Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் நாட்டில் தமிழ் அகதிகளுக்கான உதவி – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Featured Replies

சிறீலங்கா அரசின், இனவழிப்பிலிருந்து தமது உயிர்களைக் காவி பல மாதங்களாக மிக கொடுமையான சூழ்நிலையில் தங்கியிருந்து யேர்மனியில் அகதிகளாக ஈழத்தமிழ் மக்கள் கடந்த காலங்களாக வந்தடைகின்றனர். தமது உறவுகள் உடைமைகள் அனைத்தையும் இழந்து, உயிரை மட்டும் சுமந்து வந்தடைந்த நிலையில் கூட அவர்களுக்குப் பாதுகாப்பான வதிவிடம் கிடைப்பதில்லை.

பலத்த சிரமங்களின் மத்தியில் யேர்மனியில் தற்போது ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பொருளாதார, சுகாதார, வதிவிடம் மற்றும் மொழி விடையமாக மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர்.

அத்தோடு, யேர்மன் அரசு ஈழத்தமிழ் மக்களை சிறீலங்கா அரசின் நலன் சார்ந்த செயற்பாட்டால் அவர்களது அகதி விண்ணப்பங்களை நிராகரித்து மீண்டும் சிறீலங்காவுக்கு திருப்பியனுப்ப முயற்சிக்கின்றது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் எத்தனையோ துன்பங்களை கண்டு அனுபவித்து ஆழ்ந்த சோகத்தில் துடிக்கும் ஈழத்தமிழ் மக்களின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது யேர்மன் அரசு இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அங்கீகரிப்பதையே காட்டுகின்றது.

இந்த நேரத்தில் எமது உறவுகள் படும் துன்ப துயரங்களை, சட்ட நெருக்கடிகளுக்கு, மொழிப் பிரச்சனைக்கு முகம் கொடுத்து அவர்களுக்கான உதவிகளை செலுத்த யேர்மன் ஈழத்தமிழ் மக்கள் அவை கடந்த சில வருடங்களாக மிகுந்த நம்பிக்கைத் தன்மையுடனும் பொது சிந்தனையுடனும் எவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் அல்லாமல் இயங்கி வருகின்றது.

அத்துடன், ஈழத்தமிழர் அகதிகள் விடையமாக அகதிகள் விடையத்தில் கருணை உள்ளம் கொண்ட அரசியல் வாதிகள் சிறந்த சட்டத்தரணிகள், மனிதவுரிமை அமைப்புகளுடனும் மற்றும் மொழி பெயர்ப்பாளர்களுடனும் தொடர்புகளை பேணிவருகின்றோம்.

அத்தோடு, கடந்த சில வாரங்களாக யேர்மன் தலைநகரத்தில் பெர்லினில் 80 இற்கும் மேலான புலம்பெயர் பல்லின அமைப்புகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு அவையில் (Migrationsrat Berlin-Brandenburg )( http://www.migrationsrat.de/ ) யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் இணைந்துள்ளது. இக் கூட்டமைப்பு முக்கியமாக அகதிகள் விடையமாக தனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது.

ஆகையால் யேர்மனியில் வாழும் தமிழ் அகதிகள் உதவிகள், ஆலோசனைகள் அகதிகள் விடயமாக சட்டத்தரணிகளுக்கு வழங்கக்கூடிய ஆவணங்களும் பெற்றுக்கொள்ள வேண்டில் பின்வரும், இலக்கங்களை மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளவும்.

www.vetd.info | info@vetd.info

Tel: +49 (0) 30 60972472

Fax: +49(0) 30 843 150 33

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

http://thaaitamil.com/?p=32157

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில்... இன்னும், அகதிகள் இருக்கிறார்களா?smiley-sleep012.gif

காந்தி, செத்துட்டாரா?smiley-sleep027.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.