதப் போராட்டத்தினது நீட்சியும் அவ்வளவு தான்;. இது மிகவும் திட்டமிடப்பட்டு நேர்த்தியாக முடிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளுக்கே இப்போது தான் ஓரளவு புலப்படத் தொடங்கியிருக்கிறது என்றால் மற்றவர்களுக்கு இது எங்கே விளங்கப் போகிறது? விளங்கி ஏற்றுக் கொள்ளும் நிலையோää பக்குவமோ அவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது.

பெ: நிச்சயமாக இல்லை. எந்தவொரு செயற்பாடும் வீணானது என்று இல்லைää ஏனென்றால் ஒவ்வொரு செயற்பாடுகளும் வெற்றியடைந்திருந்தால் மேன்மெலும் வெற்றிக்கு வழிவகுக்கும்ää தோல்வியடைந்திருந்தால் வெற்றி என்ற விருட்சத்திற்கு அது விதையாக அமையும். அதிலிருந்து வெற்றிக்கு வழி கிடைக்கும். இதையே முன்னோர்கள் “தோல்வியே வெற்றியின் முதற்படி” எனக் கூறியுள்ளனர். அது போன்றே எமது தமிழ் மக்களின் தாயகப் போராட்டமும் வெற்றியடையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே வீரச்சாவடைந்த மாவீரர்களினதும்ääசாவடைந்த மக்களினதும்ääவாழ்க்கையின் ஒரு பகுதியை தாயகப் போராட்டத்திற்காய் அர்ப்பணித்த முன்னாள் போராளிகளினதும்ää தேசப்பற்றுள்ள மக்களினதும் தியாகங்கள்ääஅர்ப்பணிப்புகள் வீணாகிப்போனதாய் நான் எண்ணவில்லை

2. புனர்வாழ்வில் இருந்து வெளிவந்து சமூக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று செய்திப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அது உண்மையாயின் புறக்கணிப்புக்கு உள்ளாகி மனமுடைந்து போயிருக்கும் போராளிகளுக்கு ஒரு சக போராளி என்ற வகையில் நீங்கள் கூறும் ஆறுதல்இ அறிவுரை என்ன?

ஆ: செய்தித் தாள்களிலும் நேரிலும் நாங்கள் வாசிக்கின்ற அறிகின்ற இவ்வாறான செய்திகள் முற்றிலும் உண்மையே. அறிந்தோää அறியாமலோ உருவாகியிருந்த (முன்னாள); போராளிகள் பலவழிகளிலும் புறக்கணிக்கப்படுவதை நான் பெரிய பிழையெனக் கருதவில்லை. ஏனெனில் தமிழர்களைப் பொறுத்த வரை “தெனாலி” கமலஹாசனைப் போல் பல விடயங்களுக்கும் பயந்தவர்களாகவே உள்ளனர். எடுத்துக் காட்டாக ஒருவன் பிறக்கும் போது அவனுடைய பெற்றோர் எச்சமயத்தில் இருக்கின்றனரோää அச்சமயமாகவே அவனும் கொள்ளப்படுகின்றான். அவன் கோயிலுக்கோ தேவாலயத்திற்கோ போகாதவனாகக் கூட இருக்கலாம். ஆனால் அச்சமயமாகவே அவனும் கொள்ளப்படுகின்றான்.ஆனால் எச்சூழ்நிலையிலும் அவன் சமயமோ மதமோ மாறக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள. இ;தைப் பெரிய அறிஞர்களே கூறியிருக்கிறார்கள். அதே போலத் தான் முன்னாள் போராளிகளைப் புறக்கணிப்பவர்களையும் நான் பார்க்கிறேன். இவர்கள் பலர் மத்தியில் தங்களைக் கதாநாயகர்கள் போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இவர்கள் கோழைகளே. சொல்பவன் சொல்லட்டும். கேட்பவர்களுக்கு எங்கே மதி? இந்தப் புறக்கணிப்புக்களை எல்லாம் முன்னாள் போராளிகள் உடைத்தெறிய வேண்டும். புறக்கணித்தவர்களே உங்களைக் கண்டு வியக்கும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இதற்கு நீங்கள் பயந்தோ மனந்தளர்ந்தோ போய் விடக் கூடாது. உங்களைப் புறக்கணித்தவர்களையே உங்களை நாடிவரச் செய்யும் மனோ தைரியம் உங்களிடம் நிறையவே உண்டு;. வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டுங்கள்.

பெ: ஆம். அது உண்மைதான் அவ்வாறான புறக்கணிப்புக்கு நானும் உள்ளாகியிருக்கிறேன். ஆனால் நான் மனம் உடையவில்லை அவ்வாறே ஏனைய முன்னாள்; போராளிகளும் மனத்துணிவுடன் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். அவ்வாறு மனமுடையும் ஒவ்வொருவரும் ஒருகணம் நிதானமாக சிந்திக்கவேண்டும். நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை. சமூகத்தில் வாழும் எம்மை ஒத்தவர்களிடம் காணப்படும் திறமைää அனுபவம்ääஆற்றல்ää வலிமை என்பவற்றில் நாம் அவர்களை விட மேலானவர்களாக திகழ முடியும் ää ஏனென்றால் பல துன்பங்கள் ää தடைகள் என்பவற்றை அனுபவ ரீதியாக கண்டறிந்து புடம்போடப்பட்டவர்கள்தான் நாங்கள். எமது சமூகம் எம்மை ஒருபோதும் புறக்கணிக்காது என நான் நம்புகிறேன். தற்போது நிகழும் புறக்கணிப்புகள் யாவும் நிலவும் அசாதாரணசூழ்நிலையின் காரணமாக மேற்கொள்ளப்படுபவை ஆகும்.

3. அரசினால் வழங்கப்பட புனர்வாழ்வு இப்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் சமூக வாழ்வுக்கு உபயோகமாக இருக்கிறதா? அப்படியாயின் எவ்வாறு?

ஆ: புனர்வாழ்வு நிலையம்;;இதொழிற்பயிற்சி என்றெல்லாம் நாளாந்தம் செய்திகளில் அடிபடுவதென்னவோ உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது எனது சமூக வாழ்வுக்கு உதவவில்லை. உதவாது. ஆனால் உதவும். எப்படியென்றால் ஏறத்தாழ ஒரு வருடம் தொழிற்பயிற்சி எதுவுமின்றிää தொழிற்பயிற்சி தொடங்கும் தொடங்குமென எதிர்பார்த்திருந்த எங்களுக்கு பொறுமைää சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கற்றுத் தந்திருப்பதோடுää எதிர்பார்த்திருந்தால் ஏமாறுவோம் என்பதையும் உணர வைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை தானே. இவற்றை விட தொழிற்பயிற்சி இல்லாமலிருந்த நீண்ட மாதங்களில்ää எங்களுக்குள் இருந்த தொழில் அனுபவங்களைää திறன்களை எங்களுக்குள்ளேயே பரிமாறிக் கற்றுக் கொண்டவை என்னைப் பொறுத்தவரை நாங்கள்ää நான் எடுத்துக்கொண்ட (அளிக்கப்பட்ட என்று வாய் தவறியும் கூறக் கூடாது) மிகச்சிறந்த புனர்வாழ்வுப் பயிற்சியாகும்.ஆனால் பலபேர் நிறைய தொழிற்பயிற்சிகளை குறுகிய காலத்தில் பயின்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவுகிறதா என்று எனக்குத் தெரியாது.

பெ: நிச்சயமாக இல்லை. புனர்வாழ்வு பயிற்சிகள் என்பன கூடியது 02 மாதகாலமோ அல்லது 03 மாத காலமோ வழங்கப்பட்ட பயிற்சிகள்தான்.இந்த நவீன காலகட்டத்தில் இக்கால அவகாச ஒருதுறைசார் பயிற்சிகள் எவ்வாறு பயனளிக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள். மனதளவில் சோர்ந்த நிலையில் இருக்கும்போது ää நாம் சிறப்பான கற்றலில் ஈடுபட்டிருக்க முடியும் என உங்களால் கருதமுடிகிறதா?

4. உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறுவீர்களா?

ஆ: இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால்ää வட்டுவாகல் நிலைமைகள் தான். ஏனெனில் அந்த நிலை உலகே இதுவரை கண்டிராத ஒரு இயக்கத்தின் வீழ்ச்சியைää எந்தவொரு தமிழருமே ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வீழ்ச்சியைப் பறைசாற்றியிருக்கிறது. போராளிகளின்ää பொதுமக்களின் சாவுகள்ää காயங்கள்ää உணவுää நீர்ää பால்மா என்பன இல்லாத நிலைமைää நிர்வாகச்சிதைவுää அடுத்து என்ன செய்வதென்ற தெரியாத திகைப்பு…….ஆனால் இவ்வாறெல்லாம் நடக்குமென்று ஒருவருக்கு முன்பே நன்கு தெரிந்திருக்கிறது. அதை அவர் கடைசிவரை நேர்த்தியாகää பதற்றமின்றி இம்மியளவும் பிசகாமல் செய்திருக்கிறார். இந்நிலைமைகளையெல்லாம் நாமே ஏற்படுத்தினோம் என்று மகிழச்சித் துள்ளலுடன் சொன்னவர்கள் இன்று கலங்கிப் போயுள்ளனர். இன்றும் அன்று சொன்னவற்றையே சில வேளைகளில் சில இடங்களில் சொல்ல நேரிட்டாலும் மகிழ்ச்சிக்களை இன்றி சப்பென்று கூறுகின்றனர்.

பெ: உங்களின் இவ்வினாவிற்கு பதிலளிப்பது என்பது மிக மிக கடினமானது. ஏனெனில் அக்காலகட்டமே உடலில் உயிருள்ளவரை மறக்கமுடியத காலப்பகுதியாகும். எனினும் என் மனதில் கடைத்தெரு தேங்காய் குவியலைப் போன்று முள்ளிவாள்க்கால் வைத்தியசாலையில் சிதைக்கப்பட்ட எம்மக்களின் உயிரற்ற உடலங்களின் குவியலை நேரில் பார்த்ததை எக்கணத்திலும் மறக்கமுடியாது.

5. உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாதஇ மனதைக் கவர்ந்த தளபதி யார்? என்னென்ன சிறப்பியல்புகள் அவரிடம் இருந்ததாகக் கருதுகிறீர்கள்?

ஆ: எல்லாத் தளபதிகளுமே வௌ;வேறு சிறந்த குணவியல்புகளையும் திறன்களையும் கொண்டிருந்தவர்களே. எனக்கு திருமலையைச் சேர்ந்த அத்தளபதியைப் பிடிக்கும். அவர் மிகவும் கண்டிப்பானவராகவும் முரட்டு ஆசாமியாகவும இருந்தாலும்; தலைமை மீது மிகுந்த விசுவாசமாக இறுதிவரை இருந்து மடிந்தவர். எங்கள் பொறுப்பாளர் “அவர் ஒருவர் தான் பிழையென்றாலும் அதை நூறுவீதம் சரியாகச் செய்வார்.” என்று அவரைப பற்றிக் கூறுவார். இது ஒரு தத்துவம் போல இருந்தாலும் இவருடைய இப்போக்கிலமைந்த போர்க்குணத்தினால் சண்டைகளில் நிறைய வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. இதைவிட அவரின் அந்தக் குணத்தினால் இயக்கம் மிகவும் இக்கட்டாக இருந்த மூன்று சந்தர்ப்பங்கள் உடைத்தெறியப்பட்டிருக்;கின்றன. ஆனால் இவரிடம் மற்றைய மூத்த தளபதிகளிடமிருந்த ஒருசில சிறந்த பண்புகள் இருக்கவில்லை. இவரை எமது போராளிகள் ஜெனரல் பற்றனுடன் ஒப்பிட்டுப் பேசினர்.

பெ: கேணல்.ராயு(முன்னால சிறுத்தைப்படைத் தளபதி) இவரை நான் நேரில் சந்தித்தது இல்லை ஆனாலும் என் மனதில் மட்டும் அல்ல என்; போன்ற பெண் போராளிகளினதும் அறிவுப் பசியோடு போராட்ட வாழ்வில் ஈடுபட்ட அனைத்து போராளிகளுக்கும் மிகவும் பிடிக்கும். இயல்பான வாழ்வில் 5ஆம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திய மாணவனை எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராக எதிர்பார்க்க முடியாது ஆனால் போராட்ட வாழ்வில் அதை சாத்தியமாக்கிய தளபதி இவர். அடுப்படியில் உறைந்த பெண்களை போராட்டத்திற்கு தயார்ப்படத்தினாலும் அறிவியலிலும் ஆண்களுக்கு நிகரான ஆற்றலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு உதவிய தளபதிகளில் ஒருவர். இவர் பெயரையும் படையணியின் பெயரையும் கேட்டு நடுங்காத இராணுவம் இல்லை (இந்திய இராணுவம்) எனலாம். புல் கூட பல் குத்த உதவும் என்பதை பல ஆயுத கண்டுபிடிப்புகள் மூலம் உணர்த்தியவர். எமது போராளிகளுக்கு முதன் முதலாக ஆட்லறி இயக்கம்ääபயன்படுத்தும் முறைää தொழினுட்ப ரீதியான விளக்கம் என்பன பற்றி புத்தகங்கள்ääசுயசிந்திப்புää கற்பனை மூலம் தெளிவுபடுத்திய பெருமை இவரையே சாரும்.

6. இறுதிச் சமரில் பங்கு பற்றிய போராளிகளின் மனவுறுதி குலைவதற்குக் காரணமாக இருந்தவை எவை?

ஆ: இக்கேள்விக்கு மீண்டும் நான் சொன்ன ஓரிரு விடயங்களைத் தொடுகிறேன். போராளிகள் அதாவது தளபதிகள்ää பொறுப்பாளர்கள்ää நிர்வாகிகள்ää கீழ்நிலை வீரர்கள் என எவருக்குமே தலைமையின் உள்நோக்கங்களோää நூறு வருடங்கள் முன்னதான தமிழீழம் மீதான அவர் கொண்டிருந்த தீர்க்கதரிசனமான தொலைநோக்குப் பார்வையோää சிந்தனைகளோää அவரின் இலக்கினைää இலட்சியத்தினை நோக்கியே செல்லுகின்ற ஆனால் அடிக்கடி மாறுகின்ற தந்திரோபாயங்களோää உத்திகளோ என அவரின் வைராக்கியமான மனநிலை பற்றி முற்றுமுழுதாகத் தெரியாது. இவ்விடயம் மிகவும் முக்கியமானது. இதனை விளங்கிக் கொள்ளாதனாலேயே பலர் மனவுறுதி குலைந்திருக்கிறார்கள். மற்றைய விடயங்கள் எல்லாம் அடுத்த பட்சமே.

பெ: அடிப்படை காரணம் பிறநாட்டு அரசியல் ரீதியான வதந்திகள் அவர்களிடையே உலாவந்தமையும் அதனை அவர்கள் நம்பியமையும் மற்றும் மக்களுக்காக இவர்கள் போராடும் போது அவர்கள் படையினரின் சகலவழிகளாலும் மெற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மிக மோசமாக கொல்லப்படுவதை நேரில் பார்த்துக்கொண்டு எவ்வாறு போராடமுடியும். அவர்களும் உங்களைப்போன்ற மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லையே? அத்துடன் எட்டப்பர் கூட்டங்கள் மூலம் ஏற்பட்ட வழிநடத்திய தளபதிகளின் இழப்புக்கள் மிக மிக போராளிகளின் மனதை சுக்குநூறாக உடைத்தமை.

7. வன்னியில் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட கட்டாய ஆள்ச் சேர்ப்புப் பற்றியும்இ மக்களை வெளியேற விடாமல் கேடயமாகப் பாவித்தது பற்றியும் கண்டனங்கள் பரவலாக எழுந்தது நீங்கள் அறிந்ததே. ஒரு முன்னாள் போராளி என்ற வகையில் இந்தக் குற்றச் சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

ஆ: அந்நேரம் அது தவிர்க்கப்பட முடியாததாக இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இதைச் செய்திருக்கின்றன. முக்கியமாக ரஷ்யா. அதாவது ஸ்ராலின் ஆட்சிää வன்னியில் செய்யப்பட்டதை விட ஆயிரம் மடங்கு மோசமாகச் செய்தது. ஆனால் போரினால் எற்பட்ட எழுச்சியால் ரஷ்யர்கள் ஜேர்மனியப் படைகளை வென்றனர். இதனால் மக்கள் ஸ்ராலினையும் மற்றைய கொடுங்கோலர்களையும் மன்னித்து மறந்து போற்றினர். இது வரலாறு. ஏன் இன்று அரசின் அமைச்சராக இருப்பவர் தானே கட்டாய ஆட்சேர்ப்பை மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிக் கோலோச்சியிருந்தார். அப்போது மக்கள் தங்களைக் கட்டுப்படுத்தி அவரை மன்னித்தனர். ஏனெனில் அப்போது சமாதான காலம். வன்னியில் இது செய்யப்பட்ட போது சண்டை நடந்து கொண்டிருந்தது.

பெ: ஒரு போராளியாக இருந்து நோக்குமிடத்து “ வீட்டுக்கு ஒருவரோஃ இருவரோ போராடுவது தப்பில்லை என எண்ணுகிறேன். யாராவது போராடி உயிரிழக்கட்டும் நாம் சுகமாக வாழ்வோம் என நினைக்கும் தனிமனிதனோää குடும்பமோ ஓர் கேவலமான வாழ்க்கையை வாழ்வதாக அதாவது தேசப்பற்றற்று வாழ்பவர்களாகவே எண்ணுகிறேன்.

இன்று போராட்டம் இல்லைää கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை நீங்கள் என்ன நிம்மதியை கண்டீர்கள்ää தினம் தினம் உங்கள் பிள்ளைகள் கைதுசெய்யப்பட்டோääகொலை செய்யப்பட்டோää பாலியல்வல்லுறவுக்கு உட்பட்டோää தீய பழக்கங்களுக்கு ஆளாகியோ போன்ற ஏதோ ஒரு காரணங்களால் தமிழனாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவனும் அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ வருவது தெளிவாக புலப்படுகிறது. உங்களால் எந்த ஒரு நியாயமான கருத்தையும்ääசெயலையும் தெரிவிக்கவோ செயற்படுத்தவோ முடியாத நிலை காணப்படுகிறது.

நான் யுத்தத்தில் அகப்பட்ட மக்களில் ஒருவனாக இருந்து நோக்குமிடத்து அது தவறாக படுகிறது. இராணுவத்தின் தாக்குதல்கள் ஒருபக்கம் ääஉட்கார இடமில்லைääஉணவில்லைääமருந்தில்லை ஒட்டுமொத்தமாக நிம்மதியில்லை இவ்வாறாக இன்னல்பட்ட மக்களிடம் உங்கள் பிள்ளைகளின் உயிரை நாட்டுக்காக தாருங்கள் என்று கேட்டால் எப்படிதான் அவர்களால் சந்தோசமாக தரமுடியும். இவ்வாறான கஸ்ரங்கள் இல்லாமலிருந்தால் நிச்சயமாக எம்மை நேசித்த எம்மக்கள் உதவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.அத்தோடு எமது கட்டுப்பாட்டினுள் அண்ணளவாக 13 வருடங்கள் வாழ்ந்த வன்னிவாழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் எமக்கு தோளோடு தோளாய் நின்றவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தியது தவறு என நான் நினைக்கிறேன்.

8. புலம் பெயர் தமிழர்களின் “நாடு கடந்த தமிழீழம்” பற்றி உங்கள் கருத்து என்ன? இது நடைமுறைக்குச் சாத்தியமாகும் என்று கருதுகிறீர்களா? அவர்களால் இங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

ஆ: உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளப்போவதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்கள் உணர்ச்சி பொங்க தம்மாலானவற்றை அஹிம்சை வழியில் செய்யத் தயாராக உள்ளனர். இவர்களை வழிநடத்த ஒரு கட்டுக்கோப்பான தலைமைத்துவமும்ää சீரிய எண்ணங்களும்ää நேர்மை- வாய்மை நிறைந்த பொறுப்பாளர் எவரும் இல்லை. பொறுப்பாளர் எனும் தகுதியையே கொண்டிருக்காதவர்களெல்லாம் தான் தான் தலைவர் என ஆளாளுக்கு பீற்றிக்கொண்டு மக்களின் பணங்களையும்ää அழிந்து போன தலைமையின் கீழிருந்த புனிதமான இயக்கத்தின் திறைசேரிகளையும் சொத்துக்களையும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களாகத் தான் இருக்க முடியும். இதை விட மற்றைய முன்னாள் கையாலாகாத்தன்மை கொண்ட இயக்கங்களின் தலையீடுகளும்ää அட்டகாசங்களும் இருக்கவே செய்யும். வெளிநாடுகளிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் (ஆயுதத் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் இனி அஹிம்சையைக் கையிலெடுக்க வேண்டும். ஏனெனில் பிரபாகரனும் அவரது இயக்கமும் ஆயுத வழியில் சாதித்ததில் இலட்சத்தில் ஒரு பங்கு கூட அவர்களால் இனி மேல் சாதிக்க முடியாது. இது தான் யதார்த்தம்.) ஒன்றிணைந்து ஒற்றுமையுடனää; ஒரு தெளிவான நோக்குடன்ää புலம்பெயர் தமிழர்களை வழிநடத்தினால் மட்டுமே…ஏதேனும் என்ற பேச்சே தேவையில்லை. தீர்வு கிட்டியே ஆகும்.

பெ: இது ஒரளவு சிறந்த பணி என்றே கருதுகின்றேன். இதன் மூலம் 30 வருட போராட்ட வரலாறு அழிவடையாது காக்கப்படுவதுடன் சர்வதேசத்திலிருந்து ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

எந்தவொரு நடவடிக்கைபற்றியும் ஆரம்ப கட்டத்திலேயே வெற்றியா? தோல்வியா? என்று கூறமுடியாது. எந்தவொரு நியாயமான உண்மையான நடவடிக்கையும் இடையறாத முயற்சியால் வெற்றிகாணமுடியும் என நம்புகிறேன். இதுவும் எம்மின விடுதலைக்கு உறுதுணையளிக்கும் என்றே எண்ணுகிறேன்.

நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் எமக்கு தீர்வு கிடைப்பதற்கு அவர்களது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இங்கு இடம்பெறும் பாரதூரமான சம்பவங்கள் பற்றி வெளியுலகுக்கு தெட்டத்தெளிவாக கூறும் தைரியம் இங்கு வாழ்பவர்களிடம் இருந்தாலும் அடுத்த கணம் என்ன நடக்கும் என்ற பயம் காரணமாக கூற முன்வரமாட்டார்கள் அனால் புலம்பெயர்மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சம்பவங்களை உடனுக்குடன் உலகுக்கு படம்பிடித்துக்காட்டக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் இதன் மூலமே எம்மினத்திற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகம் அறிந்து கொள்ளமுடியும்

9. நெடுங்காலமாக விசாரணைகள் இன்றிஇ அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் விடுதலை பற்றி தற்போது அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு யார் யாரால் என்னென்ன செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

ஆ: உண்மையில் இவர்களை விடுவிக்க தமிழ் உணர்வுமிக்க அனைவரும் ஒன்றிணைந்து உண்மையுடன் செயலாற்ற வேண்டும். ஏனெனில விக்கி;ரமபாகு கருணாரட்ண போன்ற பெரும்பான்மையினத்தவரே இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் போது நாங்கள் வாளாவிருப்பது வெட்கக்கேடானது…கீழ்த்தரமானது.

பெ: இதற்கு யார் எடுத்துரைத்தாலும் இனவாதிகள் இரங்கப்போவதுமில்லை தமிழின அழிப்பு கொள்கையிலிருந்து மாறப்போவதுமில்லை என்பது தெளிவான உண்மை. இதற்கு உண்மையாய் ஓர் இனவழிப்பை தடுக்கும் நோக்குடன் செயற்படும் ஓர் அமைப்பினதோ அல்லது பல நாடுகளின் கூட்டணியினதோ தலையீடே அவசியமாகும். இவ்வாறு செயற்பட்டால் தான் கைதிகளுக்கு மட்டமல்ல தமிழினத்துக்கே விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு ஏதாவது வகையில் தீர்வு கிடைக்கவில்லையெனின் இன்னும் சில ஆண்டுகளின் பின் முன்னைய போராட்டம் போலல்லாத ஓர் பயங்கரமான பழிதீர்க்கும் போராட்டம் உருவாகலாம்

10. விடுதலைப் புலிகளது தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி பல இடங்களில் சிலாகித்துப் பேசப்பட்டிருக்கிறது. அவரது தீர்க்கதரிசனம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பிழைத்தது எப்போது என்று கூறுவீர்களா? அவர் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

ஆ: அவரின் தீர்க்கதரிசனம் என்பது ஒரு விடயத்தில் அல்ல. ஏராளமான விடயங்களில் தருணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அவரைப் போல் தீர்க்கதரிசனம் மிக்க மானிடர் ஒருவர் உலகில் இதுவரை தோன்றவில்லை என தற்போது சில மேற்கத்தைய அறிவியலாளர்கள் ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றனர். பலர் பிரபாகரன் இதைச் செய்யவில்லையேää அதை யோசிக்கவில்லையேää இப்படித் தோற்று விட்டாரேää இவரின் இயக்கம் அழிந்து விட்டதே என்றெல்லாம் இடக்குக் கேள்வி கேள்வி கேட்கிறார்கள். இதற்கு அவர்களுக்குப் பதில் கூற முடியாது. கூறினாலுமää; அவர்கள் தங்கள் வாதத்திலேயே ஊறியிருப்பதால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பின்னாளைய….. அது நூறு வருடங்களின் பின்னராகக் கூட இருக்கலாம்….தமிழரின் சுபீட்சமானää தலை நிமிர்வானää சுதந்திரமான பொற்காலத்திற்கானதே. அவர் உயிருடன் இல்லை. அவர் ஏன் உயிருடன் இருந்து தோல்வி நிலைக்குச் செல்ல வேண்டும்?

பெ: தலைவரைப்பற்றி கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. தரைவரின் சிந்தனைகள் எண்ணற்றவை இவையாவும் மலரப்போகும் தமிழீழத்திற்கு இறந்தகாலத்தில் நாம் என்ன செய்திருக்கவேண்டும்ää நிகழ்காலம்ää எதிர்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும். என்பது பற்றியும் உலகிலுள்ள நாடுகளில் நம் தமிழீழம் எவ்வாறெல்லாம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுபற்றியுமே . உதாரணமாக மலரும் தமிழீழத்தின் கட்டமைப்பை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் உருவாக்கி உலகப் பிரதிநிதிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கியமையை கூறலாம்.

அவரின் தீர்க்கதரிசனம் பற்றி பலராலும் பேசப்பட்டது உண்மைதான் அனாலும் அது இறுதி யுத்தத்தின்போது பிழைத்துவிட்டதாக கருதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறு எண்ணவில்லை.

இவ்வாறான ஒரு இடைவெளி எம் இளைஞர் சமூகத்திற்கு தேவையென கருதுகிறேன். ஏனெனில் அப்போதுதான் எமக்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியும்.

நிச்சயமாக அவர் உயிருடன் இருப்பார் என நம்புகிறேன். நலத்திற்காய் இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

காரணம் ஏனெனில் 30 வருடங்களாக அரசியல்யுத்த நெருக்கடி கொடுத்த அதுவும் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவரின் உடலை ஒரு நொடிக்குள் அழித்துவிடுவது என்பது சாத்தியமில்லை. தங்கள் வீரப்பிரதாபங்களை உலகுக்கு வாய்வார்த்தையாக அள்ளி வீசும் இவர்கள் சாட்சியமாக கிடைத்த உயிரற்ற உடலை உலகுக்கு காட்சிப்படுத்தாமல் ஓர் புகைப்படம் மூலம் காட்சிப்படுத்தியது ஏன்? சிந்தியுங்கள் உங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும்

பேட்டி:ஆ.தீபன்

- வல்வை அலையோசை

http://valvaialaiyosai.blogspot.ca/

இவ்வாறான ஒரு இடைவெளி எம் இளைஞர் சமூகத்திற்கு தேவையென கருதுகிறேன். ஏனெனில் அப்போதுதான் எமக்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியும்.

நிச்சயமாக அவர் உயிருடன் இருப்பார் என நம்புகிறேன். நலத்திற்காய் இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

பேட்டி:ஆ.தீபன்

- வல்வை அலையோசை

http://valvaialaiyosai.blogspot.ca/

இந்த வசனத்தை எழுதிய கரங்கள் ஆயிரம் ஆயிரம் காலம் வாழ வேண்டும் ...............

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.