Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல வசதிகளுடனும் கூடிய வீடு, விரும்பிய வாகனம்: த.தே.க. விற்கு லஞ்சம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

- இணையாவிடின் நெருக்கடி

Shame_CI.jpg

இதுதான் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரசதரப்புப் பக்கம் வளைத்துப்போட முன்வைக்கப்பட்டுள்ள சலுகைகளாகும்.

அரசின் இந்த முயற்சி குறித்து கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:

கிழக்கு மாகாணசபைக் குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வீடுகளுக்கு கடந்த இரு தினங்களாகச் சென்ற சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென அன்பான அழைப்பு விடுத்துள்ளனர்.

கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சிலர் சென்றிருக்கின்றனர்.

சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசிய இவர்கள் அனைவரும் சிங்களவர்தான் என்பதை தாம் ஊர்ஜிதம் செய்யமுடிந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து தாங்கள் வந்துள்ளனர் எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், கிழக்கு மாகாணசபையில் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அப்படி ஆதரவளித்தால் ஐந்துகோடி ரூபா ரொக்கப்பணம், கொழும்பில் சகல வசதிகளுடனும் கூடிய வீடு, விரும்பிய வாகனம் உட்பட பல சலுகைகள் செய்துதரப்படும் என்று கூறியுள்ளனர்.

அரசுக்கு ஆதரவு வழங்காவிட்டால் நீங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்கநேரிடும் என அச்சுறுத்தும் பாணியிலும் தமிழ்க்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு ஆதரவளித்தால் நீங்கள் கூறும் பிரதேசத்திற்குரிய அனைத்து நிதியையும் உங்களூடாகத் தருவோம், பெரும் வசதியாக இருக்கலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இவ்வாறு வந்தவர்களில் சிலர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது என்று தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

"நாம் சலுகைகளுக்குப் பின்னால் செல்பவர்கள் அல்லர். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாம் தேர்தலில் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்.

தனித்தனியாக எங்களிடம் பேசுவதை விடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துப் பேசி இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பின் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்ட எவரும் இந்தச் சலுகைகளைக்கண்டு ஏமாறுபவர்களல்லர்.

ஒரு பியசேனவைப் போல பல பியசேனாக்களை உருவாக்கலாம் என நீங்கள் கனவுகாண வேண்டாம். இதை உங்களை அனுப்பியவர்களிடம் கூறுங்கள்'' எனத் தாம் தெளிவாகக் கூறினர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவாகிய உறுப்பினர்களான ஜி.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), இந்திரகுமார் பிரசன்னா, எம்.நடராசா மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய உறுப்பினர் கே.நாகேஸ்வரன் ஆகியோரின் வீடுகளுக்கே இவர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லஞ்சம் வழங்க முயற்சி

12-09-2012 - 01:54

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே இவ்வாறு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிற்கு ஆதரவளித்தால் பணம் வழங்குவதாக பேசரம் பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய நான்கு உறுப்பினர்களை இவ்வாறு விலைக்கு வாங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82823/language/ta-IN/article.aspx

இற்றை வரையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவிப்பில் வரவில்லை.

இருந்தாலும் செய்தியை தெரியப்படுத்திய இராயேஸ்வரன், கிருஸணபிள்ளை, இந்திரகுமார், நடராசா ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.